லக்னோ: ‘தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு சமாஜ்வாதி கட்சியும், அகிலேஷ் யாதவும் தான் பொறுப்பு’ என உத்தரப் பிரதேச மாநிலத்தின் சாயல் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பூஜா பால் கடிதம் எழுதியுள்ளார். சமாஜ்வாதி கட்சியிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட எம்எல்ஏ பூஜா பால், அகிலேஷ் யாதவுக்கு எழுதிய கடிதத்தில், “ நான் கொலை செய்யப்பட்டால், உண்மையான குற்றவாளி அகிலேஷ் யாதவ் தான். என் கணவர் பட்டப்பகலில் கொல்லப்பட்டார், எங்களுடன் நிற்பதற்கு பதிலாக, சமாஜ்வாதி கட்சி குற்றவாளிகளை காப்பாற்றியது. இன்று, எனக்கு அச்சுறுத்தல்கள் வருகின்றன, எனக்கும் அதே நிலை ஏற்படும் என்று நான் அஞ்சுகிறேன். அகிலேஷ் யாதவ் குற்றவாளிகளுக்கு எதிராகப் போராடி எனக்கு நீதியை பெற்றுத் தருவார் என்று நான் நம்பினேன். ஆனால் உண்மை அதற்கு நேர்மாறானது. சமாஜ்வாதி கட்சியில், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் பட்டியலினத்தவர் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். முஸ்லிம்கள் மட்டுமே முதல் தரக் குடிமக்களாகக் கருதப்படுகிறார்கள், அவர்கள்…
Author: admin
ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படத்தில் அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் முக்கியமான சண்டைக் காட்சி ஒன்றிணை திலீப் சுப்பராயன் தலைமையில் காட்சிப்படுத்தி வருகிறார்கள். இப்படத்தினை ஆர்.பி.செளத்ரி மற்றும் விஷால் இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். ஒரே கட்டமாக படப்பிடிப்பினை முடிக்க வேண்டும் என்று படக்குழுவினர் திட்டமிட்டு பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தில் துஷாரா விஜயன், தம்பி ராமையா, அர்ஜெய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தற்போது இதில் முக்கிய கதாபாத்தில் நடிக்க அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விஷால் – அஞ்சலி இருவரும் இணைந்து ‘மதகஜராஜா’ படத்தில் நடித்துள்ளனர். அப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது அதே கூட்டணி இப்படத்திலும் இணைந்து பணிபுரிய இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன், எடிட்டராக ஸ்ரீகாந்த், கலை இயக்குநராக துரைராஜ், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர்…
சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் ஆக.30-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளை பல்வேறு அரசியல் கட்சிகள் இப்போதே தொடங்கியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தொகுதிவாரியாக பிரச்சாரத்தையே கடந்த ஜூலை மாதம் தொடங்கிவிட்டார். 3-ம் கட்ட பிரச்சாரத்தை நேற்றுடன் நிறைவு செய்த பழனிசாமி. செப்.1-ம் தேதி முதல் 4-ம் கட்ட பிரச்சாரத்தை மதுரையில் தொடங்குகிறார். இதனிடையே வரும் ஆக.30-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தையும் பழனிசாமி கூட்டியுள்ளார். அதன்படி, ஆக.30-ம் தேதி, காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள், மீதம் உள்ள தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள், கட்சியில் இளைஞர்களை அதிக அளவில் சேர்ப்பது, ஐடி விங்-ன் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பல மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் முறைகேடு…
தெரு நாய்கள் எல்லா இடங்களிலும் உள்ளன, தெருவில் உங்களைப் பின்தொடரும் ஆர்வமுள்ள கண்கள், வால்கள் அசைக்கின்றன, சில நேரங்களில் எச்சரிக்கையான கூச்சல்கள் உங்கள் தூரத்தை வைத்திருக்குமாறு எச்சரிக்கின்றன. பல நகரங்களில், அவை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். பெரும்பாலானவர்கள் நட்பாகவும் பாதிப்பில்லாதவர்களாகவும் இருக்கும்போது, ஒரு சில கணிக்க முடியாதவை, குறிப்பாக பயப்படும்போது, பசியுடன் அல்லது பொதிகளில்.அவர்களைச் சுற்றி எப்படி நடந்துகொள்வது என்பது கடித்ததைத் தவிர்ப்பது மட்டுமல்ல; இது அவர்களின் நடத்தையைப் புரிந்துகொள்வது, மோதலைத் தடுப்பது மற்றும் பாதுகாப்பாக ஒன்றிணைவது பற்றியது. பயம் அல்லது பீதி நிலைமையை மோசமாக்கும். விரைவான இயக்கங்கள், நேரடி முறைகள், கூச்சல் அல்லது திடீர் சைகைகள் அச்சுறுத்தல்கள் என்று பொருள் கொள்ளலாம். அமைதியான, அளவிடப்பட்ட நடத்தை பெரும்பாலும் மோதலைத் தடுக்கிறது. விழிப்புணர்வு, மரியாதை மற்றும் பொறுமை ஆகியவை உங்கள் பாதுகாப்பிற்கு மட்டுமல்ல, உங்கள் தெருக்களைப் பகிர்ந்து கொள்ளும் நாய்களின் நல்வாழ்விற்கும் முக்கியம்.உதவிக்குறிப்புகள் தெரு நாய்களிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்அமைதியாக…
புதுடெல்லி: விவசாயிகளையும் சிறு உற்பத்தியாளர்களையும் பாதுகாப்பதே இந்தியாவின் முன்னுரிமை என்றும் அதில் அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்றும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், “இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா 50%க்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது. இது நியாயமற்றது, காரணமற்றது. நமது விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களின் நலன்களில் அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. இதில் சமரசத்துக்கு இடமே இல்லை. இந்தியா மீதான வரி உயர்வுக்கு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணமாகக் கூறுகிறார்கள். இதன்மூலம், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு இந்தியா நிதி அளிப்பதாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால், இத்தகைய விமர்சனம் சீனாவுக்கு எதிராகவோ ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராகவோ பயன்படுத்தப்படுவதில்லை. ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் சீனா மீதோ, அதிக அளவில் திரவ இயற்கை எரிவாயு வாங்கும்…
பல படங்களில் தனக்கு திருப்தி அளிக்காமல் நடித்திருப்பதாக சமந்தா தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சமீபமாக அதிகமான படங்களில் அவர் நடிப்பதில்லை, மேலும் தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். உடற்பயிற்சி, வெளிநாட்டுப் பயணம் உள்ளிட்டவற்றில் தான் அதிகப்படியான நேரத்தினை செலவழித்து வருகிறார் சமந்தா. இது தொடர்பாக சமந்தா அளித்துள்ள பேட்டியில், “இப்போது என்னை உற்சாகப்படுத்தும் விஷயங்களை மட்டுமே செய்து வருகிறேன். அது சினிமா, உடற்பயிற்சி எதுவாக இருந்தாலும் சரி தான். முந்தைய காலங்களில் பல படங்களில் தொடர்ச்சியாக நடித்துள்ளேன். ஆனால், உண்மையைச் சொன்னால் அவற்றில் பல படங்கள் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. இப்போது எந்த சினிமாவாக இருந்தாலும் அதனை முழுமனதுடனும், கவனத்துடனும் செய்து வருகிறேன். ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் நடிக்க வேண்டும் என்ற பயமெல்லாம் இப்போது இல்லை. என் உடல் என்ன சொல்கிறது என்பதை கேட்க வேண்டும் என்று புரிந்துக் கொண்டேன். அதனால் மட்டுமே வேலையை குறைத்துவிட்டேன்”…
சென்னை: நடிகர் விஜய் அரசியல் நடிகராக இல்லாமல், மக்கள் நல அரசியல்வாதியாக மாற வேண்டும் என தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘தனி ஆள் இல்லை, கடல் நான்’ என்ற வாசகத்துடன் “உங்கள் விஜய்–எளியவனின் குரல் நான்” என சமூக வலைத்தளத்தில் செல்பி பகிர்ந்துள்ள நடிகர் விஜய் முதலில் திருவள்ளுவரின் திருக்குறளையும், பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றையும், இந்திய அரசியல் சாசன சட்டத்தையும், பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா எழுதிய ஏகாத் மாணவ தர்ஷன் மனிதநேய இலக்கணத்தையும் நன்கு புரிந்து படிக்க வேண்டும். நடிகர் விஜய் அதிகார அரசியலுக்காக, சினிமா விளம்பர பாதையில், முதல்வர் நாற்காலி போதையில், முழு நேர அரசியல் நடிகராக செயல்பட்டு வருவது தமிழக மக்களை ஏமாற்றும் விதத்தில் உள்ளது. விக்கிரவாண்டியை தொடர்ந்து, மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழக மாநாட்டிலும் நடிகர் விஜயின் வீர வசனங்கள்…
இங்கே, நாங்கள் டெல்லியை தொடக்க புள்ளியாக தேர்ந்தெடுத்துள்ளோம். இதுபோன்ற புதுப்பிப்புகளுக்காகவும், பிற இந்திய நகரங்களிலிருந்து சர்வதேச இடங்களை இணைக்கும் நேரடி விமானங்களுக்காகவும் இந்த இடத்தை சரிபார்க்கவும்.
புவனேஸ்வர்: ஒடிசாவின் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக்கை, முதல்வர் மோகன் சரண் மாஜி சந்தித்து நலம் விசாரித்தார். நீர்ச்சத்து குறைபாடு காரணமாக நவீன் பட்நாயக்கின் உடல் பாதிக்கப்பட்டதை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் அவசர அவசரமாக புவனேஸ்வரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 77 மணி நேர தொடர் சிகிச்சைக்குப் பிறகு கடந்த புதன் கிழமை நவீன் பட்நாயக் வீடு திரும்பினார். நவீன் பட்நாயக் மருத்துவமனையில் இருந்தபோதே மாநில அமைச்சர்கள், மாநில காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். விரைவில் பூரண நலம் பெற வாழ்த்து தெரிவித்தனர். நவீன் பட்நாயக் வீடு திரும்பிய அன்றே அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உடல்நலம் விசாரித்தார். மேலும், டெல்லிக்கு வந்து சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படி அழைப்பு விடுத்தார். இந்நிலையில்,…
நிலவை ஆய்வு செய்வதற்கான போட்டி எப்போதோ தொடங்கிவிட்டது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பல ஆண்டுகளாகவே அதற்கான முயற்சியில் ஈடுபட்டுவந்தன. நிலவுக்கு விண்கலம் அனுப்புவது என்பது லேசுப்பட்ட காரியமும் அல்ல. வல்லரசு நாடுகள் மட்டும்தான் இதில் ஈடுபட முடியும் என்கிற நிலை இருந்தது. ஆனால், பின்னாளில் இந்தியாவும் அந்த வரிசையில் இணைந்தது. முதல் விதை: நிலவுக்கு விண்கலம் அனுப்பும் திறன் இந்தியாவுக்கு இருக்கிறது என்பதை உலகின் பெரிய நாடுகள் உணர்ந்தி ருக்குமா என்பது தெரியாது. ஆனால், அதற்கான விதையை 2003இல் இட்டவர் மறைந்த பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய். அந்த ஆண்டு சுதந்திர தின உரையில் வாஜ்பாய் பேசும்போது, “நிலவை நோக்கிய இந்தியாவின் கனவுத் திட்டம் தொடங்கிவிட்டது; நிலவுக்கு விரைவில் விண்கலம் அனுப்பப்படும்” என்று சந்திரயான் திட்டம் குறித்த தகவல்களை வாஜ்பாய் வெளியிட்டார். 2004-2005இல் இத்திட்டத்துக்காக நிதி ஒதுக்கப்பட்டது. சந்திரயான் 1: சந்திரயான் 1 திட்டத்துக்காக ரூ.386 கோடி…