புதுடெல்லி: சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். கடந்த 1947-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் உதயமாகின. இந்த பிரிவினையின்போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் சுமார் 20 லட்சம் பேர் உயிரிழந்தனர். சுமார் 2 கோடிக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர். இதை நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 14-ம் தேதி, பிரிவினை கொடுமைகள் நினைவு தினமாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு முதல் இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இந்த தினம் இந்திய வரலாற்றில் மிகவும் துயரமான நாள் ஆகும். பெரும் எண்ணிக்கையிலான மக்கள் துன்பம், வேதனைகளை அனுபவித்தனர். கற்பனைக்கு எட்டாத வகையில் மிகப் பெரிய இழப்புகளை எதிர்கொண்டனர். எனினும் தாங்க முடியாத வலி, வேதனையை மக்கள் துணிச்சலுடன் எதிர்கொண்டனர். வீழ்ச்சியில் இருந்து எழுச்சி பெற்ற மக்கள், வளர்ச்சிப் பாதையில் பல்வேறு மைல்கற்களை எட்டி…
Author: admin
சென்னை: விடுதலை போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22,000 என உயர்த்தி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 9 அறிவிப்புகளை சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். 79-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை இன்று ஏற்றி, கொடி வணக்கம் செலுத்தினார். பின்னர் பல்வேறு விருதுகளை வழங்கினார். இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின சிறப்புரை ஆற்றினார். அதில் இடம்பெற்ற 9 முக்கிய அறிவிப்புகள்: > விடுதலை போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22,000 என உயர்த்தி வழங்கப்படும். > விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.12,000 என உயர்த்தப்படும். > கட்டபொம்மன், வ.உ.சி ஆகியோரின் வழிந்தோன்றளுக்கு நிதி உதவி ரூ.11,000 என உயர்த்தி வழங்கப்படும். >…
செல்வாக்கு செலுத்தும் ஜோடி மேரி கால்டாஸ் மற்றும் அலெஜான்ட்ரோ சிட் அனைத்தும் புவேர்ட்டோ ரிக்கோவுக்கு ஒரு கனவான பயணமாக இருக்க வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டன. ஆனால் கடற்கரை அதிர்வுகளில் போடுவதற்குப் பதிலாக, அவர்கள் ஒரு விமான நிலையத்தில் சிக்கிக்கொண்டனர், தங்கள் கனவுக்காக சாட்ஜ்ட்டைத் தவிர வேறு யாரையும் துடைத்து குற்றம் சாட்டினர்.நியூயார்க் போஸ்ட் அறிவித்தபடி, இப்போது 13,000 க்கும் மேற்பட்ட பார்வைகளைக் கொண்ட இப்போது வைரஸ் டிக்டோக்கில், கண்ணீர் ஸ்ட்ரீமிங், விரக்தி சத்தமாக மற்றும் தெளிவாக விளக்குகிறது, “நான் எப்போதும் டன் ஆராய்ச்சி செய்கிறேன், ஆனால் நான் சாட்ஜிப்டைக் கேட்டேன், விசா தேவையில்லை என்று அது கூறியது.” இது, நிச்சயமாக, வசதியானது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக. இது ஒரு விரைவான ஆன்லைன் அனுமதி போன்றது, இது சாட்ஜிப்ட் குறிப்பிட மறந்துவிட்டது.ஆச்சரியப்படத்தக்க வகையில், கிளிப் இணையத்தை ஏற்றியது. நிறைய பேருக்கு வார்த்தைகள் இருந்தன. சிலர் கிண்டலாக இருந்தனர், “இயற்கையான தேர்வு, நான் நினைக்கிறேன்”, முக்கியமான…
லக்னோ: சமாஜ்வாதி கட்சியின் பெண் எம்எல்ஏ. பூஜா பால். இவரது கணவர் ராஜு பால் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ. பிரயாக்ராஜ் மேற்கு தொகுதியில் கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் ரவுடி அதிக் அமதுவின் சகோதரர் அஸ்ரப் என்பவரை, ராஜு பால் தோற்கடித்து வெற்றி பெற்றார். இதன் காரணமாக, ஏற்பட்ட விரோதத்தால் கடந்த 2005-ம் ஆண்டு ராஜு பால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக இருந்த உமேஷ் பால் என்பவரும் கடந்த 2023-ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பின் அதிக் அகமதுவின் மகன் ஆசாத், ஜான்சி அருகே நடைபெற்ற என்கவுன்ட்ரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அடுத்த சில நாட்களில் அதிக் அகமது மற்றும் ஆஸ்ரப் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது 3 பேர் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் சட்டப்பேரவையில் நேற்று சமாஜ்வாதி எம்எல்ஏ பூஜா பால் பேசும்போது, ‘‘என் கணவரை கொன்றது யார்…
சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் நேற்று முன்தினம் இரவு குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நேற்று அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 பகுதிகளுக்கான தூய்மைப் பணி தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் 2 மண்டல தூய்மைப் பணியாளர்களில் என்யூஎல்எம் பிரிவைச் சேர்ந்தவர்கள் 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டம் மேற்கொண்டனர். இதற்கிடையே, போராட்டம் என்ற பெயரில் நடைபாதை, சாலையை மறிப்பதை ஒருபோதும்அனுமதிக்க முடியாது என கருத்து தெரிவித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டது. அதையடுத்து, போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களைக் கலைந்து செல்லுமாறு காவல் துறை நேற்று முன்தினம் மாலை அறிவுறுத்தியது. மேலும், நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி கலைந்து…
தயிர், பிற குறைந்த கொழுப்பு பால் பொருட்களுடன், உடலுக்கு கால்சியம், பொட்டாசியம், புரதம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றை வழங்குகிறது. உடல் பொட்டாசியம் மூலம் ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது, இது சோடியம் அளவை ஒழுங்குபடுத்துகிறது. ஆரோக்கியமான இரத்த நாளங்கள் வலுவான எலும்புகளுடன் சேர்ந்து, கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றின் ஆதரவைப் பெறுகின்றன. முழு கொழுப்பு பதிப்புகளுக்கு பதிலாக குறைந்த கொழுப்பு அல்லது கொழுப்பு அல்லாத பால் மாற்றுகளைத் தேர்ந்தெடுப்பது, நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொழுப்பை உட்கொள்வதைக் குறைக்க மக்களுக்கு உதவுகிறது, இது இதய ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும். வழக்கமான தயிர் நுகர்வு பக்கவாதம் மற்றும் இதய நோய்களை வளர்ப்பதற்கான குறைந்த நிகழ்தகவுகளுக்கு வழிவகுக்கிறது என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. தயிர் ஒரு சிற்றுண்டாக செயல்படுகிறது, இது காலை உணவு நேரத்தில் புதிய பழம் மற்றும் முழு தானியங்களுடன் இணைக்கப்படலாம்.ஆதாரங்கள்https://www.healthline.com/health/stroke/foods-that-prevent-strokehttps://pmc.ncbi.nlm.nih.gov/articles/pmc6047334/https://continentalhospitals.com/blog/10-Foods-to-add-to-your-diet-that-help-prevent-stroke/https://wwwhttps://wwwமறுப்பு: இந்த கட்டுரை தகவல் மட்டுமே மற்றும் மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக…
புதுடெல்லி: “நமது ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. எந்த மிரட்டலுக்கும் நாம் அடிபணிய மாட்டோம்” என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறினார். நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து 12-வது முறையாக செங்கோட்டையில் தேசிய கொடியை அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், “என் அன்பான இந்திய குடிமக்களே, இந்த சுதந்திர தின விழா பெருமை மற்றும் மகிழ்ச்சி நிறைந்த தருணம் ஆகும். இது 140 கோடி மக்களின் கொண்டாட்டம். பாலைவனங்களாக இருந்தாலும் சரி, இமயமலையின் சிகரங்களாக இருந்தாலும் சரி, கடலின் கரைகளாக இருந்தாலும் சரி, பரபரப்பான நகரங்களாக இருந்தாலும் சரி, நாடு முழுவதும் ஒரே குரல் ஒலிக்கிறது: நாம் அனைவரும்…
சென்னை: ஜப்பானைச் சேர்ந்த ஹிகோகி பவர் டூல்ஸ் நிறுவனம் மற்றும் தமிழக அரசு இடையில், செங்கல்பட்டில் ரூ.700 கோடி முதலீட்டில் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மின் கருவிகள் உற்பத்தி ஆலை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலி்ன் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜப்பான் நாட்டைச் சேர்ந்த உலகளாவிய நிறுவனமான கோகி ஹோல்டிங் ஜப்பான், ஜெர்மனி, சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ளது. பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டுள்ள அதன் துணை நிறுவனமான ஹிகோகி பவர் டூல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், 15-க்கும் மேற்பட்ட விற்பனை அலுவலகங்கள், 500-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட சேவை மையங்களுடன் விரிவான வலையமைப்பை கொண்டுள்ளது. ஹிகோகி பவர் டூல்ஸ் இந்தியா நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டம், மஹிந்திரா வோர்ல்டு சிட்டியில் அமைந்துள்ள தொழிற்பூங்காவில், ரூ.700 கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நேரடி மற்றும்…
அமேசான் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவரான ஜெஃப் பெசோஸ் தனது 78 வயதில் தனது தாயார் ஜாக்லின் கிஸ் பெசோஸ் காலமானதைத் தொடர்ந்து ஒரு மனமார்ந்த அஞ்சலி பகிர்ந்து கொண்டார். அவரது பின்னடைவு, தாராள மனப்பான்மை மற்றும் குடும்பத்திற்கு அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் அறியப்பட்ட ஜாக்லின், பெசோஸின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை பயணத்தை வடிவமைப்பதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். அவர் வெறும் 17 வயதில் ஒரு தாயானார், தனது குழந்தைகளை அன்புடனும் உறுதியுடனும் வளர்த்தார், பின்னர் அமேசானில் ஆரம்பகால முதலீடுகள் உட்பட ஜெஃப்பின் தொழில் முனைவோர் அபிலாஷைகளை ஆதரித்தார். தனது குடும்பத்திற்கு அப்பால், ஜாக்லின் தன்னை பரோபகாரம் மற்றும் கல்விக்கு அர்ப்பணித்தார், பெசோஸ் குடும்ப அறக்கட்டளை மற்றும் வ்ரூம் மற்றும் பெசோஸ் அறிஞர்கள் திட்டம் போன்ற முன்முயற்சிகளை இணைத்து, எண்ணற்ற வாழ்க்கையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரது காதல், விடாமுயற்சி மற்றும் சேவையின் மரபு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.ஜெஃப் பெசோஸ்…
பாட்னா: பிரதமராக நரேந்திர மோடி இருக்கும் வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இருந்து வெளியேறுவது குறித்து தான் நினைத்து கூட பார்க்க முடியாது என்று மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான் கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாக லோக் ஜனசக்தி கட்சியின் (ராம் விலாஸ் அணி) தலைவரான சிராக் பாஸ்வான் மாநில அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியானது. அவரது கட்சியின் செயல்பாடும், அவரின் பேச்சும் அதை வெளிப்படுத்தின. விரைவில் பிஹார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அவரது அரசியல் நகர்வு மாநிலம் சார்ந்து இருக்கலாம் என கருதப்பட்டது. இந்தச் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அவரது கட்சி வெளியேறப் போவதாக தகவல் வெளியானது. தற்போது அதை சிராக் பாஸ்வான் மறுத்துள்ளார். “தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து என்னை விலக்கி வைக்கும் நோக்கில் இது மாதிரியான தகவல் திட்டமிட்டு பரப்பப்படுகிறது.…