திருப்பூர்: பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதும், திருப்பூரின் ”பண்ணாரி” எனப் போற்றப்படுவதுமான பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு, குண்டம், தேர்த்திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 6-ம் தேதி, அம்மனுக்கு மஞ்சள் நீர், பொங்கல் வைத்து வழிபாடும், நேற்று காலை 11 மணிக்கு குண்டம் திறந்து பூ போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக ( ஏப்ரல் 8. ஆம் தேதி) இன்று அதிகாலை 3 மணிக்கு, குண்டம் பூ இறங்குதல் நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 40 நாள்கள் தீவிரமான விரதம் இருந்து, துளசி மாலை, மஞ்சள் ஆடை அணிந்து, மாலையில் தீச்சட்டி (பூவோடு) ஏந்தி, பாத யாத்திரையாக பெருமாநல்லூருக்கு நடந்து வந்தனர். இன்று அதிகாலை நான்கு…
Author: admin
தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் வாணி போஜன். ‘தெய்வ மகள்’ சீரியல் வாணி போஜனுக்கு பெரிய அளவில் பெயரை பெற்றுத் தந்தது. சின்ன சின்ன கதாபாத்திரங்களின் மூலம் சில திரைப்படங்களில் வந்து சென்றார். அவருக்கு அடையாளம் பெற்று கொடுத்தது 2020-ல் வெளியான ‘ஓ மை கடவுளே’ திரைப்படம். அடுத்து ‘ராமே ஆண்டாலும், ராவண ஆண்டாலும்’, ‘மிரள்’ படங்களில் நடித்தார். தற்போது சுந்தர்.சி, வடிவேலு நடிப்பில் வெளியாகியுள்ள ‘கேங்கர்ஸ்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
சென்னை: கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே சைதை மேற்கு பகுதி 140-வது வார்டில் உள்ள மாநகராட்சி அம்மா பூங்கா ரூ.3.64 கோடியில் சீரமைக்கப்பட உள்ளது. இப்பணியை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி அம்மா பூங்காவில் புதிய நுழைவுவாயில், கழிவறைகள், முதியோருக்கான சிறப்பு வழித்தடம், குழந்தைகள் விளையாடும் இடம் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன. இந்த பணிகள் 3 மாதத்தில் முழுமையாக நிறைவடையும். கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து மக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தும், நிகழ்ச்சிகள் நடத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்…
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் மோடியை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, காஷ்மீர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முப்படைகளும் உஷார் நிலையில் உள்ளன. இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. காஷ்மீர் முழுவதும் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்தவர்கள் வீடுகளில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், முப்படை தளபதி அனில் சவுகான் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம்…
கோவை: தொழில் நகரான கோவையில் அதிகரித்துவரும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) நிறுவனங்களால் வரும்காலத்தில் ஏ.ஐ. மையமாக திகழும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கல்வி, மருத்துவம், வேளாண் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரித்து வருகிறது. அமெரிக்கா 500 பில்லியன் டாலர் மதிப்பில் செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் ரூ.500 கோடியில் செயற்கை நுண்ணறிவு மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் நகரான கோவையில் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகரித்துவரும் நிலையில் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றன. மேலும் டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை ஆகிய பெருநகரங்களை தவிர்த்து தொழில்துறை, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சி காரணமாக அதிக வேலை வாய்ப்பு வழங்கும் நகராக கோவை…
பிளஸ் 2 விடைத்தாள் திருத்துதல் பணிக்கு ஏப்ரல் 19-ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பொ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துதல் பணிகள் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. கிறிஸ்தவ பண்டிகையான புனித வெள்ளி ஏப்ரல் 18-ம் தேதியும், ஈஸ்டர் பண்டிகை ஏப்ரல் 20-ம் தேதியும் கொண்டாடப்பட உள்ளன. இதற்கு இடைபட்ட ஏப்ரல் 19-ம் தேதி விடைத்தாள் திருத்துதல் பணி நடைபெறவிருக்கிறது. இதனால் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் ஆசிரியர்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாட முடியாத சூழல் நிலவுகிறது. இதை உணர்ந்து ஏப்ரல் 19-ம் தேதி விடைத்தாள் திருத்துதல் பணிக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இது ஆசிரியர்கள் தங்களின் குடும்பத்தினருடன் பண்டிகையை சிறந்த முறையில் கொண்டாட உதவும். மேலும், மற்ற…
ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 41-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட்டுகளில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது மும்பை. தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பதிவு செய்துள்ளது மும்பை அணி. ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இந்த புதன்கிழமை அன்று ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச முடிவு செய்தார். ஹைதராபாத் அணிக்கு ஆரம்பமே படு சறுக்கலாக அமைந்தது. 4.1 ஓவர்களில் அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பினர். டிராவிஸ் ஹெட் (0), இஷான் கிஷன் (1), அபிஷேக் சர்மா (8), நிதிஷ் ரெட்டி (2) ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் 9-வது ஓவரில் அனிகேத் வர்மா 12 ரன்களில் வெளியேறினார். 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
பாரிஸ்: ரஷ்யா – உக்ரைன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு தெளிவாக தெரியாவிட்டால் அடுத்த சில நாட்களில், இதற்கான மத்தியஸ்த முயற்சியில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விலகிவிடுவார் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஐரோப்பிய, உக்ரேனிய தலைவர்களுடனான சந்திப்புக்குப் பிறகு பேசிய மார்கோ ரூபியோ, “இந்த முயற்சியை வாரக்கணக்கிலோ, மாதக்கணக்கிலோ தொடர நாங்கள் விரும்பவில்லை. நாம் இப்போது மிக விரைவாக தீர்மானிக்க வேண்டும். அடுத்த சில வாரங்களுக்குள் இது சாத்தியமாகுமா இல்லையா என்பது குறித்து சில நாட்களில் நான் பேசுகிறேன். அதிபர் ட்ரம்ப், இவ்விஷயத்தில் மிகவும் அதிருப்தி கொண்டுள்ளார். ஏனெனில், இதற்காக அவர் நிறைய நேரத்தையும் சக்தியையும் அர்ப்பணித்துள்ளார். இது முக்கியமானது. என்றாலும், இதே அளவுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டிய பல முக்கியமான விஷயங்கள் உள்ளன. அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பாதுகாப்பு உத்தரவாதங்களை உறுதி செய்வது நம் முன்…
மதுரை: மதுரை அழகர்கோவிலில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 8-ம் தேதி தொடங்குகிறது. முக்கிய விழாவான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி மே 12-ம் தேதி நடைபெறுகிறது. உலகப் புகழ் பெற்றது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாக்கள். சைவம், வைணவத்தின் இணைப்புத் திருவிழாவாக நடைபெறும் இத்திருவிழாவில் வைகை ஆற்றில் கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை பக்தி பரவசத்துடன் கள்ளழகரை வரவேற்பார்கள். அத்தகைய சிறப்புக்குரிய சித்திரைத் திருவிழா குறித்து கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் வி.ஆர்.வெங்கடாசலம், கோயில் துணை ஆணையர் ந.யக்ஞநாராயணன் ஆகியோர் இன்று தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அழகர்கோவிலில் கள்ளழகர் கோயிலில் மே 8-ம் தேதி வியாழக்கிழமை கோயிலில் சுந்தரராஜபெருமாள் சுவாமி புறப்பாடுடன் ஆரம்பமாகிறது. மே09-ம் தேதி 2-ம் நாள் சுவாமி புறப்பாடு நடைபெறும். அதனைத்தொடர்ந்து மூன்றாம் நாள்…
நடிகர்கள் யாருமின்றி, படக்குழு, தொழில்நுட்பக் கலைஞர்கள் உதவியின்றி முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஒரு திரைப்படம் கன்னடத்தில் உருவாகியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள சித்தஹல்லி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மா மூர்த்தி. கிராபிக் டிசைனரான நூதன் என்பவருடன் இணைந்து இப்படத்தை நரசிம்மா உருவாக்கியுள்ளார். ’லவ் யூ’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தின் பட்ஜெட் ரூ.10 லட்சம் தானாம். அதுவுமே கூட மென்பொருள் உரிமங்களுக்காக மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 95 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படத்துக்கு யு/ஏ சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயின்கள் இல்லை. இசையமைப்பாளரோ, ஒளிப்பதிவாளரோ யாரும் கிடையாது. சென்சார் போர்டும் இப்படத்துக்கு அனுமதி கொடுத்திருப்பதால் இனி அடுத்தடுத்து ஏஐ படங்கள் அதிகமாக வரும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படம் வெளியானால் முழுக்க முழுக்க ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட உலகின் முதல் திரைப்படம் என்ற பெருமையை பெரும் என்று இதனை உருவாக்கிய நரசிம்மா மூர்த்தி…