Author: admin

மதுரை: சிறுபான்மை கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயம் செய்ய அரசுக்கு அதிகாரம் உண்டு என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மதுரை மேலூர் அருகே சிறுபான்மையினர் அரசு உதவி பெறும் பள்ளியில், பட்டதாரி ஆசிரியராக நியமிக்கப்பட்ட பஷீரின் நியமனத்தை, அவர் ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாததால் அங்கீகரிக்க மறுத்து மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து, தான் பட்டதாரி ஆசிரியராக நியமிக்கப்பட்டதை அங்கீகரிக்க கோரி பஷீர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த தனி நீதிபதி, மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, கல்வித்துறை சார்பில் உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ். ஸ்ரீமதி…

Read More

சென்னை: சென்​னை​யில் நடை​பெற்ற விழா​வில் இளம் வீரர், வீராங்​க​னை​களுக்கு ரூ.10 லட்​சம் உதவித்​தொகை வழங்​கப்​பட்​டது. இதில் ரூ.7 லட்​சத்தை சென்னை சூப்​பர்​கிங்ஸ் (சிஎஸ்​கே) அணி வீரர் ஷிவம் துபே வழங்​கி​னார். தமிழ்​நாடு ஸ்போர்ட்ஸ் பத்​திரிக்​கை​யாளர்​கள் சங்​கம், தமிழ்​நாடு கிரிக்​கெட் சங்​கம் (டிஎன்​சிஏ) மற்​றும் சிஎஸ்கே சார்​பில் வளர்ந்து வரும் இளம் வீரர், வீராங்​க​னை​களுக்கு ஊக்கத் தொகை வழங்​கும் விழா சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் தமிழ்​நாடு ஸ்போர்ட்ஸ் பத்​திரிக்​கை​யாளர்​கள் சங்​கம், தமிழ்​நாடு கிரிக்​கெட் சங்​கம் (டிஎன்​சிஏ), சிஎஸ்கே ஆகியவை சார்​பில் ரூ.3 லட்​ச​ம், சிஎஸ்கே அணி வீரர் ஷிவம் துபே சார்​பில் ரூ.7 லட்​ச​ம் என மொத்​தம் ரூ.10 லட்​சம் விளை​யாட்டு வீரர்​களுக்கு உதவித்​தொகை​யாக வழங்​கப்​பட்​டது. நிகழ்ச்​சி​யில் கலந்​து​கொண்ட சிஎஸ்கே அணி வீரர் ஷிவம் துபே 10 நம்​பிக்​கைக்​குரிய விளை​யாட்டு வீரர்​களுக்கு மொத்​தம் ரூ.10 லட்​சம் உதவித்​தொகையை வழங்​கி​னார். பி.பி.அபிநந்த் (டேபிள் டென்​னிஸ்), கே.எஸ்​.வெனிசா (வில்​வித்​தை), முத்​து​மீனா வெள்​ள​சாமி (​பாரா தடகளம்),…

Read More

ஏப்ரல் 24 அன்று, தனது 25 வது பிறந்தநாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, படைப்பாளி மிஷா அகர்வால் திடீரென கடந்து சென்றது, இணையத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நகைச்சுவையான மற்றும் தொடர்புபடுத்தக்கூடிய உள்ளடக்கத்திற்காக அறியப்பட்ட மிஷா, 347,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்ட ஒரு விசுவாசமான சமூகத்தை உருவாக்கியிருந்தார். அவரது இன்ஸ்டாகிராம் கைப்பிடியில் ஒரு இடுகை மூலம் அவரது குடும்பத்தினர் மனம் உடைக்கும் செய்தியை அறிவித்தனர், இருப்பினும் அவரது மரணத்திற்கான காரணம் வெளியிடப்படவில்லை. மிஷா அகர்வாலின் மரணம்அறிவிப்பிலிருந்து, மிஷாவின் பழைய வீடியோ வைரலாகிவிட்டது, அங்கு 2025 ஆம் ஆண்டு ஏற்கனவே எவ்வளவு பயங்கரமானது என்று பேசினார், அதை முழுவதுமாக ரத்து செய்வதைப் பற்றி நகைச்சுவையாக பேசினார். இது ஆரம்பத்தில் லேசான நகைச்சுவையாக கருதப்பட்டாலும், சமீபத்திய நிகழ்வுகளின் வெளிச்சத்தில் பல ரசிகர்களுக்கு இந்த வீடியோ வேறுபட்ட தொனியை எடுத்துள்ளது. கிளிப் இப்போது அந்த நேரத்தில் தனது உணர்ச்சி நிலையின் உண்மையான பிரதிபலிப்பாக உணர்கிறது என்று…

Read More

Last Updated : 29 Apr, 2025 06:29 AM Published : 29 Apr 2025 06:29 AM Last Updated : 29 Apr 2025 06:29 AM ரெய்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை கண்டறியும் சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதில் ரெய்கர் மாவட்டத்தில் உள்ள கோபாதாரை என்ற கிராமத்தில் சந்தேகப்படும்படி சிலர் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த மாவட்டத்தில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, யாகூப் ஷேக் என்பவரின் வீட்டில் தங்கியிருந்த இப்திகர் ஷேக் (29) மற்றும் அர்னிஷ் ஷேக் (25) ஆகிய 2 பாகிஸ்தானியர்களை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் போலி ஆவணங்களை கொடுத்து சட்டவிரோதமாக இந்திய வாக்காளர் அட்டை பெற்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவரும் பாகிஸ்தானின் கராச்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.…

Read More

டீப்சீக் ஏஐ சாட்போட்டுக்கு உலகளவில் கிடைத்துள்ள வெற்றிக்கு பின்னால் 29 வயதான லுவோ ஃபுலி-யின் கடின உழைப்பு மிக முக்கியமானதாக இருந்தது தெரியவந்துள்ளது. சீனா உருவாக்கியுள்ள டீப்சீக் ஏஐ மாடலுக்கு உலகளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. சாட்ஜிபிடி, ஜெமினி, கிளாட் ஏஐ போன்ற முன்னணி சாட்போட்களை பின்னுக்குத் தள்ளி டீப்சீக் சாட்போட் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் முதலிடத்தை பிடித்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. இது, அமெரிக்க பங்குச் சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் பல முன்னணி ஏஐ தொழில்நுட்ப நிறுவனங்களின் கணிசமான சரிவுக்கு வழிவகுத்தது. டீப்சீக் சாட்போட்டின் இந்த அபார வெற்றிக்கு பின்னால் புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்ற திடமான எண்ணம் கொண்ட திறமையான குழு இருப்பது தெரியவந்துள்ளது. அந்த குழுவில் உள்ள ஒரு தனித்துவமான உறுப்பினர்தான் லுவோ ஃபுலி. 29 வயதான இவர் ஏஐ தொழில்நுட்பத்தில் தனித்திறமையுடன் மேதையாக விளங்கியுள்ளார். டீப்சீக்-வி2 உருவாக்கத்தில் அவரது இயல்பான மொழி செயலாக்கம் மிக…

Read More

வாஷிங்​டன்: அமெரிக்க விமான விபத்தில் இந்திய பெண் மருத்துவர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜாய் சைனி. பெண் மருத்துவரான இவர் அமெரிக்காவில் குடியேறி அந்த நாட்டை சேர்ந்த மைக்கேல் குரோபை திருமணம் செய்து கொண்டார். இத் தம்பதிக்கு கரீனா, ஜார்ட், அனிதா ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர். வார விடுமுறையை கொண்டாட மைக்கேல் குரோப் குடும்பத்தினர், நியூயார்க் மாகாணம், வெஸ்ட்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானத்தில் புறப்பட்டனர். ஜார்ஜியா மாகாணம், கொலம்பியா பகுதிக்கு சென்ற அந்த விமானத்தில் மைக்கேல் குரோப், அவரது மனைவி ஜாய் சைனி, மகள் கரீனா, அவரது நண்பர் ஜேம்ஸ், மகன் ஜார்ட் ஆகியோர் பயணம் செய்தனர். கொலம்பியாவை நெருங்கும்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 5 பேரும் விமானியும் உயிரிழந்தனர். மைக்கேல் குரோப், ஜாய் சைனி தம்பதியின்…

Read More

Last Updated : 03 Apr, 2025 02:17 PM Published : 03 Apr 2025 02:17 PM Last Updated : 03 Apr 2025 02:17 PM ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் – ரெங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா இன்று காலை 11 மணிக்கு கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 11-ம் தேதி பங்குனி உத்திர நாளில் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 108 வைணவ திவ்ய பாசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் மூலவர் வடபத்ரசாயி, பெரியாழ்வார், ஆண்டாள் ஆகியோர் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்த ஆண்டாள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து பங்குனி உத்திரம் நாளில் ரெங்கமன்னாரை மணம் புரிந்தார் என்பது கோயில் வரலாறு. அதனால் ஆண்டு தோறும் பங்குனி உத்திரம் நாளில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா கோலகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருக்கல்யாண…

Read More

சந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு’ வரிசையின் அடுத்த படமாக வெளியாக இருக்கிறது ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. நாயகியாக நடித்திருக்கிறார் கீத்திகா திவாரி. கவுதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், யாஷிகா ஆனந்த், கஸ்தூரி, நிழல்கள் ரவி என பெரும் நட்சத்திரக் கூட்டம் படத்தில். காமெடிக்கும் ஹாரருக்கும் பஞ்சமில்லாத படம் இது என்கிற இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த், மிக்ஸிங்கில் பிசி. அவரிடம் பேசினோம். இயக்குநரா இது உங்களுக்கு இரண்டாவது படம்… எப்படி வந்திருக்கு? ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்துக்குப் பிறகு நான் இயக்கி இருக்கிற படம் இது. இயக்குநரா எனக்கு இது 2-வது படமா இருந்தாலும் சந்தானத்தோட என் பயணம் ரொம்ப வருஷமா தொடருது. அவரோட ரசிகனா பழகி, பெரும்பாலான படங்கள்ல, அதாவது ‘சிவா மனசுல சக்தி’ தொடங்கி இப்பவரை நாங்க ஒரு டீமா அவருக்கு காமெடி எழுதியிருக்கோம். அதனால, ரசிகர்கள் அவர்கிட்ட என்ன எதிர்பார்ப்பாங்க அப்படிங்கறதை புரிஞ்சு, அதுக்கு ஏற்ற மாதிரியான காமெடி ஹாரர் படமா…

Read More

சென்னை: பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமார், பத்மஸ்ரீ விருது பெற்ற கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஆகியோருக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசின் சார்பில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷன் விருதை கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக, குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன். விளையாட்டுத் துறையில் படைத்த சாதனைகளுக்காக பத்மஸ்ரீ விருதை, குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்ற கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் விளையாட்டுத் துறையில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Read More

சென்னை: கடனை வசூலிக்க நெருக்கடி கொடுத்தால் தண்டனை வழங்கும் வகையில், தமிழக சட்டமன்றத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மசோதா ஒன்றை கடந்த 26ம் தேதி தாக்கல் செய்துள்ளார். இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச்சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் ராஜபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனிநபர்கள், சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவற்றுக்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக கடன் வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் புதிய சட்டத் திருத்த மசோதாவை சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்த சட்டத்திருத்தத்தின்படி, கடன் பெறுவோருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்துக்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்துவைக்க குறை தீர்ப்பாயர் நியமிக்கப்பட வேண்டும். கடன் வழங்கிய நிறுவனம், கடன் பெற்றவரையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தவோ, மிரட்டவோ, பின் தொடரவோ, அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது என்றும், கடன் பெற்றவரிடமோ அல்லது அவரது குடும்பத்தினரிடமோ வலுக்காட்டாயமாக வசூலிக்கும்…

Read More