Author: admin

தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கான தமிழ் பாடத்திட்டம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக பள்ளிக்கல்வித் துறையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு, 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றப்பட்டு இருகட்டமாக 2018 மற்றும் 2019-ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டது. இதற்கு பரவலாக வரவேற்பு கிடைத்தபோதும், பாடத்திட்டத்தின் அளவு அதிகமாக இருப்பதாக ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தனர். குறிப்பாக பொதுத் தேர்வு எழுதும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் சார்ந்த பாடநூல்கள் அதிகபட்சம் 600 பக்கங்களுக்கு மேல் இருக்கின்றன. இதனால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக சிரமப்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே, சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ் மொழி பாடத்துக்கு மாநில பள்ளிக்கல்வித் துறையின் பாடப் புத்தகங்களை படித்து வருகின்றனர். ஆனால், பாடப் புத்தக்கத்தின் அளவு அதிகமாக இருப்பதால் அவற்றை குறைத்து தேர்வுகளை நடத்துகின்றனர். உதாரணமாக 10-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில்…

Read More

புவனேஸ்வர்: கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்துப் போட்டியில் இன்று புவனேஸ்வரில் சென்னையின் எப்சி, மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதவுள்ளன. இதற்கான சென்னையின் எப்சி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி விவரம்: கோல்கீப்பர்கள்: முகமது நவாஸ், சமிக் மித்ரா, மல்ஹர் உமேஷ் மோஹல்.டிபன்டர்கள்: ரியான் எட்வர்ட்ஸ், பிசி லால்தின்புயா, விக்னேஷ் தட்சிணாமூர்த்தி, அங்கித் முகமர்ஜி, மந்தர்ராவ் தேசா, பிரீத்தம் கோடல், எட்வின் சிட்னி வன்ஸ்பால். மிட்ஃபீல்டர்கள்: ஜிதேந்திர சிங், லால்ரின்லியானா நாம்டே, ஜிதேஸ்வர் சிங், எல்சினோ டியாஸ், லூகாஸ் பிராம்பிலா, ஃபரூக் சவுத்ரி, மகேசன் சிங். முன்கள வீரர்கள்: கானர் ஷீல்ட்ஸ், வின்சி பாரெட்டோ, கியான் நாசிரி, வில்மார், குர்கீரத் சிங், இர்பான் யத்வாட், டேனியல் சிமா சுக்வு.

Read More

பெய்​ஜிங்: அமெரிக்காவுக்கு கனிமங்கள், உலோகம், காந்த பொருட்கள் ஏற்றுமதியை சீன அரசு நிறுத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவில் ராணுவத் தளவாட உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல், அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருகிறார் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இதைத் தொடர்ந்து உலக நாடுகளில் இருந்து அமெரிக்கா வரும் பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகம் விதித்து உலக பத்திரிகைகளின் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளார். சமீபத்தில் உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பை அதிபர் ட்ரம்ப் அமல்படுத்தியிருந்தார். கடந்த 9-ம் தேதி முதல் அந்த வரிவிதிப்பு அமலாக இருந்த நிலையில், வணிகப் போர், சர்வதேச பங்குச் சந்தைகளின் சரிவு, உலகளாவிய பொருளாதார மந்த நிலை ஆகியவற்றின் காரணமாக அதை 90 நாட்களுக்கு அதிபர் ட்ரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். எனினும், இந்த வரிவிதிப்புப் பட்டியலில் சீனாவை மட்டும் அதிபர் ட்ரம்ப் தவிர்த்துள்ளார். மேலும், அந்த நாட்டுக்கு தொடர்ந்து வரிவிதிப்பையும் உயர்த்தி…

Read More

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சென்னையில் உள்ள சிவன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும். குறிப்பாக, இக்கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் பங்குனி பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில், இந்தாண்டு பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. நேற்று காலை வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வரம் இசைக்க, கோயில் மரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது திரண்டிருந்த பக்தர்கள் கொடி மீது மலர்தூவி வணங்கினர். தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் மற்றும் வள்ளி தெய்வானையுடன் முருகபெருமான் ஆகியோர் பல்வேறு மலர் அலங்காரத்தில் கோயில் சன்னதியில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.. பின்னர், பவளக்கால் விமானத்தில் கபாலீஸ்வரர் வீதி உலா…

Read More

சந்திப்பு எம்மா மரியா மஸ்ஸெங்கா91 வயதானவர் ஒரு மராத்தான் பதிவுஅவளுடைய சகிப்புத்தன்மையுடன் அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. மே 2024 இல், இத்தாலிய பெண் 200 மீட்டர் வெளியில் 51.47 வினாடிகளில் ஓடினார்.ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, அப்போது 90 வயதான மஸ்ஸெங்கா, ஐந்து உலக சாதனைகள், ஒன்பது ஐரோப்பிய பதிவுகள் மற்றும் பல்வேறு பிரிவுகளில் 28 சிறந்த இத்தாலிய நிகழ்ச்சிகளைக் கொண்டுள்ளது முதுநிலை ஸ்பிரிண்டிங் – வயதுக் குழு ஏற்பாடு செய்த பழைய ஓட்டப்பந்தய வீரர்களுக்கான போட்டி பந்தயங்கள்.மஸ்ஸெங்கா ஒரு விஞ்ஞான ஆய்வில் சேர்ந்தார், விஞ்ஞானிகள் தனது பவர்ஹவுஸ் உடலியல் நன்கு புரிந்துகொள்ள உதவும். சைக்கிள் ஓட்டுதல் பயிற்சிகள், முழங்கால் பயிற்சிகள் மற்றும் தொடை தசை பயாப்ஸிகள் போன்ற பல சோதனைகள் மூலம் அவர் வைக்கப்பட்டார். “உலக சாதனை படைத்தவர் இத்தாலியின் பாவியா பல்கலைக்கழகத்தில் சிமோன் போர்செல்லி, எம்.டி., பி.எச்.டி ஆய்வகத்தில் ஒரு சைக்கிள் ஓட்டுதல் மற்றும் முழங்கால் நீட்டிப்பு பயிற்சிகளை மேற்கொண்டார். மில்வாக்கி,…

Read More

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சுவாமி தரிசனம் செய்ய 10 மணி முதல் 12 மணி நேரம் வரை ஆகிறது. பக்தர்களின் கூட்டத்தை கவனத்தில் கொண்டு, வரும் மே 1-ம் தேதி முதல் ஜூன் 15-ம் தேதி வரை தரிசனம் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது எனவும் நேரில் வரும் விஐபி பக்தர்களுக்கு வழக்கம்போல் விஐபி பிரேக் தரிசனம் அமல்படுத்தப்படும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த விஐபி பிரேக் தரிசனத்தை வெள்ளோட்டமாக மே 1 முதல் காலை 6 மணிக்கு அனுமதிக்கலாம் எனவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. மே மாத விசேஷங்கள்: மே 1-ம் தேதி அனந்தாழ்வார் ஜெயந்தி தொடக்கம், 2-ம் தேதி ராமானுஜர் ஜெயந்தி மற்றும் ஸ்ரீ சங்கரர் ஜெயந்தி, 6 முதல் 8-ம் தேதி வரை பத்மாவதி திருக்கல்யாணம், 10-ம் தேதி அனந்தாழ்வார் சாத்துமுறை, 11-ம்…

Read More

மிலன்: சீன தேசத்தின் ஏஐ சாட்பாட் ‘டீப்சீக்’ பயன்பாட்டை இத்தாலி முடக்கி உள்ளது. பயனர்களின் தரவை பாதுகாக்கும் நோக்கில் இந்த நகர்வை கையில் எடுத்துள்ளது இத்தாலியின் தரவு பாதுகாப்பு ஆணையம். அதுமட்டுமல்லாது டீப்சீக் சாட்பாட் பின்னணியில் உள்ள நிறுவனங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டீப்சீக் பயன்படுத்தும் பயனர்களிடம் இருந்து என்ன மாதிரியான தரவுகள் சேகரிக்கப்படுகிறது, அது எங்கு சேமிக்கப்படுகிறது மற்றும் அது குறித்த அறிவிப்பு பயனர்களுக்கு எப்படி தெரிவிக்கப்படுகிறது போன்ற விவரங்கள் டீப்சீக் சாட்பாட் வடிவமைப்பாளர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக கிடைத்த பதில், தரவு பாதுகாப்பு ஆணையத்துக்கு அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதுவே இந்த முடக்கத்துக்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. டீப்சீக் தரப்பில் தங்களது நிறுவனம் இத்தாலியில் இயங்கவில்லை என்றும், ஐரோப்பிய யூனியனின் சட்ட விதிகள் தங்களுக்கு பொருந்தாது என்றும் இத்தாலி ஆணையத்துக்கு பதில் கூறப்பட்டுள்ளதாக தகவல். டீப்சீக் ஏஐ பாட் அறிமுகமான சில நாட்களில்…

Read More

நானி நடிப்பில் உருவாகியுள்ள படம், ‘ஹிட் -தி தேர்ட் கேஸ்’. சைலேஷ் கொலானு இயக்கியுள்ள இதில், கேஜிஎஃப், கோப்ரா படங்களில் நடித்துள்ள ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். ராவ் ரமேஷ், பிரம்மாஜி உட்பட பலர் நடித்துள்ளனர். சானு ஜானி வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு மிக்கி ஜே மேயர் ஒளிப்பதிவு செய்துள்ளார். மே 1-ம் தேதி தெலுங்கு, தமிழ், இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாகிறது. தமிழில் இந்தப் படத்தை சினிமாக்காரன் நிறுவனம் வெளியிடுகிறது. சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், படம் பற்றி நானி கூறும்போது, “ஹிட் படத்தின் 2 பாகங்களும் தமிழில் வெளியாகியிருக்கிறது. அந்தப் படங்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இதன் கதை புதிது. கதை சொல்லும் பாணி புதிது. இது ஒரு அரிதான த்ரில்லர் படம். இன்வெஸ்ட்டிகேட் த்ரில்லர் வகையிலான இந்தப் படத்தில் அமைந்திருக்கும் எல்லா விஷயங்களும் உயர்தரம் கொண்டவை. அந்த வகையில் இந்தப் படம்…

Read More

மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்வதன் மூலம் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கான தொகுதிகளின் விகிதாச்சார எண்ணிக்கையை மத்திய அரசு குறைக்கப் பார்ப்பதாக குமுறுகிறார் முதல்வர் ஸ்டாலின். இதைத் தடுப்பதற்காக மாநில முதல்வர்களை ஒருங்கிணைத்து முதல்கட்ட ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தி இருக்கிறார். இந்த நிலையில், ஏற்கெனவே தொகுதி மறு சீரமைப்பின் போது காணாமல் செய்யப்பட்ட புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி மீண்டும் உருவாக்கப்படுமா என்ற கேள்வி புதுக்கோட்டை மாவட்ட மக்கள் மத்தியில் தற்போது மேலோங்கி வருகிறது. மன்​னர்​கள் அரண்​மனை கட்டி ஆட்சி செய்த இடம் என்ற வரலாற்​றுப் பாரம்​பரி​யம் புதுக்​கோட்​டைக்கு உண்​டு. அந்த வகை​யில், 2004 மக்​கள​வைத் தேர்​தல் வரைக்​கும் புதுக்​கோட்டை மக்​கள​வைத் தொகுதி தனி​யாக இருந்​தது. ஆனால், அதற்கு அடுத்து வந்த தொகுதி மறு சீரமைப்​பில் புதுக்​கோட்டை தொகு​தி​யில் இருந்த அறந்​தாங்கி சட்​டமன்​றத் தொகுதி ராம​நாத​புரம் மக்​கள​வைத் தொகு​தி​யுட​னும், பட்​டுக்​கோட்​டை, பேராவூரணி தொகு​தி​கள் தஞ்​சாவூர் மக்​கள​வைத் தொகு​தி​யுட​னும், புதுக்​கோட்​டை, கந்​தர்​வக்​கோட்டை தொகு​தி​கள் திருச்சி…

Read More

சென்னை: சுபமுகூர்த்த நாளான புதன்கிழமை (ஏப்.30) பத்திரப் பதிவுக்கு சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கப்படும் என்று பதிவுத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்பதால், அத்தினங்களில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று பத்திரப்பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது. தற்போது சித்திரை மாதத்தின் மங்களகரமான தினமான ஏப்ரல் 30-ம் தேதி அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதால், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 டோக்கன்கள், இரண்டு சார்பதிவாளர்கள் இருந்தால் 200-க்கு பதில் 300 டோக்கன்கள் வழங்கப்படும். அதிகளவில் பத்திரப் பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண டோக்கன்களுடன், ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் டோக்கன்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Read More