Author: admin

தமிழ் தலைப்பில் படம் வருவது குறைந்து விட்டது என்று ‘அகமொழி விழிகள்’ விழாவில் கே.ராஜன் பேசினார். சச்சுஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள படம் ‘அகமொழி விழிகள்’. மே 9-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை சசீந்திரா கே.சங்கர் இயக்கி இருக்கிறார். இதன் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்கள் சிலரும் கலந்துகொண்டார்கள். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட கே.ராஜன் பேசும்போது, “கேரளா நண்பர்கள் இந்தப் பட விழாவுக்கு அழைத்தார்கள். மலையாள பட டப்பிங் என நினைத்துத்தான் வந்தேன். ஆனால் மிக அழகான தமிழ்ப் படமாகச் செய்துள்ளார்கள். அவ்வளவு அழகாக எடுத்துள்ளார்கள். ட்ரெய்லர், மூன்று பாடல் எல்லாமே அவ்வளவு சிறப்பாக இருந்தது. குழுவினருக்கு என் வாழ்த்துகள். இந்த வருடம் வெறும் 4 படங்கள்தான் வெற்றி பெற்றுள்ளன. போன வருடம் 220 படங்களில் 8 படங்கள் தான் வெற்றி. சின்ன படங்களில் 15…

Read More

ஒட்டோவா: கனடாவின் வான்கூவரில் நேற்றிரவு நடந்த விழா ஒன்றில் கூட்டத்தில் கார் மோதியதில் பலர் உயிரிழந்துள்ளர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து வான்கூவர் போலீஸார் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு E.41-வது அவென்யூவில் நடந்த விழா ஒன்றில் கூட்டத்தினர் மீது கார் மோதியதில் சிலர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையின் முடிவில் சம்பவம் குறித்த கூடுதல் தகவல்கள் தெரிவிப்போம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை போலீஸார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை, இருந்தபோதிலும் சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோக்களில் தெரு முழுவதும் இறந்தவர்களின் உடல்கள் கிடப்பதை பார்க்க முடிகிறது. கூட்டத்தினர் மீது மோதியதாக கூறப்படும் கருப்பு எஸ்யூவி கார் ஒன்று நொறுங்கிய நிலையில், சம்பவம் நடந்த இடத்துக்கு அருகில் நீலநிற லாரிக்கு அருகில் நிற்பதைக் காண முடிகிறது. வேறு சில வீடியோக்களில் காயமடைந்தவர்களுக்கு பிறர்…

Read More

திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோயில்களில் நேற்று ராகு, கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ராகு, கேது பெயர்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று மாலை 4.20 மணிக்கு ராகு பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் இடம்பெயர்ந்தனர். இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் தனி சந்நிதியில் அருள்பாலிக்கும் ராகு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து, ராகு பகவான் வெள்ளி சேஷ வாகனத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. நாளை (ஏப்.28) சந்தனக்காப்பு அலங்காரம், லட்சார்ச்சனை பூர்த்தி மற்றும் மகா தீபாராதனை நடைபெறுகிறது.…

Read More

ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் படிப்புகளுக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வுக்குரிய ஹால்டிக்கெட்களை என்டிஏ வெளியிட்டுள்ளது. நம்நாட்டில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் பட்டப் படிப்புகளில் சேர தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வில் (என்சிஇடி) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வு, கணினி வாயிலாக நாளை (ஏப்ரல் 29) நடத்தப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் 178 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 20-ல் தொடங்கி மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. விண்ணப்பித்தவர்களுக்கான ஹால்டிக்கெட்களை என்டிஏ நேற்று முன்தினம் வெளியிட்டது. அவற்றை எனும் வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது ncet@nta.ac.in மின்னஞ்சல்…

Read More

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ டி4 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. மிட் செக்மென்ட் மாடலாக வெளிவந்துள்ளது இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இதில் ஏராளமான ஏஐ அம்சங்களும் உள்ளன. சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது இந்தியாவில் டி4 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ நிறுவனத்தின் ‘T’ வரிசை போன்கள் இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021-ல் டி1 மாடல் அறிமுகமானது. தொடர்ந்து டி2 மற்றும் டி3 மாடல்கள் அறிமுகமாகின. தற்போது டி4 வெளிவந்துள்ளது. சிறப்பு அம்சங்கள்: 6.77 இன்ச் AMOLED…

Read More

புதுடெல்லி: இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடையும் நிலையில் அட்டாரி வழியாக பாகிஸ்தானியர்கள் சொந்த நாடு திரும்பி வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்.22) பஹல்காமில் நடந்த கொடூரத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்தியா, பாகிஸ்தானியர்களுக்கான விசாக்களை ரத்து செய்வது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுத்தது. அதன்படி சார்க் விசாக்கள் ஏப்.26ம் தேதி நிறைவடைந்தது. மற்ற விசாக்கள் இன்று (ஏப்.27) நிறைவடைகிறது. மருத்துவ விசாக்கள் மட்டும் ஏப்.29 ம் தேதி வரை செல்லுபடியாகும். இந்த முடிவுகளால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேறுவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடையும் நிலையில் பாகிஸ்தானியர்கள் அமிர்தரஸில் உள்ள வாகா – அட்டாரி சோதனைச் சாவடி வழியாக வெளியேறி வருகின்றனர். அவர்களின் இந்திய உறவினர்களும் அட்டாரி எல்லைக்கு வந்து தங்களின் கண்ணீருடன் வெளியேறுபவர்களை வழியனுப்பி வருகின்றனர். இந்தியாவுக்கு வந்திருந்த பல்வேறு பாகிஸ்தானியர்கள் உறவினர்களின் திருமண நிகழ்வுகளில்…

Read More

தமிழகத்தில் இன்றுமுதல் மே 2-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின்மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்.27) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்.29 முதல் மே 2-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 3-ம் தேதி ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப் 29 முதல் மே 1-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை, வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான…

Read More

மும்பை: ஐபிஎல் கிரிக்​கெட் தொடரின் லீக் ஆட்​டத்​தில் மும்பை இந்​தி​யன்ஸ் அணி 54 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்​தி​யது. இந்த ஆட்​டம் மும்பை வான்​கடே மைதானத்​தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடை​பெற்​றது. முதலில் விளை​யாடிய மும்பை இந்​தி​யன்ஸ் அணி 20 ஓவர்​களில் 7 விக்​கெட் இழப்​புக்கு 215 ரன்​கள் குவித்​தது. ரியான் ரிக்​கெல்​டன் 58 ரன்​கள் (32 பந்​துகள், 6 சிக்​ஸர், 4 பவுண்​டரி) குவித்து அசத்​தி​னார். ரோஹித் சர்மா 12, வில் ஜேக்ஸ் 29 (21 பந்​து, 3 பவுண்​டரி, ஒரு சிக்​ஸர்), திலக் வர்மா 6, ஹர்​திக் பாண்​டியா 5, கார்​பின் போஷ் 20 ரன்​கள் சேர்த்​தனர். சூர்​யகு​மார் யாதவ் அதிரடி​யாக விளை​யாடி 28 பந்​துகளில் 54 ரன்​கள் விளாசி​னார். நமன் திர் 11 பந்​துகளில் 25 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்தார். லக்னோ அணி தரப்​பில் மயங்க் யாதவ், அவேஷ் கான்…

Read More

‘தொட்டாங் சிணுங்கி’ இயக்குநர் கே.எஸ்.அதியமான் நீண்ட இடைவெளிக்குப் பிரகு மீண்டும் படம் ஒன்றை இயக்கி வருகிறார். ‘தொட்டாங் சிணுங்கி’ படத்தின் மூலம் இயக்குநராக கொண்டாடப்பட்டவர் கே.எஸ்.அதியமான். அப்படத்துக்குப் பிறகு தமிழ், இந்தி படங்களை இயக்கினாலும் எதுவுமே பெரியளவுக்கு வரவேற்பு பெறவில்லை. இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினை வைத்து படம் ஒன்றை இயக்கினார். அப்படமும் பாதியிலேயே நிற்கிறது. தற்போது புதிய படம் ஒன்றை சத்தமின்றி இயக்கி வருகிறார் அதியமான். சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இப்படத்தில் விதார்த், ரேவதி, லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரங்கள் விரைவில் தெரியவரும். ஒட்டுமொத்த படத்தினையும் முடித்துவிட்டு, படம் குறித்த அறிவிப்பை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

Read More

சண்முக பாண்டியன் நடித்துள்ள ‘படை தலைவன்’ திரைப்படம் மே 23-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்கள். ‘சகாப்தம்’ மற்றும் ‘மதுர வீரன்’ ஆகிய படங்களின் மூலம் நாயகனாக அறியப்பட்டவர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். தற்போது ‘படை தலைவன்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். இப்படம் மே 23-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அன்பு இயக்கியுள்ள இப்படத்தில் சண்முக பாண்டியன், கஸ்தூரி ராஜா, யாமினி சந்தர், கருடன் ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் பெரும்பாலான காட்சிகளை காடுகளுக்குள் படமாக்கி இருக்கிறார்கள். இதன் ஒளிப்பதிவாளராக சதீஷ் குமார், இசையமைப்பாளராக இளையராஜா ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

Read More