சென்னை: தமிழகத்தில் திட்டமிட்டு திணிக்கப்படும் வட இந்தியர்களுக்கு வாக்காளர் உரிமை அட்டை வழங்கக் கூடாது என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் வரும் 19-ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்தார். இது குறித்து சென்னை விருகம்பாக்கம் சின்யமா நகரில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி அலுவலகத்தில் நிருபர்களிடம் அவர் கூறியது: “தாய்மொழி தமிழை கொண்டவருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும். மற்றொரு மாநிலத்தில் இருந்து வந்து, இங்கு தேர்வு எழுதி மதிப்பெண் எடுத்து அரசு பணியில் கடைநிலை ஊழியர் முதல் அதிகாரிகள் வரை வரை பொறுப்பு பெறலாம் என்ற நிலையை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். பிற மாநிலங்களில் எந்த நோக்கத்துக்காக இங்கு பணிக்கு வருகிறார், அவர் ஒப்பந்தப் பணியாளராக வருகிறார்களாக என்பதை கண்காணித்து, பணிமுடிந்த பிறகு, சொந்த மாநிலத்துக்கு அவர்கள் திரும்புவதை உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசு பணிகளில் அந்தந்த…
Author: admin
உடலின் திசுக்களுக்கு போதுமான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல தேவையான ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்களின் பற்றாக்குறையால் குறிக்கப்பட்ட இரத்த சோகை, பாரம்பரியமாக கிராமப்புற இந்தியாவை பாதிக்கும் ஒரு சவாலாகக் கருதப்படுகிறது. இருப்பினும், சமீபத்திய தகவல்கள் ஒரு கவலையான மாற்றத்தைக் காட்டுகின்றன: நகர்ப்புற பெண்கள் இப்போது இந்த அமைதியான சுகாதார நெருக்கடியை அதிகளவில் அனுபவித்து வருகின்றனர். சுகாதார பராமரிப்பு, மேம்பட்ட சுகாதாரம் மற்றும் அதிக வாழ்க்கைத் தரங்களுக்கு சிறந்த அணுகல் இருந்தபோதிலும், மோசமான உணவு தேர்வுகள், ஒழுங்கற்ற உணவு முறைகள், பிஸியான வாழ்க்கை முறைகள் மற்றும் சமூக-பொருளாதார அழுத்தங்கள் போன்ற காரணிகள் நகர அமைப்புகளில் இரத்த சோகை அதிகரித்து வருவதற்கு பங்களிக்கின்றன.இரும்புச்சத்து குறைபாடு, வைட்டமின் பி 12 மற்றும் ஃபோலேட் குறைபாடுகள் மற்றும் இலை கீரைகள், பருப்பு வகைகள் மற்றும் மெலிந்த புரதங்கள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளின் போதிய நுகர்வு பொதுவான குற்றவாளிகள். கூடுதலாக, மன அழுத்தம், ஒழுங்கற்ற தூக்கம் மற்றும்…
ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பில் இரண்டு சிஐஎஸ்எஃப் வீரர்கள் உட்பட 44 பேர் உயிரிழந்துள்ளனர். 167 பேர் படுகாயமடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் நகரில் உள்ள சோசிட்டி கிராமத்தில் இந்த மிகப்பெரிய மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இமயமலையில் உள்ள மாதா சண்டி கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதையில் இந்த மேகவெடிப்பு ஏற்பட்டதே உயிரிழப்புகளுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை இரண்டு சிஐஎஸ்எஃப் வீரர்கள் உட்பட 44 பேர் உயிரிழந்துள்ளனர். 167 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.வெள்ளத்தில் காணாமல் போன 200 பேரை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்றுவருகிறது. மேக வெடிப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்ட இடத்தில் கிட்டத்தட்ட 1,200 பேர் இருந்ததாக ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுனில் சர்மா தெரிவித்துள்ளார். இந்த பேரழிவு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் விளக்கமளித்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது…
‘கூலி’ படத்துக்கு ‘A’ சான்றிதழ் ஏன் என்று இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வந்தாலும், இப்படத்துக்கு தணிக்கை குழுவினர் ‘A’ சான்றிதழ் கொடுத்தது ஏன் என்ற கேள்வியும் இணையத்தில் எழுந்துள்ளது. பலரும் இது குறித்து விவாதிக்க தொடங்கியிருக்கிறார்கள். மேலும், லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களை விட ‘கூலி’ படத்தில் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் குறைவு என்றும் இணையத்தில் கூறி வருகிறார்கள். ‘A’ சான்றிதழ் கொடுக்கப்பட்டதற்கு படத்தில் வரும் உடல் சாம்பலக்கப்படும் காட்சிகள் அதிகமாக இருப்பதுதான் காரணம் என்கிறார்கள். ஏனென்றால் படத்தின் கதையே அதைச் சுற்றிதான் இருப்பதால், பலமுறை உடல்கள் சாம்பலக்கப்படும் காட்சிகள் ‘கூலி’ படத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமுகத்தில் சட்டவிரோத செயல்கள் மட்டுமே நடைபெறுவது போன்று காட்டியிருப்பதும் ஒரு காரணம் என்கிறார்கள். இவை இரண்டுமே…
சென்னை: அடக்குமுறையை ஏவி தூய்மைப் பணியாளர்களை அகற்றிய திமுக அரசை ஆட்சியில் இருந்து அகற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னையில் ராயபுரம், திரு.வி.க நகர் ஆகிய மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியாருக்கு வழங்கப்பட்டதைக் கண்டித்தும், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வலியுறுத்தியும் சென்னை மாநாகராட்சி அலுவலகத்திற்கு அருகில் அறவழியில் கடந்த 13 நாள்களாக போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்களை காவல் துறையினரைக் கொண்டு நள்ளிரவில் கைது செய்து தமிழக அரசு அப்புறப்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உரிமை கேட்டு போராடுபவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது; மன்னிக்க முடியாதது. தமிழக அரசு நினைத்திருந்தால் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்துக்கு முதல் நாளிலேயே தீர்வு கண்டிருக்க முடியும். சென்னை மாநகரில் குப்பை அகற்றும் பணியை மாநகராட்சியே மேற்கொள்ள வேண்டும்; தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்பது…
யூரிக் அமிலம் என்பது ஒரு இயற்கை கழிவு உற்பத்தியாகும், இது உடல் ப்யூரின்கள், சிவப்பு இறைச்சி, கடல் உணவுகள் மற்றும் சில மதுபானங்கள் போன்ற சில உணவுகளில் காணப்படும் பொருட்கள், அதே போல் உடலுக்குள்ளேயே உருவாகும் போது உருவாகிறது. பொதுவாக, யூரிக் அமிலம் இரத்தத்தில் கரைகிறது மற்றும் சிறுநீரகங்கள் மூலம் சிறுநீர் வழியாக அகற்றப்படுகிறது. இருப்பினும், யூரிக் அமில அளவு உயர்த்தப்படும்போது, ஹைப்பர்யூரிசீமியா எனப்படும் ஒரு நிலை, இது சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும், குறிப்பாக மூட்டுகளில். உயர் யூரிக் அமிலம் பெரும்பாலும் கைகளிலும் விரல்களிலும் குவிந்து, வலி, வீக்கம் மற்றும் அச om கரியத்தை ஏற்படுத்துகிறது, மேலும் கீல்வாதத்திற்கு பங்களிக்கக்கூடும், இது அழற்சி கீல்வாதத்தின் ஒரு வடிவமாகும்.ஏன் செய்யுங்கள் உயர் யூரிக் அமில அளவு கைகள் மற்றும் விரல்களை பாதிக்கும்பயோடெக்னாலஜி தகவலுக்கான தேசிய மையத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, உயர் யூரிக் அமில அளவுகள் மோனோசோடியம் யூரேட் படிகங்கள் எனப்படும் கூர்மையான,…
ரஜினி நடித்த ‘கூலி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வியாழக்கிழமை வெளியானது. இதனை ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பார்த்து தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். இதனால் சமூக வலைதள பக்கங்களில் #Coolie ஹேஷ்டேக் தொடர்ந்து ட்ரெண்ட்டாகி வருகிறது. தற்போது வெளிநாட்டு வசூல் நிலவரம் வெளியாகி இருக்கிறது. இதுவரை, முதல் நாள் 8.15 மில்லியன் டாலர்கள் வசூலித்து ‘லியோ’ முதல் இடத்தில் இருந்தது. அதற்கு முன்னதாக ‘கபாலி’ முதல் இடத்தில் இருந்தது. தற்போதைய நிலவரப்படி ‘கூலி’ படத்தின் வசூல் ‘லியோ’வை முந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் நாள் அதிகாரபூர்வ வசூல் நிலவரம் என்ன என்பது நாளை தெரியவரும். ‘கபாலி’ வசூலை யாருமே முறியடிக்க முடியாது என்ற சூழலில், ‘லியோ’ அதனை முறியடித்தது. இதற்கு 7 ஆண்டுகள் ஆனது. ஆனால், ‘லியோ’ வசூலை ‘கூலி’ படம் முறியடித்துள்ளது. இதற்கு 2 ஆண்டுகள் மட்டுமே ஆகியிருக்கிறது. இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.…
சென்னை: தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்கக் கூடாது, பணி நிரந்தரம் தேவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் குண்டுக்கட்டாகக் கைது செய்யப் பட்ட நிலையில், அவர்களும், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்களும் விடுவிக்கப்பட்டனர். சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 பகுதிகளுக்கான தூய்மைப் பணி தனியார் நிறுவனத்துக்கு வழங்கப் பட்டுள்ளதை எதிர்த்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் 2 மண்டல தூய்மைப் பணியாளர்களில் என்யூஎல்எம் பிரிவைச் சேர்ந்தவர்கள் 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டம் மேற்கொண்டனர். அவர்களுடன் அரசு தரப்பு மேற்கொண்ட பல சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இதற்கிடையே, போராட்டம் என்ற பெயரில் நடைபாதை, சாலையை மறிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கருத்து தெரிவித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த போலீஸாருக்கு…
தசையை உருவாக்குவதற்கும், மீட்டெடுப்பதை விரைவுபடுத்துவதற்கும் வரும்போது, பெரும்பாலான மக்கள் பயிற்சித் திட்டங்கள் மற்றும் உணவு திட்டங்களில் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் இயற்கையாக நிகழும் சில சேர்மங்கள், அவற்றில் பல ஏற்கனவே உணவுகளிலும் உங்கள் உடலிலும் உள்ளன, உங்கள் உடற்பயிற்சி முன்னேற்றத்தை கூடுதல் விளிம்பைக் கொடுக்கலாம். இந்த சப்ளிமெண்ட்ஸ் பெரும்பாலும் வசதி மற்றும் தூய்மைக்காக ஆய்வகங்களில் தயாரிக்கப்படுகின்றன, அவை இயற்கையில் நிகழும் வேதியியல் ரீதியாக ஒத்தவை. வலுவான ஆராய்ச்சியின் ஆதரவுடன், அவை நிலையான பயிற்சி மற்றும் சரியான ஊட்டச்சத்துடன் இணைந்தால் வலிமை, சகிப்புத்தன்மை மற்றும் மீட்பு ஆகியவற்றை மேம்படுத்தலாம். கருத்தில் கொள்ள மிகவும் பயனுள்ள ஐந்து இயற்கை சப்ளிமெண்ட்ஸ் இங்கே.1. கிரியேட்டின் கிரியேட்டின் வலிமை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கான மிகவும் ஆராய்ச்சி மற்றும் பயனுள்ள கூடுதல் ஒன்றாகும். இது கோழி மற்றும் சால்மன், டுனா மற்றும் கோட் போன்ற சில வகையான மீன்களில் இயற்கையாகவே நிகழ்கிறது. உடல் அமினோ அமிலங்களிலிருந்து சிறிய அளவையும்…
ஆம்பூர்: சிறுபான்மையின மக்களுக்கு அதிமுக எப்போதும் அரணாகவே இருக்கும் என்றும், எங்கள் கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வரவுள்ளன என்றும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆம்பூரில் தனது பரப்புரையில் தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார பயணத்தின் ஒரு பகுதியாக ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதியில் இன்று மாலை பொதுமக்கள் மத்தியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசும்போது, “ஆம்பூர் தொகுதி தோல் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகும். தற்போது, திமுக ஆட்சியில் நிறைய தோல் தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர். இவையெல்லாம், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் சரி செய்யப்படும். சரிந்த தோல் தொழிலை அதிமுக சரி செய்யும். ஆம்பூர் தொகுதி இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதி. அதிமுக -பாஜகவுடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என திமுக பொய்யான தகவலை பரப்பி வருகிறது. தமிழகத்தில் 31 ஆண்டுகளுகாக ஆட்சி செய்து…