சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே மீண்டும் ஒரு தோல்வியைச் சந்தித்தது. இந்த முறை சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் முதல் முறையாக சேப்பாக்கத்தில் தோல்வி அடைந்து ஒரு புதிய எதிர்மறைச் சாதனையை நிகழ்த்தியுள்ளது . சேப்பாக்கத்தில் படுமட்டமான குழிப்பிட்ச்களைப் போட்டு ஸ்பின் பவுலிங்கை வைத்து எதிரணிகளை மிரட்டி வந்த சிஎஸ்கே, இந்த முறை பிட்ச் இவர்களுக்கு ஏற்றபடி அமையாததால் ‘முதல் தோல்வி’ என்று சில தோல்விகளைத் தவிர்க்க முடியாமல் சந்தித்து வருகிறது. பேட்டிங் பிட்சில் சிஎஸ்கே நேற்று 154 ரன்களைத்தான் அடிக்க முடிந்தது. இதனை சன் ரைசர்ஸ் 8 பந்துகளே மீதம் வைத்து வெற்றி பெற்றது. டெவன் கான்வே ஃபார்மில் இல்லை என்று உட்கார வைக்கப்பட்டு வருகிறார். ஆனால் அவர்களின் ‘மூத்த’ விக்கெட் கீப்பர் பேட்டர் என்ன பெரிய ஃபார்மில் இருக்கிறார் என்ற கேள்வியை ஒருவரும் எழுப்புவதில்லை. சிஎஸ்கே கடினமாக ஆடி அதிகப் போட்டிகளை வென்றதில்லை. அப்படி கடினமான ஃபைட் கொடுக்கும்…
Author: admin
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். இது குறித்து டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: “காஷ்மீரில் இருந்து வெளியாகும் செய்திகள் ஆழ்ந்த கவலையளிக்கின்றன. பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது. உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் மீண்டு வரவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் எங்கள் முழு ஆதரவும் ஆழ்ந்த அனுதாபங்களும் உண்டு. எங்கள் இதயங்கள் உங்கள் அனைவருடனும் உள்ளன” இவ்வாறு ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியாவின் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என் மனைவி உஷாவும் நானும் எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். சமீப நாட்களாக, இந்த நாட்டின் அழகையும் அதன் மக்களையும் கண்டு நாங்கள் வியந்து போயுள்ளோம். இந்த கொடூரமான தாக்குதலுக்கு இரங்கல் தெரிவிக்கும் வேளையில்,…
சென்னை: தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் நடந்த சிறப்பு தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். முருகன் கோயில்களில் நீண்ட வரிசையில் காத்திருத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சித்திரை முதல் நாளான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், தமிழ்ப் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடி வருகின்றனர். தமிழ்ப் புத்தாண்டு தினமான இன்று (ஏப்.14) முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, அத்திமரத்தாலான முருகபெருமானின் விக்கிரங்களைச் செய்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதேபோல், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பரமணிய சுவாமி கோயிலில், பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. முருகபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஏராளமான பக்தர்கள், கடல் மற்றும் நாலு கிணற்றில்…
தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்று ‘ஹிட் 3’ பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் நானி தெரிவித்தார். நானி தயாரித்து, நடித்துள்ள ‘ஹிட் 3’ திரைப்படம் மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனை விளம்பரப்படுத்த நானி, ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள். இந்தச் சந்திப்பில் நானி பேசும்போது, “நான் எப்போது சென்னைக்கு வந்தாலும் என்னுடைய சொந்த வீட்டுக்கு வந்த உணர்வு ஏற்படும். பலமுறை என்னை வடிவமைத்தது தமிழ் சினிமாதான் எனச் சொல்லி இருக்கிறேன். 2012-13-ம் ஆண்டில் சென்னையில் இருந்து புறப்பட்டு ஹைதராபாத் சென்றேன். இருந்தாலும் தற்போது வரை தமிழக மக்களின் அன்பு, தமிழ் ரசிகர்களின் அன்பு அதிகமாகிக் கொண்டேதான் இருக்கிறது. தமிழில் நடிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன். பொருத்தமான வாய்ப்பு கிடைத்தால் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும். ‘ஹிட் தி தேர்ட் கேஸ்’ படத்திற்காக மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ‘ஹிட்’ படத்தின் இரண்டு பாகங்களும் தமிழில் வெளியாகியிருக்கும் என…
சென்னை: சென்னையில் இந்தாண்டு இதுவரை அவசர உதவி கோரி 69,628 அவசர அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பு வந்த 5 நிமிடங்களில் சம்பவ இடம் விரைந்து போலீஸார் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளனர். இக்கட்டான சூழலில் சிக்கி இருந்தாலோ, அவசர உதவி தேவை என்றாலோ பொது மக்கள் காவல் கட்டுப்பாட்டு அறையை உடனடியாக தொடர்பு கொள்கின்றனர். இப்படி தொடர்பு கொள்பவர்களுக்கு அடுத்த 5 நிமிடத்துக்குள் ரோந்து போலீஸார் நேரில் சென்று உதவி புரிகின்றனர். அந்த வகையில் கடந்த 18ம் தேதி கூட ஆழ்வார்பேட்டையில் பிரபலமான மருத்துவமனையில் 5வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீஸார் காப்பாற்றினார். இப்படி, உடனடியாக சம்பவ இடம் விரையும் வகையில் சென்னையில் 234 ரோந்து வாகனங்கள் உள்ளது. இந்த வாகனங்கள் கூடுதலாக மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், குற்றம் நடக்க வாய்ப்புள்ள பகுதிகளிலும் ரோந்து சுற்றி வருகின்றனர். இவர்கள் அவசர அழைப்புக்கான சம்பவ இடங்களுக்கு செல்கிறார்களா? ரோந்து பணிக்கு…
புதுடெல்லி: 26 ரஃபேல் கடற்படை போர் விமானங்களைப் பெறுவதற்கான ரூ.63,000 கோடி ஒப்பந்தம் இந்தியா-பிரான்ஸ் இடையே இன்று கையெழுத்தாக இருக்கிறது. இந்திய கடற்படையில் உள்ள ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகிய விமானம் தாங்கி போர்க் கப்பல்களில் பயன்படுத்துவற்காக 45 மிக்-29கே ரக போர் விமானங்கள் உள்ளன. இவை அனைத்தும் ரஷ்யாவிடமிருந்து 2 பில்லியன் டாலர் மதிப்பில் வாங்கப்பட்டவை. கடற்படை பயன்பாட்டுக்கான போர் விமானங்களை உள்நாட்டில் தயாரிக்க இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இதனால், பிரான்ஸிடமிருந்து 26, ரஃபேல்-எம் ரக போர் விமானங்களை வாங்க கடற்படை முடிவு செய்தது. இதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒப்புதல் வழங்கியது. இந்த விமானங்களை பிரான்ஸிடமிருந்து ரூ.64,000 கோடிக்கு வாங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 9-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், இந்த ஒப்பந்தம் இரு தரப்புக்கும் இடையே…
வரும் 2027-ம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் 23 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என பெய்ன் அண்ட் கம்பெனி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் சாய்கட் பானர்ஜி கூறுகையில், “ சர்வதேச ஏஐ திறன் மையமாக நிலைநிறுத்திக்கொள்ளும் தனித்துவமான வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதாவது 2027-க்குள் ஏஐ துறையில் வேலைவாய்ப்பு 1.5-2 மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் ஏஐ துறையில் திறன்மிகு பணியாளர்களுக்கான தேவை 23 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 10 லட்சம் பேருக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப புதிய திறன்களை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஏஐ துறையில் திறமையானவர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. எனினும், இது தீர்க்க முடியாத பிரச்சினை அல்ல. சர்வதேச அளவில் கடந்த 2019-லிருந்து ஆண்டுதோறும் ஏஐ தொடர்பான வேலைவாய்ப்புகள் 21 சதவீதம் அதிகரித்துள்ளன. இதன் வேகத்துக்கு ஏற்ப திறன்வாய்ந்த பணியாளர்களின்…
திருச்சி: தமிழகத்தில் உள்ள 5 ஆயிரம் சுயநிதி தமிழ்வழிப் பள்ளிகளை, அரசு உதவிபெறும் பள்ளிகளாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு தமிழ்வழிப் பள்ளி நிர்வாகிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ஏ.செபாஸ்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், தமிழ்வழிப் பள்ளிகளுக்கு ஆசிரியருக்கான ஊதியம் அரசால் வழங்கப்பட்டு வந்த நிலையில், 1991-ம் ஆண்டு அப்போதைய தமிழக அரசு 14-ஏ என்ற சட்டத்தை இயற்றி, 1991-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட அல்லது தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு அரசு மானியம் (ஆசிரியர்களுக்கான ஊதியம்) இனி வழங்கப்படாது என முன் தேதியிட்டு அறிவித்தது. இதையடுத்து, இப்பள்ளிகள் மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கும் சுயநிதிப் பள்ளிகளாக மாறின. இதற்கான கட்டணத்தை தமிழக அரசின் கட்டண நிர்ணய குழு நிர்ணயிக்கிறது. இதனால், தமிழகத்தில் தமிழர்கள் தமிழ்வழியில் பயில கட்டணம் செலுத்த வேண்டிய அவல நிலை உருவானது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ்வழியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை நாளுக்கு…
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரரும், இந்திய டி20 அணியின் கேப்டனுமான சூர்யகுமார் யாதவ் சேர்ந்துள்ளார். லக்னோ அணிக்கெதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் சூர்யகுமார் யாதவ் 54 ரன்களை விளாசி ஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை எட்டினார். 28 பந்துகளைச் சந்தித்த அவர் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளை விளாசினார். அவர் இதுவரை 160 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று மொத்தம் 4,021 ரன்களைக் குவித்துள்ளார். மேலும், குறைந்த பந்துகளில் ஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை எட்டிய 3-வது வீரர் என்ற சாதனையையும் சூர்யகுமார் யாதவ் புரிந்தார். அவர் 2,714 பந்துகளைச் சந்தித்து இந்த ரன்களை எட்டியுள்ளார். கிறிஸ் கெயில் 2,653 பந்துகளிலும், ஏபி டிவில்லியர்ஸ் 2,658 பந்துகளிலும் 4 ஆயிரம் ரன்களை எட்டியிருந்தனர். மேலும், கடந்த 2023-ம் ஆண்டு முதல் மும்பை வான்கடே மைதானத்தில் 18 இன்னிங்ஸ்களில்…
இஸ்லாமபாத்: ‘‘நாங்கள் வைத்துள்ள 130 அணு ஆயுதங்கள் காட்சிக்கு அல்ல. இந்தியாவுக்காகத்தான் வைத்துள்ளோம்’’ என பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாஸி மிரட்டல் விடுத்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதல் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என இந்தியா அறிவித்தது. இது குறித்து கருத்து தெரிவித்து பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவருமான பிலாவல் புட்டோ ஜர்தாரி, ‘‘சிந்து நதி எங்களுக்கு சொந்தமானது. அதில் தண்ணீரை நிறுத்தினால் ரத்த ஆறு ஓடும்’’ என்றார். இந்நிலையில் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஹனிப் அப்பாஸி இது குறித்து கூறுகையில், ‘‘ சிந்து நதியில் இந்தியா தண்ணீரை நிறுத்தினால், போருக்கு தயாராக இருக்க வேண்டும். கோரி, ஷஹீன் மற்றும் ஹஸ்னவி போன்ற ஏவுகணைகளையும், 130 அணு ஆயுதங்களையும் நாங்கள் காட்சிக்கு வைத்திருக்க வில்லை. இந்தியாவிற்காகத்தான் வைத்துள்ளோம்’’ என கூறியுள்ளார்.