Last Updated : 10 Apr, 2025 08:12 AM Published : 10 Apr 2025 08:12 AM Last Updated : 10 Apr 2025 08:12 AM மாஸ்கோ: வரும் மே மாதம் 9-ம் தேதி நடைபெற உள்ள ரஷ்ய வெற்றி தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 1941-ம் ஆண்டு முதல் நடைபெற்ற இரண்டாவது உலக போரில் ஜெர்மனியும் அப்போதைய சோவியத் யூனியனும் கடுமையாக மோதிக் கொண்டன. பின்னர் 1945-ம் ஆண்டு சோவியத் யூனியன் தாக்குதலை சமாளிக்க முடியாத ஜெர்மனியின் நாஜி படைகள் சரணடைந்தன. அதன்படி 80-வது ஆண்டு தின விழாவை அடுத்த மாதம் 9-ம் தேதி பிரம்மாண்டமாக கொண்டாட ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இந்த வெற்றி தின விழாவில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்துள்ளார் என்று ரஷ்ய வெளியுறவுத்…
Author: admin
காரைக்கால்: திருக்கணித பஞ்சாங்கத்தின்படி நேற்று சனிப்பெயர்ச்சி நிகழ்ந்த நிலையில், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வழக்கமான பூஜைகள் நடைபெற்றாலும், தரிசனத்துக்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சந்நிதியுடன் கூடிய தர்பாரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வாக்கிய பஞ்சாங்க முறைப்படியே சனிப் பெயர்ச்சி விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2026 மார்ச் மாதம் இக்கோயிலில் சனிப் பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. இந்நிலையில், திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் நேற்று சனிப்பெயர்ச்சி நிகழ்ந்தது என்பதாலும், நாட்டில் பெரும்பாலானவர்கள் திருக்கணித பஞ்சாங்கத்தைப் பின்பற்றுவோராக இருப்பதாலும் நேற்று திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்களின் வருகை அதிகளவில் இருந்தது. அதேநேரத்தில், கோயிலில் வழக்கமாக நடைபெறும் பூஜைகளே நேற்றும் நடைபெற்றன. சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். நளன் தீர்த்தக் குளத்திலும் ஏராளமான பக்தர்கள்…
‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப் போகும் சூழல் உருவாகி இருக்கிறது. பவன் கல்யாண் நடிப்பில் நீண்ட மாதங்களாக தயாரிப்பில் இருக்கும் படம் ‘ஹரி ஹர வீர மல்லு’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் பவன் கல்யாணின் மகன் சிங்கப்பூரில் தீ விபத்தில் சிக்கினார். இதனால் பவன் கல்யாண் குடும்பத்தினர் சிங்கப்பூருக்கு சென்றார்கள். தற்போது பவன் கல்யாணின் மகனுக்கு ஹைதராபாத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடன் இருந்து முழு மருத்துவ சிகிச்சையையும் பார்த்துக் கொள்கிறார் பவன் கல்யாண். இதனால் ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் டப்பிங் பணிகள் எதிலுமே பவன் கல்யாண் கலந்துகொள்ளவில்லை. இதனை முன்னிட்டு படத்தின் வெளியீடு இன்னும் ஒரு வாரம் தள்ளிப் போகும் என கூறப்படுகிறது. இம்முறையும் ‘ஹரி ஹர வீர மல்லு’ வெளியீடு தள்ளிவைக்கப்பட்டால், அதிக முறை வெளியீட்டு தேதியை மாற்றிய பவன் கல்யாண்…
சென்னை: கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதா, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. கடன்களை வசூலிக்க சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை விதிக்க வகைசெய்யும் மசோதாவை சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் தாக்கல் செய்தார். அந்த மசோதாவின் விவரம்: பணக் கடன் வழங்குவோர் மற்றும் அடகு கடைகள் தொழிலை ஒழுங்குமுறைப்படுத்தி, கடும் வட்டியில் இருந்து மக்களை காப்பதில் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. தமிழ்நாடு அடகு கடைக்காரர்கள் சட்டம்-1943, தமிழ்நாடு பணக் கடன் வழங்குவோர் சட்டம்-1957, தமிழ்நாடு கந்துவட்டி தடை சட்டம்-2003 ஆகியவற்றை அரசு இயற்றியுள்ளது. ஆனாலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய, நலிந்த பிரிவினர், குறிப்பாக விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர், பணியாளர்கள், நடைபாதை வியாபாரிகள், பால் பண்ணை தொழிலாளர்கள், கட்டிட பணியாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோர் பணக் கடன் வழங்கும் நிறுவனங்களால்…
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வரவால் கடின உழைப்பாளிகளுக்கான தேவை எதிர்காலத்தில் இருப்பதற்கான வாய்ப்பில்லை என்று போர்ட்போலியோ-மேலாண்மை சேவை நிறுவனமான மார்செல்லஸ் இன்வெஸ்ட்மெண்ட் மேனேஜர்ஸ் நிறுவனரும், சந்தை நிபுணருமான சவுரப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: இந்த தசாப்தத்தில் இந்தியா ஒரு புதிய பொருளாதார கட்டத்தில் நுழைந்துள்ளது. அங்கு சம்பளம் பெறும் நடுத்தர வர்க்கத்தினருக்கான வேலைவாய்ப்பு படிப்படியாக அழிவை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எங்களின் பெற்றோர்கள் ஒரு நிறுவனத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றிய பழைய மாடல் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தை கட்டியெழுப்பிய வேலை கட்டுமானம் இனி நிலையானதாக இருக்காது. கடின உழைப்பாளிகளின் வர்க்கத்துக்கு மாற்றாக இனி ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களின் பயன்பாடு பரவலாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒயிட் காலர் பணியாளர்கள் செய்ய வேண்டியவற்றில் பெரும்பாலானவை இப்போது ஏஐ தொழில்நுட்பத்தால் செய்து முடிக்கப்படுகிறது. கூகுள் அதன் கோடிங் பணியில் மூன்றில்…
டிடாக்ஸ் விலையுயர்ந்த பொடிகள், நவநாகரீக சாறுகள் அல்லது சிக்கலான நடைமுறைகளை குறிக்க வேண்டியதில்லை. சில நேரங்களில், உங்கள் உடலுக்கு சிறந்த விஷயங்கள் ஏற்கனவே உங்கள் சமையலறையில் அமர்ந்திருக்கின்றன. ஒரு சில இயற்கை பொருட்கள் மற்றும் எந்தவொரு முயற்சியுடனும், நீங்கள் புதுப்பிக்கும், சுத்தப்படுத்தும் மற்றும் உங்கள் கணினியை மென்மையான மீட்டமைப்பைக் கொடுக்கும் பானங்களைத் தூண்டலாம். இந்த விரைவான போதைப்பொருள் சிப்ஸ் நச்சுகளை வெளியேற்றுவது மட்டுமல்ல. அவை ஹைட்ரேட், செரிமானத்தை ஆதரிக்கின்றன, தோல் தெளிவை மேம்படுத்துகின்றன, மற்றும் ஆற்றலை அதிகரிக்கின்றன, ஆடம்பரமான அல்லது செயற்கையான எதுவும் தேவையில்லை. சூடான காலையில், உணவுக்குப் பிறகு, அல்லது உங்கள் உடல் சில கூடுதல் கவனிப்பு தேவை என்று நினைக்கும் நாட்களில் ஏற்றது.
எலன் டிஜெனெரஸ் மற்றும் அவரது மனைவி போர்டியா டி ரோஸி, இப்போது வாழ்க கோட்ஸ்வொல்ட்ஸ்தென்-மத்திய இங்கிலாந்தில் ஒரு பகுதி. முன்னாள் பேச்சு நிகழ்ச்சி தொகுப்பாளரான டிஜெனெரஸ் அங்கு இடமாற்றம் செய்யத் தேர்வு செய்தார். டொனால்ட் டிரம்பின் தேர்தலுக்குப் பின்னர் அமெரிக்காவிலிருந்து இந்த நடவடிக்கை வந்ததாக டிஜெனெரஸுக்கு நெருக்கமான ஒரு வட்டாரம் தெரிவித்ததாக டெய்லிமெயில் தெரிவித்துள்ளது. மாண்டெசிட்டோவில் உள்ள தம்பதியரின் வீடு விற்பனைக்கு வருவதாக கூறப்படுகிறது. இந்த வீடு லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வடக்கே அமைந்துள்ளது. அவர்கள் 2019 ஆம் ஆண்டில் சொத்தை வாங்கி அதை தங்கள் பிரதான வீடாக மாற்றினர். தெற்கு கலிபோர்னியாவில் மற்ற வீடுகளை விற்க அவர்கள் திட்டமிட்டுள்ளார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. பட்டியலை கையாளும் ரியல் எஸ்டேட் நிறுவனமான ரிஸ்கின் பார்ட்னர்ஸ், கருத்துக்கான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கவில்லை.அவளுடைய புதியது நெட்ஃபிக்ஸ் நகைச்சுவை சிறப்பு.டிஜெனெரஸ் அவளைப் பற்றிய பொதுமக்களின் மாற்றத்தை ஒப்புக் கொண்டார், “‘கனிவானவர்’ பெண் கருணை காட்டவில்லை, அதுதான் தலைப்பு.”தனது பேச்சு…
புதுடெல்லி: கடந்த வாரம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடந்தபோது அங்கிருந்த ‘ஜிப் லைன்’ ஆப்பரேட்டர் ‘அல்லாஹு அக்பர்’ என முழக்கமிட்டது இயல்பான ரியாக்ஷன் தான் என என்ஐஏ கூறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த 22-ம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த சாகச அனுபவத்துக்கான ஜிப் லைனில் சுற்றுலா பயணி ஒருவர் பயணித்துள்ளார். அதன்போது தனது செல்போனில் அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார் அந்த சுற்றுலா பயணி. அப்போதுதான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். துப்பாக்கி தோட்டாக்களின் சத்தம் கேட்டதும் அந்த ஜிப் லைனை இயக்கிய ஆப்பரேட்டர் ‘அல்லாஹு அக்பர்’ என முழங்கியதாக சுற்றுலா பயணி தெரிவித்திருந்தார். இதையடுத்து முஸ்ஸமில் எனும் பெயர் கொண்ட அந்த ஜிப் லைன் ஆப்பரேட்டரிடம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அது இயல்பான ரியாக்ஷன் என என்ஐஏ…
சென்னை: இந்தியாவில் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போனுடன் ஒன்பிளஸ் 13ஆர் போனும் வெளிவந்துள்ளது. சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. குவால்கம் ப்ராஸசரில் ஒன்பிளஸ் 13 சீரிஸ் இயங்குகிறது. இந்தியாவில் குளிர்கால அறிமுகமாக வெளிவந்துள்ளது ப்ரீமியம் மாடல் சீரிஸ் போன் இது. 4 ஆண்டுகளுக்கு இயங்குதள அப்டேட் மற்றும் 6 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கும் என ஒன்பிளஸ் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இதில் ஏஐ அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. சிறப்பு அம்சங்கள் 6.82 இன்ச் எல்டிபிஓ QHD+ டிஸ்பிளே ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் பின்பக்கத்தில் மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் சோனி எல்ஒய்டி…
சென்னை: மின்னணுவியல், ஆட்டோமேஷன், 3டி பிரிண்டிங் போன்ற முன்னணி துறைகளில் ஆதிதிராவிட இளைஞர்களுக்கு தாட்கோ நிறுவனம் மூலம் இலவச திறன் பயற்சி வழங்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு வகையான திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் தாட்கோ மூலம் கடந்த ஆண்டு பயிற்சிபெற்ற 28 இளைஞர்கள் அசோக் லேலாண்ட், ஜி-கேர் இந்தியா, டிசிஎஸ், தெர்மோபிஃசர் போன்ற தனியார் முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இளநிலை பொறியியல் பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படவுள்ளது. இதில் சிஸ்டம் இன்ஜினியரிங், மின்னணுவியல் வடிவமைப்பு, உற்பத்தி துறை, இன்டஸ்டிரியல் ஆட்டோமேஷன், இயந்திரவியல், 3டி பிரிண்டிங் போன்ற முக்கிய துறைகள் சார்ந்த திறன்பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவற்றின் மூலம் தொழில்நுப்ட புத்தாக்க நிறுவனங்களை உருவாக்க இளைஞர்களுக்கு வழிகாட்டுதல்கள்…