கரூர்: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தை அடுத்த ஜோதிவடத்தை சேர்ந்தவர் பிரபு (40). இவர் கற்றாழை மூலப்பொருட்களை கொண்டு பொருட்கள் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். மனைவி மதுமிதா, மகள் தியா (10), மகன் ரிதன் (3). பிரபு அவர் மனைவி, குழந்தைகள், அவரது மாமனார் முத்துகிருஷ்ணன் (61) ஆகியோருடன் கொல்கத்தாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். கொல்கத்தா படாபஜார் ரபிந்தரசரணி பகுதியில் உள்ள 5 மாடிகள் கொண்ட தனியார் ஹோட்டல் ரிதுராஜில் குடும்பத்துடன் பிரபு தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு இரவு உணவு வாங்குவதற்காக பிரபுவும் அவர் மனைவி மதுமிதாவும் வெளியே சென்றுள்ளனர். அப்போது முத்துகிருஷ்ணன் பிரபுவுக்கு போன் செய்து ஹோட்டலில் தீப்பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். உடனே குழந்தைகளை அழைத்து கொண்டு ஹோட்டலின் மேல்பகுதிக்கு செல்ல பிரபு அறிவுறுத்தியுள்ளார்.…
Author: admin
சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் வந்தே பாரத் பார்சல் ரயில் தயாரிப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. உலக புகழ்பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை சென்னை பெரம்பூரில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு வகைகளில் 72,000-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. தற்போது, வந்தே பாரத் ரயில், அம்ரித் பாரத் ரயில் உட்பட வந்தே பாரத் ரயில் வகைகள் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, நாட்டின் முதல் அதிவேக வந்தே பாரத் பார்சல் ரயில் தயாரிப்பு பணி ஐசிஎஃப் ஆலையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 16 பெட்டிகளை கொண்ட இந்த வந்தே பாரத் பார்சல் ரயில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. உணவுப்பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் வசதி இடம்பெறும். குறிப்பாக, குளிரூட்டப்பட்ட பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து, சென்னை ஐசிஎஃப் அதிகாரிகள்…
நாங்கள் அனைவரும் கேட்டுக்கொண்டிருக்கிறோம், “ஒரு நாள் ஒரு ஆப்பிள் மருத்துவரை விலக்கி வைக்கிறது.” ஆனால் மிருதுவான கிண்ணங்கள், வெண்ணெய் டோஸ்ட்கள் மற்றும் இன்ஸ்டாகிராமின் #வெல்னெஸ் மீதான ஆவேசத்திற்கு இடையில் எங்காவது, ஒரு புதிய போட்டியாளர் அமைதியாக சூப்பர்ஃபுட்ஸ் அணிகளில் அமைதியாக உயர்ந்துள்ளார்: தாழ்மையான வெண்ணெய்.நல்லது, இனி அவ்வளவு தாழ்மையுடன் இல்லை-இது தைரியமான, பச்சை, கிரீமி மற்றும் நம்பிக்கையுடன் ஒவ்வொரு உடல்நல உணர்வுள்ள கடைக்காரரின் வண்டிகளிலும் அமர்ந்திருக்கிறது. வெண்ணெய் பழத்திற்கு எதிராக நாங்கள் ஆப்பிளைத் தூண்டுவதற்கு முன், நியாயமாக இருக்கட்டும் – ஆப்பிள்கள் இன்னும் பெரியவை. அவை நார்ச்சத்து நிறைந்தவை (குறிப்பாக நீங்கள் அவற்றை உரிக்கவில்லை என்றால்), வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள், மேலும் அவை குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தவும் உதவுகின்றன. அவர்கள் நொறுங்கியவர்கள், குறைந்த கலோரி, எடுத்துச் செல்ல எளிதானவர்கள், குளிரூட்டல் தேவையில்லை.ஆனால் இப்போது… வெண்ணெய் இருக்கிறது.அந்த கிரீமி அமைப்பு மற்றும் நவநாகரீக உருவத்தின் அடியில் தீவிர ஊட்டச்சத்து…
இஸ்லாமாபாத்: சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஞாயிற்றுக்கிழமை, இரண்டு பெரிய அரசியல் கட்சிகள் ஒரு கூட்டணி அரசாங்கத்தை உருவாக்க ஒரு அதிகாரப் பகிர்வு சூத்திரத்தை அடையத் தவறியபோதும் வாக்களிக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து நீதித்துறை விசாரணையை கோரியது.கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) ஆதரவுடன் சுயாதீன வேட்பாளர்கள் பாராளுமன்றத்தில் அதிகபட்ச எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருந்தாலும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பி.எம்.எல்.என்) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) ஆகியோர் பிப்ரவரி-பிப்ரவரி மாதம் பிப்ரவரி-பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு ஒரு கூட்டணி கோவலை உருவாக்குவதாக அறிவித்துள்ளனர். அடுத்த கூட்டாட்சி அரசாங்கத்தை உருவாக்க முடிந்தது, இரண்டு போட்டி கட்சிகளும் சக்திவாய்ந்த ஸ்தாபனத்தின் உதவியுடன் மக்களின் கட்டளையைத் திருட முயற்சிப்பதாக கான் கட்சி குற்றம் சாட்டுகிறது.காரிஸன் நகரமான ராவல்பிண்டியில் தேர்தல் செயல்முறைக்கு பொறுப்பான ஒரு மூத்த அரசு அதிகாரி சனிக்கிழமையன்று கானின் தடுமாறிய கட்சி சனிக்கிழமையன்று ஒரு பெரிய ஊக்கத்தைப் பெற்றது என்று குற்றம்…
பஹல்காம் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் பலரை உள்ளூர் காஷ்மீரிகள் காப்பாற்றியுள்ளனர். இது தொடர்பான காட்சிப் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பாராட்டுகள் குவிகின்றன. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த வாரம் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இவர்களில் உள்ளூரை சேர்ந்த மட்டக் குதிரை ஓட்டியும் ஒருவர். இவரைப் போல மட்டக் குதிரை ஓட்டிகள், சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்ட உள்ளூர் காஷ்மீரிகள் பலர் சுற்றுலாப் பயணிகளை காப்பாற்றியுள்ளனர். இதற்காக அவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்துள்ளனர். இது தொடர்பான காட்சிப் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளூர் காஷ்மீரிகளுக்கு பாராட்டுகளை குவித்து வருகிறது. தாக்குதலில் காயம் அடைந்த ஒரு சிறுவனை சஜ்ஜாத் அகமது பட் என்ற காஷ்மீரி பல கி.மீ. தூரம் தனது முதுகில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இதனால் அந்த சிறுவனின் உயிர் காப்பாற்றப்பட்டு உள்ளது. இதுகுறித்து சஜ்ஜாத்…
கடந்த பத்து ஆண்டுகளில் எலக்ட்ரானிக் பொருள்கள் அசுர வளர்ச்சியடைந்துள்ளன. குறிப்பாக, தொலைக்காட்சியின் காட்சித் தன்மையும் வடிவமைப்பும் அதன் பயனாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப மாறுதலை எதிர்கொண்டு வருகின்றன. பாட்காஸ்டை நோக்கி… கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்தே கேபிள் இணைப்புகள் படிப்படியாகக் குறைந்து வருகின்றன. மக்கள் பாட் காஸ்ட்டை நோக்கிப் பயணிக்க ஆரம் பித்துவிட்டனர். 2023 புள்ளி விவரப்படி 57% வீடுகளில் கேபிள் இணைப்பு உள்ளது. எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் குறையக்கூடும். ஸ்ட்ரீமிங்: யூடியூப், பாட்காஸ்ட், இன்ஸ்டா போன்ற தளங்கள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பும் நிகழ்ச்சிகளுக்குப் போட்டியாகப் பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கி வந்து விட்டன. அதை உணர்ந்து பார்வையாளர்களுக்குச் சுவாரசியத்தைத் தரக்கூடிய நெருக்கடியான காலக்கட்டத்தில் தொலைக்காட்சி அலைவரிசைகள் உள்ளன. ஆகையால், டிரெண்டிங்குக்கு ஏற்றபடி ஸ்ட்ரீமிங் நிகழ்ச்சிகளைக் கூடுதலாக வழங்கும் சூழலுக்குத் தொலைக்காட்சி அலை வரிசைகள் தள்ளப்பட்டுள்ளன. நேரலை, பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் இணையம் வழியாகக் கணினி, அலைபேசி சாதனங்களுக்கு வழங்கப்பட்டு, ஒளிபரப்பாகும். பாட்காஸ்ட்கள், வெப்காஸ்ட்கள், திரைப்…
சென்னை: டிஆர்பி வருடாந்திர தேர்வு அட்டவணை திங்கட்கிழமை (மார்ச் 24) வெளியிடப்பட்டது. அதன்படி 1,915 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதமும் 1,205 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு செப்டம்பரிலும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், டெட் தேர்வுக்கான அறிவிப்பு எதுவும் இடம்பெறவில்லை. 2025-ம் ஆண்டில் என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும் என்பது தொடர்பான அறிவிப்பை (வருடாந்திர தேர்வு அட்டவணை) ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டது. அதில், மொத்தம் 9 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 4 அறிவிப்புகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பழைய அறிவிப்புகள். 5 மட்டுமே புதிய அறிவிப்புகள் ஆகும். அதன்படி 1,915 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்யவதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டு நவம்பரில் தேர்வு நடத்தப்படும். அதேபோல், 1,205 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய செப்டம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டு டிசம்பரில் தேர்வு நடத்தப்படும். 51 வட்டார கல்வி அலுவலர்களை (பிஇஓ)…
ஐபில் போட்டிகளில் அதிகவேகமாக 200 சிக்ஸர்களை அடித்த இந்தியர் என்ற பெருமையை டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் கே.எல். ராகுல் பெற்றார். இதன் மூலம் எம்.எஸ். தோனி மற்றும் ஏ.பி. டிவில்லியர்ஸ் உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 35-வது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 7 விக்கெட்டுகளில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. இந்த போட்டியில் 12 பந்துகளில் 24 ரன்களை விளாசிய கே.எல்.ராகுல் ஒரு சிக்ஸர் அடித்தார். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் தனது 200 சிக்ஸர்களை பூர்த்தி செய்தார் ராகுல். தனது 129வது ஐபிஎல் இன்னிங்ஸில் 200 சிக்ஸர்களை வேகமாக எட்டிய மூன்றாவது வீரர் என்ற பெருமையை கே.எல்.ராகுல் பெற்றார். கிறிஸ் கெய்ல் (69 இன்னிங்ஸ்) மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் (97 இன்னிங்ஸ்) ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை விரைவாக…
பெய்ஜிங்: அமெரிக்கா சமீபத்தில் விதித்திருக்கும் வரிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. மேலும் தனது நாட்டின் சொந்த நலன்களைப் பாதுகாக்க பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் வர்த்தக உறவில் இருக்கும் உலக நாடுகளுக்கு கூடுதல் வரியை அதிபர் ட்ரம்ப் விதித்திருக்கும் நிலையில் சீனா இவ்வாறு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பல தசாப்தங்களாக பேச்சுவார்த்தைகளின் மூலம் எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களின் சமநிலையையும், சர்வதேச வர்த்தகத்தின் மூலம் நீண்ட காலமாக அமெரிக்கா பயனடைந்து வந்துள்ளது என்பதையும் புறக்கணிக்கிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை சீனா உறுதியாக எதிர்க்கிறது. மேலும் சீனா தனது சொந்த நலன்களை பாதுகாக்க எதிர்நடவடிக்கையில் ஈடுபடும்.”என்று தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் மீது பரஸ்பர வரி விதிப்பை அறிமுகம் செய்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இதில் அதிகபட்சமாக கம்போடியா 49 சதவீதம், வியட்நாம் 46 சதவீதம், இலங்கை 44…
கும்பகோணம்: மாசிமக விழாவையொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் நேற்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு புனிதநீராடினர். மாசிமக விழாவையொட்டி, கும்பகோணத்தில் உள்ள 6 சிவன் கோயில்கள், 3 பெருமாள் கோயில்களில் கொடியேற்றம் நடைபெற்றது. நேற்று முன்தினம் 6 சிவன் கோயில்களின் தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, காசிவிஸ்வநாதர், சோமேஸ்வரர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், கோடீஸ்வரர், அமிர்த கலசநாதர், பாணபுரீஸ்வரர் ஆகிய 10 சிவன் கோயில் சுவாமிகள், அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகளுடன் கோயிலில் இருந்து வீதியுலாவாகப் புறப்பட்டு, மகாமக குளக்கரைக்கு வந்தடைந்தனர். குளத்தில் அஸ்திர தேவருக்கு 21 வகையான மங்கலப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது, ‘சிவாய நம, சிவாய நம’ என பக்தர்கள் முழக்கமிட்டபடி மகாமக குளத்தில் புனித நீராடினர். தொடர்ந்து, சுவாமிகள் மீண்டும் அந்தந்த கோயில்களுக்கு திரும்பினர். இதேபோல, திருப்புறம்பியம்…