சென்னை: மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான தமிழ்நாடு மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.30) வெளியிட்டார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், “மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான தமிழ்நாடு மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். மின்னணுவியல் துறையில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில், தமிழ்நாடு ஏற்கெனவே அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாக விளங்குகிறது. மின்னணுவியல் துறையில், மேலும் மதிப்புக் கூட்டப்பட்ட உற்பத்தியை ஊக்குவித்திடவும், குறைக்கடத்தி துணைப் பிரிவுகளில் பெருமளவு முதலீடுகளை ஈர்த்திடவும், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு குறைக்கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணு கொள்கை 2024 தனை அறிமுகப்படுத்தியது. இக்கொள்கை மின்னணுப் பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்ந்திட வழிவகுத்துள்ள நிலையில், மின்னணுவியல் உற்பத்தி சூழலமைப்பை மேலும் மேம்படுத்தும் வகையில், முதல்வர் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்புத் திட்டத்தை இன்று வெளியிட்டுள்ளார். ஒன்றிய அரசின் மின்னணுவியல் மற்றும்…
Author: admin
புதுடெல்லி: சர்வதேச அளவில் கடந்த நிதியாண்டில் ஐபோன்களுக்கு வரவேற்பு அதிகமாக காணப்பட்டதையடுத்து, இந்தியாவில் அதன் உற்பத்தி 60 சதவீதம் அதிகரித்தது. கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் நிறைவடைந்த 2024-25 நிதியாண்டில் ஐபோன் விற்றுமுதல் ரூ.1.89 லட்சம் கோடியைத் தொட்டது. ஒட்டுமொத்த உற்பத்தியில் ஏற்றுமதி செய்யப்பட்ட ஐபோன்களின் மதிப்பு மட்டும் ரூ.1.5 லட்சம் கோடி அளவுக்கு அதிகரித்துள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அமெரிக்க-சீனா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போரால் சீனாவிலிருந்து ஐபோன் ஏற்றுமதி பாதிப்புக்குள்ளாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அதிகளவில் ஐபோன் உற்பத்தியை முடுக்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் தயாரிக்கும் ஸ்மார்ட்போன்களுக்கு அமெரிக்காவின் வரி விதிப்பு மிகவும் குறைவாக உள்ளது. இதுவும் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை ஆப்பிள் நிறுவனம் அதிகரிப்பதற்கு சாதகமாக மாறியுள்ளது. இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி கடந்த 2024-25 (ஏப்ரல்-பிப்ரவரி) வரையிலான 11 மாத காலத்தில்…
மெட் காலா மே 5 ஆம் தேதி நியூயார்க்கைப் பற்றவைக்க தயாராக உள்ளது, இது ஒரு வலுவான இந்திய இருப்பைக் காண்பிக்கும். ஷாருக் கான், கியாரா அத்வானி, தில்ஜித் தோசான்ஜ், பிரியங்கா சோப்ரா, இஷா அம்பானி சிவப்பு கம்பளத்தை அருவருப்பானதாக இருக்கலாம் என்று வதந்திகள் தெரிவிக்கின்றன. ஷோ-ஸ்டாப்பிங் தோற்றம் மற்றும் வைரஸ் தருணங்களை எதிர்பார்ப்பு உருவாக்குகிறது, சாத்தியமான தனிப்பயன் ஆடைகள் மற்றும் மகப்பேறு பாணிகள் உற்சாகத்தை அதிகரிக்கின்றன. உங்கள் காலெண்டர்களைக் குறிக்கவும், உங்கள் தொலைபேசிகளை சார்ஜ் செய்யுங்கள், ஃபேஷனில் மிகப்பெரிய இரவு கிட்டத்தட்ட இங்கே உள்ளது! மெட் காலா மே 5 அன்று நியூயார்க்கைக் கைப்பற்றத் தயாராக உள்ளது, இது மற்றொரு சிவப்பு கம்பள நிகழ்வு மட்டுமல்ல, இது பேஷன் கற்பனைகள் உயிரோடு வரும் இடம். இணையத்தை தீ வைத்துக் கொள்ளும் மேலதிக ஆடைகள், தாடை-கைவிடுதல் ஆடை மற்றும் வைரஸ் தருணங்களை சிந்தியுங்கள். இந்த ஆண்டு, ஷாருக் கான், கியாரா அத்வானி,…
பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் 2024 (AP) இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கடுமையாக பதிலளித்தது விமர்சனம் அதன் பாராளுமன்றத் தேர்தல்களின் நடத்தை குறித்து, இது அவ்வப்போது போர்க்குணமிக்க தாக்குதல்களுக்கு மத்தியில் நடந்தது மற்றும் மொபைல் போன் சேவைகளை முழுமையாக நிறுத்தியது. வெளியுறவு அமைச்சகம் வாக்களிப்பதை ஆதரித்தது, இது அமைதியானது மற்றும் வெற்றிகரமாக இருந்தது என்று கூறியது.வெளிப்பாடு, சங்கம் மற்றும் அமைதியான சட்டமன்றத்தின் சுதந்திரங்கள் மீதான கட்டுப்பாடுகளை மேற்கோள் காட்டி, தேர்தல்கள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை கவலை தெரிவித்தது.இந்த அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, அமைச்சகம் எதிர்மறையான தொனியில் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியது மற்றும் தேர்தல் செயல்முறையின் சிக்கலை எடுத்துக்காட்டுகிறது. சுதந்திரமாகவும் உற்சாகமாகவும் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்திய மில்லியன் கணக்கான பாகிஸ்தானியர்களை இது வலியுறுத்தியது.வெளிநாட்டு நிதியுதவி பயங்கரவாதத்திலிருந்து கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும் பாகிஸ்தான் பொதுத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியது என்றும் அமைச்சகம் சுட்டிக்காட்டியது. நாடு தழுவிய இணைய பணிநிறுத்தம் இல்லை என்று அது தெளிவுபடுத்தியது, வாக்குப்பதிவு நாளில்…
கொல்கத்தா: மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் தனியார் ஹோட்டல் ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்துள்ளனர். கொல்கத்தாவின் மெச்சுவா என்ற பகுதியில் உள்ள புர்ராபசாரில் அமைந்துள்ள ரிதுராஜ் என்ற 6 மாடிகள் கொண்ட ஹோட்டலின் முதல் தளத்தில் நேற்றிவு 8.15 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது ஹோட்டலில் 42 அறைகளில் 88 பேர் இருந்துள்ளனர். சுமார் 60 ஊழியர்கள் பணியில் இருந்துள்ளனர். முதல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டதால் தீ அடுத்தடுத்த மாடிகளுக்கும் பரவியுள்ளது. மேலும், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்துள்ளது. இதில், 13 பேர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தனர். ஒருவர், மாடியில் இருந்து கீழே குதித்ததில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தவர்களில் 2 குழந்தைகளும் அடக்கம். காயமடைந்த 13 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 12 பேர் டிஸ்சார்ஜ்…
சுகாதாரத்தில் குறைபாடு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, மனித உரிமை மீறல்கள், சமத்துவமின்மை போன்ற சமூகப் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை உலக அளவில் மக்களிடம் கொண்டு சென்றதில் தொலைக்காட்சிக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. அதன் சேவை தற்போதும் தொடர்கிறது. 2020ஆம் ஆண்டில் கரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே திணறியபோது கரோனாவின் தீவிரம், பாதிப்பு, சிகிச்சை, தடுப்பு நடவடிக்கைகள் பற்றித் தொலைக்காட்சிகளில் பேசப்பட்ட, விவாதிக்கப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளால் ஏராளமானோர் பயன் பெற்றனர். இதுபோல, தொலைக்காட்சி அறிமுகமாகி சாமானியரின் வீடுகளுக்குள் குடிபுகுந்த காலம் முதல் சமூகப் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரசாலும் தனியாராலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெல்லியில் 1959-இல் பரிசோதனை முயற்சியாகத் தொடங்கப்பட்ட தூர்தர்ஷன் தொலைக் காட்சியின் ஒளிபரப்புச் சேவை பின்னாளில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. ஆரம்ப காலக்கட்டத்தில் சுகாதாரம், கல்வி விழிப்புணர்வு சார்ந்த நிகழ்ச்சிகளே அதிகம் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதில் ‘எழுத்தறிவு’, ‘எய்ட்ஸ்’, ‘போலியோ சொட்டு மருந்து’, ‘கண் தானம்’, ‘ரத்த தானம்’…
பிளஸ் டூ படித்த மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழையும் மாற்றுச்சான்றிதழையும் (டி.சி.) பள்ளியி லிருந்து நேரடியாக வழங்கிவிடுவார்கள். இதுதவிர பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை ஆகியவை தேவைப் படும். இருப்பிடச் சான்றிதழ் (நேட்டிவிட்டி சர்டிபிகேட்), முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், மாற்றுத்திறனாளி என்பதற்கான சான்றிதழ், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுச் சான்றிதழ், விளையாட்டுச் சான்றிதழ்கள் போன்றவையும் மாணவர் களின் தேவையைப் பொறுத்துத் தேவைப் படலாம். இந்தச் சான்றிதழ்களை மாணவர்கள் ஏற்கெனவே வைத்திருந்தால், அவற்றை ஒழுங்குபடுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். சான்றிதழ்களைப் பெறாத மாணவர்கள், இந்தச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு தற்போதே விண்ணப்பிப்பது நல்லது. அதன் மூலம் கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்க முடியும். ஆதார் அடையாள அட்டை: இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்கும் ஆதார் அடையாள அட்டை, அனைவருக்கும் ஓர் இன்றியமையாத ஆவணமாக மாறியுள்ளது. அத்துடன், மாணவர்களுக்கும் இது தேவைப்படும் முக்கிய ஆவணமாக உள்ளது. ஆதார் அடையாள…
வாஷிங்டன்: உலக நாடுகளின் மீது பரஸ்பர வரி விதிப்பை அறிமுகம் செய்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இது தொடர்பாக எந்த நாட்டுக்கு அமெரிக்கா எவ்வளவு வரி விதிக்கிறது என்பதை அவர் விவரித்தார். இதில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீதம் பரஸ்பர வரி விதிப்பதாக அவர் அறிவித்துள்ளார். “இந்த தருணத்துக்காக நாம் நெடுநாள் காத்திருந்தோம். ஏப்ரல் 2, 2025 அமெரிக்க தொழில்துறை மறுபிறவி எடுத்த நாளாக வரலாற்றில் அறியப்படும். அமெரிக்காவை மீண்டும் செல்வ செழிப்பு மிக்க நாடாக மாற்றும் நாளின் தொடக்கம் இது. அமெரிக்காவின் பொற்காலம் தொடங்குகிறது” என அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். பிற நாடுகள் அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கும் வரியை குறைக்கும் நோக்கில் இந்த பரஸ்பர வரி விதிப்பு முறையை ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. அந்த மாற்றம் நடக்கும் வரையில் இது அமலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த…
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு திருத்தேர் வடம்பிடித்து இழுத்தனர். அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் 10-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. காலை 7.03 மணிக்கு விநாயகர் தேர் புறப்பட்டு, நான்கு ரதவீதிகளிலும் பவனி வந்து, 7.45 மணிக்கு நிலையம் வந்து சேர்ந்தது. பின்னர், சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி- தெய்வானையுடன் எழுந்தருளிய பெரிய தேரை காலை 7.50 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரதவீதிகளிலும் பவனி வந்து 11 மணிக்கு நிலையம் வந்து சேர்ந்தது. தொடர்ந்து, தெய்வானை அம்பாள் மட்டும் எழுந்தருளிய தேர் 11.10 மணிக்கு…
இருபதாம் நூற்றாண்டு விடைபெற்றுக் கொள்ள இன்னும் பத்தாண்டுகளே மிச்சமிருந்தன. உலக நாடுகள் தங்கள் சந்தைகளை பிற நாடுகளுக்காகத் திறந்துவிட்டிருந்தன. அரசுத் துறைகள் தனியர் துறைகளின் பங்களிப்போடு வளர்ச்சியை நோக்கி சீறிப்பாய பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தன. வர்த்தகம் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் உலகமயமாக்கலுக்கான விதைகள் தூவப்பட்டன. இந்திய திரைத் துறை ஹாலிவுட் உடன் சினிமாத்தனங்களை தன் மீது பூசிக்கொள்ள ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்தது. தமிழ்த் திரை இசை ரசிகர்களும் 15-16 ஆண்டுகளாகக் கட்டுண்டுக் கிடந்த இசையிலிருந்து வேறொரு இசைக்காக காத்திருந்தனர். சென்னை புதுப்பேட்டை மவுண்ட் சாலையில் இருக்கும் ஒரு வாடகை வீட்டின் 1967-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 5.50 மணி அது . பாட்டி மற்றும் தந்தை அருகிலிருக்க மருத்துவ துணையின்றி, வீட்டிலேயே பிறக்கிறது அந்த ஆண் குழந்தை. இனிப்புகள் வழங்கி தனது பிறப்பைக் கொண்டாடிய தந்தையின் மகிழ்ச்சியை பின்னாட்களில் அறிந்துக் கொள்கிறது அக்குழுந்தை. வயிற்றுப் பிரச்சினைகளால் 4…