அம்மான்: யு-15, யு-17 ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் ஜோர்டான் நாட்டில் உள்ள அம்மான் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா இரு பிரிவிலும் கூட்டாக 11 தங்கம் உட்பட 25 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. செவ்வாய்கிழமை நடைபெற்ற மகளிருக்கான இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் 10 தங்கம் வென்றனர். மேலும் 4 வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர். யு-15 பிரிவில் கோமல் (30–33 கிலோ) 3:2 என்ற கணக்கில் ஸ்பிளிட் முடிவின் கீழ் கஜகஸ்தானின் ஐயாரு ஒங்கார்பெக்கை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். குஷி அஹ்லாவத் (35 கிலோ), தமன்னா (37 கிலோ), ஸ்வி (40 கிலோ), மில்கி மெய்னம் (43 கிலோ), பிரின்சி (52 கிலோ), நவ்யா (58 கிலோ), சுனைனா (61 கிலோ), த்ருஷனா மோஹித் (67 கிலோ), வன்ஷிகா (70+ கிலோ) ஆகியோரும் தங்கப் பதக்கம் வென்றனர். ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் 4 பேர் பங்கேற்றனர்.…
Author: admin
சென்னை / காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 71-வது பீடாதிபதியாக ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். காஞ்சி சங்கர மடத்தில் திரளான பக்தர்கள் பல மாநிலங்களில் இருந்து வந்திருந்து இளைய பீடாதிபதியிடம் ஆசி பெற்றனர். காஞ்சி காமகோடி பீடத்தின் 71-வது பீடாதிபதியாக ரிக் வேத விற்பன்னர் பிரம்மஸ்ரீ துட்டுசத்ய வெங்கட சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மா திராவிட் தேர்வு செய்யப்பட்டார். அட்சய திருதியை தினத்தில் அவர் சந்நியாஸ்ரம தீட்சை பெற உள்ளார் என்று காஞ்சி சங்கர மடத்தின் கார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரி முன்னதாக தெரிவித்திருந்தார். புதன்கிழமை, ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த அட்சய திருதிய நன்னாளில் (நேற்று),காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள பஞ்ச கங்கா தீர்த்தத்தில், காஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள், ஸ்ரீ கணேச சர்மா…
சென்னை: தமிழகத்துக்கு ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு மற்றும் 60 ஆயிரம் வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில், மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்புக்கான தமிழ்நாடு மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மின்னணுவியல் துறையில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில், தமிழகம் ஏற்கெனவே அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாக விளங்குகிறது. மின்னணுவியல் துறையில், மேலும் மதிப்புக் கூட்டப்பட்ட உற்பத்தியை ஊக்குவிக்கவும், குறைக்கடத்தி துணைப் பிரிவுகளில் பெருமளவு முதலீடுகளை ஈர்க்கவும், தமிழக அரசு, தமிழ்நாடு குறைக்கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணு கொள்கையை அறிமுகப்படுத்தியது. இக்கொள்கை மின்னணுப் பொருட்கள் உற்பத்தியில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ வழிவகுத்துள்ளது. இந்நிலையில், மின்னணுவியல் உற்பத்தி சூழலமைப்பை மேலும் மேம்படுத்தும் வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தை நேற்று வெளியிட்டார். மத்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மின்னணு உபகரணங்கள்…
சென்னை: மின்சார வாகனங்களுக்கு எளிதில் சார்ஜிங் செய்வதற்கான வசதி கிடைக்க, தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பொது சார்ஜிங் மையங்களை அமைக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கும் விதமாக, பெட்ரோல், டீசலுக்குப் பதிலாக பேட்டரியில் ஓடும் வாகனங்கள், சிஎன்ஜி எரிவாயுவில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும், மத்திய அரசு அறிவுறித்தி வருகிறது. இதற்கு ஏற்ப பலரும் மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். மின்சார வாகனங்களுக்கு எளிதில் சார்ஜிங் வசதி கிடைக்க தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு 25 கி.மீ. தூரத்துக்கும் ஒரு சார்ஜிங் மையம், நகரங்களில் ஒவ்வொரு 3 கி.மீ. தூரத்துக்கு ஒரு மையங்களையும் அமைக்க பொதுத்துறை நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, தமிழக மின்வாரியம் முதற்கட்டமாக, 100 துணை மின்நிலையங்களில் காலியாக உள்ள இடங்களில் சார்ஜிங் மையங்களை அமைக்க முடிவு செய்தது. ஆனால், நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் அதற்கான பணிகளை…
சென்னை: மத்திய அமைச்சரவையின் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பும் சேர்த்து எடுக்கப்படும் என்ற மத்திய அமைச்சரவைக் குழுவின் அறிவிப்பை மனதார வரவேற்கிறேன். சாதிவாரி கணக்கெடுப்பை மையமாக வைத்து நாட்டில் குழப்பத்தை உண்டு செய்ய நினைத்தவர்களின் அரசியல் சதியை உடைத்தெறிந்த பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் நன்றி. பிற்படுத்தப்பட்ட, பட்டியல் மற்றும் பழங்குடியின சமூக மக்களின் உரிமைகளை வெறும் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தும் கட்சிகளுக்கு மத்தியில், பிரதமர் மோடி மட்டும்தான் மெய்யான சமூகநீதியின் காவலராக விளங்குகிறார். பாமக நிறுவனர் ராமதாஸ்: இந்தியாவில் அடுத்து நடைபெறவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்தியாவில் சமூகநீதியை நிலை நிறுத்த வகை செய்யும் இந்த முடிவு மிகவும் சிறப்பானது. மத்திய அரசு நடத்தும்…
புதுடெல்லி: முத்ரா திட்டத்தின் கீழ் 52 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் இது உலக அளவில் இணையற்ற மிகப்பெரிய சாதனை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். முத்ரா திட்டத்தின் 10 ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நடைபெற்றது. இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த இத்திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார். தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிகாரமளிப்பதிலும், நாடு முழுவதும் தொழில்முனைவை ஊக்குவிப்பதிலும் முத்ரா திட்டம் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கி உள்ளது. விளிம்புநிலை மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த தனிநபர்களுக்கு இந்தத் திட்டம் நிதி ஆதரவை வழங்கியுள்ளது. உத்தரவாதங்கள் அல்லது விரிவான ஆவணங்கள் தேவைப்படாமல் தங்கள் சொந்தத் தொழில்களைத் தொடங்க இது அவர்களுக்கு உதவுகிறது. முத்ரா திட்டம் அமைதிப் புரட்சியை கொண்டு வந்துள்ளது. தொழில்முனைவு குறித்த சமூக அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது.…
சென்னை: இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தை பழனிசாமிக்கு ஒதுக்கியதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், ஓ.பி. ரவீந்திரநாத், ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி, கே.சி.பழனிச்சாமி, ராம்குமார் ஆதித்தன், சூரியமூர்த்தி, காந்தி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர். தேர்தல் ஆணையம் அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்த தடை சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியதை தொடர்ந்து, அனைத்து தரப்பினரும் ஆஜராகுமாறு தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி, இரட்டை இலை சின்னம் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடைபெற்றது. பழனிசாமி சார்பில் முன்னாள் அமைச்சரும் அதிமுக எம்பியுமான சி.வி.சண்முகம், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஓ.பி.ரவீந்திரநாத், வழக்கறிஞர் ராஜலட்சுமி மற்றும் புகழேந்தி, கே.சி.பழனிச்சாமி, சூரியமூர்த்தி, ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடந்தது. விசாரணைக்குப்…
புதுடெல்லி: அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போரில் இந்திய பொருளாதாரத்துக்கு சில சாதகமான சூழல் இருப்பதாக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு ரகுராம் ராஜன் அளித்த பேட்டியில் கூறியதாவது: அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி என்பது நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில் சிறியதுதான். ஆம், இந்த வரிவிதிப்புகளின் மூலம் சில விளைவுகள் ஏற்படும். இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு கடினமான சூழலை உருவாக்கும். ஆனால் நமது பொருளாதாரத்தின் தன்மையையும் நமது வளர்ச்சியையும் அது பெரியளவில் மாற்றப் போவதில்லை. கிழக்கு மற்றும் வடக்கு நோக்கி இந்தியா தனது பார்வைகளை விரிவுபடுத்தவும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டணியை மீண்டும் கையில் எடுக்கவும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்புடனான தொடர்புகளை மீண்டும் பார்வையிடவும் இது ஒரு நல்ல நேரம். கூடவே ஜப்பானையும், சீனாவையும் அணுக வேண்டும். வர்த்தகங்களிடையே மிகவும் நிச்சயமற்ற தன்மை நிலவும் தருணம் இது. மேலும்…
நாய்கள் ஒரு மனிதனின் சிறந்த நண்பர் என்று பெரும்பாலும் கூறப்படுகிறது, சரியாக. எங்கள் உரோமம் நண்பர்கள் எங்களுக்கு நிபந்தனையற்ற அன்பையும் ஆதரவையும் வழங்குகிறார்கள், இது அவர்களை நம் வாழ்வில் விலைமதிப்பற்றதாக ஆக்குகிறது. இருப்பினும், ஒரு நாயை சொந்தமாக்கும்போது, சிலருக்கு இது ஒரு முதலீடு. பெரும்பாலான நாய்கள் நியாயமான விலைக் குறிச்சொற்களுடன் வந்தாலும், சில இனங்கள் மிகவும் அரிதானவை மற்றும் தனித்துவமானவை, அவற்றின் விலை ஸ்கைரோக்கெட்டுகள். இந்த இனங்கள் அவற்றின் தனித்துவமான பண்புகள் மற்றும் பாவம் செய்ய முடியாத வம்சாவளிகளுக்கு பெயர் பெற்றவை. உலகில் இதுபோன்ற மிகவும் விலையுயர்ந்த சில நாய்களை இங்கே பட்டியலிடுகிறோம், அவற்றை மிகவும் சிறப்பானதாக ஆக்குகிறோம்:
சென்னை: ‘‘முறையாக அனுமதி பெற்று கட்டப்படும் வழிபாட்டு தலங்களுக்கு தடையாக இருக்கும் சக்திகள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும்’’ என, சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில், நேற்று நடைபெற்ற பொதுத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறைகள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர். கிள்ளியூர் தொகுதி உறுப்பினர் எஸ்.ராஜேஷ்குமார் (காங்கிரஸ்) பேசும்போது, ‘‘தமிழகத்தில் கிறஸ்தவர்கள் 10 சதவீதமும், இஸ்லாமியர்கள் 9 சதவீதமும் என ஏறக்குறைய 20 சதவீதம் பேர் மதச் சிறுபான்மையினராக உள்ளனர். தேவாலயங்கள், மசூதிகள் கட்ட அனுமதி கிடைப்பதில்லை. குறிப்பாக, கன்னியாகுமரியில் பட்டா நிலங்களில் மசூதிகள், தேவலாயங்கள் கட்ட அதிகாரிகள் அனுமதி வழங்குவதில்லை’’ என்றார். அதற்கு பதில் அளித்துப் பேசிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் பட்டா நிலங்களில் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் மதவழிபாட்டு தலங்களை கட்ட தடை ஏற்படுவதாக உறுப்பினர் தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்கலும் பட்டா…