Author: admin

மெக்னீசியம் 300 க்கும் மேற்பட்ட உடல் செயல்பாடுகளை ஆதரிக்கும் ஒரு முக்கிய கனிமமாகும். மனநிலையை மேம்படுத்துவதிலிருந்து தூங்குவது, உடற்பயிற்சி செயல்திறன் மற்றும் இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துதல், மெக்னீசியம் நம் உடல் மற்றும் மூளைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இலை கீரைகள், கொட்டைகள், விதைகள் மற்றும் பீன்ஸ் போன்ற பல்வேறு உணவுகளில் மெக்னீசியம் இயற்கையாகவே காணப்படுகிறது. இருப்பினும், உங்கள் உணவில் மெக்னீசியம் இல்லாவிட்டால், மெக்னீசியம் சப்ளிமெண்ட்ஸ் எடுப்பது இந்த சுகாதார நன்மைகளை வழங்கும். அரிதான சந்தர்ப்பங்களில், ஒரு நபருக்கு சீரான உணவு இருந்தாலும், மெக்னீசியம் குறைபாடு ஏற்படக்கூடும், குறிப்பாக செலியாக் நோய் மற்றும் நாள்பட்ட வயிற்றுப்போக்கு போன்ற செரிமான கோளாறுகள் உள்ளவர்களில். டையூரிடிக்ஸ் (நீர் மாத்திரைகள்) மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் போன்ற சில மருந்துகள் இரத்த மெக்னீசியம் அளவைக் குறைக்கலாம். மெக்னீசியம் சப்ளிமெண்ட்ஸ் ஒரு தேவையாக மாறும் போது தான்.சந்தையில் ஏராளமான மெக்னீசியம் சப்ளிமெண்ட்ஸ் கிடைக்கின்றன, ஒவ்வொன்றும் அதன் சொந்த இலக்கு நன்மைகளைக்…

Read More

சர்வதேச அளவில் படைப்பாற்றல் பொருளாதாரத்தின் மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு (வேவ்ஸ்) உச்சி மாநாடு மும்பையில் நேற்று தொடங்கியது. மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை நடத்தும் இந்த மாநாடு வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா உட்பட சுமார் 100 நாடுகளை சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், படைப்பாளர்கள் கலந்து கொண்டு உள்ளனர். இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 650-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டின் முதல் வேவ்ஸ் மாநாடு வெற்றிகரமாக தொடங்கப்பட்டு உள்ளது. வரும் காலத்தில் கலை, படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் வேவ்ஸ் விருதுகள் வழங்கப்படும். இது உலகின் மிகச் சிறந்த விருதாக இருக்கும். உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் வரிசையில் தற்போது 5-வது இடத்தில் இந்தியா…

Read More

சென்னை: ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் சிஎஸ்கே அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணியின் நட்சத்திர ஸ்பின்னரான யுவேந்திர சாஹல் ஹாட்ரிக் சாதனை படைத்தார். சிஎஸ்கே அணி முதலில் பேட் செய்த நிலையில் 19-வது ஓவரை வீசிய யுவேந்திர சாஹல் கடைசி 3 பந்துகளில் தீபக் ஹூடா (2), அன்ஷுல் கம்போஜ் (0), நூர் அகமது (0) ஆகியோரை ஆட்டமிழக்கக் செய்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். இதன் மூலம் சிஎஸ்கேவுக்கு எதிராக ஹாட்ரிட் விக்கெட் வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் சாஹல் பெற்றார். இந்த ஓவரின் 2-வது பந்தில் எம்.எஸ்.தோனியையும் (11), சாஹல் அவுட்டாக்கியிருந்தார். ஒட்டுமொத்தமாக 3 ஓவர்களை வீசிய யுவேந்திர சாஹல் 32 ரன்களை வழங்கி 4 விக்கெட்கள் வீழ்த்தினார். ஐபிஎல் தொடரில் யுவேந்திர சாஹல் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்துவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்னர் கடந்த 2022-ம் ஆண்டு…

Read More

மதுரை / சென்னை: கொடைக்கானல் அருகே சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜய்க்கு அவரது ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பிரம்மாண்டமான முறையில் உற்சாக வரவேற்பு அளித்தனர். கொடைக்கானல் பகுதியில் நடிகர் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் நேற்று சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். இதையொட்டி, அவரை வரவேற்க கட்சியினர் மற்றும் ரசிகர்கள் நேற்று காலை முதலே விமான நிலையப் பகுதியில் திரண்டனர். இரும்பு தடுப்புகளை தாண்டி விமான நிலையத்துக்குள் செல்ல முயன்றவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார், முக்கிய நிர்வாகிகளை மட்டும் விமான நிலையத்துக்குள் அனுமதித்தனர். மாலை 4 மணிக்கு விமானத்தில் வந்திறங்கிய விஜய்க்கு நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். மதுரை விமான நிலையத்தில் திரண்டிருந்த தவெக தொண்டர்கள். சுவர் ஏறி குதித்து… இதனிடையே, தடுப்புகளை தள்ளிவிட்டும், சுவர் ஏறி…

Read More

சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) வசூல் கடந்த ஏப்ரல் மாதத்தில் 12.6 சதவீதம் அதிகரித்து இதுவரை இல்லாத அளவாக ரூ.2.37 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. மார்ச் மாதத்தில் இந்த வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாகவும், கடந்த 2024 ஏப்ரலில் ஜிஎஸ்டி வசூல் ரூ.2.10 லட்சம் கோடியாக இருந்தன. உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலமாக கிடைத்த ஜிஎஸ்டி வசூல் 10.7 சதவீதம் அதிகரித்து ரூ.1.9 லட்சம் கோடியாகவும், இறக்குமதி பொருட்களுக்கான ஜிஎஸ்டி வருவாய் 20.8 சதவீதம் அதிகரித்து ரூ.46,913 கோடியாகவும் இருந்தன. ஏப்ரலில் ரீபண்ட் செய்யப்பட்ட தொகை 48.3 சதவீதம் உயர்ந்து ரூ.27,341 கோடியானது. ரீபண்டுக்கு பிறகான சரி செய்யப்பட்ட நிகர ஜிஎஸ்டி வசூலானது ஏப்ரலில் 9.1 சதவீதம் அதிகரித்து ரூ.2.09 கோடியாக இருந்தது என்று மத்திய அரசின் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்சம் சர்வதே துறைமுகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். கேரளாவின் திருவனந்தபுரத்தில் விழிஞ்சம் துறைமுகத்தை அதானி நிறுவனம் பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் ரூ.8,867 கோடி செலவில் அமைத்துள்ளது. இங்கு பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு கடந்தாண்டு டிசம்பர் மாதம் வர்த்தக சான்றிதழ் பெறப்பட்டது. இதன் மூலம் உலகளாவிய கடல்சார் வரைபடத்தில் கேரளாவின் விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் இடம் பெற்றுள்ளது. விழிஞ்சம் துறைமுகம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: இது புதிய துறைமுகம் திறப்பு விழா மட்டும் அல்ல. இது புதிய யுகத்தின் தொடக்கம். இதன் மூலம் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் சரக்கு போக்குவரத்து உலகளவில் வலுவடையும். விழிஞ்சம் நாட்டின் முதல் பிரத்யேக சரக்கு பரிமாற்ற துறைமுகம். நாட்டின் முதல் தானியங்கி துறைமுகமும் இதுதான். இங்குள்ள கிரேன்கள் முழுவதும் தானியங்கி வகையை சேர்ந்தது. இதனால் சரக்குகளை விரைவில் கையாள முடியும். இது…

Read More

ஐபிஎல் டி20 தொடரில் தொடர்ச்​சி​யாக 2-வது முறை​யாக பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறும் வாய்ப்பை இழந்​துள்​ளது சிஎஸ்கே அணி. கடந்த சீசனிலா​வது கடைசி லீக் ஆட்​டம் வரை தொடரை உயிர்ப்​பிப்​புடன் வைத்​திருந்​தது சிஎஸ்கே அணி. ஆனால் இம்​முறை இன்​னும் 4 ஆட்​டங்​கள் எஞ்​சி​யுள்ள நிலை​யில் இப்​போது மூட்​டைகட்​டி​யுள்​ளது. இந்த சீசனில் சிஎஸ்​கேவுக்கு நேற்று முன்​தினம் சேப்​பாக்​கத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் முடிவுரை எழு​தி​யது பஞ்​சாப் கிங்ஸ் அணி​தான். ஐபிஎல் வரலாற்​றில் அந்த அணி இது​போன்ற நெருக்​கடி​யான நிலையை சந்​திப்​பது இதுவே முதன்​முறை​யாகும். ஒட்​டுமொத்​த​மாக 18 சீசன்​களில் சிஎஸ்கே அணி லீக் சுற்​றுடன் வெளி​யேறு​வது இது 4-வது முறை​யாகும். 2020, 2022, 2024-ம் ஆண்​டு​களி​லும் அந்த அணி லீக் சுற்றை கடக்​க​வில்​லை. நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி தனது கோட்​டை​யான சேப்​பாக்​கம் மைதானத்​தில் வெற்​றிக்​கான தாகத்​துடன் விளை​யா​டாதது பெரிய பின்னடைவை ஏற்​படுத்​தி​யது. இங்கு விளை​யாடி உள்ள 6 ஆட்​டங்​களில் 5-ல் தோல்​வியை சந்​தித்​த​தால் பிளே…

Read More

மதுரை: தேர்தல் ஆதாயம் கருதியே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. கூறினார். கேரள மாநிலம் வண்டிப்பெரியாறு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற மே தின நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று மதுரை திருமாவளவன், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது நடக்கும் என்று அறிவிக்கவில்லை. பாஜக அரசு 2029-ல் பதவிக் காலத்தை நிறைவு செய்கிறது. அடுத்த கணக்கெடுப்பு 2031-ல் நடைபெறும். ஏற்கெனவே, 2021-ல் நடத்தவேண்டிய கணக்கெடுப்பு கரோனாவால் 2031-க்கு தள்ளிப்போயுள்ளது. அப்போது பாஜக ஆட்சியில் இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. எனவே, இந்த அறிவிப்பு கண்துடைப்பாகவே இருக்கலாம். பிஹாரில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் இது பேசு பொருளாக மாறியிருக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…

Read More

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில், பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்பு குறித்து தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சரிடம், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கினார். ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. மேலும் ஐ.நா பொதுச் சபையில் 10 நாடுகள் 2 ஆண்டு காலத்துக்கு நிரந்தரமற்ற உறுப்பினர்களாக உள்ளன. 2025-26-ம் ஆண்டு காலத்தில் பாகிஸ்தானும் ஐ.நா உறுப்பினராக உள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல், எகிப்து, ஜோர்டான், இத்தாலி, ஜப்பான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், இலங்கை, ஆஸ்திரேலியா, நேபாளம் உட்பட பல நாட்டின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து, பிரதமர் மோடிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இந்நிலையில் ஐ.நாவி.ல் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் போன் செய்து பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்பு குறித்து விளக்கி வருகிறார். ஏற்கெனவே 8 நாடுகளின்…

Read More

திருப்பூர்: கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் வகையில் அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அகத்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிரம்மாண்ட தேசியக் கொடி பறக்கவிடப்பட உள்ளது. இதற்காக திருப்பூரில் தேசியக் கொடி தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டது. திருப்பூர் தாரபுரம் சாலையில் உள்ள லைட்பிளஸ் நியூட்ரா சிட்டிக்கல்ஸ் நிறுவனம், கடந்த சில வாரங்களாக இந்த தேசியக் கொடி தயாரிப்பில் ஈடுபட்டது. இது தொடர்பாக நிறுவனத்தின் உரிமையாளர் விக்னேஷ் கூறும்போது, “அகத்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் 147 அடி உயரம் கொண்ட கம்பத்தில் பறக்க விடுவதற்காக, 20 அடி உயரம் மற்றும் 30 அடி நீளத்தில் தேசியக்கொடி தயார் செய்யப்பட்டது. 25 நாட்களில் தயார் செய்தோம். 22 கிலோவில் தயாரிக்கப்பட்ட இந்தக் கொடி, சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் போதிய வெளிச்ச அமைப்புகளுடன் அமைக்கப்படுகிறது. தேசியக்கொடி முறைப்படி தயார் செய்யப்பட்டு…

Read More