கடந்த வந்த காதலும் முறிவுகளும் குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் மனம் திறந்து பதிலளித்துள்ளார். இது குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டி ஒன்றில், ‘வாழ்க்கையில் ஏதேனும் வருத்தங்கள் உள்ளதா?’ என்ற கேட்கப்பட்டது. அதற்கு, “நான் சிலரை புண்படுத்தியிருக்கிறேன். அப்படிச் செய்யாது இருந்திருக்கலாம் . ஆனாலும், அதில் எனக்கு வருத்தம் எல்லாம் இல்லை. சில நேரங்களில் கோமாளி போல் நடந்து கொண்டிருந்திருக்கிறேன். அவ்வளவே. அது ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால், என் வாழ்வில் சில மதிப்புமிகு நபர்கள் இருந்துள்ளனர். அவர்களை நான் தெரியாமல் காயப்படுத்தியிருக்கிறேன். இப்போது அவர்களிடம் மன்னிப்பு கேட்பதில் கவனம் செலுத்துகிறேன். நம் அனைவருக்குமே நம் வாழ்வில் ஓர் ஆபத்தான முன்னாள் காதல் இருந்திருக்கும். என் வாழ்வில் எல்லா அத்தியாயங்களையுமே நான் எவ்வித வருத்தமும் இன்றியே முடித்திருக்கிறேன். அதனால்தான் என்னிடம் யாராவது, ‘இது உங்களின் எத்தனையாவது காதலர்’ என்று கேட்டாலும் நான் வருந்துவதில்லை. அவர்களுக்கு அது வெறும் எண்ணிக்கை. எனக்கு நான் விரும்பும்…
Author: admin
சென்னை: “ரேஷன் கடைகளில் கலப்படப் பொருட்களை வழங்கி மக்களின் உயிரோடு விளையாடக் கூடாது” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் தொடர்ந்து 50 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் திராவிட ஆட்சியில் ஊழல் முறைகேடுகள் நடைபெறாத துறையே இல்லை. அனைத்து அரசுத் துறைகளிலும் ஊழல் மலிந்து காணப்படுகிறது. குறிப்பாக, உணவு பொருள் வழங்கல் துறையின் கீழ் பொது விநியோக திட்டத்தில், மக்களுக்கு இலவச உணவுப்பொருள் வழங்குகிறோம் என்ற பெயரில் உண்ணவே முடியாத அளவுக்கு தரமற்ற கலப்பட அரிசி பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து பொங்கல் தொகுப்பில் பல்லி விழுந்த புளி, உருகிய வெல்லம், உடைந்த கரும்பு என தரமற்ற பொருட்களை வழங்கியது. இதையடுத்து, தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் நடத்திய திடீர் ஆய்வில், தமிழக அரசின் பொது வழங்கல் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட…
புதுடெல்லி: “பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாஜக அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும். பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்களின் மதம் பற்றி கேட்ட பிறகு அவர்களைக் கொன்றதாக பாஜக கூறுகிறது. பயங்கரவாதிகளுக்கு இதற்கெல்லாம் நேரம் இருக்கிறதா என்ன?” என மகாராஷ்டிர காங்கிரஸ் எம்எல்ஏ விஜய் வடேடிவார் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானுடன் போர் வேண்டாம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியதை, பாகிஸ்தான், செய்தி நிறுவனம் ஒன்று தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. அதாவது, போருக்கு எதிரான குரல்கள் என்று குறிப்பிட்டு சித்தராமையாவின் கருத்தை பாகிஸ்தான் செய்தி நிறுவனம் வெளியிட்டது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், மற்றொரு மூத்த காங்கிரஸ் எம்எல்ஏ விஜய் வடேடிவார் இது குறித்து கூறுகையில், “பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாஜக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்களிடம் அவர்களின் மதம் பற்றி கேட்ட பிறகு கொன்றதாக பாஜக கூறுகிறது. பயங்கரவாதிகளுக்கு…
நம்மைச் சுற்றி உள்ள அனைத்தும் அறிவியல் மயம்தான். ஆயிரமோ லட்சமோ எண்ணற்ற கேள்விகளுக்கு அறிவியல்பூர்வமாகப் பதில்களைத் தேடிச் சென்றதால்தான் வரலாற்றில் மனிதனால் ஆதிகாலத்தில் இருந்து பரிணமித்து வரமுடிந்தது. அறிவியல் என்பதை ஒரு பாடமாக மட்டும் சுருக்கிவிட முடியாது. பள்ளி, கல்லூரிப் படிப்புகளைத் தாண்டி வாழ்வில் பல சூழல்களில் அறிவியலோடு பயணப்பட வேண்டி இருக்கும் என்பதால், அறிவியல் சிந்தனையை ஒருவர் கண்டிப்பாக வளர்த்துக்கொள்ள வேண்டும். நன்மையா, தீமையா? – அறிவியலும் தொழில்நுட்பமும் ஒன்றோடு மற்றொன்று தொடர்புடையவை. அறிவியல்ரீதியான ஆராய்ச்சிகளும் கண்டறிதல்களும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இப்படி அறிவியல் தொழில்நுட்பம் மேம்படும் போது மனிதர்களின் வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் ஏற்படும். சக்கரம், மின்சாரம், தொலைக்காட்சிப் பெட்டி, கணினி, திறன்பேசி எனப் பல கண்டறிதல்கள் அறிவியல் – தொழில் நுட்பத்தின் இணைப்பால் நிகழ்ந்தவை. இந்தக் கண்டறிதல்கள் ஒருவரின் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும், வசதியைக் கூட்டும், பூமிக்கும் விண்வெளிக்குமான தொடர்பை ஏற்படுத்தும், கல்வி, மருத்துவம், தொடர்பியல்…
சென்னை: இளநிலை உணவக மேலாண்மை படிப்புகளுக்கு வரும் 27-ம் தேதி ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடைபெற உள்ள நகரங்கள் பட்டியலை என்டிஏ வெளியிட்டுள்ளது. தேசிய உணவக மேலாண்மை மற்றும் உணவு தொழில்நுட்ப குழுமத்தின் (என்சிஎச்எம்சிடி) கீழ் இயங்கும் 78 கல்வி மையங்களில் பிஎஸ்சி விருந்தோம்பல் மற்றும் உணவக நிர்வாகம் படிப்பு கற்றுத் தரப்படுகிறது. இதில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (என்சிஎச்எம் ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான என்சிஎச்எம் ஜேஇஇ நுழைவுத் தேர்வு கணினி வழியில் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த டிசம்பர் 16-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 28-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நகரங்களின் விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றி exams.nta.ac.in/NCHM என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.…
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கும், முல்தான் சுல்தான்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டி கடும் சர்ச்சைகளுக்கு இடமாகியுள்ளது. இஸ்லாமாபாத் யுனைடெட் அணி இலக்கை விரட்டிக் கொண்டிருந்தபோது நியூஸிலாந்து தொடக்க வீரர் கொலின் மன்ரோ, பந்து வீசிக்கொண்டிருந்த முல்தான் சுல்தான்ஸ் பவுலர் இஃப்திகார் அகமதின் ஆக்ஷன் த்ரோ தான், பவுலிங் அல்ல என்பது போல் செய்கை செய்தது கடும் சர்ச்சைகளுக்குள்ளானது. இதில் கடும் கோபமடைந்த இப்திகார் அகமது ஸ்கொயர் லெக் நடுவரிடம் சென்று புகாரிட்டார். இதனையடுத்து, முல்தான் சுல்தான்ஸ் கேப்டன் ரிஸ்வானும் கூட இணைந்து கொலின் மன்ரோவுடன் கடும் வாக்குவாதம் செய்தார். இப்திகார், மன்ரோ, ரிஸ்வான் ஆகியோரிடையே கடும் வாக்குவாதம் உச்சத்திற்குச் செல்லும் போல் ஆனது. இதில் மன்ரோவுக்கும் ரிஸ்வானுக்கும் மட்டும் ஆட்டத் தொகையில் 30% அபராதம் விதித்து தீர்ப்பளித்தார் மேட்ச் ரெஃப்ரீ அலி நக்வி. கடும் வாக்குவாதம் புரிந்த இப்திகாருக்கு அபராதம் விதிக்கப்படவில்லை. மன்ரோவும் ரிஸ்வானும்…
வாடிகன்: கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவர் போப் பிரான்சிஸின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “போப் பிரான்சிஸின் மறைவுக்கு உலகம் இன்று இரங்கல் தெரிவிக்கிறது. கத்தோலிக்க திருச்சபையைத் தாண்டி, அவர் தனது பணிவு மற்றும் ஏழைகள் மீதான தூய அன்பின் மூலம் கோடிக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்தினார். இந்த ஆழ்ந்த இழப்பை உணரும் அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. போப் பிரான்சிஸின் மரபு நம்மை நீதியான, அமைதியான மற்றும் இரக்கமுள்ள உலகத்தை நோக்கி தொடர்ந்து வழிநடத்தும். அவரது ஆன்மா ஆறுதல் காணட்டும்.” என தெரிவித்துள்ளார். போப் பிரான்சிஸ் காலமானதைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “போப் பிரான்சிஸ், சாந்தியடையட்டும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனுடன் போப், அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உடன் தனித்தனி சந்தர்ப்பங்களில் சந்தித்த…
ராமேசுவரம்: பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) காலை விஸ்வநாதர் சன்னதி எதிரே 1008 சங்குகள் அடுக்கி கங்கை தீர்த்தம் ஊற்றப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சங்காபிஷேக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ராமநாதசுவாமி கோயிலின் மேலவாசல் முருகன் சன்னதியில் அகில இந்திய யாத்திரை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 63-வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. மேலவாசல் முருகன் சன்னதியில் நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் பால்குடம், மயில், பறக்கும் காவடிகளில் பக்தர்கள் தொங்கியபடி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அது போல 2 அடி முதல் 20 அடி நீளம் வரையிலான நீண்ட வேல்களை வாயில் குத்தியபடியும் சாலைகளில் ஆடி வந்து மேலவாசல் முருகன் சன்னதியில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று இரவு 8 மணி அளவில் மேலவாசல் முருகன் சன்னதியில் பால், பன்னீர், இளநீர்,…
டாம் க்ரூஸ் நடித்துள்ள ‘மிஷன் இம்பாசிபிள் 8’ திரைப்படம் இந்தியாவில் ஒருவாரம் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த படங்களின் பட்டியலில் ‘மிஷன்: இம்பாசிபிள்’ சீரிஸ் படங்கள் எப்போதும் உண்டு. ஆக்ஷன் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் இந்தப் படத்தின் முந்தைய பாகங்கள் ஹாலிவுட்டில் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளன. அந்த வகையில் இந்தப் படத்தில் 7-ம் பாகமாக ‘மிஷன்: இம்பாசிபிள்- டெட் ரெகனிங் (பாகம் 1)’ கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி வெளியாகி வசூலை குவித்தது. முந்தைய பாகத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்யூரி இந்தப் பாகத்தையும் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் முந்தைய பாகங்களின் வரவேற்பை கணக்கில் கொண்டு இப்படத்தை முன்கூட்டியே இங்கு வெளியிடுகிறது பாரமவுன்ட் நிறுவனம். உலகம் முழுவதும் இப்படம் மே 23-ஆம் தேதி வெளியாகும் நிலையில், இந்தியாவில் மே 17-ஆம் தேதியே இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ‘மிஷன் இம்பாசிபிள்’ பட…
சென்னை: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் பலியான 7 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி , அருகில் திருநெல்வேலி – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (ஏப்.27) மாலை சுமார் 5 மணியளவில் நாகர்கோவிலிருந்து திருநெல்வேலிக்கு சென்றுகொண்டிருந்த கார் ஒன்றின் மீது, திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்துகொண்டிருந்த கார் ஒன்று தடம் மாறி எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிய விபத்தில் மேற்படி வாகனங்களில் பயணம் செய்த 16 நபர்களில் திருநெல்வேலி மாவட்டம், பாளைங்கோட்டை வட்டம், டக்கரம்மாள்புரம், விவேகானந்தர் காலனியைச் சேர்ந்த தனிஸ்லாஸ் (68) ,மார்கரெட் மேரி (60) , ஜோபர்ட் (40) , அமுதா (35), குழந்தைகள் ஜோபினா (8), ஜோகன் (2) மற்றும் ராதாபுரம் வட்டம், கன்னங்குளத்தைச் சேர்ந்த மேல்கேஸ் (60)…