தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ திட்டத்தில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு அடுத்த வாரத்தில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். மாநிலம் முழுவதுள்ள 8 ஆயிரத்துக்கும் மேலான தனியார் பள்ளிகளில் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். தமிழகத்தில் 2013-ல் அமலான இந்த திட்டத்தின்கீழ் இதுவரை சுமார் 5 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இதற்கிடையே வரும் கல்வியாண்டு்க்கான (2025-26) இலவச சேர்க்கைக்கு இணைதள விண்ணப்பப் பதிவு ஏப். 3-வது வாரத்தில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: ஆர்டிஇ திட்டத்தின் கீழ் சிறுபான்மை அந்தஸ்து பெறாத அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக்,…
Author: admin
மும்பை: பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்திய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்துக்கு நேற்று முன்தினம் வந்த சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு இந்திய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்டோர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் கூறும்போது, “பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்த செய்தி வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அமைதியும், வலிமையும் கிடைக்க வேண்டும் என்றும் இந்த கொடூர செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன்” என்றார். இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறும்போது, “பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்தது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நினைத்துக்கூட பார்க்க முடியாத வேதனையை…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அமெரிக்கவைச் சேர்ந்த சங்கிலித் தொடர் துரித உணவு கடைகளான கேஎஃப்சி மீது நடந்த தாக்குதல் தொடர்பாக 178 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் போலீஸார் தெரிவித்தனர். அமெரிக்க எதிர்ப்புணர்வு மற்றும் அதன் நட்பு நாடான இஸ்ரேல், காசா மீது நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கேஎஃப்சி கடைகள் மீது கும்பல் தாக்குதல் நடந்துள்ளது. இது தொடர்பாக சமீப வாரங்களாக ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்றும் போலீஸார் தெரிவித்தனர். பாகிஸ்தானின் தெற்குப் பகுதி துறைமுகநகரமான கராச்சி, கிழக்குப் பகுதி நகரமான லாகூர் மற்றும் தலைநகர் இஸ்லாமாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில், ஆயுதம் ஏந்தியவர்கள் கேஎஃப்சி கடைகள் மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய 11 சம்பவங்கள் நடந்துள்ளன என போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த வாரத்தில் லாகூரின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு கேஎஃப்சி ஊழியர், அடையாளம் தெரியாத நபரொருவரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்று தன் பெயரை…
சென்னை: மடிப்பாக்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் 47 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்.11-ம் தேதி (நாளை மறுதினம்) நடைபெறுகிறது. இதுகுறித்து, ஸ்ரீ ஐயப்பன் மண்டலி செயலாளர் ஆர்.மகாலிங்கம், ஸ்ரீ ஐயப்பன் கோயில் அறக்கட்டளை செயலாளர் ஆர்.வி.வீரபத்ரன் ஆகியோர், சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மடிப்பாக்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஐயப்பன் கோயில் கடந்த 1978-ம் ஆண்டு ஜுன் 6-ம் தேதி சபரிமலை தந்திரி செங்கன்னூர் தாழமன் மடம் பிரம்மஸ்ரீ நீலகண்டரு தந்திரி மூலம் கட்டப்பட்டது. இந்நிலையில், 47 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஏப்.11-ம் தேதி (நாளை மறுதினம்) காலை 8.27 மணி முதல் காலை 9.57 மணி வரை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. சபரிமலை பரம்பரை பூசாரிகள்: சபரிமலையின் பரம்பரை பூசாரிகள் செங்கன்னூர் தாழமன் மடம் பிரம்மஸ்ரீ கந்தரரு மோகனராரு தந்திரி, பிரம்மஸ்ரீ மகேஷ் தந்திரி ஆகியோரால் மகா கும்பாபிஷேகம்…
டொவினோ தாமஸ், சேரன் நடித்துள்ள ‘நரிவேட்டா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ‘இஷ்க்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற அனுராஜ் மனோகர் இயக்கத்தில் டோவினா தாமஸ் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘நரிவேட்டா’. இப்படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, ஆர்யா சலீம், ப்ரியம்வதா கிருஷ்ணன், ரினி உதயகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்களுடன் இயக்குநர் சேரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் சேரன் மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகிறார். போலீஸ் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம் மே 16 அன்று வெளியாகிறது. ட்ரெய்ல்ர் எப்படி? – தங்கள் நிலத்துக்காக போராடும் பழங்குடியின மக்கள் – சிஸ்டம் / போலீஸ்/ அரசுக்கும் இடையிலான மோதலே படத்தின் அடிநாதம் என்று தெரிகிறது. காட்டை ஆக்கிரமித்திருப்பதாக கூறி பழங்குடி மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் அவர்களிடம் சேரன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதோடு தொடங்கும் ட்ரெய்லர், அடுத்தடுத்த காட்சிகளில் பழங்குடி மக்களுக்கு எதிரான வன்முறைகளையும், அராஜகங்களையும் காட்டுகிறது. இளம் போலீஸ்…
காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து, தமிழகத்துக்கு பல்வேறு காரணங்களுக்காக வந்திருந்த 200 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். காஷ்மீரில் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்து வருகிறது. இதையடுத்து இந்தியாவில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்கள் கடந்த 27-ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த கால அவகாசத்துக்குள் பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படுகிறார்களா என்பதை அந்தந்த மாநில அரசுகள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்றும் மாநில முதல்வர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தி இருந்தார். இதைத்தொடர்ந்து இந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் பெயர், விவரங்களை குடியுரிமை அதிகாரிகள் கணக்கெடுத்து வெளியேற்றும் பணியை தொடங்கினர். அந்த வகையில் தமிழகத்திலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சென்னையில் 20 பாகிஸ்தானியர்கள் தங்கி இருந்தனர். இதில் மருத்துவ சிகிச்சைக்காக வந்திருந்த 2 பாகிஸ்தானியர்கள் தவிர்த்து மீதமுள்ளவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதேபோன்று வேலூரில் உள்ள பிரபல மருத்துவமனை…
இந்திய கடற்படைக்காக ரூ.63 ஆயிரம் கோடியில் 26 ரபேல்-எம் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா, பிரான்ஸ் இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. உலக அளவில் மிகவும் திறமையான போர் விமானங்களில் ஒன்றாக ரபேல்-எம் கருதப்படுகிறது. இது இப்போது பிரான்ஸ் கடற்படையில் மட்டுமே இயங்கி வருகிறது. இதையடுத்து, இந்திய கடற்படைக்காக இந்த ரக விமானங்களை வாங்குவது தொடர்பாக பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், ரூ.63 ஆயிரம் கோடியில் 26 ரபேல்-எம் ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் இந்தியா, பிரான்ஸ் இடையே நேற்று கையெழுத்தானது. மத்திய பாதுகாப்புத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங்கும் தஸ்ஸோ நிறுவன உயர் அதிகாரியும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அப்போது கடற்படை துணை தளபதி கே.சுவாமிநாதன் உடன் இருந்தார். இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த…
சென்னை: இந்தியாவில் விவோ வி50 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். கடந்த ஆண்டு வெளியான விவோ வி40 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட அடுத்த வெர்ஷனாக இந்த போன் வெளிவந்துள்ளது. சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இந்தியாவில் விவோ வி50 ஸ்மார்ட்போன் தற்போது வெளியாகி உள்ளது. இந்த போன் ப்ரீமியம் செக்மென்ட் மாடலாக வெளிவந்துள்ளது. ரோஸ் ரெட், கிரே மற்றும் நீலம் என மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. சிறப்பு அம்சங்கள்: 6.77 இன்ச் டிஸ்பிளே ஸ்னாப்டிராகன் 7 ஜெனரேஷன் 3 ப்ராசஸர் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் …
சென்னை: அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு ஏப்ரல் 16 (புதன்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ‘கோவா’ தேர்வு எனப்படும் அரசு கணினி சான்றிதழ் தேர்வு (Certificate course in Computer on Office Automation-COA)தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்துடன் ஜுன் மாதம் இத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் தேர்வுக்கான அறிவிப்பை தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏப்ரல் 16-ம் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. தேர்வு கட்டணம் ரூ.1030 ஆகும். விண்ணப்பதாரர்கள் www.tndtegteonline.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தின் இணையதளத்தை ()www.dte.tn.gov.in) விரிவாக தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுத் துறைகளில் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்காக நடத்தப்படும் குருப்-4 தேர்வுக்கு யாரும் உரிய தொழில்நுட்பக்கல்வித்தகுதி…
பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), ராஜஸ்தான் ராயல்ஸ்(ஆர்ஆர்) அணிகள் மோதவுள்ளன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. இந்த சீசனில் இதுவரை சொந்த மைதானத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் கூட பெங்களூரு அணி வெற்றி பெறவில்லை. எனவே, இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றிக் கணக்கை பெங்களூரு அணி தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். பெங்களூரு அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 5-ல் வெற்றி, 3-ல் தோல்வி என 10 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. பெங்களூரு மைதானத்தில் நடைபெற்ற 3 ஆட்டங்களில் குஜராத், டெல்லி, பஞ்சாப் அணிகளிடம் அந்த அணி தோல்வி கண்டுள்ளது. ஆனால் வெளிமைதானங்களில் நடைபெற்ற 5 ஆட்டங்களிலும் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. எனவே, இன்றைய ஆட்டத்தில் உள்ளூர் மைதானத்தில் வெற்றி பெற்று கணக்கைத் தொடங்குவதில்…