Author: admin

அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் உலகின் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் சூப்பர் சார்ஜர்கள் மூலம் 15 நிமிடங்களில் டெஸ்லா மின்சார கார்களை சார்ஜ் செய்ய முடியும். 15 நிமிட சார்ஜில் 320 கி.மீ. தொலைவு வரை பயணம் செய்ய முடியும். சீனாவின் பிஒய்டி நிறுவனம், அமெரிக்காவின் டெஸ்லா நிறுவன சாதனையை முறியடித்து உள்ளது. இதுதொடர்பாக பிஎஸ்டி நிறுவனர் வாங் சூயான்பு, சீனாவின் சென்சென் நகரில் நிருபர்களிடம் கூறியதாவது: எங்களது நிறுவனம் சார்பில் சூப்பர் இ-பிளாட்பார்ம் சார்ஜரை உருவாக்கி உள்ளோம். இந்த சார்ஜர் மூலம் 5 நிமிடங்களில் காரை சார்ஜ் செய்யலாம். ஐந்து நிமிட சார்ஜில் 400 கி.மீ. தொலைவு வரை பயணம் செய்ய முடியும். முதல்கட்டமாக பிஒய்டி நிறுவனத்தின் ஹான் எல், டேங் எல் மின்சார கார்களில் 5 நிமிட சார்ஜ் வசதி அறிமுகம் செய்யப்படும். இதன்பிறகு எங்களது அனைத்து மின்சார கார்களிலும் இதே வசதி…

Read More

சென்னை: சென்னை இஸ்கான் சார்பில் சிறுவர்களுக்கான கோடைகால சிறப்பு முகாம் வரும் 28-ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதுகுறித்து இஸ்கான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை இஸ்கான் சார்பில் பகவான் ஜெகன்நாதர் மற்றும் பொறுமையின் சிறப்புகள் குறித்த கோடைகால சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 6 முதல் 17 வயது வரை உள்ள சிறுவர்கள் பங்குபெறலாம். 6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு, கதைகள், ஸ்லோகங்கள், வரைகலை, கைவினை பயிற்சிகள், நெருப்பில்லா சமையல் விளையாட்டு, கீர்த்தனைகள் கற்றுத் தரப்படும். 13 முதல் 17 வயது வரையிலான சிறுவர்களுக்கு கதைகள், ஸ்லோகங்கள், கீர்த்தனை, ஒரு நிமிட உரை, கலந்துரையாடல், விவாதங்கள், ஆய்வு, மன வரைபடங்கள் கற்பிக்கப்படும். சிறுவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்வதன் மூலம் கடவுள் பக்தி, நல்ல குணங்கள் மற்றும் நமது கலாச்சாரத்தை கற்று பயனடைவார்கள். மனம் ஒருமுகப்படும். நினைவாற்றல் அதிகரிக்கும். இந்த சிறப்பு முகாம்…

Read More

ஒரு வெற்றிகரமான ரஞ்சி டிராபி சீசனை விட ஒரு சுமாரான ஐபிஎல் சீசனே வீரர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது என்று கூறும் சுனில் கவாஸ்கர், ஐபிஎல் தொடருக்கு கொடுக்கும் மீடியா கவரேஜ், ரஞ்சி டிராபிகளுக்குக் கொடுக்கப்படுவதில்லை, சம்பளங்களிலும் பெரும் இடைவெளியும் சமத்துவமின்மையும் உள்ளது என்று சாடியுள்ளார். ஐபிஎல் மூலம் நல்ல வீரர்கள் இந்திய கிரிக்கெடுக்குக் கிடைத்து வருவதை வரவேற்கும் கவாஸ்கர், ரஞ்சி டிராபி இதனால் பெறும் மிக மிகக் குறைவான கவன ஈர்ப்பினால் உள்ளூரிலிருந்து ஒரு வீரர் வருவது மிக மிகக் கடினமாகியுள்ளது என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார். ‘தி இந்து ஸ்போர்ட் ஸ்டார்’ இதழுக்கு எழுதிய பத்தி ஒன்றில் கவாஸ்கர் பகிர்ந்தவை: ‘நடப்பு ஐபிஎல் மீண்டும் காட்டுவது என்னவெனில் ஒரு நல்ல ஆட்டம் ஆடிவிட்டால் போதும், உடனே அவரை உயர்ந்த கவுரவங்களுக்கு உரியவராக உயர்த்துகின்றனர். ஆனால், தேசிய சாம்பியன்ஷிப் ஆன ரஞ்சி உள்ளிட்ட போட்டிகளில் ஆடினால் அந்த ஆட்டத்துக்கோ, வீரருக்கோ போதிய வெளிச்சம்…

Read More

வாஷிங்டன்: அமெரிக்கர்கள் யாரும் ஜம்மு-காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் என்றும், இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலிருந்து 10 கிலோமீட்டருக்குள் செல்வதைத் தவிர்க்குமாறும் அமெரிக்கா பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) கடந்த 22-ம் தேதி நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை அடுத்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலை 5 பேர் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணியில் ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது. இந்திய எல்லையில் ராணுவம் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலை நடத்திய அமைப்பு பாகிஸதானைச் சேர்ந்தது என்பதாலும், தாக்குதல் நடத்தியவர்களில் பாகிஸ்தானியர்களும் அடங்கும் என்பதாலும் இந்தியா பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பை மறுக்க முடியாது என கூறப்படுகிறது. இந்த பின்னணியில், அமெரிக்கர்கள்…

Read More

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் வரும் 26-ம் தேதி ராகு பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. இந்தக் கோயிலில் ராகு பகவான் நாகவல்லி, நாககன்னிகள் என 2 மனைவிகளுடன் தனி சந்நிதியில் வீற்றிருந்து மங்கள குருவாக அருள்பாலித்து வருகிறார். இவரது திருமேனியில் பாலபிஷேகம் செய்யும்போது, அந்தப் பால் நீல நிறமாக மாறும். இத்தகைய சிறப்பு பெற்ற ராகுபகவான் ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பின்னோக்கி நகர்வார். அதன்படி, ராகு பகவான் வரும் 26-ம் தேதி மாலை 4.20 மணிக்கு மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார். இதையொட்டி, அன்று மாலை ராகு பகபவானுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு மகா தீபாராதனையும், அதன்பின் வெள்ளி சேஷ வாகனத்தில் வீதியுலாவும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் தா.உமாதேவி, அறங்காவலர் குழுத் தலைவர் சி.சிவகுருநாதன்…

Read More

அலைச்சறுக்கு வீரரான சிவா, சென்னையில் உணவகம் ஒன்றில் வேலை பார்க்கிறார். ஒரு நாள் கடற்கரையில் ராட்சத உருவத்தில் மயங்கி கிடக்கும் சுமோ தஷிரோவை (யொஷினோரோ தஷிரோ) சிவா மீட்கிறார். பார்ப்பதற்கு வெளிநாட்டவரைப் போல் இருக்கும் அவரை, உணவகத்துக்கு அழைத்து வருகிறார். பழைய ஞாபகங்களை இழந்து விடும் அவரை ஒரு குழந்தையைப் போல் பார்த்துக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் அவர் ஜப்பானில் மிகப்பெரிய சுமோ விளையாட்டு சாம்பியன் என்பது தெரிய வருகிறது. அவரை மீண்டும் ஜப்பானுக்கு அழைத்துச் செல்ல, சிவா திட்டமிடுகிறார். ஆனால், ஜப்பானில் இருக்கும் ஒரு கும்பல் அவரை ஜப்பானுக்கு வர விடாமல் தடுக்கிறது. அவரை, சிவாவால் ஜப்பானுக்கு அழைத்து செல்ல முடிந்ததா, இல்லையா ? என்பது கதை. வித்தியாசமான கோணத்தில் உருவாகியுள்ள கதைதான். அதை முடிந்தவரை நாயகன் சிவாவுக்கு ஏற்ப நகைச்சுவையாகச் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் ஹோசிமின். விடிவி கணேஷின் ஃபிளாஷ்பேக்கில் விரியும் கதையில், ராட்சத மனிதன் கதைக்குள்…

Read More

மதுரை/சிவகங்கை: நோயாளி​களின் உடல்​நிலை குறித்த விவரமறிந்​து, சிகிச்சை அளிக்க உதவும் ஆயுஷ்​மான் பாரத் சுகா​தார கணக்கு அடை​யாள அட்​டையை (ஆபா) ஆதார் மூலம் பதிவு செய்​து, பதி​விறக்​கம் செய்​ய​லாம். இதுகுறித்து பொது​மக்​களிடம் மாநில சுகா​தா​ரத் துறை அதி​காரி​கள் விழிப்​புணர்வை ஏற்​படுத்த வேண்​டுமென்று வலி​யுறுத்​தப்​பட்​டுள்​ளது. தமிழக அரசின் முதல்​வர் விரி​வான மருத்​து​வக் காப்​பீட்​டுத் திட்​டம், மத்​திய அரசின் பிர​தான் மந்​திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்​டங்​கள் ஒருங்​கிணைக்​கப்​பட்​டு, ஒரு குடும்​பத்​துக்கு ரூ.5 லட்​சம் வரை காப்​பீடு வழங்​கப்​படு​கிறது. உயிர் காக்​கும் சிகிச்​சைகளுக்கு ரூ.22 லட்​சம் வரை இழப்​பீடு பெற​வும் அனு​ம​திப்​ப​தால் முதல்​வர் காப்​பீட்​டுத் திட்​டம் கிராம மக்​களிடம் அதிக வரவேற்பை பெற்​றுள்​ளது. இந்த திட்​டத்​தில் 2,053 சிகிச்சை முறை​கள் அங்​கீகரிக்​கப்​பட்​டுள்​ளன. இதில் 8 சிறப்பு உயர் சிகிச்​சை, 52 முழு பரிசோதனை, 11 தொடர் சிகிச்​சைகளும் அடங்​கும். மேலும், 942 தனி​யார், 1,215 அரசு மருத்​து​வ​மனை​கள் என 2,157 மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை பெறலாம்.…

Read More

பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு நீர் கூட விடுவிக்கப்படமாட்டாது என மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்நிலையில், மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். பின்னர் சி.ஆர்.பாட்டீல் கூறியதாவது: நாட்டின் நலன் கருதி பிரதமர் மோடி தலைமையிலான அரசு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது என்ற வரலாற்று சிறப்பு மிக்க முடிவை எடுத்துள்ளது. எனவே, ஒரு சொட்டு தண்ணீர் கூட பாகிஸ்தானுக்கு செல்லாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய உள் துறை அமைச்சருடனான சந்திப்பின்போது, இந்திய நதிநீர் பாகிஸ்தானுக்குள் பாய்வதைத் தடுப்பது தொடர்பான விரிவான…

Read More

“ஏஐ-க்கு மனிதர்களைப் புரிந்து கொள்ள முடியாது. அவர்களின் உணர்வுகளின் தன்மையை புரிந்துகொள்ள முடியாது. ஏஐ பயன்பாடு என்பது மனித வாழ்க்கைக்கே ஒரு அவமரியாதை.” – Hayao Miyazaki வாட்ஸ் அப்பில் சாதாரணமாக நாம் அனுப்பும் மெசேஜ்களைக் கூட ஏஐ டூல்களைப் பயன்படுத்தி மெருகேற்றும் காலத்தில் இருக்கிறோம். எங்கும் ஏஐ, எதிலும் ஏஐ என ஆரம்பித்து எல்லாமே ஏஐ என்று விந்தையான, சவாலான ஒரு எதிர்காலத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். ஏஐ தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்றும், வேலைவாய்ப்புகள் எல்லாம் பறிபோகாது நாம் தொழில்நுட்பத்தைக் கையாளக் கற்றுக் கொண்டால், அது நமக்கு உறுதுணை அம்சமாகத்தான் இருக்கும் என்றும் விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்தச் சூழலில்தான் ‘வேலையை விடுங்கள்… கலைக்கும் ஆபத்து’ என்று உணர்த்தும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. டிஸ்னி ஸ்டூடியோ, பிக்சார் ஸ்டூடியோ என்றெல்லாம் மேற்கத்திய ஸ்டூடியோக்களையும் அவர்களின் அனிமேக்களையும் நமக்குத் தெரியும். அதேபோல் ஆசிய அளவில் பிரபலமான ஸ்டூடியோதான்…

Read More

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு உதவும் வகையில் ஓஎம்ஆர் விடைத்தாளில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான மாதிரி விடைத்தாள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஓஎம்ஆர் விடைத்தாளில் புதிய மாற்றங்களை டிஎன்பிஎஸ்சி கொண்டுவந்துள்ளது. புதிய ஓஎம்ஆர் விடைத்தாளின் மாதிரி படிவம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) ‘OMR Answer Sheet-Sample’ என்ற தலைப்பின் கீழ் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. தேர்வர்கள் 4 இலக்க வினாத்தொகுப்பு எண்ணை அதற்குரிய வட்டங்களில் கறுமை நிற பால்பாயின்ட் பேனாவை பயன்படுத்தி கருமையாக்க வேண்டும். மேலும், விடைத்தாளின் முதல் பக்கத்தில் பகுதி-2-ல் உறுதிமொழி அளித்து கையொப்பமிட வேண்டும். தேர்வாணையத்தால் இனிமேல் நடத்தப்பட இருக்கும் அனைத்து ஓஎம்ஆர் முறை தேர்வுகளிலும் பங்கேற்கும் தேர்வர்கள் புதிய மாதிரி ஓஎம்ஆர் விடைத்தாளினை நன்கு பார்த்து, அறிந்துகொண்டு தேர்வெழுதுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Read More