புதுடெல்லி: ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இரு முறை பதக்கம் வென்ற நட்சத்திர வீரரான இந்தியாவின் நீரஜ் சோப்ரா வரும் மே 24-ம் தேதி பெங்களூருவில் ‘நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல்’ என்ற போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த போட்டியில் பங்கேற்க பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஷத் நதீமுக்கு, நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் நீரஜ் சோப்ராவின் அழைப்பை அர்ஷத் நதீம் நிராகரித்தார். மே 22-ம் தேதி தென் கொரியாவில் நடைபெற உள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க உள்ளதால் தன்னால் கலந்துகொள்ள முடியாது என்று அர்ஷத் நதீம் விளக்கமளித்திருந்தார். இதற்கிடையே கடந்த செவ்வாய்கிழமை ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாதலத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இத்தகைய சூழலில் பாகிஸ்தான் வீரருக்கு…
Author: admin
வாடிகன்: கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலக அளவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது எளிய வாழ்க்கை, மாதச் சம்பளம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. 12 ஆண்டுகள் கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்திய போப் பிரான்சிஸ், ஏப்ரல் 21 திங்கட்கிழமை காலமானார். மிக நீண்ட காலமாக உடல்நலப் பிரச்சினைகளுடன் போராடி வந்த அவர், தனது 88-வது வயதில் இயற்கை எய்தியுள்ளார். கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபை உலகிலேயே அதிக சொத்து கொண்ட மத ரீதியான ஒரு நிறுவனமாக கருதப்படுகிறது. கிட்டத்தட்ட 1.3 பில்லியன் கத்தோலிக்கர்களின் தலைவரான போப் பிரான்சிஸ், ஓர் எளிமையான தலைக்கனமில்லாத நபராக, தனது வாழ்க்கையை வாழ்ந்தற்காக போற்றப்படுபவர். போப் பிரான்சிஸ் மாதம்தோறும் 32,000 அமெரிக்க டாலர் சம்பளமாக பெற தகுதி பெற்றிருந்த போதும், தனக்கு சம்பளம் வேண்டாம் என மறுத்து, அந்தச் சம்பளத்தை தேவாலயங்களுக்கும், அறக்கட்டளைகளுக்கும் நன்கொடையாக வழங்க செய்துள்ளார். போப் பிரான்சிஸின் சொத்து மதிப்பு 16…
கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழாவில் இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாத சுவாமி திருக்கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. 4-ம் திருநாளான கடந்த 8-ம் தேதி இரவு 9 மணிக்கு குடவரை வாசல் தரிசனம் நடந்தது. விழாவில், கடந்த 10-ம் தேதி இரவு 7 மணிக்கு ஸ்ரீநடராஜர் சிவப்பு சார்த்தியும், நள்ளிரவு 12 மணிக்கு வெள்ளை சார்த்தியும் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. 11-ம் தேதி காலை 9.30 மணிக்கு சைவ வேளாளர்கள் சங்கத்தில் ஸ்ரீநடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.…
காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுவது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை என்று நடிகர் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார். காஷ்மீரின் பஹல்காமில் பயங்ரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தை அடுத்து, பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்தியா. மேலும், அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி இந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த தாக்குதலுக்கு தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த்திடம், பஹல்காம் தாக்குதல் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ரஜினிகாந்த், “காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுவது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. அதை கெடுக்க வேண்டும் என்று செய்கிறார்கள். அதைச் செய்தவர்களுக்கும், அவர்கள் பின்னால் இருப்பவர்களுக்கும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கடுமையான தண்டனையை கொடுக்க வேண்டும். இதே மாதிரி மீண்டும் செய்ய வேண்டும் என கனவிலும் அவர்கள் நினைக்கக் கூடாது. மத்திய அரசு…
சென்னை: “காஷ்மீர் பிரச்சினையைப் பொறுத்தவரையில் மத்திய அரசு எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் தமிழ்நாடு நிச்சயமாக உறுதுணையாக இருக்கும் என்றுதான் நாங்கள் கூறியிருக்கிறோம். எனவே, எந்த காரணத்தைக் கொண்டு தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மதவாதம் உள்ளே நுழைய முடியாது” என்று பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.28) பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன், தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக இருப்பதாக பேசியிருந்தார். அதற்கு அவை முன்னவர் துரைமுருகன், மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் பதிலளித்து பேசினர். இதைத் தொடர்ந்து பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “உறுப்பினர் வானதி சீனிவாசன் உரையாற்றியபோது ஆடிட்டர் ரமேஷ் தொடர்பான கொலை பற்றிக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். அந்தக் கொலை என்பது அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்தது. அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதேபோன்று, காஷ்மீரில் நிகழ்ந்தது போன்று நடக்கக்கூடாது என்று இங்கே பேசியிருக்கிறார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அதுபோன்று நிச்சயமாக நடைபெறவே நடைபெறாது என்பதை…
ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் குப்வாரா மாவட்டங்களில் தொடர்ந்து 4-வது நாளாக போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்பு இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்தநிலையில் தொடந்து 4-வது நாள் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளது. இதுகுறித்து இந்திய ராணுவ அதிகாரிகள் கூறுகையில், “ஏப் 27 – 28 இடைப்பட்ட இரவில், பூஞ்ச் மற்றும் குப்வரா மாவட்டங்களின் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பல இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய துப்பாக்கிச் சூடு சம்பவங்களை நடத்தியுள்ளது. இந்திய ராணுவம் இதற்கு உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுத்துள்ளது” என்றனர். இந்த தாக்குதல்களில் உயிர்ச் சேதம் ஏதும் பதிவாகவில்லை. பாகிஸ்தான் ராணுவம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே உள்ள பல்வேறு இடங்களில்…
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் நத்திங் போன் 3a ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போனுடன் 3a புரோ மாடல் போனும் சந்தையில் அறிமுகமாகி உள்ளது. லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நத்திங் நிறுவனம். தொழில்நுட்ப சாதன உற்பத்தி நிறுவனமான நத்திங், ஹெட்செட் விற்பனை மூலம் சந்தையில் களம் கண்டது. தொடர்ந்து ஸ்மார்ட்போன் விற்பனையை 2022-ல் தொடங்கியது. இது ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அந்நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான கார்ல் பெய் (Carl Pei) தான் இந்த வரவேற்புக்கு காரணம். இவர் ஒன்பிளஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக செயல்பட்டவர். பின்னர் கடந்த 2021-ல் நத்திங் நிறுவனத்தை தொடங்கினார். இதுவரை நத்திங் போன் (1), நத்திங் போன் (2), நத்திங் போன் (2a) ஸ்மார்ட்போன்களை சந்தையில் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. ‘CMF’ என்ற துணை நிறுவனத்தை நத்திங் தொடங்கியது…
சென்னை: மாணவ, மாணவிகளுக்கு பேட்மிண்டன், நீச்சல், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுடன் கோடைகால இலவச பயிற்சி முகாம் சென்னையில் வரும் ஏப்.25 முதல் மே 15-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை மாவட்டத்துக்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் வரும் ஏப்.25 முதல் மே.15-ம் தேதி வரை 21 நாட்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாமில் காலை, மாலை என இரு வேளைகளும் தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, டென்னிஸ், கிரிக்கெட், ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல், குத்துச்சண்டை ஆகிய விளையாட்டு பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. நேரு பூங்காவில் அமைந்து சென்னை மாவட்ட விளையாட்டு அரங்கில் – தடகளம், பேட்மிண்டன்; செனாய் நகரில் – நீச்சல், பேட்மிண்டன்; முகப்பேர் விளையாட்டு அரங்கில் – பேட்மிண்டன், கூடைப்பந்து; கோபாலபுரம் கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமியில் – குத்துச்சண்டை; பெரியமேடி…
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 ரன்கள் வித்தியாத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. நடப்பு சீசனில் ஆர்சிபி அணிக்கு தனது சொந்த மைதானத்தில் முதல் வெற்றியாக இது அமைந்தது. அந்த அணி இதற்கு முன்னர் சொந்த மைதானத்தில் 3 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்து இருந்தது. இந்த ஆட்டங்களில் முதலில் பேட் செய்த போதெல்லாம் பெங்களூரு அணி 170 ரன்களை கூட எட்டியது இல்லை. ஆடுகளம் மந்தமாக இருப்பதாக பேட்டிங் ஆலோசகர் தினேஷ் கார்த்திக் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 205 ரன்கள் குவித்து மிரட்டியது. அதிகபட்சமாக விராட் கோலி 42 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 70 ரன்களும் தேவ்தத் படிக்கல் 27பந்துகளில், 3 சிக்ஸர்கள்,…
வாடிகன்: கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் நேற்று காலமானார். அவருக்கு வயது 88. அவரது மறைவு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. போப் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவராக போப் போற்றப்படுகிறார். கடந்த 2013 மார்ச் 13-ம் தேதி 266-வது போப்பாக பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த சில ஆண்டுகளாகவே போல் பிரான்சிஸ் உடல்நலமின்றி இருந்தார். அவ்வப்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். எனினும், தேவாலய பணிகளை தொடர்ந்து செய்து வந்தார். கடந்த பிப்ரவரியில் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 38 நாள் சிகிச்சைக்கு பிறகு, உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதால், கடந்த மார்ச் 23-ம் தேதி வாடிகன் திரும்பினார். வயது முதிர்வு காரணமாக அவரது உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதால் கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில்…