Author: admin

பாகிஸ்தானில் பிறந்து, 7 வயதில் இந்தியா வந்த ஒரு பெண், 19 ஆண்டுகளாக ஆந்திர மாநிலம் புட்டபர்த்திலேயே வசித்து வருகிறார். தற்போது பாகிஸ்தானுக்கு திரும்பிச் செல்லுமாறு ஆந்திர போலீஸார் அவரை வலியுறுத்தி உள்ளனர். கர்நாடக மாநிலம், பெல்லாரியை சேர்ந்த மகபூப் பீரான், நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டார். அங்கேயே திருமணம் செய்து கொண்டு, 2 மகன்கள் மற்றும் 2 மகளுக்கு தந்தையானார். தனது இளைய மகள் ஜீனத் பீரானை ஆந்திர மாநிலம், தர்மாவரம் பகுதியில் வசிக்கும் தனது தங்கையின் மகன் ரஃபீக் அகமதுவுக்கு கடந்த 1989-ல் திருமணம் செய்து வைத்தார். இந்த தம்பதியினருக்கு முதல் குழந்தை தர்மாவரத்தில் பிறந்தது. இந்நிலையில் 1998-ல் ஜீனத் 2-வது முறையாக கர்ப்பம் தரித்தார். அப்போது, பாகிஸ்தானில் வசிக்கும் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஜீனத் பாகிஸ்தான் சென்றார். அந்த நேரத்தில் கார்கில் போர் தொடங்கியதால் இவர் பாகிஸ்தானிலேயே தங்க நேரிட்டது. இந்த…

Read More

சென்னை: “இதழியலுக்கு செயற்கை நுண்ணறிவு துணை புரியலாம். ஆனால், என்றும் அவை பத்திரிகையாளர்களின் செய்தியளிக்கும் ஆற்றலுக்கு மாற்றாக வரமுடியாது” என்றார் Deutsche Welle நிறுவனத்தின் இயக்குநர் பீட்டர் லிம்போர்க். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், ஊடகங்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் குறித்து மாணவர்களிடையே ஜெர்மனி அரசின் பொது ஒளிபரப்பு நிறுவனமான DW-இன் இயக்குநர் பீட்டர் லிம்போர்க் உரையாற்றினார். ‘மேற்கத்திய ஊடகங்களுக்கு சவாலாக விளங்கும் உலக சூழ்நிலைகள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பில், பேசிய அவர், சர்வதேச ஊடகங்களின் பொறுப்பு மற்றும் இன்றைய காலகட்டத்தில், அவை எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்கள் குறித்து விவரித்தார். அவர் தனது உரையில், “எங்கள் நிறுவனம் கற்பிப்பதையும், விழிப்புணர்வு ஊட்டுவதையும் மட்டுமே செய்யாமல், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு இடையிலான கருத்துப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கிறது. எங்களுக்கு நண்பர்கள் இல்லை, குறிப்பாக அரசுகளிடம் சுமுக உறவு இல்லை. சில பிராந்தியங்களில், எங்கள் தகவல் ஒளிபரப்பு தடுக்கப்படுவதுடன், எங்கள் இருப்பை வரவேற்பதில்லை. சமூக…

Read More

சென்னை: இந்தியாவின் அடிமட்டப் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதற்காக ஜிரோ லேப்ஸ், பிரவர்த்தக் பவுண்டேஷன் ஆகியவற்றுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவுக்கான உயர் சிறப்பு மையத்தை (AI Centre of Excellence) சென்னை ஐஐடி நிறுவ உள்ளது. சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), இந்தியாவின் அடிமட்ட சவால்களைத் தீர்க்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு உயர்சிறப்பு மையத்தை நிறுவ முடிவு செய்துள்ளது. இதற்காக கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்ட டீப்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான ஜிரோ லேப்ஸ், ஐஐடிஎம் பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் ஆகியவற்றுடன் இக்கல்வி நிறுவனம் இணைந்து செயல்படவுள்ளது. CPU, எட்ஜ் டிவைஸ் இண்டர்பியரன்சிங் ஆகியவற்றில் நடைமுறைக்கு ஏற்ற, வலிமையான செயற்கை நுண்ணறிவு தீர்வுகளை உருவாக்குவதில் இந்த உயர்சிறப்பு மையம் கவனம் செலுத்தும். ஏஐ மாதிரிகள் மூலம் அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உதவும் முக்கிய நடவடிக்கையாக ஜிரோ லேப்ஸ் ‘Kompact AI’ன் முதல் பதிப்பை சென்னை ஐஐடி-ல் இன்று (ஏப்ரல் 9, 2025)…

Read More

புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் நேற்று முன்​தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் டெல்லி கேப்​பிடல்ஸ் அணியை 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யது ஆர்​சிபி அணி. முதலில் பேட் செய்த டெல்லி கேப்​பிடல்ஸ் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 162 ரன்​கள் எடுத்​தது. அதி​கபட்​ச​மாக கே.எல்​.​ராகுல் 39 பந்​துகளில், 3 பவுண்​டரி​களு​டன் 41 ரன்​களும் டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் 18 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 5 பவுண்​டரி​களு​டன் 34 ரன்​களும் சேர்த்​தனர். அபிஷேக் போரெல் 28, டு பிளெஸ்​ஸிஸ் 22 ரன்​கள் சேர்த்​தனர். ஆர்​சிபி அணி சார்​பில் புவனேஷ்வர் குமார் 3, ஜோஷ் ஹேசில்​வுட் 2 விக்​கெட்​கள் வீழ்த்​தினர். சுழற்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​ட​ரான கிருணல் பாண்​டியா 4 ஓவர்​களை வீசி 28 ரன்​களை மட்​டும் வழங்கி ஒரு விக்​கெட் கைப்​பற்​றி​னார். 163 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஆர்​சிபி 18.3 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 165 ரன்​கள் எடுத்து…

Read More

2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 85,000 விசாக்களை இந்தியர்களுக்கு வாரி வழங்கியுள்ளது சீனா. விசா கெடுபிடிகளை தளர்த்தியதோடு, “மேலும் பல இந்திய நண்பர்களை சீனாவுக்கு வரவேற்கிறோம். பாதுகாப்பான, வெளிப்படையான, நேர்மையான, துடிப்புமிகு, நட்பான சீனாவை அனுபவியுங்கள்.” என்று இந்தியாவுக்கான சீன தூதர் ஸு ஃபெய்ஹோங் வரவேற்றுள்ளார். ட்ரம்ப் கெடுபிடியின் விளைவாக.. அமெரிக்காவின் முக்கிய வர்த்தக கூட்டாளி சீனா. அதுமட்டுமல்ல பொருளாதார போட்டியாளரும் கூட. இந்தச் சூழலில் தான் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப் பரஸ்பர வரியை அறிவித்தார். அதற்கு சீனாவும் பதில் வரி விதிக்க மற்ற நாடுகளுக்கு சலுகை அறிவித்து 90 நாட்களுக்கு தற்காலிகமாக வரியை நிறுத்திவைத்த ட்ரம்ப், சீனாவுக்கு மட்டும் 145% வரியை விதித்துள்ளது. இருப்பினும் சற்றும் தளராத சீனா தொடர்ந்து அமெரிக்காவை எதிர்த்து வருகிறது. மேலும், வளரும் நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவை வரி விதிப்பை இணைந்தே எதிர்கொள்ள வேண்டும் என்று இந்தியாவுக்கு சீனா…

Read More

பழநி: பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (ஏப்.5) காலை தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்.11-ம் தேதி நடைபெற உள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று (ஏப்.5) காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. சேவல், மயில், வேல் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்கு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. மூலவர், உற்சவர், விநாயகர், மயில், துவார பாலகர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து, மூலவர், முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி பட்டக்காரர் மடத்திற்கு எழுந்தருளல் நடைபெற்றது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள் பழநி மலைக்கோயிலில் தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். அதன்படி, திரளான பக்தர்கள்…

Read More

‘ஸ்டார்’ இயக்குநர் இளன் தனது அடுத்த படத்தினை இயக்கி, நாயகனாக நடிக்கவுள்ளார். ‘ஸ்டார்’ படத்தினை தொடர்ந்து தனுஷ் படத்தினை இயக்கவுள்ளார் இளன் என்று செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது தனுஷ் பல்வேறு படங்களை ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவருடைய தேதிகள் இருக்காது என்பது உறுதியாகிவிட்டது. இதனை முன்னிட்டு புதிய முடிவொன்றை எடுத்துள்ளார் இளன். தனது அடுத்த படத்தில், தானே நாயகனாக நடிக்க முடிவு எடுத்துள்ளார். இதற்கான பேச்சுவார்த்தை முடிவுற்று, ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளது. இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. முழுக்க காதலை மையமாக வைத்து இக்கதையினை உருவாக்கி இருக்கிறார் இளன். முன்னதாக, ‘லவ் டுடே’ படத்தின் மூலம் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை நடிகராக அறிமுகப்படுத்தியது ஏஜிஎஸ் நிறுவனம். தற்போது அவர் முன்னணி நாயகனாக வலம் வருகிறார். அந்த பாணியில் இளனையும் நாயகனாக்க முடிவு செய்திருக்கிறது ஏஜிஸ் நிறுவனம்.

Read More

சென்னை: அமைச்சர் பதவியில் இருந்து விலகிய நிலையில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் முதன்முறையாக ஆஜராகி செந்தில்பாலாஜி நேற்று கையெழுத்திட்டார். கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக பதிவான வழக்கு எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்த மூல வழக்குகளின் அடிப்படையில் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகவும் கணக்கில் வராத ரூ.1.34 கோடி பணம், அவரது வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி அவரை அமலாக்கத் துறையினர் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். பின்னர், அவர் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது தனது அமைச்சர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் செந்தில்…

Read More

புதுடெல்லி: நடிகர் அஜித் குமார், லட்சுமிபதி, ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று பத்ம விருதுகளை வழங்கினார். குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சுகாதாரம், தொழில், வர்த்தகம், பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப் பணி மற்றும் சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்கும் வகையில் பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை குடியரசு தினத்துக்கு முந்தைய நாளான கடந்த ஜனவரி 25-ம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. இதில் பத்ம விபூஷண் விருதுக்கு 7 பேர், பத்ம பூஷண் விருதுக்கு 19 பேர், பத்மஸ்ரீ விருதுக்கு 113 பேர் என மொத்தம் 139 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், பத்ம…

Read More

சென்னை: சென்னையில் ஸூம் போன் சேவை அறிமுகமாகி உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் ஸூம் போன் சேவை இந்தியாவில் அறிமுகமானது. முதற்கட்டமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தச் சேவை பயனர்களுக்கு கிடைத்தது. இந்நிலையில், சென்னையில் தற்போது ஸூம் போன் சேவை அறிமுகமாகி உள்ளது. கடந்த 2011-ல் நிறுவப்பட்டது ஸூம் வீடியோ கம்யூனிகேஷன் நிறுவனம். பரவலாக ஸூம் என அறியப்படுகிறது. மீட்டிங், சாட், குரல் வழி அழைப்பு மேற்கொள்ள இந்த தளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோஸில் இதன் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. கரோனா பரவலின்போது உலக அளவில் ஸூம் தளம் பயன்படுத்தப்பட்டது. அலுவலகம், பள்ளி, கல்லூரி என பெரும்பாலான இடங்களில் ஸூம் சேவை அவசியமானதாக அமைந்தது. பயனர்கள் இதனை பயன்படுத்துவதும் எளிது. சென்னையில் ஸூம் போன் சேவை: இந்தியாவில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்தியாவை அடிப்படையாக கொண்டுள்ள நிறுவனங்களுக்கு சிறப்பான தொலைத்தொடர்பு சேவையை வழங்க வேண்டும் என்கிற…

Read More