சென்னை: ஸ்ரீ சாரதா நவராத்திரி விழாவை முன்னிட்டு, காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், நேற்று சென்னைக்கு வருகை புரிந்துள்ளனர். ஸ்ரீ சாரதா நவராத்திரி மஹோற்சவம், செப். 22-ம் தேதி முதல் அக். 2-ம் தேதி வரை, சென்னை, தாம்பரம் கிழக்கு ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ காஞ்சி மகாஸ்வாமி வித்யா மந்திர் பள்ளிவளாகத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், செப். 20-ம் தேதி (நேற்று) இங்கு வருகை புரிந்துள்ளனர். இதையடுத்து செப். 21-ம் தேதி (இன்று) மாலை 4.25 மணி அளவில் திவ்ய தேச கண்காட்சியை தொடங்கி வைக்க உள்ளனர். ஸ்ரீ சாரதா நவராத்திர் மஹோற்சவத்தை முன்னிட்டு செப். 22-ம் தேதி முதல் பிக்ஷாவந்தனம், சஹஸ்ர சண்டி மகா யாகத்துக்கு ஏற்பாடுகள்…
Author: admin
தென்காசி: சுரண்டை அருகே குளத்தில் இருந்து தண்ணீர் எடுப்பது தொடர்பான விவகாரத்தில், அதிமுக எம்எல்ஏ தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கிராமத்தைச் சுற்றி 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. தென்காசி மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள கள்ளம்புளி குளத்துக்கு கருப்பாநதி அணையில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்தக் குளம் நிரம்பிய பின்னர், அருகில் உள்ள குலையனேரி குளத்துக்கு தண்ணீர் செல்வது வழக்கம். கள்ளம்புளி குளத்தை நம்பி 48 ஏக்கர் நஞ்சை, 500 ஏக்கர்புஞ்சை நிலங்கள் உள்ளன. இந்நிலையில், கள்ளம்புளி குளத்தில் இருந்து குலைநேரி குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக தனி குழாய் பதிக்கும் திட்டம் சில நாட்களுக்கு முன்தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி மக்கள் குளத்துக்குள் குடியிருக்கும் போராட்டத்தை 2 நாட்களுக்கு முன்பு மேற்கொண்டனர். அவர்களுடன், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். குழாய் பதிக்கும் திட்டத்தை முற்றிலுமாக கைவிடுமாறு பொதுமக்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த…
புதுடெல்லி: ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவன பங்கு விலை உயர்வால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மனைவியின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.121 கோடி உயர்ந்தது. ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திர பாபு நாயுடு குடும்பத்துக்கு சொந்தமான ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனம் ஹைதராபாத்தை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. தென்னிந்தியாவின் முன்னணி பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இதன் சந்தை மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடியாக உள்ளது. சந்திரபாபு நாயுடு மனைவி புவனேஸ்வரி நாரா வசம் 2.26 கோடி பங்குகள் (24.37%) உள்ளன. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை வர்த்தகத்தின் இடையே இந்நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 10% வரை உயர்ந்தது. புதன்கிழமை ரூ.485 ஆக முடிவடைந்த ஒரு பங்கின் விலை, வியாழக்கிழமை வர்த்தகத்தின் இடையே ரூ.541.60 வரை உயர்ந்தது. இறுதியில் சற்று குறைந்து ரூ.527-ல் நிலை பெற்றது. இதன் மூலம், புவனேஸ்வரியின்…
வாஷிங்டன்: அமெரிக்காவின் எச்1பி விசாவுக்கான ஓராண்டு கட்டணம் ரூ.1.32 லட்சத்தில் இருந்து திடீரென ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், கணினி மென்பொருள் துறையில் பணியாற்றி வரும் ஏராளமான இந்தியர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. விடுப்புக்காக இந்தியா சென்றுள்ள ஊழியர்கள் உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்புமாறு ஐ.டி. நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளன. அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட சிறப்பு பணித் திறன்கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த விசா வழங்கப்படும். ஓராண்டில் 65,000 எச்1பி விசாக்களை அமெரிக்க அரசு விநியோகம் செய்கிறது. மேலும், அமெரிக்க உயர் கல்வி நிறுவனங்களில் படித்த வெளிநாட்டு மாணவர்களுக்கு 20,000 எச்1 பி விசா வழங்கப்படுகிறது. இதன்படி, ஓராண்டில் மொத்தம் 85,000 எச்1பி விசாக்கள் வழங்கப்படுகின்றன. எச்1பி விசாவில் 7.50 லட்சம் பேர் இந்த விசாவை பெற்றவர்கள் அமெரிக்காவில் 3 ஆண்டுகள் வரை தங்கியிருந்து பணியாற்றலாம். தேவைப்பட்டால், மேலும் 3 ஆண்டுகள் வரை விசா காலத்தை…
சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மானசரோவர் மற்றும் முக்திநாத்துக்கு ஆன்மிக பயணம் சென்று வருபவர்களுக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்களுக்கும், ராமேசுவரத்திலிருந்து காசிக்கும், அறுபடை வீடுகளுக்கும் பக்தர்கள் கட்டணமில்லாமல் ஆன்மிக பயணமாக அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், இந்த ஆண்டு 2,000 பக்தர்கள் புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்களுக்கு ஆன்மிக பயணம் அழைத்து செல்லப்படுவர் என 2025-26-ம் நிதியாண்டுக்கான சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் முதல்கட்டமாக நேற்று,இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 9 மண்டலங்களில் இருந்து பக்தர்கள் வைணவ கோயில்களுக்கு ஆன்மிக பயணம் அழைத்து செல்லப்பட்டனர். சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் இருந்து 70 பக்தர்கள் வைணவ கோயில்களுக்கு ஆன்மிக பயணம் புறப்பட்டு சென்றனர். இதேபோல், காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும்…
புதுடெல்லி: நாட்டின் உயரிய திரைப்பட விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது, மலையாள நடிகர் மோகன்லாலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.23-ம் தேதி நடைபெறும் தேசிய திரைப்பட விருது விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்தியத் திரைத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தாதா சாகேப் பால்கே விருதை, மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த 2023-ம்ஆண்டுக்கான விருது நடிகர் மோகன்லாலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய ஒட்டுமொத்த பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: நடிகர் மோகன்லாலின் தனித்துவமான திறமை, நிபுணத்துவம், கடின உழைப்பு ஆகியவை இந்திய திரைத்துறை வரலாற்றில் அவருக்கு சிறந்த இடத்தை பெற்றுத் தந்துள்ளது. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என இந்திய திரைத்துறைக்கு அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்புக்காக விருது வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்.23-ம் தேதி நடைபெறும் 71-வது…
சென்னை: தூத்துக்குடியில் தலா ரூ.15 ஆயிரம் கோடி என ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்டில், கப்பல் கட்டும் தளங்கள் அமைக்க கொச்சின் ஷிப்யார்டு மற்றும் மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார். இதுகுறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திமுக ஆட்சியில் தொழில்துறை வரலாறு காணாத வளர்ச்சிகண்டுள்ளது. பல தொழில்பிரிவுகள், குறிப்பாக எலெக்ட்ரானிக்ஸ், வாகன உதிரிபாகங்கள், காலணி தயாரிப்பு போன்ற தொழில் பிரிவுகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. முதல்வரை பொறுத்தவரை, பாரம்பரிய துறைகள் மற்றும் புதிய துறைகளில் நாம் கால்பதிக்க வேண்டும், வளர்ச்சி காண வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதற்கிணங்க வெளிநாட்டு பயணங்கள், இங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாடுகளில் செமிகண்டக்டர் போன்ற புதிய தொழில் பிரிவுகள் மற்றும் கப்பல் கட்டும் துறையில் அதி முக்கியத்துவம் இருப்பதை அறிந்துள்ளோம். நாம் கப்பல் கட்டும் துறையில் நீண்ட காலமாக உள்ளோம். இதன் வாயிலாக,…
பெங்களூரு: கர்நாடகாவில் 14 முக்கிய கோயில்களின் சேவை கட்டணங்கள் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக இந்து அற நிலையத்துறை அறிவித்துள்ளது. இந்த முடிவை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. கர்நாடகாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சகத்தின்கீழ் 34,566 கோயில்கள் உள்ளன. இதில் ஏ பிரிவில் உள்ள 14 முக்கிய கோயில்களின் சேவை கட்டணம் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக அற நிலையத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. அதன்படி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ யோக நரசிம்ம ஸ்வாமி கோயில், நந்தி தீர்த்த சுவாமி கோயில், குக்கே ஸ்ரீ சுப்ரமணியா கோயில், ரெய்ச்சூரில் உள்ள ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோயில் உள்ளிட்ட 14 கோயில்களின் பூஜை, யாகம், பிரதிஷ்டை சடங்குகள் ஆகியவற்றுக்கான கட்டணங்கள் ரூ.100 முதல் ரூ.250 வரை உயர்த்தப்பட்டுள்ளது. குக்கே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரபலமான ஆஷ் லேஷ பூஜை, நகர பிரதிஷ்டை சடங்குகளுக்கான கட்டணம் ரூ.400-ல் இருந்து ரூ.500 ஆக…
சென்னை: தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக வேட்பாளர்களை நிறுத்தாத மமக, கொமதேக உள்ளிட்ட 42 அரசியல் கட்சிகளின் பதிவை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 29–ன்கீழ் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி, வருமானவரி விலக்கு, பொதுதேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை, சின்னங்கள் ஒதுக்கீடு, நட்சத்திர பிரச்சார நியமனம் ஆகிய சலுகைகளை பெற முடியும். பதிவு செய்யப்பட்ட கட்சியானது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டபடி தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். பல கட்சிகள், தேர்தல்ஆணையத்தால் நடத்தப்படும்பொதுத்தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்தாதது தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு வந்தது. இக்கட்சிகள் தேர்தலில் போட்டியிடாமல், பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு வழங்கப்படும் வருமானவரி விலக்கு உள்ளிட்ட சலுகைகளை மட்டும் அனுபவித்து வருவது தெரியவந்தது. பல கட்சிகள், பதிவு செய்த முகவரியில் கட்சி அலுவலகம் கூட வைக்காமல் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இக்கட்சிகள் ஆண்டு வரவு,…
நாகப்பட்டினம் / திருவாரூர்: பூச்சாண்டி வேலை காட்ட வேண்டாம். வரும் தேர்தலில் நீங்களா, நானா என்று பார்த்து விடலாம் என்று திமுகவுக்கு தவெக தலைவர் விஜய் சவால் விடுத்தார். நாகை புத்தூர் அண்ணா சிலை அருகே திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் தவெக தலைவர் விஜய் நேற்று பேசியதாவது: தமிழகத்தில் மீன் ஏற்றுமதியில் 2-வது இடத்தில் இருக்கும் நாகையில், நவீன வசதியுடன் மீன்களை பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இல்லை. மீனவ மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து குரல் கொடுப்பது நமது கடமை. நாகையில் 14 ஆண்டுகளுக்கு முன்பு மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்தினோம். நான் எப்போதும் மக்களுடன்தான் இருக்கிறேன். அதேநேரத்தில், ஈழத் தமிழர்களுக்காக துணை நிற்பதும் நமது கடமை. மீனவர் பிரச்சினையில் திமுகதான் கபட நாடகம் நடத்துகிறது. வெளிநாட்டில் முதலீடா? – தமிழக முதல்வர் ஒவ்வொரு முறை வெளிநாடு பயணம் சென்றுவிட்டு…