Author: admin

மதுரை: பழநி முரு​கன் கோயில் நிதி​யில் திருமண மண்​டபம் கட்​டும் விவகாரத்​தில், தற்​போதைய நிலையே தொடர வேண்​டும் என்று உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. மதுரை எழு​மலை​யைச் சேர்ந்தராம ரவிக்​கு​மார், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: பழநி தண்​டா​யுதபாணி சுவாமி கோயிலுக்​குச் சொந்​த​மான நிதி​யில் இருந்து ரூ.4.54 கோடி மதிப்​பில், உத்​தமபாளை​யத்​தில் திருமண மண்​டபம் கட்ட முடிவு செய்​யப்​பட்​டுள்ளது. இது அறநிலை​யத் துறை விதி​களுக்கு எதி​ரானது. கோயில் நிதி​யில் திருமண மண்​டபம் கட்டக் கூடாது. ரூ.400 கோடி நிதி… உத்​தம​பாளை​யம் திருக்​காளாத்​தீஸ்​வரர் மற்​றும் நரசிங்​க பெரு​மாள் கோயில் பெயரில் உத்​தேச​மாக ரூ.400 கோடி நிதி உள்​ளது. இதனால் இக்​கோ​யில் வறுமை நிலை​யில் இருக்​கும் கோயி​லாக கருத முடியாது. தற்​போது கோயில் சார்பு இல்​லாமல் மண்​டபம், கல்லூரி, மருத்​துவமனை, கடைகள் கட்ட நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது. இதை ஏற்க முடி​யாது. எனவே பழநி கோயில் நிதி​யில் திருமண மண்​டபம் கட்​டு​வது…

Read More

குடல் ஆரோக்கியம் செரிமானம், ஆற்றல் மற்றும் மனநிலையை கணிசமாக பாதிக்கிறது. டாக்டர் ச ura ரப் சேத்தி மஞ்சள் போன்ற பொதுவான மூலிகைகள், அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது, மற்றும் இஞ்சி, இது குமட்டல் மற்றும் எய்ட்ஸ் செரிமானத்தை நீக்குகிறது. பெருஞ்சீரகம் விதைகள் வாயு மற்றும் வீக்கத்தை எளிதாக்குகின்றன, அதே நேரத்தில் சீரகம் பித்த சுரப்பை ஊக்குவிக்கிறது. இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் குடல் இயக்கத்தை அமைதிப்படுத்துகிறது, இது செரிமான ஆரோக்கியத்திற்கு இயற்கையான அணுகுமுறையை வழங்குகிறது. உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று உங்கள் குடலுடன் தொடங்குவது. உங்கள் செரிமானத்தை மென்மையாக வைத்திருப்பதிலிருந்து, உங்கள் ஆற்றல் அளவையும் நாளுக்கான மனநிலையையும் சரிசெய்வது வரை, குடல் ஆரோக்கியம் நீங்கள் கருதுவதை விட அதிக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. உதாரணமாக, நீங்கள் வீங்கியதாக உணர்ந்தால் உங்கள் நாள் எப்படி இருக்கும்? ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டில் பயிற்சியளிக்கப்பட்ட போர்டு சான்றளிக்கப்பட்ட இரைப்பை…

Read More

வாஷிங்டன்: சீனப் பொருட்கள் மீதான வரி விதிப்பை மேலும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார். சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா 30 சதவீதம் வரி விதித்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவும் வரியை உயர்த்தியது. இதையடுத்து சீனாவுக்கு 145 சதவீதம் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்தார். இதனால் இரு நாடுகள் இடையே வர்த்தகப் போர் தீவிரம் அடைந்தது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் கடந்த மே மாதம் ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடத்தின. இதில் இரு நாடு களும் பேச்சுவார்த்தையை தொடர்வதற்கு ஏதுவாக வரிவிதிப்பை பரஸ்பரம் 90 நாட்கள் நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டன. அப்போது சீனா மீதான வரி விதிப்பை 90 நாட்களுக்கு டொனால்டு ட்ரம்ப் நிறுத்தி வைத்தார். இரு நாட்டுப் பிரதிநிதிகளும் கடந்த ஜூலை…

Read More

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், நித்தி அகர்வால். பிறகு ‘பூமி’, ‘கலகத் தலைவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள அவர், ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் ஜோடியாக ‘ஹரிஹர வீர மல்லு’ படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்குப் பவன் கல்யாணுடன் அரசு காரில் நித்தி அகர்வால் பயணம் செய்தார். இந்நிலையில் ஆந்திர மாநிலம் பீமாவரம் நகரில் கடை திறப்புவிழா ஒன்றில் நித்தி அகர்வால் கலந்து கொண்டார். இதற்காக அவர் அம்மாநில அரசு வாகனத்தில் வந்திருந்தார். இதனால் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து நித்தி அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக நான் சென்ற வாகனம் விழா ஏற்பாட்டாளர்களால் கொடுக்கப்பட்டது. எனக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த வாகனத்தை அரசு அதிகாரிகள் எனக்கு வழங்கியதாகக் கூறப்படும் செய்தி அடிப்படை ஆதாரமற்றது. அதில் உண்மையில்லை” என்று விளக்கமளித்துள்ளார்.

Read More

சிவகாசி: சிவ​காசி​யில் பட்​டாசு ஆலை உரிமை​யாளர்களின் வீடு மற்றும் அலு​வல​கங்​கள், டிரான்​ஸ்​போர்ட் நிறு​வனங்​களில் 2-வது நாளாக நேற்​றும் வரு​மான வரி சோதனை நடை​பெற்​றது. சிவ​காசி​யில் உள்ள 2 பட்​டாசு நிறுவன உரிமை​யாளர்​களின் வீடு​கள் மற்றும் அலு​வல​கங்​கள், சிவ​காசி​யில் இருந்து வடமாநிலங்​களுக்கு பட்​டாசுகளை கொண்டு செல்​லும் 2 டிரான்​ஸ்​போர்ட் நிறுவனங்கள் உட்பட 8 இடங்​களில் வரு​மான வரித்​துறை அதி​காரி​கள் குழுவினர் நேற்று முன்​தினம் காலை 10 மணி முதல் சோதனை​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். இந்த சோதனை​யில் பட்​டாசு விற்​பனை ஆவணங்​கள், வங்கி பரிவர்த்​தனை​கள் உள்​ளிட்ட பல்​வேறு விவரங்​களை சேகரித்த வரு​மான வரித்​துறை அதி​காரி​கள், அதுகுறித்து உரிமை​யாளர்​கள் மற்​றும் பங்​கு​தா​ரர்​களிடம் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இந்​நிலை​யில், 2-வது நாளாக நேற்​றும் காலை 10 மணி முதல் 8 இடங்​களி​லும் வரு​மான வரித் துறை​யினர் சோதனை நடத்​தினர். டிரான்​ஸ்​போர்ட் நிறு​வனங்​களில் இருந்து எவ்​வளவு பட்​டாசுகள் வடமாநிலங்​களுக்கு கொண்டு செல்​லப்​பட்​டன, யாரிட​மிருந்து யாருக்கு அனுப்​பப்​பட்​டது போன்ற விவரங்​களை…

Read More

ஹென்றிட்டா ஸ்வான் லெவிட்ஒரு அமெரிக்க வானியலாளர், அதன் அற்புதமான கண்டுபிடிப்பு நாம் அகிலத்தை எவ்வாறு அளவிடுகிறோம் என்பதில் புரட்சியை ஏற்படுத்தியது. 1868 இல் பிறந்த லெவிட் வேலை செய்யத் தொடங்கினார் ஹார்வர்ட் கல்லூரி ஆய்வகம் பெண்கள் இயக்க தொலைநோக்கிகளிலிருந்து விலக்கப்பட்டு, அதற்கு பதிலாக வானியல் தரவை பகுப்பாய்வு செய்ய “கணினிகள்” ஆகப் பயன்படுத்தப்பட்ட ஒரு நேரத்தில். ஒரு மணி நேரத்திற்கு 30 காசுகள் மட்டுமே சம்பாதித்த போதிலும், அவரது அர்ப்பணிப்பு மற்றும் நுணுக்கமான ஆராய்ச்சி மிக முக்கியமான ஒன்றில் வழிவகுத்தன வானியல் முன்னேற்றங்கள் 20 ஆம் நூற்றாண்டின்.1908 ஆம் ஆண்டில், லெவிட் கால-ஒளிரும் உறவைக் கண்டுபிடித்தார் செபீட் மாறி நட்சத்திரங்கள்அவற்றின் பிரகாசத்திற்கும் துடிப்பு காலத்திற்கும் இடையில் நேரடி இணைப்பைக் காட்டுகிறது. இந்த கண்டுபிடிப்பு பரந்த அளவிடுவதற்கு முக்கியமாக மாறியது காஸ்மிக் தூரம் இறுதியில் வானியலாளர்களுக்கு உதவியது எட்வின் ஹப்பிள் பிரபஞ்சம் விரிவடைகிறது என்பதை நிரூபிக்கவும். ஆயினும்கூட, அவரது நினைவுச்சின்ன பங்களிப்புகள் இருந்தபோதிலும்,…

Read More

நடிகை ஹன்சிகா மோத்வானி, கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் கட்டாரியா என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். சோஹைல் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவர். திருமணத்துக்குப் பிறகு சோஹைல் வீட்டில் குடியேறினார் ஹன்சிகா. கூட்டுக் குடும்பமாக வாழ்வதில் ஹன்சிகாவுக்கும் அவர் கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் செய்திகள் வெளியாயின. பின்னர் தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாவில் இருந்து நீக்கினார். இந்நிலையில் கடந்த 9-ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடிய அவர், இன்ஸ்டா ஸ்டோரியில், இந்த ஆண்டு பல பாடங்களைக் கற்றுக் கொண்ட தாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், “இந்த ஆண்டு, பல பாடங்களை எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது. எனக்குள் எனக்கே தெரியாமல் இருக்கும் பலத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. இந்த பிறந்தநாளில் உங்கள் வாழ்த்துகளால் என் இதயம் நிறைந்துள்ளது. அனைவருக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார். இந்தப் பதிவின் மூலம் அவருடைய விவாகரத்து விவகாரம் மீண்டும் பேசுபொருளாகி…

Read More

சென்னை: பிஎட் மாணவர் சேர்க்​கை​யில் இணை​ய​வழி​யில் பங்​கேற்ற மாணவர்​கள் கல்​லூரி ஒதுக்​கீட்டு ஆணையை இன்று (புதன்கிழமை) முதல் பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம் என உயர்​கல்வி அமைச்​சர் கோவி.செழியன் தெரி​வித்​துள்​ளார். பி.எட். மாணாக்கர் சேர்க்கை கலந்தாய்வு முடிந்து தேர்வு செய்த கல்லூரிகளில் சேர்வதற்கான ஒதுக்கீட்டு ஆணைகள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன. இதுதொடர்​பாக அமைச்​சர் கோவி.செழியன் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: பிஎட் மாணவர் சேர்க்​கை​யில் அரசு ஒதுக்​கீட்டு இடங்​களுக்கு இந்​தஆண்டு முதல்​முறை​யாக இணை​ய​வழி கலந்​தாய்வு அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. அதன்​படி அரசு மற்​றும் அரசு உதவி பெறும் கல்​வி​யியல் கல்​லூரி​களில் பிஎட் படிப்​பில் உள்ள 2,040 இடங்​களுக்​கான இணை​ய​வழி கலந்​தாய்வு ஆகஸ்ட் 4 முதல் 9-ம் தேதி வரை நடத்​தப்​பட்​டது. அதில் பங்​கேற்ற மாணவ, மாணவி​கள் தங்​களுக்​கான விருப்​ப​மான கல்​லூரியை தேர்​வுசெய்​தனர். அவர்​களுக்​கான கல்​லூரி ஒதுக்கீட்டு ஆணை ஆகஸ்ட் 13-ம் தேதி (இன்​று) ஆன்​லைனில் வழங்​கப்​படும். மாணவர்​கள் ஒதுக்​கீட்டு ஆணையை www.lwiase.ac.in என்ற இணை​யதளத்​தில் பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம். தங்​களுக்கு ஒதுக்கப்​பட்ட…

Read More

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’, ஆக.14-ம் தேதி வெளியாகிறது. இதில், சத்யராஜ், ஆமீர்கான், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சவுபின் சாஹிர், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். அவர் இசையில் இடம்பெற்றுள்ள ‘மோனிகா…’ என்ற பாடல் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் பூஜா ஹெக்டே ஆடியுள்ளார். இந்தப் பாடல் வைரலான நிலையில், ரசிகர்கள் பலர், பிரபல ஹாலிவுட் நடிகை மோனிகா பெலுச்சிக்கு இந்தப் பாடலை அனுப்பி வந்தனர். மோனிகா பெலுச்சியின் தோழி மெலிட்டா மூலமாக மூலமாக அவருக்கு இப்பாடல் சென்றுள்ளது. அதைக் கேட்ட மோனிகா, அந்தப் பாடலை, தான் மிகவும் ரசித்ததாகக் கூறியுள்ளார். இதையடுத்து நெகிழ்ந்துள்ள நடிகை பூஜா ஹெக்டே, “மோனிகா பெலுச்சியின் வார்த்தைகள் எனக்குக் கிடைத்த பாராட்டுகளிலேயே முக்கியமானது. எனக்கு அவரை அதிகம் பிடிக்கும். அவரிடமிருந்து பாராட்டுப் பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

Read More