Author: admin

சென்னை: அனிமேஷன் உள்ளிட்ட துறைகளில் பெருமளவில் வரும் புதிய தொழில் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, உயர்நுட்ப வேலைவாய்ப்புகளை தமிழக இளைஞர்களுக்கு ஏற்படுத்திட வகை செய்யும் பொருட்டு, சென்னையில் ஒரு திறன்மிகு மையம் வியன் (Viyan) AVGC-XR Hub எனும் பெயரில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) காலை தாக்கல் செய்தார். தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டு அவர் பேசுகையில், “இயங்குபடம் , காட்சிப்படுத்தல், விளையாட்டு, சித்திரக் கதைகள் மற்றும் விரிவாக்கப்பட்ட மெய்நிகர் (AVGC-XR) கொள்கை ஒன்று, துறைசார்ந்த வல்லுநர்களோடு இணைந்து உருவாக்கப்பட்டு வருகிறது. இத்துறையில் பெருமளவில் வரும் புதிய தொழில் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, உயர்நுட்ப வேலைவாய்ப்புகளை தமிழக இளைஞர்களுக்கு ஏற்படுத்திட வகை செய்யும் பொருட்டு,…

Read More

சென்னை: கலைத் திருவிழா போட்டிகளில் மாநில அளவிலான போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் மே 19 முதல் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: பள்ளி மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொண்டு வரும் வகையில் கலைத் திருவிழா போட்டிகள் 2022-23-ம் ஆண்டு முதல் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடத்தப்பட்டு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த 3 ஆண்டுகளாக மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களின் கலைத் திறமைகளை மேலும் மேம்படுத்தும் விதமாகவும், அவர்களின் கலை ஆர்வத்தினை ஊக்குவிக்கும் விதமாகவும், அவர்களுக்கு கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது. அதன்படி ஓவியம், சிற்பம், பரத நாட்டியம், நாட்டுப்புற நடனம், வீதி நாடகம் மற்றும் பொம்மலாட்டம் ஆகியவற்றில் சிறந்த வல்லுநர்களை கொண்டு மாணவர்களுக்கு…

Read More

மும்பை: ஐபிஎல் போட்டிகளில் 150-வது வெற்றியைப் பதிவு செய்த முதல் அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை தோற்கடித்தது. ஐபிஎல் தொடர்களில் மும்பை அணி பெற்ற 150-வது வெற்றி இதுவாகும். மேலும் ஐபிஎல் தொடர்களில் 150 வெற்றிகளை சுவைத்த முதல் அணி என்ற பெருமையையும் மும்பை அணி பெற்றுள்ளது. அந்த அணி இதுவரை 271 போட்டிகளில் விளையாடி 150 வெற்றி, 121 தோல்விகளைப் பெற்றுள்ளது. மும்பைக்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 140 வெற்றிகளையும், கொல்கத்தா அணி 134 வெற்றிகளையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 129 வெற்றிகளையும், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 121 வெற்றிகளையும், பஞ்சாப் கிங்ஸ் அணி 117 வெற்றிகளையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 114 வெற்றிகளையும் பெற்றுள்ளது.

Read More

வாஷிங்டன்: பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் உரிய தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தீவிரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகளை இந்திய அரசு எடுத்தது. இதற்கு பதில் நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசும் மேற்கொண்டது. இந்தியாவுடன் வர்த்தக ரீதியான உறவை பாகிஸ்தான் முறித்துக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் இரு நாடுகளை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், ஆட்சியாளர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என பாகிஸ்தான் நாட்டு அமைச்சர் ஹனிப் அப்பாஸி வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளார். இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களின் விசா காலாவதியான காரணத்தால்…

Read More

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தில் பங்கேற்க விரும்பும் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் ரூ.500, ரூ.200 கட்டணச் சீட்டுகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என கோயில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று (ஏப்.15) வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரை திருவிழா ஏப். 28-ம் தேதி வாஸ்து சாந்தியுடன் தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முக்கிய விழாவான திருக்கல்யாணம் மே 8-ம் தேதி கோயிலின் வடக்காடி வீதியிலுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8.35 மணிக்குமேல் 8.59 மணிக்குள் நடைபெறவுள்ளது. உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு பக்தர்கள் பக்தர்களின் வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான மற்றும் கோயிலின் இணையதளமான -ல் ஏப்.29 முதல் மே 2-ம் தேதி இரவு 9 மணிவரை ரூ.500, ரூ.200 கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் இரண்டு ரூ.500 கட்டணச்சீட்டும் அல்லது…

Read More

சென்னை: கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் சாதிப் பிரச்சினைகளை பேசும் ரீதியான கதைகளே வருகின்றன என்று இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் தெரிவித்தார். அனன்யா அம்சவர்தன் தயாரிப்பில், கரீஷ்மா இயக்கத்தில் ‘கன்னி’ என்ற குறும்படம் உருவாகியுள்ளது. 90-களைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை பேசும் இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ’சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் கலந்து கொண்டார். அவர் பேசும்போது, “ஒரு குறும்படம் என்கிற உணர்வையே இந்தப் படம் தரவில்லை, இயக்குநர் தன் கல்லூரி கால வாழ்க்கையைத் தான் எடுத்திருப்பார் என நினைத்தேன். மிக கவனமாக அர்ப்பணிப்புடன் எடுக்கப்பட்ட படைப்பாகத் தெரிந்தது. தமிழ் சினிமாவில் சாதிப் பிரச்சனைகளை பேசும் கதைகள் மட்டுமே கடந்த 10 ஆண்டுகளில் கதைகள் என்று ஆகிவிட்டது. பெண்ணுரிமை, வாழ்வியல் பிரச்சினை பற்றிய கதைகளே இல்லாமல் போய்விட்டது. அதைப் பேசும் படமாக இப்படம் இருப்பதாக உணர்கிறேன். பெண்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள்…

Read More

சென்னை: திருவல்லிக்கேணியில் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் நடக்க இருந்த பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பந்தல், எல்இடி திரைகள், உணவு பொருட்களை பறிமுதல் செய்து போலீஸார் எடுத்து சென்றனர். பிரதமர் மோடியின் 121-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தமிழக பாஜக சார்பில் மாநில செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் சென்னை திருவல்லிக்கேணி நடுக்குப்பம் அவ்வை சண்முகம் சாலையில் மனதின் குரல் நிகழ்ச்சியை பொதுமக்களுக்கு நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. ஆனால், போலீஸார் அதற்கு திடீரென அனுமதி மறுத்து, சாலையில் அமைக்கப்பட்டிருந்த பந்தல், மேடை, எல்இடி திரை மற்றும் ஒலிபெருக்கிகளை அங்கிருந்து அகற்றி பறிமுதல் செய்தனர். மேலும், ஆயிரம் பேருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சைவ, அசைவ உணவையும் போலீஸார் வாகனங்களில் ஏற்றி சென்றனர். இதனால், பாஜகவினருக்கும் போலீஸாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், குறிப்பிட்ட…

Read More

இஸ்லாமபாத்: ‘‘நாங்கள் வைத்துள்ள 130 அணு ஆயுதங்கள் காட்சிக்கு அல்ல. இந்தியாவுக்காகத்தான் வைத்துள்ளோம்’’ என பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாஸி மிரட்டல் விடுத்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதல் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என இந்தியா அறிவித்தது. இது குறித்து கருத்து தெரிவித்து பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவருமான பிலாவல் புட்டோ ஜர்தாரி, ‘‘சிந்து நதி எங்களுக்கு சொந்தமானது. அதில் தண்ணீரை நிறுத்தினால் ரத்த ஆறு ஓடும்’’ என்றார். இந்நிலையில் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஹனிப் அப்பாஸி இது குறித்து கூறுகையில், ‘‘ சிந்து நதியில் இந்தியா தண்ணீரை நிறுத்தினால், போருக்கு தயாராக இருக்க வேண்டும். கோரி, ஷஹீன் மற்றும் ஹஸ்னவி போன்ற ஏவுகணைகளையும், 130 அணு ஆயுதங்களையும் நாங்கள் காட்சிக்கு வைத்திருக்க வில்லை. இந்தியாவிற்காகத்தான் வைத்துள்ளோம்’’ என கூறியுள்ளார்.

Read More

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பரவலாக பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் அது 40-50 சதவீத அலுவலக வேலைவாய்ப்புகளை தட்டிப்பறிக்கும் என்று மும்பையைச் சேர்ந்த ஆட்டோம்பர்க் நிறுவனத்தின் நிறுவனர் அரிந்தம் பால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் லிங்டின் தளத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது கூறியதாவது: செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) வரவு இந்தியாவில் ஒயிட்-காலர் ஜாப் எனப்படும் அலுவலக பணி வாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் பிபிஓ துறைகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். ஏஐ வரவால் அலுவலக வேலைவாய்ப்புகளில் 40-50 சதவீதம் பறிபோகும் சூழல் உருவாகும். இது நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவகளுக்கு மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய சவாலை உருவாக்கும். பொதுவாக இந்தியாவின் தயாரிப்பு துறை நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் ஏஐ வரவு பிரச்சினையின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏஐ பயன்பாட்டை அதிகரிப்பதால் உற்பத்தி திறன் அதிகரிப்பதுடன்…

Read More

சென்னை: மாணவர்கள் தங்கள் கல்விக் கட்டணங்களை யுபிஐ ‘க்யூஆர் கோடு’ மூலமாக செலுத்துவதற்கான வசதிகளை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தங்களது வளாகத்தில் ஏற்படுத்த வேண்டுமென யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து விதமான உயர் கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: டிஜிட்டல் சார்ந்த அறிவாற்றாலை சமூகத்தில் அனைவரும் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடனும், அறிவுசார் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவித்து வருகிறது. பணபரிமாற்றத்தை குறைத்து அனைத்தும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. தற்போது நம்நாட்டில் யுபிஐ பாதுகாப்பான, விரைவான பணப்பரிமாற்றத்தையும் உறுதி செய்கிறது. இதற்கிடையே கிராமப்புற கல்வி நிலையங்களில் மாணவர்கள் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம், பாடப் புத்தகங்கள் உட்பட பல்வேறு கட்டணங்களை யுபிஐ மூலம் செலுத்துவதை விரும்புகின்றனர். இது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. எனவே, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் கல்வி சார்ந்த பணப்பரிமாற்றங்களை மாணவர்கள் ஆன்லைன்…

Read More