வால்வோ நிறுவனம், எக்ஸ்.சி.90 என்ற புதிய மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.1,02,89,900. இதுகுறித்து வால்வோ கார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜோதி மல்ஹோத்ரா கூறுகையில், “இந்திய சந்தையில் அனைவராலும் விரும்பப்படும் மாடலாக இப்புதிய எக்ஸ்.சி.90 கார் இருக்கும். இது, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் நவீன வடிமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த மாடலில் உள்ள விசாலமான இருக்கை வசதி மற்றும் அதன் பாதுகாப்பு அம்சங்கள் வால்வோ நிறுவனத்தின் இந்திய சந்தைப் பங்களிப்பை மேலும் வலுப்படுத்த உதவும்” என்றார். வால்வோ நிறுவனத்தின் இந்த புதிய காரை அறிமுகப்படுத்திய பிறகு இந்தியாவுக்கான ஸ்வீடன் தூதர் ஜான்தெஸ்லெப் கூறும்போது, “ வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் ஸ்வீடனின் அர்ப்பணிப்பு இந்த புதிய வால்வோ எக்ஸ்.சி.90 மாடலில் வெளிப்படுகிறது. சமரசம் செய்யாத பாதுகாப்பு தர நிலைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளன. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மென்பொருள் தடையற்ற செயல்பாடுகளுக்கு உறுதியளிக்கிறது” என்றார்.
Author: admin
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வ தற்கு நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாடு மாணவர்களுக்கு விலக்குப் பெறுவது என்பது இன்னமும் எட்டாக் கனவாகவே இருந்துவருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் நீட் தேர்வு தொடர்கிறது. தேர்வு முறை: தேசியத் தேர்வு முகமை (நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி) நடத்தும் இந்த நீட் தேர்வு (NEET- UG) கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் காகிதத்தில் விடை எழுதும் (OMR Sheet) தேர்வுதான். நீட் தேர்வில் விடையளிக்க மூன்று மணி நேரம் வழங்கப்படும். அதாவது 180 நிமிடங்கள் நடைபெறும் இந்த நுழைவுத் தேர்வில் உயிரியல் (தாவரவியல், விலங்கி யல் பாடங்களில் 90 கேள்விகள்), இயற்பியல் (45 கேள்விகள்), வேதியியல் (45 கேள்விகள்) ஆகிய பாடங் களில் இருந்து 180 கேள்விகள் கேட்கப் படும் என்பதும் இதற்கு மொத்த மதிப்பெண்கள் 720 என்பதும் நீட் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும். வினாத்தாள் ஆங்கிலம்,…
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. கடைசியாக சொந்த மண்ணில் பெங்களூரு அணியிடம் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட பஞ்சாப் அணி அந்த ஆட்டத்தில் 157 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் திடீரென பார்மை இழந்துள்ளது அணியின் செயல் திறனை பாதித்துள்ளது. கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களில் ஸ்ரேயஸ் ஐயர் முறையே 6, 7, 0 ரன்களில் ஆட்டமிழந்திருந்தார். இன்றைய ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெறுவதால் அவர், மீது எதிர்பார்ப்பு உள்ளது. ஏனெனில் கடந்த சீசனில்…
பெய்ஜிங்: அணுசக்தி அல்லாத புளோடார்ச் வெடிகுண்டை, சீனா வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்துள்ளது. சீன விஞ்ஞானிகள் ஹைட்ரஜன் எரிபொருளை அடிப்படையாகக் கொண்ட அணுசக்தி அல்லாத வெடிகுண்டை உருவாக்கும் சோதனையை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அண்மையில் இந்த சோதனையை சீன விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளனர். இதற்கு அணுசக்தி அல்லாத புளோடார்ச் வெடிகுண்டு என்று பெயர் வைத்துள்ளனர். இந்த வெடிகுண்டால் ஏற்படும் தீப்பிழம்பு 2 விநாடிகளுக்கு மேல் நீடிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சீனாவிலிருந்து வெளியாகும் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 15 மடங்கு.. வழக்கமாக வெடிகுண்டில் டிரை நைட்ரோ டொலுவீன் (டிஎன்டி) என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படும். ஆனால், இந்த 2 கிலோ எடையுள்ள புளோடார்ச் வெடிகுண்டானது, டிஎன்டி ஏற்படுத்தும் வெடிப்புகளை விட 15 மடங்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று சீன விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும், இது எந்த அணுசக்தி பொருளையும் பயன்படுத்தாமலேயே…
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு நேற்று குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். கிறிஸ்தவர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகையையொட்டி, மார்ச் 5-ம் தேதி சாம்பல் புதனுடன் தவக்காலம் தொடங்கியது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில், கிறிஸ்தவ மக்கள் தென்னங்கீற்றிலான குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாகச் சென்று தேவாலயங்களில் வழிபடுவது வழக்கம். அந்தவகையில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு நேற்று காலை குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு, குருத்தோலைகளை ஏந்தி ‘உன்னதங்களிலே ஓசன்னா, தாவீதின் மைந்தனே ஓசன்னா, ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஓசன்னா’ என்று பாடி பவனியாகச் சென்றனர். பேராலய முகப்பு பகுதியில் இருந்து வேளாங்கண்ணியின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பவனி, பேராலய கீழ் ஆலயத்தை அடைந்தது. தொடர்ந்து,…
‘கேங்கர்ஸ்’ படம் பார்த்துவிட்டு சிம்பு பாராட்டி இருக்கிறார். சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘கேங்கர்ஸ்’. இந்தப் படத்துக்கு மக்கள் மத்தியிலான வரவேற்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. தற்போது இப்படத்தினை பார்த்துவிட்டு சிம்பு பாராட்டு தெரிவித்திருக்கிறார். ‘கேங்கர்ஸ்’ படம் தொடர்பாக சிம்பு “’கேங்கர்ஸ்’ பார்த்தேன். ஒரே சிரிப்பு ரகளை. வடிவேலு சார் தனது மேஜிக்கால் மொத்த படத்தையும் தன்வசப்படுத்தி விட்டார். சுந்தர்.சி அண்ணா மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்திருக்கிறார். சுந்தர்.சி, வடிவேலு, கத்ரீன் தெரசா, முனீஸ்காந்த், பக்ஸ் பெருமாள், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கேங்கர்ஸ்’. 15 ஆண்டுகளுக்கு பிறகு சுந்தர்.சி – வடிவேலு கூட்டணி இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. Just watched #Gangers – a total laughter riot!#Vadivelu sir steals the show with his magic. My best wishes to #SundarC anna and…
சென்னை: பாலியல் புகாரில் சிக்கிய சாமியார் சதுர்வேதி அடுத்த மாதம் 23-ம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீறினால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை தி.நகரில் ஸ்ரீ ராமானுஜர் மிஷன் டிரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வந்தவர் சாமியார் வெங்கட சரவணன் என்ற எஸ்.ஏ.ஆர் பிரசன்ன வேங்கடாச்சாரியார் சதுர்வேதி. இவர், அந்த அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராகவும் இருந்தார். இவர் மீது கடந்த 2004-ம் ஆண்டு ஆழ்வார்ப்பேட்டையைச் சேர்ந்த தொழில் அதிபர், சென்னை காவல்துறையில் புகார் மனு அளித்தார். அதில் சதுர்வேதி தன்னுடைய மனைவி, மகளை மயக்கி கடத்தி சதுர்வேதி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்று தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சதுர்வேதியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேபாளத்தில் கைது செய்து சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது. ஆனால் அவர் மீதான குண்டர்…
புதுடெல்லி: 26 ரஃபேல் கடற்படை போர் விமானங்களைப் பெறுவதற்கான ரூ.63,000 கோடி ஒப்பந்தம் இந்தியா-பிரான்ஸ் இடையே இன்று கையெழுத்தாக இருக்கிறது. இந்திய கடற்படையில் உள்ள ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகிய விமானம் தாங்கி போர்க் கப்பல்களில் பயன்படுத்துவற்காக 45 மிக்-29கே ரக போர் விமானங்கள் உள்ளன. இவை அனைத்தும் ரஷ்யாவிடமிருந்து 2 பில்லியன் டாலர் மதிப்பில் வாங்கப்பட்டவை. கடற்படை பயன்பாட்டுக்கான போர் விமானங்களை உள்நாட்டில் தயாரிக்க இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இதனால், பிரான்ஸிடமிருந்து 26, ரஃபேல்-எம் ரக போர் விமானங்களை வாங்க கடற்படை முடிவு செய்தது. இதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒப்புதல் வழங்கியது. இந்த விமானங்களை பிரான்ஸிடமிருந்து ரூ.64,000 கோடிக்கு வாங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 9-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், இந்த ஒப்பந்தம் இரு தரப்புக்கும் இடையே…
சென்னை: கடந்த ஜனவரியில் சீனாவின் டீப்சீக் ஏஐ அசிஸ்டன்ட் உலக அளவில் கவனம் பெற்றது. இந்த நிலையில் தற்போது சீனாவில் இருந்து Manus எனும் ஏஐ ஏஜென்ட் அறிமுகமாகி உள்ளது. வழக்கமான ஏஐ சாட்பாட்டுக்கும் இதற்கும் இடையிலான வித்தியாசம் என்ன என்பதை பார்க்கலாம். உலகில் ஏஐ நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் தான் மகா சக்தி படைத்த நாடுகளாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதில் அமெரிக்கா, சீனா இடையே கடுமையான போட்டி நிலவும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. 2022-ல் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி வெளிவந்தது. தொடர்ந்து கூகுளின் Gemini, எக்ஸ் தளத்தின் Grok என ஏஐ சாட்பாட்களின் பட்டியல் நீண்டது. அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆட்டத்தை அமைதியாக கவனித்தது சீனா. இந்தச் சூழலில் தான் நடப்பு ஆண்டின் ஜனவரியில் சீனாவை சேர்ந்த ஹை-ஃப்ளையர் என்ற நிறுவனம் டீப்சீக் ஏஐ அசிஸ்டன்ட் ஆர்1 மாடல் அறிமுகம் செய்தது. அது சில நாட்களில்…
விடா முயற்சி வெற்றியை தரும் என நிரூபித்து காட்டியிருக்கிறார் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயியின் மகனான பெலிக்ஸ் காபிரியேல் மார்க் (27). இவர், யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் 6-வது முயற்சியில் வெற்றிபெற்று அகில இந்திய அளவில் 783-வது இடத்தை பிடித்துள்ளார். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2024-ம் ஆண்டு நடத்தப்பட்ட குடிமைப் பணி தேர்வில், தமிழ்நாட்டை சேர்ந்த 50 பேர் உட்பட அகில இந்திய அளவில் 1,009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், சாத்தான்குளம் அருகே உள்ள மேல பனைக்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி தங்கதுரை- விஜயா தம்பதியரின் ஒரே மகனான பெலிக்ஸ் காபிரியேல் மார்க் (27) அகில இந்திய அளவில் 783-வது இடத்தை பிடித்துள்ளார். தனது 6-வது முயற்சியில் இந்த வெற்றியை பெலிக்ஸ் காபிரியேல் மார்க் எட்டியிருக்கிறார். விடா முயற்சி இருந்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என சாதித்து காட்டிய அவருக்கு பலரும்…