Author: admin

புதுடெல்லி: 26 ரஃபேல் கடற்படை போர் விமானங்களைப் பெறுவதற்கான ரூ.63,000 கோடி ஒப்பந்தம் இந்தியா-பிரான்ஸ் இடையே இன்று கையெழுத்தாக இருக்கிறது. இந்​திய கடற்​படை​யில் உள்ள ஐஎன்​எஸ் விக்​ர​மா​தித்​யா, ஐஎன்​எஸ் விக்​ராந்த் ஆகிய விமானம் தாங்கி போர்க் கப்பல்​களில் பயன்​படுத்​து​வற்​காக 45 மிக்​-29கே ரக போர் விமானங்​கள் உள்​ளன. இவை அனைத்​தும் ரஷ்யாவிடமிருந்து 2 பில்​லியன் டாலர் மதிப்​பில் வாங்​கப்​பட்​ட​வை. கடற்படை பயன்​பாட்​டுக்​கான போர் விமானங்​களை உள்நாட்​டில் தயாரிக்க இன்​னும் 10 ஆண்​டுகளுக்கு மேல் ஆகும். இதனால், பிரான்​ஸிட​மிருந்து 26, ரஃபேல்​-எம் ரக போர் விமானங்​களை வாங்க கடற்​படை முடிவு செய்​தது. இதற்கு பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் தலை​மையி​லான பாது​காப்பு கொள்​முதல் கவுன்​சில் கடந்​த ஆண்டு செப்​டம்​பரில் ஒப்​புதல் வழங்​கியது. இந்த விமானங்க​ளை பிரான்ஸிடமிருந்து ரூ.64,000 கோடிக்கு வாங்க பிரதமர் மோடி தலை​மையி​லான மத்திய அமைச்​சரவை கடந்த 9-ம் தேதி ஒப்புதல் அளித்​தது. இந்நிலையில், இந்த ஒப்பந்தம் இரு தரப்புக்கும் இடையே…

Read More

வரும் 2027-ம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் 23 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என பெய்ன் அண்ட் கம்பெனி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் சாய்கட் பானர்ஜி கூறுகையில், “ சர்வதேச ஏஐ திறன் மையமாக நிலைநிறுத்திக்கொள்ளும் தனித்துவமான வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதாவது 2027-க்குள் ஏஐ துறையில் வேலைவாய்ப்பு 1.5-2 மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் ஏஐ துறையில் திறன்மிகு பணியாளர்களுக்கான தேவை 23 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 10 லட்சம் பேருக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப புதிய திறன்களை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஏஐ துறையில் திறமையானவர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. எனினும், இது தீர்க்க முடியாத பிரச்சினை அல்ல. சர்வதேச அளவில் கடந்த 2019-லிருந்து ஆண்டுதோறும் ஏஐ தொடர்பான வேலைவாய்ப்புகள் 21 சதவீதம் அதிகரித்துள்ளன. இதன் வேகத்துக்கு ஏற்ப திறன்வாய்ந்த பணியாளர்களின்…

Read More

திருச்சி: தமிழகத்தில் உள்ள 5 ஆயிரம் சுயநிதி தமிழ்வழிப் பள்ளிகளை, அரசு உதவிபெறும் பள்ளிகளாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு தமிழ்வழிப் பள்ளி நிர்வாகிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ஏ.செபாஸ்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், தமிழ்வழிப் பள்ளிகளுக்கு ஆசிரியருக்கான ஊதியம் அரசால் வழங்கப்பட்டு வந்த நிலையில், 1991-ம் ஆண்டு அப்போதைய தமிழக அரசு 14-ஏ என்ற சட்டத்தை இயற்றி, 1991-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட அல்லது தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு அரசு மானியம் (ஆசிரியர்களுக்கான ஊதியம்) இனி வழங்கப்படாது என முன் தேதியிட்டு அறிவித்தது. இதையடுத்து, இப்பள்ளிகள் மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கும் சுயநிதிப் பள்ளிகளாக மாறின. இதற்கான கட்டணத்தை தமிழக அரசின் கட்டண நிர்ணய குழு நிர்ணயிக்கிறது. இதனால், தமிழகத்தில் தமிழர்கள் தமிழ்வழியில் பயில கட்டணம் செலுத்த வேண்டிய அவல நிலை உருவானது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ்வழியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை நாளுக்கு…

Read More

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரரும், இந்திய டி20 அணியின் கேப்டனுமான சூர்யகுமார் யாதவ் சேர்ந்துள்ளார். லக்னோ அணிக்கெதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் சூர்யகுமார் யாதவ் 54 ரன்களை விளாசி ஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை எட்டினார். 28 பந்துகளைச் சந்தித்த அவர் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளை விளாசினார். அவர் இதுவரை 160 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று மொத்தம் 4,021 ரன்களைக் குவித்துள்ளார். மேலும், குறைந்த பந்துகளில் ஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை எட்டிய 3-வது வீரர் என்ற சாதனையையும் சூர்யகுமார் யாதவ் புரிந்தார். அவர் 2,714 பந்துகளைச் சந்தித்து இந்த ரன்களை எட்டியுள்ளார். கிறிஸ் கெயில் 2,653 பந்துகளிலும், ஏபி டிவில்லியர்ஸ் 2,658 பந்துகளிலும் 4 ஆயிரம் ரன்களை எட்டியிருந்தனர். மேலும், கடந்த 2023-ம் ஆண்டு முதல் மும்பை வான்கடே மைதானத்தில் 18 இன்னிங்ஸ்களில்…

Read More

இஸ்லாமபாத்: ‘‘நாங்கள் வைத்துள்ள 130 அணு ஆயுதங்கள் காட்சிக்கு அல்ல. இந்தியாவுக்காகத்தான் வைத்துள்ளோம்’’ என பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாஸி மிரட்டல் விடுத்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதல் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என இந்தியா அறிவித்தது. இது குறித்து கருத்து தெரிவித்து பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவருமான பிலாவல் புட்டோ ஜர்தாரி, ‘‘சிந்து நதி எங்களுக்கு சொந்தமானது. அதில் தண்ணீரை நிறுத்தினால் ரத்த ஆறு ஓடும்’’ என்றார். இந்நிலையில் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஹனிப் அப்பாஸி இது குறித்து கூறுகையில், ‘‘ சிந்து நதியில் இந்தியா தண்ணீரை நிறுத்தினால், போருக்கு தயாராக இருக்க வேண்டும். கோரி, ஷஹீன் மற்றும் ஹஸ்னவி போன்ற ஏவுகணைகளையும், 130 அணு ஆயுதங்களையும் நாங்கள் காட்சிக்கு வைத்திருக்க வில்லை. இந்தியாவிற்காகத்தான் வைத்துள்ளோம்’’ என கூறியுள்ளார்.

Read More

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் தமிழ் புத்தாண்டையொட்டி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். தமிழ் புத்தாண்டையொட்டி, பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, தங்க கவசத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். வெள்ளி மூஷிக வாகனத்தில் உற்சவர் எழுந்தருளினார். பின்னர் நாதஸ்வரம் முழங்க வெள்ளி பல்லக்கில் கோயிலில் இருந்து சிவனின் பிரதிநிதியாகிய அங்குசதேவரும், விநாயகரின் பிரதிநிதியாகிய அஸ்திரதேவரும் புறப்பாடாகி கோயில் குளப் படித்துறைக்கு வந்தனர். அங்கு, தேவாரப் பாடல்களுடன் அங்குச தேவருக்கும், அஸ்திர தேவருக்கும் பிச்சை குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆராதனை நடத்தினர். பின்னர் பால், திருமஞ்சனம், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 11 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, கோயில் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதைக்…

Read More

Last Updated : 26 Apr, 2025 05:46 PM Published : 26 Apr 2025 05:46 PM Last Updated : 26 Apr 2025 05:46 PM அட்லி படத்தில் அல்லு அர்ஜுனுக்கு நாயகியாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘புஷ்பா 2’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அட்லி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அல்லு அர்ஜுன். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் அறிவிப்பு விடீயோவே அனைத்து மொழிகளிலும் கவனம் ஈர்த்தது. இதில் அட்லி – அல்லு அர்ஜுன் கூட்டணி மட்டுமே இறுதியாகி இருக்கிறது. இதர நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு நாயகியாக நடிக்க மிருணாள் தாகூர் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளார். இதில் மொத்தம் 3 நாயகிகள் இருக்கிறார்கள். இதில் ஒருவராக மிருணாள் தாகூர் தேர்வாகி இருக்கிறார். ஜான்வி கபூர் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோரிடம்…

Read More

சென்னை: வணிக உரிமம் புதுப்பிப்பதற்கான அவகாசத்தை மே 31-ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டிருப்பதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வணிக உரிம கட்டணங்கள் 2025-26 ஆண்டுக்கு பெருமளவு உயர்த்தப்பட்டது. அதனால் வணிகர்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தமிழக அரசின் கவனத்துக்கு, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எடுத்துச் சென்றது. அப்போது, 2025-26 ஆண்டுக்கான தொழில், வணிக உரிம கட்டணங்கள் சிறு, குறு வணிகர்களுக்கு அவசியம் குறைக்கப்பட வேண்டும் என்பதை, இப்பேரமைப்பு வலியுறுத்தியது. அதனைத் தொடர்ந்து 500 சதுர அடிக்கு கீழ் உள்ள வணிக கடைகளுக்கு ஆண்டுக்கு ரூ.3,500 என்பதை, ஆண்டுக்கு ரூ.1,200 என உரிமக் கட்டணங்களை அரசு குறைத்தது. இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கும், தொழில் – வணிக உரிமங்களை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தலுக்கான நடைமுறையை அமல்படுத்துவதிலும் கால தாமதம் ஏற்பட்டிருப்பதை கவனத்தில் கொண்டு, இப்பேரமைப்பு,…

Read More

குவாஹாட்டி: காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்ததாக அசாம் (14), மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய 3 மாநிலங்களைச் சேர்ந்த 19 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் எம்எல்ஏ அமினுல் இஸ்லாம், தேசத் துரோக சட்டப் பிரிவின் கீழ் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். காஷ்மீரில் நிகழ்ந்த தாக்குதல் மற்றும் 2019-ம் ஆண்டில் நிகழ்ந்த புல்வாமா தாக்குதல் ஆகியவை அரசின் சதி வேலை என கூறியதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 4 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முகநூல் பக்கத்தில் பதிவிட்டதாக ஒரு பத்திரிகையாளர், ஒரு கல்லூரி மாணவர், ஒரு வழக்கறிஞர் உட்பட 6 பேர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். மேலும் இந்தியாவுக்கு எதிரான கருத்து தெரிவித்ததாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த…

Read More

இந்தியாவில் ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவையை வழங்குவதற்காக எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் ஏர்டெல் கைாகோக்கிறது. இதுகுறித்து ஏர்டெல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ஸ்டார்லிங்கின் அதிவேக இண்டர்நெட் சேவையை இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக ஏர்டெல் நிறுவனம் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் உடன்பாடு செய்து கொண்டுள்ளது. எலான் மஸ்க் நிறுவனத்துடன் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முதல் ஒப்பந்தம் இதுவாகும். மேலும், ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவில் ஸ்டார்லிங்கை விற்பது அதன் சொந்த அதிகாரத்தை பெறுவதற்கு உட்பட்டது. இதுகுறித்து பார்தி ஏர்டெல் நிர்வாக இயக்குநர் கோபால் விட்டல் கூறுகையில், “ ஸ்பேஸ்எக்ஸ் உடன் இணைந்து ஸ்டார்லிங் இணைய சேவையை இந்தியாவில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்ளுக்கு வழங்குவது நிறுவனத்தின் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க மைல்கல். அடுத்த தலைமுறை செயற்கைக்கோள் இணைப்புக்கான எங்களின் உறுதிப்பாட்டை இது மேலும் நிரூபிப்பதாக அமைந்துள்ளது” என்றார். இந்த உடன்பாட்டின்படி, ஏர்டெல்லின் ரீடெயில் ஸ்டோர்களில் ஸ்டார்லிங் உபகரணங்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான வழிகள் ஆராயப்பட உள்ளன. சமூகங்கள்,…

Read More