‘இட்லி கடை’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று இருக்கிறது. தற்போது இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக தொடங்கப்படவுள்ளன. தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இட்லி கடை’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு பாங்காக்கில் தொடங்கப்பட்டது. இதில் தனுஷ், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய் உள்ளிட்டோர் அடங்கிய முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது. பாங்காக் படப்பிடிப்பு முடிவடைந்ததை முன்னிட்டு, ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி வரும் படம் ‘இட்லி கடை’. தனுஷ், ராஜ்கிரண், சத்யராஜ், அருண் விஜய், நித்யா மேனன், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்தினை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது. அக்டோபர் 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு. #IdlyKadai Shoot Wrapped at Bangkok, Thailandகடை Open from 1st October,2025 Worldwide@dhanushkraja @arunvijayno1 @RedGiantMovies_ @gvprakash @menennithya @aakashbaskaran @thesreyas @wunderbarfilms @MShenbagamoort3…
Author: admin
சென்னை: சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்காக திண்ணை பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்று ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், பேரவை மாநில செயலாளர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:ஜெயலலிதா பேரவை சார்பில், பழனிசாமியின் பிறந்தநாளான மே 12-ம் தேதி, ஆலயங்கள்தோறும் சர்வ சமய பிரார்த்தனைகள் நடத்தப்படும். ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். அடுத்த ஆண்டு, மே 12-ம் தேதி பழனிசாமியின் பிறந்தநாளை மக்கள் கொண்டாடிக்கொண்டு இருக்கும்போது, அவர் அனைவரின் ஆதரவுடன் முதல்வராக பொறுபேற்றுக்கொண்டு பணியாற்றுவார். அத்தகைய வெற்றி தீர்ப்பை 2026 தேர்தலில் பெற்றுத்தரும் வரை ஊண், உறக்கம் இன்றி, இரவு, பகல் பாராது ஜெயலலிதா பேரவையினர் உழைப்போம். அதற்காக மாபெரும் திண்ணை பிரச்சாரத்தை தொடர்ந்து எடுத்துச் செல்வோம். இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஸ்ரீநகர்: பஹல்காமில் கடந்த ஏப்.22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், பாதுகாப்பு அமைச்சரவைக் குழு கூட்டத்துக்கு பின்பு மத்திய அரசு அறிவித்துள்ள ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. பஹல்காம் தாக்குதல் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் துணை முதல்வர் சுரிந்தர் சவுதரி, ஏப்.22-ம் தேதி நடந்த பஹல்காம் தாக்குதல் பற்றி ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தார். அத்தீர்மானத்தில், “பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதல் குறித்து இந்த அவை தனது அதிர்ச்சியையும், கவலையையும் வெளிப்படுத்துகிறது. இந்தக் கோழைத்தனமான கொடுமையான தாக்குதலை இந்த அவை கடுமையாக கண்டிக்கிறது. இந்த பயங்கரவாத தாக்குதல் காஷ்மீரின் தனித்துவமான கலாச்சார அடையாளம், அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை மீது நடத்தப்பட்ட நேரடித் தாக்குதலாகும். இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இந்த அவை ஆறுதலாக நிற்கிறது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடுகிறவர்களுக்கு அவை…
உலகம் முழுவதும் எக்ஸ் தளம் (ட்விட்டர்) மீண்டும் முடங்கியுள்ளது. ஒரே நாளில் மூன்றாவது முறையாக முடங்கியதால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சமூக வலைதளங்கள், இணையதளங்களின் முடக்கங்களை கண்காணிக்கும் Downdetector.com தரவுகளின் படி இன்று (மார்ச்10) பிற்பகல் 3.30 மணியளவில் முதல்முறையாக எக்ஸ் தளம் முடங்கியது. சில மணி நேரங்களில் பிரச்சினை சரிசெய்யப்பட்ட நிலையில் மீண்டும் மாலை 7 மணிக்கு எக்ஸ் தள செயல்பாடுகள் முடங்கின. அதன்பிறகு மீண்டும் சரிசெய்யப்பட்டு, தற்போது மூன்றாவது முறையாக 8.45 மணிக்கு மீண்டும் தளம் முடங்கியது. இப்போதுவரை முடக்கம் நீடித்துவருகிறது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் எக்ஸ் தளம் முடங்கியுள்ளதாக பயனர்கள் புகாரளித்து வருகின்றனர். உலகளவில் 40,000-க்கும் மேற்பட்ட பயனர்கள் இந்த முடக்கம் குறித்து புகார்களைப் பதிவு செய்துள்ளனர். Downdetector அறிக்கையின்படி, 56 சதவீத பயனர்கள் மொபைல் செயலியில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அதே நேரத்தில் 33 சதவீதம் பேர் வலைத்தளத்தில்…
சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 1 முதல் 3-ம் வகுப்பு குழந்தைகளுக்கு ஏப்ரல் 11-ம் தேதியும், 4, 5-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 17-ம் தேதியும் தேர்வுகள் முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுவிட்டது. அதைத்தொடர்ந்து 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்று வந்த முழு ஆண்டுத் தேர்வுகள் நாளை (ஏப். 24) நிறைவுபெறுகின்றன. இறுதி நாளில் சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இவர்களுக்கான கோடை விடுமுறை ஏப். 25 முதல் தொடங்குகிறது. எனினும்,…
சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே மீண்டும் ஒரு தோல்வியைச் சந்தித்தது. இந்த முறை சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் முதல் முறையாக சேப்பாக்கத்தில் தோல்வி அடைந்து ஒரு புதிய எதிர்மறைச் சாதனையை நிகழ்த்தியுள்ளது . சேப்பாக்கத்தில் படுமட்டமான குழிப்பிட்ச்களைப் போட்டு ஸ்பின் பவுலிங்கை வைத்து எதிரணிகளை மிரட்டி வந்த சிஎஸ்கே, இந்த முறை பிட்ச் இவர்களுக்கு ஏற்றபடி அமையாததால் ‘முதல் தோல்வி’ என்று சில தோல்விகளைத் தவிர்க்க முடியாமல் சந்தித்து வருகிறது. பேட்டிங் பிட்சில் சிஎஸ்கே நேற்று 154 ரன்களைத்தான் அடிக்க முடிந்தது. இதனை சன் ரைசர்ஸ் 8 பந்துகளே மீதம் வைத்து வெற்றி பெற்றது. டெவன் கான்வே ஃபார்மில் இல்லை என்று உட்கார வைக்கப்பட்டு வருகிறார். ஆனால் அவர்களின் ‘மூத்த’ விக்கெட் கீப்பர் பேட்டர் என்ன பெரிய ஃபார்மில் இருக்கிறார் என்ற கேள்வியை ஒருவரும் எழுப்புவதில்லை. சிஎஸ்கே கடினமாக ஆடி அதிகப் போட்டிகளை வென்றதில்லை. அப்படி கடினமான ஃபைட் கொடுக்கும்…
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். இது குறித்து டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: “காஷ்மீரில் இருந்து வெளியாகும் செய்திகள் ஆழ்ந்த கவலையளிக்கின்றன. பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது. உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் மீண்டு வரவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் எங்கள் முழு ஆதரவும் ஆழ்ந்த அனுதாபங்களும் உண்டு. எங்கள் இதயங்கள் உங்கள் அனைவருடனும் உள்ளன” இவ்வாறு ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியாவின் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என் மனைவி உஷாவும் நானும் எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். சமீப நாட்களாக, இந்த நாட்டின் அழகையும் அதன் மக்களையும் கண்டு நாங்கள் வியந்து போயுள்ளோம். இந்த கொடூரமான தாக்குதலுக்கு இரங்கல் தெரிவிக்கும் வேளையில்,…
சென்னை: தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் நடந்த சிறப்பு தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். முருகன் கோயில்களில் நீண்ட வரிசையில் காத்திருத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சித்திரை முதல் நாளான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், தமிழ்ப் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடி வருகின்றனர். தமிழ்ப் புத்தாண்டு தினமான இன்று (ஏப்.14) முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, அத்திமரத்தாலான முருகபெருமானின் விக்கிரங்களைச் செய்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதேபோல், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பரமணிய சுவாமி கோயிலில், பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. முருகபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஏராளமான பக்தர்கள், கடல் மற்றும் நாலு கிணற்றில்…
தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்று ‘ஹிட் 3’ பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் நானி தெரிவித்தார். நானி தயாரித்து, நடித்துள்ள ‘ஹிட் 3’ திரைப்படம் மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனை விளம்பரப்படுத்த நானி, ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள். இந்தச் சந்திப்பில் நானி பேசும்போது, “நான் எப்போது சென்னைக்கு வந்தாலும் என்னுடைய சொந்த வீட்டுக்கு வந்த உணர்வு ஏற்படும். பலமுறை என்னை வடிவமைத்தது தமிழ் சினிமாதான் எனச் சொல்லி இருக்கிறேன். 2012-13-ம் ஆண்டில் சென்னையில் இருந்து புறப்பட்டு ஹைதராபாத் சென்றேன். இருந்தாலும் தற்போது வரை தமிழக மக்களின் அன்பு, தமிழ் ரசிகர்களின் அன்பு அதிகமாகிக் கொண்டேதான் இருக்கிறது. தமிழில் நடிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன். பொருத்தமான வாய்ப்பு கிடைத்தால் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும். ‘ஹிட் தி தேர்ட் கேஸ்’ படத்திற்காக மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ‘ஹிட்’ படத்தின் இரண்டு பாகங்களும் தமிழில் வெளியாகியிருக்கும் என…
சென்னை: சென்னையில் இந்தாண்டு இதுவரை அவசர உதவி கோரி 69,628 அவசர அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பு வந்த 5 நிமிடங்களில் சம்பவ இடம் விரைந்து போலீஸார் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளனர். இக்கட்டான சூழலில் சிக்கி இருந்தாலோ, அவசர உதவி தேவை என்றாலோ பொது மக்கள் காவல் கட்டுப்பாட்டு அறையை உடனடியாக தொடர்பு கொள்கின்றனர். இப்படி தொடர்பு கொள்பவர்களுக்கு அடுத்த 5 நிமிடத்துக்குள் ரோந்து போலீஸார் நேரில் சென்று உதவி புரிகின்றனர். அந்த வகையில் கடந்த 18ம் தேதி கூட ஆழ்வார்பேட்டையில் பிரபலமான மருத்துவமனையில் 5வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீஸார் காப்பாற்றினார். இப்படி, உடனடியாக சம்பவ இடம் விரையும் வகையில் சென்னையில் 234 ரோந்து வாகனங்கள் உள்ளது. இந்த வாகனங்கள் கூடுதலாக மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், குற்றம் நடக்க வாய்ப்புள்ள பகுதிகளிலும் ரோந்து சுற்றி வருகின்றனர். இவர்கள் அவசர அழைப்புக்கான சம்பவ இடங்களுக்கு செல்கிறார்களா? ரோந்து பணிக்கு…