Author: admin

சென்னை: கடந்த ஜனவரியில் சீனாவின் டீப்சீக் ஏஐ அசிஸ்டன்ட் உலக அளவில் கவனம் பெற்றது. இந்த நிலையில் தற்போது சீனாவில் இருந்து Manus எனும் ஏஐ ஏஜென்ட் அறிமுகமாகி உள்ளது. வழக்கமான ஏஐ சாட்பாட்டுக்கும் இதற்கும் இடையிலான வித்தியாசம் என்ன என்பதை பார்க்கலாம். உலகில் ஏஐ நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் தான் மகா சக்தி படைத்த நாடுகளாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதில் அமெரிக்கா, சீனா இடையே கடுமையான போட்டி நிலவும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. 2022-ல் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி வெளிவந்தது. தொடர்ந்து கூகுளின் Gemini, எக்ஸ் தளத்தின் Grok என ஏஐ சாட்பாட்களின் பட்டியல் நீண்டது. அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆட்டத்தை அமைதியாக கவனித்தது சீனா. இந்தச் சூழலில் தான் நடப்பு ஆண்டின் ஜனவரியில் சீனாவை சேர்ந்த ஹை-ஃப்ளையர் என்ற நிறுவனம் டீப்சீக் ஏஐ அசிஸ்டன்ட் ஆர்1 மாடல் அறிமுகம் செய்தது. அது சில நாட்களில்…

Read More

விடா முயற்சி வெற்றியை தரும் என நிரூபித்து காட்டியிருக்கிறார் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயியின் மகனான பெலிக்ஸ் காபிரியேல் மார்க் (27). இவர், யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் 6-வது முயற்சியில் வெற்றிபெற்று அகில இந்திய அளவில் 783-வது இடத்தை பிடித்துள்ளார். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2024-ம் ஆண்டு நடத்தப்பட்ட குடிமைப் பணி தேர்வில், தமிழ்நாட்டை சேர்ந்த 50 பேர் உட்பட அகில இந்திய அளவில் 1,009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், சாத்தான்குளம் அருகே உள்ள மேல பனைக்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி தங்கதுரை- விஜயா தம்பதியரின் ஒரே மகனான பெலிக்ஸ் காபிரியேல் மார்க் (27) அகில இந்திய அளவில் 783-வது இடத்தை பிடித்துள்ளார். தனது 6-வது முயற்சியில் இந்த வெற்றியை பெலிக்ஸ் காபிரியேல் மார்க் எட்டியிருக்கிறார். விடா முயற்சி இருந்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என சாதித்து காட்டிய அவருக்கு பலரும்…

Read More

சென்னை: ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் நேற்று சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்​கே, 2016-ம் ஆண்டு சாம்​பிய​னான சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யுடன் பலப்​பரீட்சை நடத்​தி​யது. இந்த போட்டி சிஎஸ்கே கேப்​டன் எம்​.எஸ்​.தோனிக்கு 400-வது ஆட்​ட​மாக அமைந்​தது. இதன் மூலம் 400 டி 20 போட்​டிகளில் விளை​யாடிய 4-வது இந்​திய கிரிக்​கெட் வீரர் என்ற பெரு​மையை தோனி பெற்​றார். இந்த வகை சாதனை​யில் இந்​திய வீரர்​களில் ரோஹித் சர்மா (456) முதலிடத்​தில் உள்​ளார். தினேஷ் கார்த்​திக் (412) 2-வது இடத்​தி​லும், விராட் கோலி (407) 3-வது இடத்​தி​லும் உள்​ளனர். அதேவேளை​யில் உலக அரங்​கில் தோனி 24-வது இடத்​தில் உள்​ளார். மேற்கு இந்​தி​யத் தீவு​களின் கெய்​ரன் பொலார்ட் 695 போட்​டிகளில் விளையாடி முதலிடத்​தில் உள்ளார். இந்​தி​யா, சிஎஸ்​கே, ரைசிங் புனே சூப்​பர் ஜெயண்ட், ஜார்க்​கண்ட் ஆகிய அணி​களுக்​காக டி 20 போட்டிகளில் விளை​யாடி உள்ள தோனி…

Read More

வாடிகன்: போப் பிரான்சிஸின் உடல் நாளை (புதன்கிழமை) காலை 9:00 மணிக்கு வாடிகனில் உள்ள புனித பீட்டர்ஸ் பேராலயத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றும் சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்றும் வாடிகன் அறிவித்துள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் நேற்று மறைந்தார். அவருக்கு வயது 88. கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த அவர், நேற்று உயிரிழந்தார். நேற்று (திங்கட்கிழமை) மாலை வாடிகனில் உள்ள காசா சாண்டா மார்ட்டாவின் தேவாலயத்தில் மரணத்தை உறுதிப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதையடுத்து, அவரது உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டது. இந்த சடங்குகளுக்கு கார்டினல் கேமர்லெங்கோ கெவின் ஃபாரெல் தலைமை தாங்கினார். இந்நிலையில், போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு குறித்த அறிவிப்பை வாடிகன் வெளியிட்டுள்ளது. வாடிகனின் செய்தி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “போப் பிரான்சிஸின் உடல் நாளை (புதன்கிழமை) காசா சாண்டா மார்ட்டாவின் தேவாலயத்திலிருந்து புனித பீட்டர்ஸ்…

Read More

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை கருட சேவை, ஏப்ரல் 19ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில், 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலில் பார்த்த சாரதி பெருமாள் பிரம்மோற்சவம் சித்திரை மாதமும், இங்கு மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம் ஆனி மாதமும் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டு பார்த்த சாரதி பெருமாள் பிரம்மோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நாள் முழுவதும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7.45 மணி அளவில் புன்னை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை ஏப்ரல் 15ம் தேதி (நாளை) அதிகாலை 5.15 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து, மதியம் 12 மணிக்கு ஏகாந்த சேவை, 16ம் தேதி சூரிய…

Read More

‘இட்லி கடை’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று இருக்கிறது. தற்போது இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக தொடங்கப்படவுள்ளன. தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இட்லி கடை’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு பாங்காக்கில் தொடங்கப்பட்டது. இதில் தனுஷ், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய் உள்ளிட்டோர் அடங்கிய முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது. பாங்காக் படப்பிடிப்பு முடிவடைந்ததை முன்னிட்டு, ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி வரும் படம் ‘இட்லி கடை’. தனுஷ், ராஜ்கிரண், சத்யராஜ், அருண் விஜய், நித்யா மேனன், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்தினை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது. அக்டோபர் 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு. #IdlyKadai Shoot Wrapped at Bangkok, Thailandகடை Open from 1st October,2025 Worldwide@dhanushkraja @arunvijayno1 @RedGiantMovies_ @gvprakash @menennithya @aakashbaskaran @thesreyas @wunderbarfilms @MShenbagamoort3…

Read More

சென்னை: சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்காக திண்ணை பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்று ஜெயலலிதா பேரவை மாவட்ட செய​லா​ளர்​கள் ஆலோ​சனை கூட்​டத்​தில் நேற்று தீர்மானம் நிறைவேற்​றப்​பட்​டது. ஜெயலலிதா பேரவை மாவட்ட செய​லா​ளர்​கள் ஆலோ​சனைக் கூட்​டம், பேரவை மாநில செய​லா​ளர் ஆர்​.பி.உதயகு​மார் தலை​மை​யில் சென்னை ராயப்​பேட்​டை​யில் உள்ள அதிமுக தலைமை அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​தில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானங்​கள் விவரம்:ஜெயலலிதா பேரவை சார்​பில், பழனி​சாமி​யின் பிறந்​த​நாளான மே 12-ம் தேதி, ஆலயங்​கள்தோறும் சர்வ சமய பிரார்த்​தனை​கள் நடத்​தப்​படும். ஏழைகளுக்கு நலத்​திட்ட உதவி​கள் வழங்​கப்​படும். அடுத்த ஆண்​டு, மே 12-ம் தேதி பழனி​சாமி​யின் பிறந்​த​நாளை மக்​கள் கொண்​டாடிக்​கொண்டு இருக்​கும்​போது, அவர் அனை​வரின் ஆதர​வுடன் முதல்​வ​ராக பொறு​பேற்​றுக்​கொண்டு பணி​யாற்​று​வார். அத்​தகைய வெற்றி தீர்ப்பை 2026 தேர்​தலில் பெற்​றுத்​தரும் வரை ஊண், உறக்​கம் இன்​றி, இரவு, பகல் பாராது ஜெயலலிதா பேர​வை​யினர் உழைப்​போம். அதற்​காக மாபெரும் திண்ணை பிரச்​சா​ரத்தை தொடர்ந்து எடுத்​துச்​ செல்வோம். இவ்​வாறு கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது.

Read More

ஸ்ரீநகர்: பஹல்காமில் கடந்த ஏப்.22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், பாதுகாப்பு அமைச்சரவைக் குழு கூட்டத்துக்கு பின்பு மத்திய அரசு அறிவித்துள்ள ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. பஹல்காம் தாக்குதல் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் துணை முதல்வர் சுரிந்தர் சவுதரி, ஏப்.22-ம் தேதி நடந்த பஹல்காம் தாக்குதல் பற்றி ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தார். அத்தீர்மானத்தில், “பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதல் குறித்து இந்த அவை தனது அதிர்ச்சியையும், கவலையையும் வெளிப்படுத்துகிறது. இந்தக் கோழைத்தனமான கொடுமையான தாக்குதலை இந்த அவை கடுமையாக கண்டிக்கிறது. இந்த பயங்கரவாத தாக்குதல் காஷ்மீரின் தனித்துவமான கலாச்சார அடையாளம், அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை மீது நடத்தப்பட்ட நேரடித் தாக்குதலாகும். இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இந்த அவை ஆறுதலாக நிற்கிறது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடுகிறவர்களுக்கு அவை…

Read More

உலகம் முழுவதும் எக்ஸ் தளம் (ட்விட்டர்) மீண்டும் முடங்கியுள்ளது. ஒரே நாளில் மூன்றாவது முறையாக முடங்கியதால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சமூக வலைதளங்கள், இணையதளங்களின் முடக்கங்களை கண்காணிக்கும் Downdetector.com தரவுகளின் படி இன்று (மார்ச்10) பிற்பகல் 3.30 மணியளவில் முதல்முறையாக எக்ஸ் தளம் முடங்கியது. சில மணி நேரங்களில் பிரச்சினை சரிசெய்யப்பட்ட நிலையில் மீண்டும் மாலை 7 மணிக்கு எக்ஸ் தள செயல்பாடுகள் முடங்கின. அதன்பிறகு மீண்டும் சரிசெய்யப்பட்டு, தற்போது மூன்றாவது முறையாக 8.45 மணிக்கு மீண்டும் தளம் முடங்கியது. இப்போதுவரை முடக்கம் நீடித்துவருகிறது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் எக்ஸ் தளம் முடங்கியுள்ளதாக பயனர்கள் புகாரளித்து வருகின்றனர். உலகளவில் 40,000-க்கும் மேற்பட்ட பயனர்கள் இந்த முடக்கம் குறித்து புகார்களைப் பதிவு செய்துள்ளனர். Downdetector அறிக்கையின்படி, 56 சதவீத பயனர்கள் மொபைல் செயலியில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அதே நேரத்தில் 33 சதவீதம் பேர் வலைத்தளத்தில்…

Read More

சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 1 முதல் 3-ம் வகுப்பு குழந்தைகளுக்கு ஏப்ரல் 11-ம் தேதியும், 4, 5-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 17-ம் தேதியும் தேர்வுகள் முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுவிட்டது. அதைத்தொடர்ந்து 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்று வந்த முழு ஆண்டுத் தேர்வுகள் நாளை (ஏப். 24) நிறைவுபெறுகின்றன. இறுதி நாளில் சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இவர்களுக்கான கோடை விடுமுறை ஏப். 25 முதல் தொடங்குகிறது. எனினும்,…

Read More