சென்னை: சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின்கீழ் 3 வழித்தடங்களில் ரூ.63,246 கோடியில், 116.1 கி.மீ. தொலைவுக்கு பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. தொடர்ந்து, பூந்தமல்லி – பரந்தூர், கோயம்பேடு – ஆவடி என அடுத்தடுத்து, மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, சென்னையின் பிரதான பகுதியாக இருக்கும் தாம்பரம் – கிண்டி – வேளச்சேரி மற்றும் கலங்கரை விளக்கம் – உயர் நீதிமன்றம் வரை மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிப்பு குறித்து தயாரிக்கப்பட்ட சாத்தியக்கூறு அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்ததால், அடுத்தகட்டமாக விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, தாம்பரம் – கிண்டி – வேளச்சேரி மெட்ரோ ரயில் தடத்தில் மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி ஆகிய புறநகர் பகுதிகள் கிண்டி மெட்ரோவுடன் 21 கி.மீ. தூரத்தில் இணைக்கப்பட உள்ளன. இதேபோல, கலங்கரை விளக்கத்தில் இருந்து மெரினா கடற்கரை,…
Author: admin
அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் ஸ்ட்ரோக் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, உணவு சோடாக்கள் மற்றும் குளிர்பானங்களின் உடல்நல பாதிப்புகள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது. இந்த பானங்களை அரிதாகவே குடிப்பவர்களுடன் ஒப்பிடும்போது, தினசரி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செயற்கையாக இனிப்பு பானங்களை உட்கொள்ளும் நபர்கள் இஸ்கிமிக் பக்கவாதம் மற்றும் அல்சைமர் டிமென்ஷியா ஆகியவற்றின் அபாயத்தை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்த ஆய்வு 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 2,800 க்கும் மேற்பட்ட பெரியவர்களை பத்து ஆண்டுகளாக கண்காணித்தது, இது டயட் சோடா நுகர்வு மற்றும் தீவிர நரம்பியல் நிலைமைகளுக்கு இடையில் ஒரு வலுவான தொடர்பை எடுத்துக்காட்டுகிறது. கண்டுபிடிப்புகள் நேரடி காரணத்தை நிறுவவில்லை என்றாலும், செயற்கை இனிப்புகளின் நீண்டகால விளைவுகள் குறித்து எச்சரிக்கையுடன் மற்றும் மேலதிக ஆராய்ச்சிக்கான தேவையை அவை பரிந்துரைக்கின்றன.ஆய்வு மற்றும் டயட் சோடாக்கள் மற்றும் குளிர் பானங்கள் பற்றிய அதன் கண்டுபிடிப்புகள்பங்கேற்பாளர்கள்…
புதுடெல்லி / மும்பை: இந்திய குடியுரிமைக்கான ஆதாரமாக ஆதார அட்டையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றமும், மும்பை உயர் நீதிமன்றமும் கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிஹாரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு நீதிபதிகள் சூரிய காந்த், ஜாய்மாலாபாக்சி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் கூறும்போது. “ஐந்து கோடி வாக்காளர்கள், தாங்கள் இந்தியக் குடிமகன்கள் என்பதை இரண்டரை மாதங்களில் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இந்நிலையில், ஆதாரை ஆவணமாக ஏற்க மறுப்பது அநீதியாகும்” என்று வாதிடப்பட்டது. அதற்கு, தேர்தல் ஆணையம் சார்பில் கூறும்போது, “மனுதாரர்கள் தரப்பில் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. வரைவு வாக்காளர் பட்டியலில் தவறுகள் இருந்தால் நேரடியாக தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கலாம். தற்போதைய நிலையில் ஆதார், வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டையை குடியுரிமை சான்றுக்கான ஆவணமாக ஏற்க முடியாது. இந்த ஆவணங்களில் போலிகள்…
சென்னை: சுதந்திர தின தொடர் விடு முறையை முன்னிட்டு, 2,449 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆக.15-ம் தேதி சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, ஆக.13, 14, 15-ம் தேதி களில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 1,320 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஆக.14, 15-ம் தேதிகளில் 190 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து 24 சிறப்பு பேருந் துகளும் இயக்கப்படுகின்றன. இதேபோல், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும், ஆக.17-ம் தேதி ஊர் திரும்ப வசதியாக 715 பேருந்துகள் என மொத்தமாக 2,449 சிறப்பு…
உங்கள் வாய்வழி ஆரோக்கியம் ஒரு பிரகாசமான புன்னகையை பராமரிப்பதை விட அதிகம்; இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். மற்ற அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பு வாய் பெரும்பாலும் முறையான நோய்களின் ஆரம்ப அறிகுறிகளை வெளிப்படுத்தலாம். இந்த முக்கிய வாய்வழி அறிகுறிகளை அங்கீகரிப்பது சரியான நேரத்தில் தலையீட்டிற்கு அவசியம், மேலும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்கக்கூடும்.வாயின் திசுக்கள் மற்றும் பற்கள் மிகவும் உணர்திறன் மற்றும் வாஸ்குலர் ஆகும், இது பல்வேறு மருத்துவ நிலைமைகளின் அறிகுறிகளை வெளிப்படுத்த முதல் பகுதிகளில் ஒன்றாகும். இந்த கட்டுரை ஆறு முக்கியமான வாய்வழி அறிகுறிகளை ஆராய்கிறது, இது அடிப்படை சுகாதார பிரச்சினைகளை சமிக்ஞை செய்யலாம், ஆரம்பத்தில் செயல்பட அறிவை உங்களுக்கு வழங்குகிறது.அன்றாட பல் பிரச்சினைகள் மறைக்கப்பட்ட மருத்துவ நிலைமைகளை எவ்வாறு குறிக்கலாம்சில்லு செய்யப்பட்ட அல்லது சிதைந்த பற்கள்: பற்கள் அரைக்கும் அடையாளம் (ப்ரூக்ஸிசம்)ஒரு பொதுவான வாய்வழி அறிகுறி சில்லு அல்லது சிதைந்த பற்கள், இது பற்கள்…
திருமலை: திருப்பதியிலிருந்து அலிபிரி வழியாக திருமலைக்கு செல்ல இனி ஃபாஸ்டேக் கட்டாயம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் இருந்து வரும் பக்தர்கள் ரயில் அல்லது விமானத்தில் வந்தாலும், அவர்கள் கார், ஜீப், வேன் போன்றவற்றின் மூலம் திருமலைக்கு செல்கின்றனர். மேலும் பலர் தங்களது சொந்த கார்கள் மூலம் குடும்பத்தாருடன் திருமலைக்கு வருகின்றனர். இந்நிலையில், வரும் 15-ம் தேதி முதல் திருமலைக்கு வாகனங்களில் வரும் பக்தர்கள் கண்டிப்பாக அவர்களின் வாகனங்களில் ஃபாஸ்டேக் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் வெளிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பக்தர்களின் பாதுகாப்பு கருதியும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் அலிபிரி சோதனைச்சாவடி வழியாக திருமலைக்கு கார், ஜீப், வேன்களில் செல்லும் போது ஃபாஸ்டேக் கண்டிப்பாக இருக்க வேண்டும். இது வரும் 15-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள் திருமலைக்கு செல்ல…
சென்னை: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி தோல்வியடையும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தையொட்டி, சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றினர். பெண்களுக்கு ரூ.1,000 தருவோம் என 2021-ல் அறிவித்துவிட்டு, மக்களவைத் தேர்தல் வரும் போதுதான் கொடுத்தனர். இப்போது மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை திமுகவுக்கு வேலை வாங்குகின்றனர். தாய்மொழிக் கல்வி, தமிழ் மொழி என்று எல்லாம் பேசுகின்றனர். 207 பள்ளிகளை மூடி இருக்கின்றனர். தமிழக பள்ளி மாணவர்களின் கல்வித்திறன் பின்னோக்கி போய் கொண்டிருப்பதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பு. அங்கு பாஜவினர் யாரும் இல்லை. சாதிய படுகொலை மட்டுமே தமிழகத்தில் நடக்கிறது. நாள் ஒன்றுக்கு நான்கு, ஐந்து படுகொலைகளாவது மாவட்டத்தில் இல்லாமல் இல்லை. அதற்கு காரணம் சட்டம் ஒழுங்கு…
புற்றுநோய் அல்லது தொற்று போன்ற நோய்களால் ஏற்படும் எலும்பு சேதம் உலகளாவிய உடல் அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது. உங்கள் உடல் ஓய்வெடுக்கும் போதிலும் சோர்வு அல்லது பலவீனத்தையும், காரணம் இல்லாமல் எடை இழப்பு, குறைந்த தர காய்ச்சலுடன் இரவு வியர்வையுடன் காட்டுகிறது.எலும்புகள் மற்றும் பிற திசுக்களை ஒரே நேரத்தில் பாதிக்கும் ஒரு தொடர்ச்சியான நோய்க்கு எதிராக உடல் போராடும்போது முறையான அறிகுறிகள் உருவாகின்றன.எலும்பு புற்றுநோய் அல்லது நோய்த்தொற்றுகள் வலி மற்றும் வீக்கம் போன்ற உள்ளூர்மயமாக்கப்பட்ட அறிகுறிகளுடன் இந்த அறிகுறிகளை உருவாக்கும்.எலும்பு தொடர்பான அச om கரியம் மற்றும் வீக்கத்துடன் தொடர்ச்சியான சோர்வு, எடை இழப்பு மற்றும் காய்ச்சலை நீங்கள் அனுபவிக்கும் போது உடனடி மருத்துவ மதிப்பீட்டைப் பெற வேண்டும்.கடுமையான எலும்பு நிலைமைகளை முன்கூட்டியே கண்டறிவது சிறந்த சிகிச்சை முடிவுகளுக்கும் மேம்பட்ட மீட்பு வாய்ப்புகளுக்கும் வழிவகுக்கிறது.ஆதாரங்கள்:இன்று மருத்துவ செய்தி: எலும்பு புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்புற்றுநோய் ஆராய்ச்சி யுகே: எலும்பு புற்றுநோயின் அறிகுறிகள்NHS: எலும்பு புற்றுநோயின்…
புதுடெல்லி: ஒடிசா, பஞ்சாப், ஆந்திர மாநிலங்களில் ரூ.4,600 கோடி மதிப்பில் செமிகண்டக்டர் ஆலைகளை அமைக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பிறகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் செமிகண்டக்டர்களை தயாரிப்பதற்கான சூழல் மேம்பட்டு வருகிறது. இதற்கான ஆறு அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் ஏற்கெனவே பல்வேறு கட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சிக்செம், காண்டினென்டல் டிவைஸ் இந்தியா (சிடிஐஎல்), 3டி கிளாஸ் சொல்யூஷன்ஸ் மற்றும் அட்வான்ஸ்டு சிஸ்டம் இன் பேக்கேஜ் (ஏஎஸ்ஐபி) டெக்னாலஜிஸ் ஆகிய நான்கு திட்டங்களுக்கான பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்புதல் அளிக்கப்பட்ட நான்கு திட்டங்களின் மதிப்பு சுமார் ரூ.4,600 கோடி ஆகும். இதன் மூலம் 2,034 திறமை வாய்ந்த நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும் இது, இந்தியாவின் மின்னணு உற்பத்தி சூழல் அமைப்பை…
சென்னை: இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டுவிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்துக்கான தொழில் முதலீடுகளை திரட்டுவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழு, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுவரை 4 கட்டங்களாக 5 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், அவற்றின் மூலம் ரூ.18,498 கோடி முதலீடும், ஸ்பெயின் தவிர்த்த பிற நாடுகளிலிருந்து கிடைக்கும் முதலீடுகளின் மூலமாக மட்டும் 28,516 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் கூறியிருந்தார். ஆனால், முதல்வர் உறுதியளித்தவாறு எதுவும் நடக்கவில்லை. அண்மையில், தூத்துக்குடியில் நடத்தப்பட்ட மண்டல முதலீட்டாளர்கள் மாநாடு உள்பட கடந்த நான்கரை ஆண்டுகளில் மொத்தம் ரூ.10.62 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதில் 10 சதவீதம் கூட தொழில் திட்டங்களாக மாற்றப்படவில்லை. கடந்த நான்கரை ஆண்டுகளில்…