சென்னை: தமிழகத்தில் 78 லட்சம் மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே ஆதார் புதுப்பித்தல் பணிகள் மேற்கொண்டதற்காக, பள்ளிக்கல்வித் துறைக்கு தேசிய சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இடைநிற்றலின்றி கல்வி பயில ஏதுவாக, ஊக்கத்தொகை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஊக்கத்தொகை பயனர்களுக்கு தாமதமின்றி சென்று சேருவதை உறுதிசெய்வதற்காக, நேரடி பயனர் பரிமாற்றம் (டிபிடி) திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன்மூலம், பயனர்களான மாணவர்களின் வங்கிக் கணக்குக்கே நேரடியாக உதவித் தொகை செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாணவர்கள் வங்கிக் கணக்கை தொடங்குவதற்கு ஆதார் எண் அவசியமாகும். அந்தவகையில், தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் ஆதார் அட்டை பெறுதல், புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பள்ளிகளிலேயே ஆதார் பதிவு திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை அமல்படுத்தியது. 2024 பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 78 லட்சத்து 45,608…
Author: admin
அஞ்சாத மன உறுதி, அசராத திறன், அற்புதமான பேட்டிங் தொழில்நுட்பத்தால் சென்னை ரசிகர்களை முதல் ஆட்டத்திலேயே கவர்ந்து இழுத்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே. மகாராஷ்டிர மாநிலம் விரார் பகுதியைச் சேர்ந்த ஆயுஷ் மாத்ரே, கடந்த 20-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் சிஎஸ்கே அணிக்காக முதல்முறையாக களமிறங்கி 15 பந்துகளில் 32 ரன்களை விளாசி அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை வசப்படுத்தியுள்ளார். முதல் போட்டியிலேயே மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை விளாசித்தள்ளி பயமறியா சிங்கம் என்பதை நிரூபித்துள்ளார் மாத்ரே. மேலும், சிஎஸ்கே அணிக்காக களமிறங்கிய மிக இளம் வயது வீரர்கள் பட்டியலில் முதலிடத்தையும் ஆயுஷ் மாத்ரே பிடித்துள்ளார். அவர் 17 வயது 278 நாட்களான நிலையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார். இதற்கு முன்பு, அபிநவ் முகுந்த் 18 ஆண்டு 139 நாட்களான நிலையில் களமிறங்கிய இளம் சிஎஸ்கே வீரர் என்ற பெயரைப் பெற்றிருந்தார். முதல்…
வாஷிங்டன்: அமெரிக்காவும், சீனாவும் வர்த்தக போரில் குதித்துள்ளன. இந்நிலையில் சீனா விற்பனையாளர்கள், தங்கள் வர்த்தக வியூகத்தை மாற்றி விளம்பரம் செய்யத் தொடங்கியுள்ளனர். அமெரிக்காவில் விற்பனையாகும் பிர்கின் மற்றும் லூயிஸ் உய்ட்டன் போன்ற பிரபல பிராண்டுகளின் கைப்பைகள், ஆடைகள், அழகுசாதன பொருட்களை லோகோ இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக மலிவு விலையில் விற்பனை செய்வதாக சீன நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பிர்கின் பிராண்ட் கைப்பைகளை விநியோகிக்கும் ஒருவர் கூறுகையில், ‘‘34,000 அமெரிக்க டாலருக்கு விற்கப்படும் கைப்பையின் தயாரிப்பு செலவு 1,400 டாலர்தான். பிரபல பிராண்டுகளின் பொருட்களை தயாரிக்கும் எங்களுக்கு குறைந்த லாபம்தான் கிடைக்கிறது. லாபத்தில் பெரும்பங்கை லோகோ மற்றும் பிராண்ட் நிறுவனங்கள் பெறுகின்றன. 90 சதவீதத்துக்கு அதிகமான விலை லோகோ மற்றும் பிராண்ட்டுக்காக நீங்கள் செலவு செய்கிறீர்கள். அதைப்பற்றி நீங்கள் கவலைப்படவில்லையென்றால், அதே அளவு தரமான பொருட்களை நீங்கள் எங்களிடம் மலிவு விலையில் பெறலாம்’’ என டிக்டாக் வீடியோவில் சீன வியாபாரி ஒருவர் கூறுகிறார். 100…
திருவாரூர்: ‘ஆரூரா தியாகேசா’ கோஷங்கள் முழங்க திருவாரூர் ஆழித் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த தேரோட்ட விழாவையொட்டி திருவாரூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர்! திருவாரூர் சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி பெருவிழாவின் முக்கிய விழாவான ஆழி தேரோட்ட விழா இன்று (ஏப்.7) திருவாரூரில் நடைபெற்று வருகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமையைக் கொண்ட உலக பிரசித்தி பெற்றது. இத்தகைய சிறப்புமிக்க தேரோட்டமானது இன்று காலை 9.01மணிக்கு தொடங்கியது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர்வடத்தை பிடித்து இழுக்க, ஆழித்தேர் நிலையடியிலிருந்து புறப்பட்டது. ஆழித்தேர் புறப்பட்டபோது, ‘ஆரூரா தியாகேசா’ என பக்தி முழக்கமிட்டு ஆரவாரத்துடன் பக்தர்கள் உற்சாகமாக தேரினை வடம் பிடித்து…
’மாமன்னன்’ படத்தில் தனது சீரியசான கதாபாத்திரம் பெற்றுத் தந்த நல்ல வரவேற்புக்குப் பிறகு வடிவேலு காமெடியனாக நடித்த ‘சந்திரமுகி 2’ பெரியளவில் பேசப்படவில்லை. 2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஒரு முழுமையான காமெடி ரோலில் மீண்டும் வடிவேலு களமிறங்கியுள்ள படம்தான் ‘கேங்கர்ஸ்’. இன்னொருபுறம் ‘மதகஜராஜா’ வெற்றிக்குப் பிறகு சுந்தர்.சி இயக்குநராக களமிறங்கியுள்ள இப்படம் ‘வின்னர்’, ‘லண்டன்’, ‘கிரி’ படங்களில் இருந்த சுந்தர்.சி – வடிவேலு மேஜிக்கை திரும்ப கொண்டு வந்ததா என்று பார்க்கலாம். அரசன்கோட்டை என்னும் ஊரில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவி திடீரென காணமல் போகிறார். அதே பள்ளி ஆசிரியயையாக பணிபுரியும் சுஜி (கேதரீன் தெரசா) மாணவி குறித்தும், அப்பள்ளியின் தாளாளர்கள் (மைம் கோபி, அருள்தாஸ்) செய்யும் சட்டவிரோத தொழில்கள் குறித்தும் முதல்வரின் தனிப் பிரிவுக்கு புகார் செய்கிறார். இதனையடுத்து அந்தப் பள்ளிக்கு ஆசிரியராக ஒரு போலீஸார் அண்டர்கவர் ஆபரேஷனுக்கு அனுப்பப்படுகிறார். அதே பள்ளிக்கு புதிய பி.டி.மாஸ்டராக…
புதுச்சேரி: வெயில் தாக்கம் அதிகரிப்பால் புதுச்சேரி, காரைக்கால் உட்பட நான்கு பிராந்தியங்களிலும் அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறையை கல்வியமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். புதுவையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளது. சிபிஎஸ்இ விதிப்படி புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு அடுத்த கல்வியாண்டு நடந்து வருகிறது. ஏப்.1ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு ஏப்.30ம் தேதி வரை தொடர்ந்து வகுப்புகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வெயிலின் தாக்கம் புதுவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில்கொண்டு அரசு பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கல்வியமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், “அதிகரித்து வரும் கோடை வெயில் தாக்கத்தால் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் உள்ள அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை முதல் ஜூன் மாதம் 1ம்…
மத்திய அரசின் சமீபத்திய நடவடிக்கைகளால் அச்சமடைந்துள்ள பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர், “நான் இந்தியாவின் மருமகள், என்னை இங்கேயே இருக்க அனுமதிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 2023, ஜூலையில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தவர் சீமா ஹைதர். பாகிஸ்தானின் சிந்து மாகாணம், கராச்சி நகரை சேர்ந்த இவர் தனது இந்திய காதலர் சச்சின் மீனாவை திருமணம் செய்துகொள்வதற்காக பாகிஸ்தானை விட்டு வெளியேறினார். ஏற்கெனவே திருமணமான சீமா ஹைதர், 4 குழந்தைகளுக்கு தாய் ஆவார். இந்நிலையில் தனது 4 குழந்தைகளுடன் நேபாளம் வழியாக சட்டவிரோதாக இந்தியாவுக்குள் நுழைந்தார். உ.பி.யின் கவுதம புத்தர் நகர் மாவட்டம், ரபுபுரா பகுதியில் தனது காதலர் சச்சின் மீனாவுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவரை கடந்த 2023 ஜூலையில் அதிகாரிகள் பிடித்தனர். தற்போது உ.பி.யின் கிரேட்டர் நொய்டாவில் சச்சினுடன் சீமா வசித்து வருகிறார். இந்நிலையில் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை ஏப்ரல் 27 முதல்…
இந்தியாவில் பசுமைப் புரட்சி வெற்றியடைந்ததில் வானொலியின் பங்கும் முக்கியமானது. அதிக மகசூல் தரும் நெல், கோதுமை ரகங்களைப் பயிரிடும் தேசிய அளவிலான திட்டம் 1966இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அவற்றை எப்படிப் பயிரிடுவது, அதற்கான பருவம், அறுவடை போன்ற தகவல்கள் விவசாயிகள் அறிந்துகொள்ளும் வகையில் அகில இந்திய வானொலியின் மண்டல ஒலி பரப்பு நிலையங்கள் மூலம் ஒலிபரப்பப்பட்டன. அந்தத் திட்டம் வெற்றியும் கண்டது. அரசின் வானொலி அறிவிப்பைப் பின்பற்றி தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏடிடி-27 ரக நெல் அன்றைக்குப் பயிரிடப்பட்டு வெற்றிகரமாக மகசூல் கண்டதால் அந்த நெல் ரகத்தை ‘ரேடியோ நெல்’ என்றே அழைத்தார்கள். 1960 முதல் 1970 வரை கிராமப்புற வளர்ச்சியில் வானொலியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. மக்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து வானொலியைக் கேட்கும் ‘கிராமப்புற வானொலி மன்றங்கள்’ திட்டத்தை ‘யுனெஸ்கோ’ ஊக்குவித்தது. இந்தியாவைத் தொடர்ந்து கானா, தான்சானியா, தாய்லாந்து போன்ற நாடுகள் கிராமப்புற வானொலி மன்றத் திட்டத்தைப் பின்பற்றின.…
சென்னை: பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்துதல் பணியின்போது தினமும் 24 தாள்களை மட்டும் வழங்க வேண்டுமென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறை காட்டும் பாரபட்சமான நடவடிக்கையை மாற்ற வேண்டும். தற்போது 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒவ்வொரு முதன்மை தேர்வாளரின் கீழ் 6 உதவி தேர்வாளர்கள் (AE) மற்றும் ஒவ்வொரு உதவி தேர்வாளருக்கும் ஒரு நாளைக்கு 24 விடைத்தாள்கள் மதிப்பீடு செய்ய வழங்கப்படுகின்றன. அதேநேரம் 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் ஒவ்வொரு முதன்மை தேர்வாளருக்கு 10 உதவி தேர்வாளர்களும், ஒவ்வொரு உதவி தேர்வாளருக்கும் தினமும் 30 விடைத்தாள்களும் கொடுக்கப்படுகின்றன. மேலும், 12-ம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு செய்யும்…
மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 2028-ம் ஆண்டு சீசனில் ஆட்டங்களின் எண்ணிக்கையை 74-ல் இருந்து 94 ஆக அதிகரிக்க பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருவதாக ஐபிஎல் சேர்மன் அருண் துமால் தெரிவித்துள்ளார். 2028-ம் ஆண்டு முதல் ஐபிஎல் சீசனை 94 போட்டிகளுக்கு விரிவுபடுத்துவது குறித்து பிசிசிஐ தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அதேவேளையில் புதிய அணிகளை சேர்க்கும் திட்டம் எதுவும் இல்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2022-ம் ஆண்டு சீசனில் புதிதாக குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் அறிமுகமாகின. இதனால் ஐபிஎல் தொடர் 60 ஆட்டங்களில் இருந்து 74 ஆட்டங்களாக அதிகரித்தது. நடப்பு சீசனில் கூட போட்டிகளின் எண்ணிக்கையை 74-ல் இருந்து 84 ஆக அதிகரிக்கும் திட்டம் இருந்தது. ஆனால் அட்டவணை திட்டமிடலில் ஏற்பட்ட தாமதம் மற்றும் ஒரே நாளில் 2 போட்டிகள் அதிகம் நடத்தப்படுவதை ஒளிபரப்பாளர்கள் விரும்பாததால் 84 போட்டிகளை நடத்தும் திட்டம் சாத்தியப்படவில்லை. எனினும்…