மென்லோ பார்க்: சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் நிறுவனம் சில முக்கிய அப்டேட்களை அறிவித்துள்ளது. அதன்படி இப்போது ரீல்ஸ் பதிவுக்கான நேரம் மூன்று நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் போட்டோ மற்றும் வீடியோ ஷேரிங் சமூக வலைதளம்தான் இன்ஸ்டாகிராம். கடந்த 2010-ல் தொடங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் மெட்டா (அப்போது ஃபேஸ்புக்) அதனை வாங்கியது. இன்று உலக அளவில் மாதந்தோறும் சுமார் 1 பில்லியன் ஆக்டிவ் பயனர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்தி வருவதாக தெரிகிறது. இந்த தளத்தில் பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்துக்காக அவ்வப்போது புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் ரீல்ஸ்களுக்கான நேரம் மூன்று நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், சதுர வடிவிலான ப்ரொபைல் கிரிட் இப்போது செவ்வக (ரெக்டேங்குலர்) வடிவ மாற்றம் மற்றும் நண்பர்களுக்கு லைக் செய்த ரீல்ஸ்களைக் ஷோ செய்வது போன்ற அம்சங்கள் தற்போதைய அப்டேட்களாக மெட்டா வழங்கியுள்ளது. இருப்பினும் ரீல்ஸ் நேரம் நீட்டிப்பை தவிர மற்ற இரண்டு…
Author: admin
சென்னை: இன்று (ஏப்.1) நடைபெறுவதாக இருந்த முதல் ஆண்டு பிஎட், மற்றும் 2-ம் ஆண்டு எம்எட் செமஸ்டர் தேர்வுகள், ஏப்ரல் 8-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) பி.கணேசன், அனைத்து கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பிஎட், எம்எட் செமஸ்டர் தேர்வுகள், கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஏப்ரல் 1-ம் தேதி (இன்று செவ்வாய்க்கிழமை) நடைபெறுதாக அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகள் (பிஎட் முதல் ஆண்டு மற்றும் எம்எட் 2-ம் ஆண்டு) நிர்வாக காரணங்களால் ஏப்ரல் 8-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகின்றன. தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டிருப்பது குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தகவல் தெரிவிக்குமாறும், மாற்று தேதியில் தேர்வுகளை நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறும் கல்லூரிகளின் முதல்வர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். ஏப்ரல் 2 முதல் 7-ம் தேதி வரை நடைபெற உள்ள தேர்வுகளில்…
மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது சிஎஸ்கே அணி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே 5 விக்கெட்கள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 35 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்களும், ஷிவம் துபே 32 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன 50 ரன்களும் சேர்த்தனர். அறிமுக வீரராக களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே 15 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் விளாசி கவனம் ஈர்த்தார். தொடக்க வீரர்களான ஷெய்க் ரஷித் 19, ரச்சின் ரவீந்திரா 5, தோனி 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். மும்பை அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 2 விக்கெட்களை வீழ்த்தினார். 177 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மும்பை அணி 15.4 ஒவர்களில்…
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஹட்சன் ஆற்றில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சுற்றுலா ஹெலிகாப்டர் ஒன்று பறந்து கொண்டிருந்தது. ஹட்சன் ஆற்றின் மீது ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக திடீரென ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து நொறுங்கியது. இதில் பைலட் உள்பட 6 பேர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இந்த விபத்தில் உயிரிழந்த சுற்றுலா பயணிகள் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. இறந்தவர்கள் ஸ்பெயின் நாட்டின் சீமன்ஸ் நிறுவனத்தின் சிஇஓ அகஸ்டின் எஸ்கோபார், அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன. ஆனால் இதை இன்னும் அரசு உறுதிப்படுத்தவில்லை. ஹெலிகாப்டர் புறப்பட்ட 18 நிமிடங்களிலேயே இந்த விபத்து நடந்துள்ளது. அதிலிருந்தவர்கள் சுதந்திர தேவி சிலை உள்ளிட்டவற்றை சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பும் போது இந்த விபத்து நடந்துள்ளதாகவும், உயிரிழந்த…
புனித ரமலான் மாதம் நோன்பு நோற்று முடித்த பின் இஸ்லாமியர்கள் கொண்டாடும் பெருநாள் ‘ஈதுல் ஃபித்ர்’ என்று அழைக்கப்படுகிறது. ‘ஈது’ என்ற வார்த்தைக்கு ‘பெருநாள்’ என்றும், ‘பித்ர்’ எனும் அரபிச் சொல்லுக்கு ‘நோன்பை விடுதல்’ என்றும் பொருள் கொள்ளலாம். நோன்பு முடிந்ததின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முகமாக, இஸ்லாமிய சகோதரர்கள் ஷவ்வால் மாதத்தின் பிறை தென்பட்டவுடன் ‘சதகத்துல் ஃபித்ர்’ எனும் ஏழைகளுக்கு வழங்க வேண்டிய தர்மத்தை வழங்கத் தொடங்குவர். தெரிந்தோ தெரியாமலோ நோன்பில் ஏற்பட்ட சிறு தவறுகள் இந்த ஃபித்ர் தர்மத்தால் நீக்கப்பட்டு நோன்பு முழுமை பெறும். பெருநாள் அன்று அதிகாலை துயிலெழுந்து வழக்கம்போல் ஃபஜ்ர் என்னும் வைகறைத் தொழுகை முடித்து, நேரத்தோடு குளித்து, புத்தாடையணிந்து, பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவர். தொழுகை முடிந்ததும், ஆனந்தப் பேருவுவகையால் ஒருவரை யொருவர் ஆரத்தழுவி அன்பையும் வாழ்த்துகளையும் பரிமாறிக்கொள்வர். உறவினர்களின் வீடுக ளுக்குச் செல்வர், மதியம் சிறந்த உணவை சமைத்து உண்பர். வெளிப் படையாக பார்த்தால்,பெருநாள் என்பது…
நடிகர் சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம், ‘சுமோ’. ஹோசிமின் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சதீஷ், விடிவி கணேஷ், யோகிபாபு, ஜப்பானைச் சேர்ந்த சுமோ மல்யுத்த வீரர் யோஷினோரி தஷிரோ முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்துள்ளார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். வரும் 25-ம் தேதி வெளியாகும் இந்தப் படம் பற்றி யோஷினோரி தஷிரோ கூறியதாவது: நான் 170 கிலோ எடை கொண்டவன். இந்தியாவில் சில விளம்பர படங்களில் நடித்திருக்கிறேன். நான் நடிக்கும் முதல் சினிமா இது. குழந்தைகளை மையப்படுத்தி அவர்களுக்காக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜப்பானிலும் தமிழ்நாட்டிலும் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. மாமல்லபுரத்தில் படப்பிடிப்பு நடைபெற்ற போது, அங்குள்ள வெண்ணெய் உருண்டை பாறையைப் பார்த்து வியந்தேன். அதைத் தள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. சென்னையில் இட்லி, தோசை எனக்கும் பிடித்த உணவுகள். எப்போதும் பட்டர் சிக்கன் எனக்குப்…
சென்னை: “எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த அவலங்களையும், அக்கப்போர்களையும் எப்படி மறக்க முடியும். தமிழக வரலாற்றில் பழனிசாமியின் நான்கரை ஆண்டு காலம் இருண்டகாலமாகத்தான் இருந்தது. அரசியலின் கரும்புள்ளி நீங்கள். இனி எந்தக் காலத்திலும் தமிழகத்தில் ஆட்சியை மட்டுமல்ல தமிழக மக்களின் மனங்களையும் பிடிக்கவே முடியாது.” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டம் ஒழுங்கு குறித்து சட்டமன்றத்தில் பழனிசாமி சொன்ன பொய்க் குற்றச்சாட்டுகளை தமிழக முதல்வர் புள்ளிவிவரங்களுடன் தோலுரித்தார். பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி, துயரங்களைக் கொடுக்கக்கூடிய ஆட்சிக்கு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடே சாட்சி. அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி, என அதிமுகவின் அவல ஆட்சியைப் பற்றி முதல்வர் சொன்ன உண்மைகளுக்கு பதில் சொல்ல திராணி இல்லாமல் பழனிசாமி வழக்கம் போலவே திமுகவை வசைபாட கிளம்பியிருக்கிறார். கரப்ஷன் ஆட்சியை நடத்திய பழனிசாமி, அடுத்த வெர்ஷன் பற்றியெல்லாம் பேசலாமா? பாஜக கூட்டணியில் சேர்ந்த…
புதுடெல்லி: இந்தியாவில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய சவுதி அரேபியா முடிவு செய்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்று அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஏப். 22) சவுதி அரேபியாவுக்குச் சென்றார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து அவர் தனது இரண்டு நாள் பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு இன்று அதிகாலை தாயகம் வந்தடைந்தார். இந்நிலையில், பிரதமரின் சவுதி அரேபியா பயணத்தால் ஏற்பட்டுள்ள பலன்கள் குறித்த பட்டியலை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்தியா-சவுதி அரேபியா பாதுகாப்பு கூட்டாண்மைக் குழுமத்தின் இரண்டாவது கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மான் ஆகியோரது கூட்டுத் தலைமையில் ஏப்ரல் 22-ம் தேதி ஜெட்டாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், கலாச்சாரம், மக்கள்…
சபியாசாச்சியின் 25 புகழ்பெற்ற ஆண்டுகளைக் கொண்டாடும் பாலிவுட்டின் காதலி ஆலியா பட் ஒரு நவீன அருங்காட்சியகத்தின் சாரத்தை வடிவமைப்பாளரின் சின்னமான படைப்புகளில் ஒன்றில் மாற்றினார். ஒரு பணக்கார கருப்பு முர்ஷிதாபாத் பட்டு சேலையில் மூடப்பட்டிருக்கும், ஆலியா அதை துணியால் மிகக் குறைவாக வைத்திருந்தார், ஆனால் அவளது பெரிதும் அலங்கரிக்கப்பட்ட மைக்ரோ சோலி ரவிக்கை மூலம் ஒரு தைரியமான அறிக்கையை வெளியிட்டார். டீப் வி-நெக்லைன் சிக்கலான ரத்தின விவரங்களுடன் திகைத்துப்போனது, இதில் குவார்ட்ஸ், புள்ளியிடப்பட்ட ஓனிக்ஸ், மெருகூட்டப்பட்ட அகேட்ஸ் மற்றும் பிற சாக்லேட் போன்ற கையொப்பக் கற்கள் உள்ளன, அவை தோற்றத்திற்கு செழுமையையும் தெளிவற்ற சப்யாசாச்சி அழகையும் தொடுகின்றன.(பட வரவு: Pinterest)
ஏப்ரல் 24, 2025 அன்று, ஸ்பேஸ்எக்ஸின் பால்கான் 9, இது மீண்டும் பயன்படுத்தக்கூடிய இரண்டு-நிலை ராக்கெட் ஏவுகணை வளாகம் 40 (எல்.சி -40), கேப் கனாவெரல் விண்வெளி படை நிலையத்தில் தயாராக இருந்தது. இந்த மிஷன், ஸ்டார்லிங்க் 6-74, ஸ்பேஸ்எக்ஸின் 47 வது பால்கான் 9 ஆண்டின் விமானத்தை குறித்தது மற்றும் அதன் வளர்ந்து வரும் குறைந்த பூமி சுற்றுப்பாதை (லியோ) இணைய விண்மீன் கூட்டத்தை விரிவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. (வரவு: ஸ்பேஸ்எக்ஸ்)