ஏப்ரல் 24, 2025 அன்று, ஸ்பேஸ்எக்ஸின் பால்கான் 9, இது மீண்டும் பயன்படுத்தக்கூடிய இரண்டு-நிலை ராக்கெட் ஏவுகணை வளாகம் 40 (எல்.சி -40), கேப் கனாவெரல் விண்வெளி படை நிலையத்தில் தயாராக இருந்தது. இந்த மிஷன், ஸ்டார்லிங்க் 6-74, ஸ்பேஸ்எக்ஸின் 47 வது பால்கான் 9 ஆண்டின் விமானத்தை குறித்தது மற்றும் அதன் வளர்ந்து வரும் குறைந்த பூமி சுற்றுப்பாதை (லியோ) இணைய விண்மீன் கூட்டத்தை விரிவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. (வரவு: ஸ்பேஸ்எக்ஸ்)
Author: admin
பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷனை (எஃப்.பி.ஐ) வழிநடத்த அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய-அமெரிக்க வழக்கறிஞர் காஷ் படேல், அவர் ஒரு இலக்கு என்று பணியகம் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது ஈரானிய ஹேக்கிங் செயல்பாடு, இந்த விஷயத்தை நன்கு அறிந்த வட்டாரங்கள் சி.என்.என். படேலின் சில தகவல்தொடர்புகளுக்கான அணுகலை ஹேக்கர்கள் பெற்றிருக்கலாம்.ட்ரம்பின் மாற்றம் செய்தித் தொடர்பாளர் அலெக்ஸ் பிஃபர், குறிப்பாக ஹேக் மீது கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார், “காஷ் படேல் முதல் முக்கிய பகுதியாக இருந்தார் டிரம்ப் நிர்வாகம்பயங்கரவாத ஈரானிய ஆட்சிக்கு எதிரான முயற்சிகள் மற்றும் அமெரிக்காவை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க ஜனாதிபதி டிரம்பின் கொள்கைகளை செயல்படுத்தும் எஃப்.பி.ஐ இயக்குனர். ”ட்ரம்பின் கொள்கைகளை வடிவமைப்பதில் படேல் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார் ஈரான் மற்றும் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது தேசிய பாதுகாப்பு அவரது புதிய பாத்திரத்தின் கீழ்.இந்த வளர்ச்சி பல நிகழ்வுகளைப் பின்பற்றுகிறது வெளிநாட்டு ஹேக்கிங் டிரம்ப் கூட்டாளிகளை குறிவைத்து.…
புதுடெல்லி: காஜி , காஜியத், ஷரியா முதலான இஸ்லாமிய நீதிமன்றங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை. அவை பிறப்பிக்கும் உத்தரவுகள் யாரையும் கட்டுப்படுத்தாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. இஸ்லாமிய பெண் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். கணவர் பைக் உடன் ரூ.50,000 வரதட்சிணை கேட்டு தொந்தரவு செய்துள்ளார். எதுவும் கிடைக்காததால் காஜியாத் நீதிமன்றம் மூலம் தலாக் பெற்றுள்ளார். அதன்பின் விவகாரத்து பெற்ற பெண், ஜீவனாம்சம் கோரி குடும்ப நல நீதிமன்றத்தை நாடியுள்ளார். இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பதால், தனியாக வாழ்வதற்கு மனைவியே காரணம் என கூறி ஜீவனாம்சம் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. அலகாபாத் உயர் நீதிமன்றமும் ஜீவனாம்சக் கோரிக்கையை நிராகரித்ததால், அந்தப் பெண் பின்னர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த மனு நீதிபதிகள் சுதான்சு துலியா, அஷானுதீன் அமனுல்லா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றம் 2014-ல் வழங்கிய தீர்ப்பை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், “காஜி…
வாஷிங்டன்: தேசத்தின் பாதுகாப்பு காரணமாக அமெரிக்காவில் நேற்றைய தினம் டிக்டாக் செயலியின் சேவை தடை செய்யப்பட்டது. இந்த சூழலில் அந்த செயலி தடையை தகர்த்து மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் பின்னணியில் அதிபராகும் டொனால்ட் ட்ரம்ப் உள்ளதாக தெரிகிறது. அதை குறிப்பிடும் வகையில் டொனால்ட் ட்ரம்புக்கு டிக்டாக் தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சி பொறுப்பில் இருந்து வெளியேறும் ஜோ பைடன் தலைமையிலான அரசு, டிக்டாக் செயலியை தடை செய்யும் சட்டத்தை அமல் செய்தது குறிப்பிடத்தக்கது. ட்ரம்ப், இன்று ஆட்சி ஏற்கும் நிலையில் இது நடந்துள்ளது கவனிக்கத்தக்கது. அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக உள்ள வீடியோ ஷேரிங் தளங்களில் டிக்டாக் செயலி முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் சீனர்கள் உரிமை கொண்டுள்ள டிக்டாக்கின் தாய் நிறுவனமான ‘பைட் டேன்ஸ்’ நிறுவனத்தின் அமெரிக்க துணை நிறுவன உரிமை சீனர்கள் அல்லாதவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்ற உத்தரவுக்கான காலக்கெடு நேற்றோடு நிறைவடைந்தது. இந்த உத்தரவை முந்தைய பைடன் அரசு…
சென்னை: பாலிடெக்னிக் டிப்ளமா படித்த மாணவர்கள் தொழில்பயிற்சியுடன் கூடிய பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.12 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுரம் உறுப்பு பொறியியல் கல்லூரியில் எச்.எல். மண்டோ ஆனந்த் இந்தியா நிறுவனத்தின் முழு உதவியுடன் பி.இ. எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் என்ற தொழில்பயிற்சியுடன் கூடிய பொறியியல் படிப்பு வழங்கப்படுகிறது. இந்த 4 ஆண்டு கால பட்டப் படிப்பில் பாலிடெக்னிக் டிப்ளமா ( எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், இசிஇ, மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, ஆட்டோ மொபைல்) முடித்தவர்கள் சேரலாம். டிப்ளமா படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அவசியம். இப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு படிக்கும் போதே தொழில் பயிற்சியுடன் மாதம் தோறும் ரூ.12 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். அதோடு கல்விக்கட்டணம், உணவு, போக்குவரத்து , மருத்துக் காப்பீடு ஆகிய அனைத்து…
கராச்சி: இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போல பாகிஸ்தான் நாட்டில் பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் நடைபெற்று வருகிறது. இந்த லீகில் முதல் முறையாக பங்கேற்று விளையாடி வருகிறார் ஆஸி. ஜாம்பவான் டேவிட் வார்னர். கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர், முதல் முறையாக இந்த லீகில் அரை சதம் பதிவு செய்துள்ளார். 38 வயதான அவர், உலக அளவில் நடைபெறும் டி20 லீக் தொடர்களில் விளையாடி வருகிறார். 2009 முதல் 2024-ம் ஆண்டு சீசன் வரையில் ஐபிஎல் அரங்கில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிக்காக விளையாடி உள்ளார். அவர் தலைமையில் 2016-ம் ஆண்டு சீசனில் சாம்பியன் பட்டம் வென்றது ஹைதராபாத். இந்நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனை முன்னிட்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. இந்த சூழலில் பாகிஸ்தான் சூப்பர் லீகில் பங்கேற்று விளையாடும் வகையில் அவர் தனது பெயரை பதிவு செய்தார். அவரை கராச்சி…
வாஷிங்டன்: அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பரஸ்பர வரிகளைத் தவிர்க்க அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும் என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த ஸ்காட் பெசென்ட், “எங்கள் ஆசிய வர்த்தக கூட்டாளிகளுடனான பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாக நடந்து வருகின்றன. துணைத் தலைவர் ஜே.டி.வான்ஸ் கடந்த வாரம் இந்தியாவில் இருந்தார். கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது குறித்துப் பேசினார். கொரிய குடியரசுடனான பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாக நடந்ததாக நான் குறிப்பிட்டுள்ளேன். மேலும், ஜப்பானுடன் நாங்கள் கணிசமான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம் என்று நான் நினைக்கிறேன். பல நாடுகள் சில நல்ல திட்டங்களை முன்வைத்துள்ளன. அவற்றை நாங்கள் மதிப்பீடு செய்கிறோம். நாங்கள் கையெழுத்திடும் முதல் வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். சீன விவகாரத்தைப் பொருத்தவரை, அந்த நாடுதான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை…
சென்னை: தமிழகத்தில் இன்று (மார்ச் 31) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இஸ்லாமிய மக்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். முன்னதாக அரசு தலைமை காஜி வெளியிட்ட அறிவிப்பில், “ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) மாலை ஷவ்வால் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்பட்டது. எனவே, திங்கட்கிழமை (இன்று) ஷவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில், திங்கட்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்’ என தெரிவித்திருந்தார். அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் பரவலாக ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து: முன்னதாக, ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் முஸ்லிம் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில், “பொய்மை, ஆடம்பரம் இவற்றைத் தவிர்த்து…
லாஸ் ஏஞ்சல்ஸ்: தனது நீண்டநாள் தோழியான டைலன் மேயரை திருமணம் செய்து கொண்டார் நடிகை கிறிஸ்டன் ஸ்டீவர்ட். ஹாலிவுட்டில் ‘ட்விலைட்’ படங்களின் மூலம் பெரும் பிரபலமானவர் கிறிஸ்டன் ஸ்டீவர்ட். அப்படத்தில் நடித்த ராபர்ட் பட்டின்சனை நான்கு ஆண்டுகள் காதலித்து வந்தார். அதன்பிறகு இருவருக்கும் சில காரணங்களால் பிரேக் அப் ஆனது. கடந்த 2017ஆம் ஆண்டுதான் ஒரு பைசெக்சுவல் என்று அறிவித்தார் நடிகை கிறிஸ்டன் ஸ்டீவர்ட். திரைக்கதை எழுத்தாளரும் நடிகையுமான டைலன் மேயருடன் தான் ரிலேசன்ஷிப்பில் இருப்பதாக 2019ஆம் ஆண்டு கிறிஸ்டன் ஸ்டீவர்ட் அறிவித்தார். கடந்த 2021ஆம் ஆண்டு இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்திக் கொண்டனர். இந்த நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஸ்டீவர்ட்டின் வீட்டில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஒருவாரத்துக்கு முன்பே இருவரும் தங்கள் திருமணத்தை பதிவு செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்கும் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, கடந்த 2021ஆம் ஆண்டு நிகழ்ச்சி…
விழுப்புரம்: திமுக ஆட்சியின் இந்த கூட்டத்தொடரை உறுதியாக நம்பி இருந்த பகுதிநேர ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் தெரிவித்துள்ளது. பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி 2023-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்கள் போராட்டம் நடத்திய பின்னர் ரூ.2,500 சம்பள உயர்வு மற்றும் மருத்துவ காப்பீடு 10 லட்சம் வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால் 2024-ம் ஆண்டு சம்பள உயர்வு 2,500 ரூபாய் மட்டும் வழங்கப்பட்டதால் ரூ.12,500 சம்பளம் வழங்கப்படுகிறது. மே மாதம் சம்பளம் 2012-ம் ஆண்டு இந்த வேலைக்கு சேர்ந்தது முதல் இருந்து வழங்கப்படவில்லை. மேலும் வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு, போனஸ் உள்ளிட்ட அரசு சலுகைகளும் இதுவரை கிடையாது.13 ஆண்டுகள் கடந்து தற்போது 14-வது ஆண்டிலும் இன்னும் தொகுப்பூதியத்தில் உள்ளதை இனிமேலாவது காலமுறை சம்பளத்திற்கு மாற்றினால் தான் அரசு சலுகைகள், பணி…