2017 ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். அப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் சில நொடிகளே வரும் ஒரு காட்சியின் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். சமூக வலைதளங்களில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பல லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். அண்மையில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 90களில் சிம்ரன் ஆடிய ஹிட் பாடலான ‘தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா’ பாடலுக்கு இப்படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர் நடனமாடியிருந்தார். சிம்ரனின் நடனத்தை அப்படியே ரீகிரியேட் செய்திருப்பதாக ரசிகர்கள் பலரும் பிரியா பிரகாஷ் வாரியரை பாராட்டி வருகின்றனர்.
Author: admin
சென்னை: காவல் துறையினருக்கு வாரம் ஒரு நாளாவது விடுமுறை வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை மாநில அரசு எந்த காரணமும் சொல்லாமல் அப்படியே அமல்படுத்த வேண்டும் என்று தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம ஸ்ரீநிவாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவல் துறை மீது எனக்கு எப்போதுமே ஒரு நல்லெண்ணம் உண்டு. காரணம், அவர்களுக்கு இருக்கும் கடுமையான பணிச் சூழல். எப்போதுமே நெருக்கடியில் இருக்கக்கூடியவர்கள் அவர்கள். எந்த உடல் கஷ்டங்களையும் வெளியில் சொல்லி ஓய்வெடுத்துக் கொள்ள முடியாத நிலையில் இருப்பவர்கள். போதை கலாச்சாரம், பயங்கரவாதம், அதிகரித்து வரும் கிரிமினல்களின் ஆதிக்கம், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஆகியவற்றுக்கு இடையே, மனித உரிமைகளையும் காப்பாற்ற வேண்டிய ஒரு கட்டாயம். அதோடு, ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்கள் என்கிற குற்றச்சாட்டு. இவை எல்லாம் காவல்துறை சந்தித்து வரும் நெருக்கடிகள். அவர்களுக்கு வாரம் ஒரு நாளாவது விடுமுறை என்பது தான் அந்தப்…
புதுடெல்லி: இந்தியக் கடற்படைக்கு 26 ரஃபேல்-மரைன் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இந்தியா – பிரான்ஸ் அரசுகளுக்கு இடையே இன்று (திங்கள்கிழமை) கையெழுத்தானது. இதில் 22 ஒற்றை இருக்கை விமானங்களும் 4 இரட்டை இருக்கை விமானங்களும் அடங்கும். இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியக் கடற்படைக்கு 26 ரஃபேல்-மரைன் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இந்தியா – பிரான்ஸ் அரசுகளுக்கு இடையே இன்று (திங்கள்கிழமை) கையெழுத்தானது. இதில் 22 ஒற்றை இருக்கை விமானங்களும் 4 இரட்டை இருக்கை விமானங்களும் அடங்கும். இந்த ஒப்பந்தத்தில் பயிற்சி அளித்தல், உபகரணங்கள், சிமுலேட்டர், ஆயுதங்கள் மற்றும் செயல்திறன் அடிப்படையிலான போக்குவரத்து ஆகியவை உள்ளடங்கும். இதில் இந்திய விமானப்படையின் தற்போதுள்ள ரஃபேல் விமானங்களுக்கான கூடுதல் உபகரணங்களும் அடங்கும். இந்த ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், பிரான்ஸ் ஆயுதப்படைகள் துறை அமைச்சர் செபாஸ்டியன் லெகார்னுவும் கையெழுத்திட்டுள்ளனர். ஒப்பந்தத்தின் கையொப்பமிடப்பட்ட நகல்கள், இன்று (2025 ஏப்ரல் 28) புதுடெல்லியில்…
அறிவியல் தொழில்நுட்பம் முன்னேறிச் சென்று கொண்டிருக்கும் அதேநேரத்தில் உண்மைக்கு முரணான போலியான அறிவியலும் வளர்ந்துவருகிறது. குறிப்பாகச் சமூக வலைதளங்களில் எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லாமல் போலியான தகவல்களைப் பொதுத் தளத்தில் பகிரும் போக்கு அதிகரித் துள்ளது. ஒரு நோய் பரவுகிறது என்றால், அந்த நோய் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு எதனால் அந்த நோய் ஏற்படுகிறது, அந்த நோயைத் தடுக்கும் வழிகள் என்னென்ன என்பதைக் கண்டறிந்து, உண்மைத் தரவுகளின் அடிப்படையில் நோயை அணுகுவது அறிவியல். ஆனால், போலி அறிவியல் மூட நம்பிக்கைகளால் கட்டமைக்கப்படுகிறது. உறுதிப்படுத்தப்படாத தகவல்களைக் கொண்டு, மக்களைத் தவறாக வழிநடத்துவதே போலி அறிவியல். அதாவது, பகுத்தறிந்து ஒரு செய்தியைத் தெரிவிக்காமல், குழப்பத்தையும் தவறான புரிதலையும் ஏற்படுத்த முயல்வதே போலி அறிவியல். மருத்துவத் துறையில் மட்டுமல்லாமல், பல்வேறு துறைகளில் உண்மைத் தரவுகளை மழுங்கடிக்கும் வேலையைச் செய்கிறது போலி அறிவியல். அறிவியல் தன்னைக் கேள்வி களுக்கு உள்படுத்திக்கொண்டு, அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகரும். அறிவியல்…
சென்னை: புதிய கல்விக் கட்டண நிர்ணய விண்ணப்பங்களை தனியார் பள்ளிகள் மே 15-க்குள் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தனியார் பள்ளிகள் இயக்குநரகத்தின் கீழ் 12 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றுக்கான கல்விக் கட்டணத்தை முறைப்படுத்துவதற்காக உயர்நீதிமன்ற உத்தரவின்படி பள்ளிக்கல்வித் துறை சார்பில் கல்விக் கட்டண நிர்ணயக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியன் தற்போது பதவியில் இருக்கிறார். இந்த குழு சார்பில் தனியார் பள்ளிகளில் இருக்கும் கட்டமைப்பு வசதிகள் அடிப்படையில் கல்விக் கட்டணம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அடுத்து வரவுள்ள 2025-26, 2026-27, 2027-28 ஆகிய 3 கல்வியாண்டுகளுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளன. இதற்கான பரிந்துரை விண்ணப்பங்களை பல்வேறு தனியார் பள்ளிகள் அனுப்பி வருகின்றன. அந்தவகையில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 15-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.…
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டிராவிஸ் ஹெட் 0, அபிஷேக் சர்மா 8, இஷான் கிஷன் 1, நித்திஷ் குமார் ரெட்டி 2, அங்கித் வர்மா 12 ரன்களில் நடையை கட்டினர். 35 ரன்களுக்கு 5 விக்கெட்களை பறிகொடுத்த நிலையில் ஹென்ரிச் கிளாசன் அதிரடியாக விளையாடி 44 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 71 ரன்களும் அபினவ் மனோகர் 37 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 43 ரன்களும் விளாசியதன் காரணமாகவே ஹைதராபாத் அணியால் கவுரவமான ஸ்கோரை எடுக்க முடிந்தது. 144 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மும்பை அணி 15.4 ஓவர்களில்…
பீஜிங்: ‘பஹல்காம் தாக்குதல் பிரச்சினையில் இந்தியா, பாகிஸ்தான் நிதானத்தை கடைபிடிக்கும் என நாங்கள் நம்புகிறோம்’ என சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறும்போது, “பஹல்காம் பிரச்சினையில் இந்தியா, பாகிஸ்தான் நிதானத்தை கடைபிடிக்கும் என நாங்கள் நம்புகிறோம். இருநாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றத்தை தணிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் சீனா வரவேற்கிறது” என்று தெரிவித்துள்ளார். கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தீவிரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகளை இந்திய அரசு எடுத்தது. இதற்கு பதில் நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசும் மேற்கொண்டது. இந்தியாவுடன் வர்த்தக ரீதியான உறவை பாகிஸ்தான் முறித்துக் கொண்டுள்ளது. இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூளுமா என்ற வாதவிவாதங்கள் எழுந்துள்ளன. இந்தச்…
பழநி: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநியில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழா தொடங்குவதற்கு முன்கூட்டியே ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்த காவடியுடன் வரத் தொடங்கினர். விழாவின் 6-ம் நாளான நேற்று (ஏப்.10) மாலை திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. இன்று வெள்ளிக்கிழமை (ஏப்.11) பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்ரூப தரிசனம்,காலை 4.30 மணிக்கு விளா பூஜை நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பழநி மலைக்கோயில் மற்றும் பாராவேல் மண்டபம் முழுவதும் 2 டன்னுக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலை…
அரசன் கோட்டை என்ற ஊரில்உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவி காணாமல் போகிறார். இவ்வழக்கைக் காவல்துறை கண்டு கொள்ளாத நிலையில், அதே பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரியும் சுஜிதா (கேத்ரின் தெரசா), மாணவி மாயமானது குறித்தும், பள்ளி வளாகத்தில் நடைபெறும் சட்டவிரோதச் செயல்கள் பற்றியும், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்குப் புகார்அனுப்புகிறார். அதைத் தொடர்ந்து அந்தப் பள்ளிக்கு புதியஉடற்கல்வி ஆசிரியராகப் பணியில் இணைகிறார் சரவணன் (சுந்தர்.சி). இவருடன் சுஜிதாவும் மற்றொரு உடற்கல்வி ஆசிரியரான சிங்காரமும் (வடிவேலும்) நட்புக் கூட்டணி அமைக்கின்றனர். இவர்களால், காணாமல் போன மாணவியின் நிலையைக் கண்டறியமுடிந்ததா? உண்மையில் சரவணன் யார்? பள்ளியைச் சட்ட விரோதமாகப் பயன்படுத்தும் உள்ளூர் அரசியல்வாதிகள் எப்படிப்பட்டவர்கள் எனப் பல கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது கதை. வில்லன்கள், உள்ளூர் அரசியல்வாதியாக இருந்தாலும் அவர்களின் நிழலுலகச் சாம்ராஜ்ஜியத்துக்குள் துணிந்து கேள்வி கேட்கும் கதாநாயகிக்கு ஆபத்து ஏற்படும்போது, உள்ளே நுழைகிறார் கதாநாயகன். தன் முக அடையாளத்தை மறைத்துக்கொண்டு நாயகியை ஒவ்வொரு முறையும்…
சென்னை: “செந்தில் பாலாஜி, பொன்முடியின் பதவி விலகல் பற்றியெல்லாம் பேச பழனிசாமிக்கு அருகதையே இல்லை. தன்னுடைய ஆட்சியில் அமைச்சரவை மாற்றம் செய்யாமல் ஆட்சி செய்தாரா? தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனின் பதவியை எதற்காகப் பறித்தீர்கள்? பொதுச் சொத்துக்குச் சேதம் ஏற்படுத்திய வழக்கில் தண்டனை பெற்றதற்காக பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சர் பதவியை இழக்கவில்லையா? இதையெல்லாம் பழனிசாமி மறந்துவிட்டாரா?” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செந்தில் பாலாஜி, பொன்முடியின் பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சியின் பாதாள வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது. ஆட்சி மாற்றத்துக்கான விதைகள் துளிர்விடத் துவங்கிவிட்டன” எனச் சொல்லியிருக்கிறார். ‘தேர்தலில் தோற்றால் கூட பரவாயில்லை. அடுத்த தேர்தலில் வெல்ல முடியும். ஆனால், கட்சி வீழ்ந்தால் தேர்தலில் வெற்றி சாத்தியமே இல்லை’ என்ற அடிப்படைக் கோட்பாடு எல்லாக் கட்சித் தலைவர்களிடம் உண்டு. 2026-ம் ஆண்டு…