Author: admin

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 ரன்கள் வித்தியாத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. நடப்பு சீசனில் ஆர்சிபி அணிக்கு தனது சொந்த மைதானத்தில் முதல் வெற்றியாக இது அமைந்தது. அந்த அணி இதற்கு முன்னர் சொந்த மைதானத்தில் 3 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்து இருந்தது. இந்த ஆட்டங்களில் முதலில் பேட் செய்த போதெல்லாம் பெங்களூரு அணி 170 ரன்களை கூட எட்டியது இல்லை. ஆடுகளம் மந்தமாக இருப்பதாக பேட்டிங் ஆலோசகர் தினேஷ் கார்த்திக் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 205 ரன்கள் குவித்து மிரட்டியது. அதிகபட்சமாக விராட் கோலி 42 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 70 ரன்களும் தேவ்தத் படிக்கல் 27பந்துகளில், 3 சிக்ஸர்கள்,…

Read More

வாடிகன்: கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் நேற்று காலமானார். அவருக்கு வயது 88. அவரது மறைவு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. போப் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவராக போப் போற்றப்படுகிறார். கடந்த 2013 மார்ச் 13-ம் தேதி 266-வது போப்பாக பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த சில ஆண்டுகளாகவே போல் பிரான்சிஸ் உடல்நலமின்றி இருந்தார். அவ்வப்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். எனினும், தேவாலய பணிகளை தொடர்ந்து செய்து வந்தார். கடந்த பிப்ரவரியில் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 38 நாள் சிகிச்சைக்கு பிறகு, உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதால், கடந்த மார்ச் 23-ம் தேதி வாடிகன் திரும்பினார். வயது முதிர்வு காரணமாக அவரது உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதால் கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில்…

Read More

சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள குலசை முத்தாரம்மன் கோயிலில் புதிய மருத்துவ மையத்தைத் திறந்து மருத்துவர், பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக அமைச்சர்கள் இன்று வழங்கினர் இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இன்று (13.04.2025) சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி அருள்மிகு வைகுண்டபதி பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் பெருமக்கள் கோவில்பட்டி, அருள்மிகு பூவநாதர் சுவாமி திருக்கோயில் தேரோட்ட விழாவில் கலந்து கொண்டு, வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் குலசேகரப்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலுக்கு சென்று, அங்கு பக்தர்களின் வசதிக்காக புதிதாக…

Read More

‘மெய்யழகன்’ படம் ஒரு காவியம் என்று நானி புகழாரம் சூட்டியிருக்கிறார். மே 1-ம் தேதி நானி தயாரித்து, நடித்துள்ள ‘ஹிட் 3’ படம் வெளியாகவுள்ளது. இதனை சென்னையில் விளம்பரப்படுத்தி வருகிறார் நானி. இதில் அளித்த பேட்டியில் ‘மெய்யழகன்’ படத்தைப் பற்றி பேசியிருக்கிறார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘மெய்யழகன்’ குறித்து நானி, “தமிழ் சினிமா மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரையுலகிலேயே சிறந்த படமொன்றால் ‘மெய்யழகன்’ தான். அப்படம் ஒரு சிறந்த காவியம். அது ஒரு மேஜிக். பெரிய அரங்குகள் அமைத்து, 1000 கோடி ரூபாய் வரை செலவு என என்ன செய்தாலுமே ‘மெய்யழகன்’ மாதிரி ஒரு படம் பண்ண முடியாது. அந்தப் படம் ஒரு சிறந்த மேஜிக். ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயத்தை தொட்டு படமாக செய்திருப்பதாக நினைக்கிறேன். கார்த்தி, அரவிந்த் சுவாமி, இயக்குநர் பிரேம் குமார் என ஒட்டுமொத்த படக்குழுவினரும் இணைந்து ஒரு டைம்லெஸ் கிளாசிக் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.…

Read More

புதுச்சேரி: விசா காலாவதியானதால் வழக்கு பதிவான நிலையில், புதுச்சேரியில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள் இருவர் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. பல்வேறு விசாக்களில் வந்த பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்தது. இந்நிலையில் புதுச்சேரியில் 2 பாகிஸ்தானியர்கள் தங்கி உள்ளனர். இதில் புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹனீப்கான்(39) கடந்த 2013-ம் ஆண்டு அவரின் உறவினரான பாகிஸ்தானைச் சேர்ந்த பஷியாபானு (38) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணமான பின்னர் பஷியாபானு புதுச்சேரியில் வசித்து வந்தார். இதேபோல் புதுச்சேரி பிராந்தியமான மாஹே பிராந்தியத்தில் பஷீர் (65) என்பவர் 2016-ம் ஆண்டு மருத்துவச் சிகிச்சைக்காகப் பாகிஸ்தானிலிருந்து விசாவில் வந்தார். அதன்பின் அவர் மாஹேவிலேயே தங்கிவிட்டார். பஹல்காம் சம்பவத்தின் காரணமாக பஷியா பானு, பஷீர் ஆகியோர் இந்தியாவிலிருந்து வெளியேற வெளிநாட்டினர், பதிவு அலுவலக அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.…

Read More

புதுடெல்லி: என்சிஇஆர்டி பாடநூலில் மகாகும்பமேளா உள்ளிட்ட பல புதிய அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பல வருடங்களாக பாடநூலில் இடம்பெற்ற முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்கள் வரலாறு நீக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழான என்சிஇஆர்டியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 7-ம் வகுப்பு பாடநூலில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது, பெரிய அளவிலான மறுசீரமைப்புகளை உள்ளடக்கிய புதிய பாடநூலாகக் கருதப்படுகிறது. இதில், பல புதிய அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டு ஏற்கெனவே இருந்தவை நீக்கப்பட்டுள்ளன. சமூக-பொருளாதாரப் பகுதியில் ‘மேக் இன் இந்தியா’, பேட்டி பச்சாவ் பேட்டி படாவ் (பெண் குழந்தையை காத்து வளர்ப்பது) அட்டல் டனல் போன்ற அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. வரலாற்று பாடங்களில் இந்திய வம்சங்கள், புவியியல் அம்சங்கள் மற்றும் மகாகும்பமேளா பற்றிய புதிய அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில், சுமார் 65 கோடி மக்கள் வந்து புனித நீராடினர் என்ற குறிப்பு உள்ளது. இப் பாடப்பகுதியில் முன்பிருந்த முகலாயர்கள் மற்றும் டெல்லி…

Read More

வால்வோ நிறுவனம், எக்ஸ்.சி.90 என்ற புதிய மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.1,02,89,900. இதுகுறித்து வால்வோ கார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜோதி மல்ஹோத்ரா கூறுகையில், “இந்திய சந்தையில் அனைவராலும் விரும்பப்படும் மாடலாக இப்புதிய எக்ஸ்.சி.90 கார் இருக்கும். இது, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் நவீன வடிமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த மாடலில் உள்ள விசாலமான இருக்கை வசதி மற்றும் அதன் பாதுகாப்பு அம்சங்கள் வால்வோ நிறுவனத்தின் இந்திய சந்தைப் பங்களிப்பை மேலும் வலுப்படுத்த உதவும்” என்றார். வால்வோ நிறுவனத்தின் இந்த புதிய காரை அறிமுகப்படுத்திய பிறகு இந்தியாவுக்கான ஸ்வீடன் தூதர் ஜான்தெஸ்லெப் கூறும்போது, “ வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் ஸ்வீடனின் அர்ப்பணிப்பு இந்த புதிய வால்வோ எக்ஸ்.சி.90 மாடலில் வெளிப்படுகிறது. சமரசம் செய்யாத பாதுகாப்பு தர நிலைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளன. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மென்பொருள் தடையற்ற செயல்பாடுகளுக்கு உறுதியளிக்கிறது” என்றார்.

Read More

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வ தற்கு நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாடு மாணவர்களுக்கு விலக்குப் பெறுவது என்பது இன்னமும் எட்டாக் கனவாகவே இருந்துவருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் நீட் தேர்வு தொடர்கிறது. தேர்வு முறை: தேசியத் தேர்வு முகமை (நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி) நடத்தும் இந்த நீட் தேர்வு (NEET- UG) கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் காகிதத்தில் விடை எழுதும் (OMR Sheet) தேர்வுதான். நீட் தேர்வில் விடையளிக்க மூன்று மணி நேரம் வழங்கப்படும். அதாவது 180 நிமிடங்கள் நடைபெறும் இந்த நுழைவுத் தேர்வில் உயிரியல் (தாவரவியல், விலங்கி யல் பாடங்களில் 90 கேள்விகள்), இயற்பியல் (45 கேள்விகள்), வேதியியல் (45 கேள்விகள்) ஆகிய பாடங் களில் இருந்து 180 கேள்விகள் கேட்கப் படும் என்பதும் இதற்கு மொத்த மதிப்பெண்கள் 720 என்பதும் நீட் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும். வினாத்தாள் ஆங்கிலம்,…

Read More

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. கடைசியாக சொந்த மண்ணில் பெங்களூரு அணியிடம் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட பஞ்சாப் அணி அந்த ஆட்டத்தில் 157 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் திடீரென பார்மை இழந்துள்ளது அணியின் செயல் திறனை பாதித்துள்ளது. கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களில் ஸ்ரேயஸ் ஐயர் முறையே 6, 7, 0 ரன்களில் ஆட்டமிழந்திருந்தார். இன்றைய ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெறுவதால் அவர், மீது எதிர்பார்ப்பு உள்ளது. ஏனெனில் கடந்த சீசனில்…

Read More

பெய்ஜிங்: அணுசக்தி அல்லாத புளோடார்ச் வெடிகுண்டை, சீனா வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்துள்ளது. சீன விஞ்ஞானிகள் ஹைட்ரஜன் எரிபொருளை அடிப்படையாகக் கொண்ட அணுசக்தி அல்லாத வெடிகுண்டை உருவாக்கும் சோதனையை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அண்மையில் இந்த சோதனையை சீன விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளனர். இதற்கு அணுசக்தி அல்லாத புளோடார்ச் வெடிகுண்டு என்று பெயர் வைத்துள்ளனர். இந்த வெடிகுண்டால் ஏற்படும் தீப்பிழம்பு 2 விநாடிகளுக்கு மேல் நீடிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சீனாவிலிருந்து வெளியாகும் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 15 மடங்கு.. வழக்கமாக வெடிகுண்டில் டிரை நைட்ரோ டொலுவீன் (டிஎன்டி) என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படும். ஆனால், இந்த 2 கிலோ எடையுள்ள புளோடார்ச் வெடிகுண்டானது, டிஎன்டி ஏற்படுத்தும் வெடிப்புகளை விட 15 மடங்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று சீன விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும், இது எந்த அணுசக்தி பொருளையும் பயன்படுத்தாமலேயே…

Read More