சிஎஸ்ஐஆர் நெட் தேர்வெழுதிய 1.74 லட்சம் பட்டதாரிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. நம்நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இந்த தேர்வு, தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுக்கு இருமுறை கணினிவழியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு, 5 அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப்படும். அதன்படி, நடப்பாண்டு சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு நாடு முழுவதும் 326 மையங்களில் கடந்த பிப்ரவரி 28 முதல் மார்ச் 2-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வெழுத மொத்தம் 2 லட்சத்து 38,451 பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். அதில் ஒரு லட்சத்து 74,785 பேர் தேர்வில் பங்கேற்றனர். இந்நிலையில், சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு முடிவுகளை என்டிஏ நேற்று வெளியிட்டது. அதன் விவரங்களை தேர்வர்கள் /csirnet.nta.ac.in/ என்ற இணைய தளத்தில் சென்று பார்த்துக்…
Author: admin
ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் இறங்கிய ஆர்சிபி அணியின் ஓப்பனிங் வீரர்கள் ஃபில் சால்ட், விராட் கோலி இருவரும் இன்னிங்ஸை தொடங்கினர். இதில் 42 பந்துகளில் விராட் கோலி 70 ரன்கள் விளாசி அசத்தினார். ஃபில் சால்ட் 26 ரன்கள் எடுத்தார். தேவ்தத் படிக்கல் 50, டிம் டேவிட் 23, ரஜத் பட்டிதார் 1 ஜிதேஷ் சர்மா 20 என 20 ஓவர் முடிவில் 205 ரன்கள் எடுத்தது ஆர்சிபி அணி. இதையடுத்து களத்துக்கு வந்த ராஜஸ்தான் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் 49 ரன்கள் விளாசி அசத்தினார். வைபவ் சூர்யவன்ஷி 16 ரன்கள்…
பீஜிங்: எங்களுடைய இழப்பில் உலக நாடுகள் ஆதாயம் தேட வேண்டாம் என்று அமெரிக்க மோதலை முன்வைத்து உலக நாடுகளுக்கு சீனா எச்சரித்துள்ளது. இத்தகைய சமரச முயற்சி சர்வதேச வர்த்தகத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கான தீர்வாகாது என்றும் தெரிவித்துள்ளது. இருபுறமும் சங்கடங்கள்.. உலக நாடுகள் சீனாவுடனான வர்த்தகத்தை குறைத்துக் கொள்ளும்படி அமெரிக்க நிர்பந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் சூழலில் சீனா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும் அமெரிக்காவுடன் இத்தகைய ஒப்பந்தங்களில் ஈடுபடும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் இணங்கி சீனாவின் நலனை விலையாக வைத்து ஒப்பந்தங்களில் ஈடுபடும் நாடுகள் கடைசியில் அமெரிக்கா, சீனா என இருபுறம் இருந்து சங்கடங்களையே சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது. வரிவிதிப்பில் போட்டாபோட்டி.. கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், உலகின் பல்வேறு நாடுகள் அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரி விதிப்பதாகவும், இனி தங்கள் நாடும் பரஸ்பர…
சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான அறுபத்து மூவர் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 63 நாயன்மார்கள் வீதிஉலா வந்து அருள்பாலித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இந்த ஆண்டு பங்குனி பெருவிழா கடந்த ஏப்ரல் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, வெள்ளி ரிஷப வாகனம், சூரிய வட்டம், சந்திர வட்டம், அதிகார நந்தி உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதிஉலா வந்து அருள்பாலித்தார். தேரோட்டம் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், 8-ம் நாளான நேற்று பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான அறுபத்து மூவர் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 63 நாயன்மார்கள் வீதிஉலா மாலை 3.30 மணி அளவில் தொடங்கியது. முன்னதாக, திருஞானசம்பந்த சுவாமிகள் எழுந்தருளல், என்பை பூம்பாவையாக்கி அருளுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கயிலாய பஞ்ச வாத்தியங்களை இசைத்த பக்தர்கள். தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட…
புதுடெல்லி: நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்வையொட்டி, சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து வருகிறனர். புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஏப்.28) நடைபெற்றது. இவ்விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருதினை குடியரசுத் தலைவர் திரவுபதி வழங்கி கவுரவித்தார். இவ்விழாவில் நடிகர் அஜித் குமாரின் மனைவி ஷாலினி மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த ஆண்டு 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள், 19 பத்ம பூஷண் விருதுகள், 113 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர் நல்லி குப்புசாமி, நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா சந்திரகுமார், ஆந்திராவை சேர்ந்த நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, பிஹார் முன்னாள் துணை முதல்வர் மறைந்த சுஷில் குமார் மோடி…
புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றத்தின் எதிரொலியாக, பாகிஸ்தானில் இருந்து வெளியேறி 1,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் வந்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து கடந்த 6 நாட்களில் 1,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வாகா எல்லை வழியாக தாயகம் திரும்பியுள்ளனர். இது தொடர்பாக பேசிய ஓர் அதிகாரி, “கடந்த ஆறு நாட்களில் 1,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாகிஸ்தானிலிருந்து வாகா எல்லை வழியாக தாயகம் திரும்பியுள்ளனர். இதேபோல், திங்கட்கிழமைக்குள் 800-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் அவர்களின் நாட்டுக்கு திரும்பியுள்ளனர்,” என்று கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் கடந்த 22-ம் தேதி 26 பேரை சுட்டுக் கொன்றனர். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி தலைமையில் கடந்த 23-ம் தேதி நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில், சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய…
புதுடெல்லி: அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, வழக்கில் வேறு புதிய நிபந்தனைகளை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், அவரது ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கை முடித்து வைத்தது. சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கடந்த 2023 ஜூன் மாதம் கைது செய்தது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, 2024 செப்டம்பர் 26-ம் தேதி அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஒருநாள் இடைவெளியில் அவர் மீண்டும் அவர் அமைச்சரானார். இந்த நிலையில், அவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யாகுமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ‘தற்போது அமைச்சராக இல்லை என்று கூறி ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜி, ஜாமீன் கிடைத்த ஒருநாள் இடைவெளியில் மீண்டும் அமைச்சராகி உள்ளார். இதனால், அவருக்கு…
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாசங் கேலக்சி எம்16 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது கேலக்சி ‘எம்’ வரிசையில் கேலக்சி எம்16 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. வரும் மார்ச் 5-ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும். சிறப்பு அம்சங்கள் 6.7 இன்ச் டிஸ்பிளே ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் மீடியாடெக் டிமான்சிட்டி 6300 சிப்செட் பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 50 மெகாபிக்சல்…
சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகளை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. நம்நாட்டில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மைத் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வை 12.58 லட்சம் பேர் வரை எழுதினர். இதன் முடிவுகள் பிப்ரவரி 11-ம் தேதி வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து ஜேஇஇ 2-ம்கட்ட தேர்வு ஏப்ரல் 2 முதல் 9-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 531 மையங்களில் 9 லட்சத்து92,350 மாணவர்கள் எழுதினர்.…
புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் காம்பீருக்கு மின்னஞ்சலில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும், பாஜக முன்னாள் எம்.பி.யுமான கவுதம் காம்பீருக்கு, 2 முறை மின்னஞ்சலில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ள மின்னஞ்சலில் நான் உன்னை கொல்லப்போகிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் 26 பேரை சுட்டுக் கொன்ற அதே நாளில், சந்தேகத்திற்கிடமான கணக்கிலிருந்து கவுதம் காம்பீருக்கு அச்சுறுத்தல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காம்பீர் ரஜிந்தர் நகர் காவல் நிலையத்தில்புகார் அளித்துள்ளார். அதில், தனக்கும் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக டெல்லி மத்திய காவல்துறை துணை ஆணையர் எம்.ஹர்ஷா வர்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கவுதம் காம்பீருக்கு மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அவருக்கு ஏற்கெனவே காவல்துறை தரப்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது” என…