போபால்: மத்தியபிரதேசத்தில் பன்னா வைரச் சுரங்கம் மிகவும் பிரபலமானது. தரமான வைரங்கள் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய சுரங்கம் இதுவாகும். இங்கு 8 மீட்டர் சுரங்க நிலம் ஆண்டுக்கு ரூ.200-க்கு ஏலம் விடப்படுகிறது. வைரம் தோண்டி எடுத்த பிறகு அதை பன்னா வைர அலுவலகத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். இங்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை வைர ஏலம் நடைபெறும். இதில் நாடு முழுவதிலும் இருந்து வைர வியாபாரிகள் பங்கேற்கின்றனர். ஏலத்தொகையில் 11% ராயல்டி, 1% டிடிஎஸ் என மொத்தம் 12% கழிக்கப்பட்டு எஞ்சிய தொகை அதை கண்டெடுத்தவருக்கு தரப்படும். இந்நிலையில் இங்குள்ள ஒரு சுரங்கத்தில் தோண்டும்போது, ரச்னா கோல்டர் என்ற பெண் தொழிலாளி 8 வைரங்களை கண்டெடுத்துள்ளார். இவற்றில் மிகப்பெரிய வைரம் 0.79 காரட் எடை கொண்டதாகும். இதுகுறித்து வைர நிபுணர் அனுபம் சிங் கூறுகையில், “ரச்னா கண்டுபிடித்த 8 வைரங்களில் 6 வைரங்கள் அதிக தரம் கொண்டதாகும். இதில் 2…
Author: admin
சென்னை: அனுபவம், வலிமை, கொள்கை தெளிவுடன் பாஜகவை தடுத்து நிறுத்தும் ஆற்றல் திமுகவுக்கு மட்டுமே இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மக்களுடன் ஸ்டாலின் செயலி வாயிலாக முதல்வர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு: அண்மையில் மேற்கொண்ட வெளிநாட்டு பயண அனுபவங்கள் பற்றி சொல்ல முடியுமா, தொழில் முதலீட்டாளர்களிடம் தமிழகம் பற்றிய பார்வை எப்படி இருக்கிறது? தமிழகத்தின் கட்டமைப்புகள், இங்குள்ள திறமையான இளைஞர்கள் பற்றியும், மாணவர்களுக்கு வழங்கப்படும் திறன் மேம்பாடு பயிற்சிகள் குறித்தும் ஜெர்மனி முதலீட்டாளர்களுக்கு காட்சி விளக்கங்கள் அளித்தோம். தமிழகத்தில் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் அளிக்கப்படும் முக்கியத்துவத்தை முதலீட்டாளர்கள் பெருமையுடன் கூறினார்கள். புதிதாக வளர்ந்து வரும் துறைகள் மீது தமிழகம் கவனம் செலுத்துவதையும் அவர்கள் அதிகமாகவே பாராட்டி பேசினார்கள். அந்தவகையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் முதலீடுகள் செய்ய அவர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆக்ஸ்போர்டுக்கு சென்றது பற்றியும், வெளிநாடு வாழ் தமிழர்களைச் சந்தித்தது பற்றியும் உங்களின்…
பெங்களூரு/ஹைதராபாத்: ட்ரம்பின் பேனாவின் பக்கவாதம்,, 000 100,000 விசா கட்டணம். இந்தியாவின் தொழில்நுட்ப தாழ்வாரங்கள் முழுவதும் பீதி, வீடுகளுக்குள் இதய துடிப்பு மற்றும் பயணத் திட்டங்கள் ஒரே இரவில் சரிவதால் திறக்கப்படாத சூட்கேஸ்கள்.இந்தியர்கள் எச் -1 பி வைத்திருப்பவர்களில் 70% க்கும் அதிகமானவர்கள், மற்றும் குழப்பம் இப்போது வெளிநாட்டில் சிக்கியவர்களைப் பிடிக்கிறது அல்லது விசா முத்திரை நியமனங்களுக்குத் தயாராகிறது. “எனது எம்.எஸ்.சி முடித்த பின்னர் நான் இப்போது ஒரு தசாப்த காலமாக அமெரிக்காவில் இருந்தேன். நான் சிகாகோவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறேன், இரண்டு வாரங்களுக்கு ஒரு சூட்கேஸுடன் இந்தியாவுக்கு வந்தேன். எனது விசா முத்திரை செப்டம்பர் 22 அன்று ஹைதராபாத் துணைத் தூதரகத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. நான் இங்கு சிக்கிக்கொண்டிருக்கும்போது என் மனைவியும் குழந்தையும் அமெரிக்காவில் இருக்கிறார்கள்,” என்று மும்பையிலிருந்து ஒரு தொழில்முறை நிபுணர் கூறினார்.”செப்டம்பர் 21 க்குள் என்னால் மீண்டும் பறக்க முடியாது, ஏனெனில் எனது நியமனம் செப்டம்பர்…
புதுடெல்லி: டெல்லி போலீஸார் அண்மையில் அப்தாப் குரேஷி என்ற தீவிரவாதியை கைது செய்து விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியின் இஸ்லாம் நகரிருள்ள தபாராக் என்ற ஓட்டலில் அண்மையில் சோதனை நடத்தப்பட்டது. இதில் தீவிரவாதி அஷார் டேனிஷ் உட்பட 13 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த டேனிஷ், போட்டித் தேர்வுகளுக்காகத் தயாராகி வரும் இளைஞர் எனத் தெரியவந்தது. ஆனால், இந்த பாழடைந்த ஓட்டலில் 15-ம் எண் அறையில் தங்கியிருந்து வெடிகுண்டுகளை தயார் செய்து வந்துள்ளார் டேனிஷ். இந்த வெடிகுண்டுகளை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்காக அவர் தயாரித்து வந்துள்ளார். தற்போது இவர்கள் கைது செய்யப்பட்டதன் மூலம் வெடிகுண்டுகளைத் தயாரித்து தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்தும் கும்பல் முழுவதும் பிடிபட்டுள்ளது. இவர்கள் வெடிகுண்டுகளைத் தயாரித்து பாஜக மூத்த தலைவர்களை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர். டேனிஷின் அறையிலிருந்து வெடிகுண்டு தயாரிக்கப்படும் கன் பவுடர், பொட்டாசியம் நைட்ரேட், நாட்டு துப்பாக்கிகள் ஆகியவை…
Last Updated : 21 Sep, 2025 12:49 AM Published : 21 Sep 2025 12:49 AM Last Updated : 21 Sep 2025 12:49 AM மயிலாடுதுறை: முஸ்லிம்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் அளிக்கவேண்டும். வக்பு திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மயிலாடுதுறையில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பதிவு செய்யப்பட்ட 400 கட்சிகளின் பதிவை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. மமக 2009 முதல் பதிவு செய்யப்பட்டு, பல்வேறு தேர்தல்களில் சொந்த சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் செய்யும் முறைகேடுகளை அம்பலப்படுத்துகிறார். அதை திசை திருப்பவே பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். லேட்டஸ்ட்…
பத்தனம்திட்டா: கேரள அரசும் திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து நடத்தும் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் சங்கமம் நிகழ்ச்சி பத்தனம்திட்டா மாவட்டம் பம்பையில் நேற்று காலை தொடங்கியது. முதல்வர் பினராயி விஜயன் சங்கமத்தை தொடங்கிவைத்தார். இதில், தமிழக அமைச்சர்கள் சேகர் பாபு, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருப்பதால் 2011-12-ம் ஆண்டில் சபரிமலை மாஸ்டர் பிளான் தொடங்கப்பட்டது. சபரிமலை மாஸ்டர் பிளான் என்பது சன்னிதானம், பம்பை, பாரம்பரிய பாதைகள், நிலக்கல் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை மையமாகக் கொண்டது. 2050-க்குள் இந்த திட்டங்கள் நிறைவடையும். இந்தத் திட்டத்துக்காக ரூ.1,033.62 கோடியை செலவு செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது. சன்னிதான மேம்பாட்டுக்காக முதல் கட்டமாக 2022-27-க்குள் ரூ.600.47 கோடியும், இரண்டாம் கட்டமாக 2028-33-க்குள் ரூ.100.02 கோடியும், மூன்றாம் கட்டமாக 2024-39-க்குள் ரூ.77.68 கோடியும்…
நாகர்கோவில்: திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, குமரி மாவட்டத்திலிருந்து சுவாமி விக்ரகங்கள் புறப்பாடை முன்னிட்டு பத்மநாபபுரம் அரண்மனையில், மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உடைவாள் மாற்றும் பாரம்பரிய நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திருவனந்தபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை குமாரசுவாமி, தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி ஆகிய 3 சுவாமி விக்ரகங்கள், பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். இந்த ஆண்டு நவராத்திரி விழா வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. இவ்விழாவில் பங்கேற்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நேற்று முன்தினம் காலையில் சுசீந்திரத்திலிருந்து பல்லக்கில் புறப்பாடாகி, மாலையில் பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோயிலை அடைந்தார். நேற்று அதிகாலையில் வேளிமலை குமாரசுவாமி விக்ரகம், பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் கோயிலை வந்தடைந்தது. திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உடைவாள், சுவாமி ஊர்வலத்தின் முன்னால் கொண்டு செல்லப்படும்.…
மதுரை: புனைவு வரலாற்றை தொல்லியல் ஆதாரங்களால் முறியடிக்க வேண்டும் என்று மத்திய தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா கூறினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) சார்பில் சிந்துவெளி நாகரிகம் உலகுக்கு அறிவிக்கப்பட்ட நூற்றாண்டு நிறைவு கருத்தரங்கம் மதுரை விராட்டிபத்தில் நேற்று நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் ச.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். சிந்துவெளி ஆய்வாளரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான ஆர்.பாலகிருஷ்ணன், சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் மத்திய தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பேசியதாவது: கடவுள் நாகரிகத்தை படைக்கவில்லை. மனிதர்கள்தான் நாகரிகத்தை படைத்துள்ளனர். தற்போது நாகரிகம் பற்றிய புனைவுக் கதைகளைத்தான் வரலாறாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆதாரங்கள் அடிப்படையில் கட்டமைக்கப்படுவதுதான் வரலாறு. கீழடி அகழாய்வு குறித்து இன்னும் முழுமையான அறிக்கையை நான் அளிக்கவில்லை. அதற்குள் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் மணலூர் கீழடியை மகாபாரதத்தை தொடர்புபடுத்தி…
கொச்சி: கேரளாவின் குட்டிப்புரத்தை சேர்ந்தவர் சைதலவி. முஸ்லிம் மதத்தை சேர்ந்த பார்வையற்ற இவர் மசூதிகளில் யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஜூபைரியா என்ற பெண்ணை இவர் திருமணம் செய்தார். இதன்பிறகு 2-வது திருமணம் செய்து கொண்டார். தற்போது 3-வது திருமணத்துக்கு தயாராவதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் முதல் மனைவி ஜூபைரியா ஜீவனாம்சம் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி குண்ணிகிருஷ்ணன் விசாரித்தார். ஜூபைரியா நீதிமன்றத்தில் கூறும்போது, “எனது கணவர் சைதலவி யாசகம் மூலம் ஒரு மாதத்தில் ரூ.25,000 -க்கும் அதிகமாக வருவாய் ஈட்டுகிறார். இதில் ரூ.10,000-ஐ எனக்கு ஜீவனாம்சமாக வழங்க வேண்டும்’’ என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குனிகிருஷ்ணன் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: யாசகம் பெற்று வாழும் பார்வையற்ற நபரால் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது. இதுதொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது.…
சென்னை: ஸ்ரீ சாரதா நவராத்திரி விழாவை முன்னிட்டு, காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், நேற்று சென்னைக்கு வருகை புரிந்துள்ளனர். ஸ்ரீ சாரதா நவராத்திரி மஹோற்சவம், செப். 22-ம் தேதி முதல் அக். 2-ம் தேதி வரை, சென்னை, தாம்பரம் கிழக்கு ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ காஞ்சி மகாஸ்வாமி வித்யா மந்திர் பள்ளிவளாகத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், செப். 20-ம் தேதி (நேற்று) இங்கு வருகை புரிந்துள்ளனர். இதையடுத்து செப். 21-ம் தேதி (இன்று) மாலை 4.25 மணி அளவில் திவ்ய தேச கண்காட்சியை தொடங்கி வைக்க உள்ளனர். ஸ்ரீ சாரதா நவராத்திர் மஹோற்சவத்தை முன்னிட்டு செப். 22-ம் தேதி முதல் பிக்ஷாவந்தனம், சஹஸ்ர சண்டி மகா யாகத்துக்கு ஏற்பாடுகள்…