Author: admin

இஸ்லாமாபாத்: இந்தியாவும் பாகிஸ்தானும் இரு வேறு நாடுகள் என்று வலியுறுத்தியுள்ள பாகிஸ்தான் தலைமை ராணுவ தளபதி அசிம் முனீர், இரண்டு நாடுகள் என்ற கொள்கையை ஆதரித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் புதன்கிழமை நடந்த வெளிநாட்டுவாழ் பாகிஸ்தானியர்களின் மாநாட்டில் பேசிய அசிம், பாகிஸ்தான் எவ்வாறு உருவானது என்பதை உங்களின் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள் என்று பாகிஸ்தானியர்களை வலிறுத்தினார். கூட்டத்தில் பேசிய ராணுவ தளபதி கூறுகையில், “வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் நாம் இந்துக்களில் இருந்து வேறுபட்டவர்கள் என்று நமது முன்னோர்கள் நம்பினார்கள். நமது மதம் வேறு, பழக்க வழக்கங்கள் வேறு, மரபுகள் வேறு, நமது சிந்தனைகள், நோக்கங்கள் வேறு. இங்கிருந்துதான் இரு நாடுகள் கொள்கைகான அடித்தளம் அமைக்கப்பட்டது. நாம் இரண்டு வேறு நாடுகள், ஒரே நாடு அல்ல. நமது முன்னோர்கள் மகத்தான சாதனைகளைச் செய்துள்ளனர். மேலும் இந்த நாட்டை உருவாக்க நாம் நிறைய தியாகங்களைச் செய்துள்ளோம். இதை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று நமக்குத் தெரியும். எனதருமை சகோதர,…

Read More

திருவள்ளூர்: திருத்தணி திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று கமலத் தேர்த் திருவிழா, வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே திருவாலங்காடுவில் அமைந்துள்ளது வடாரண்யேஸ்வரர் கோயில். திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலின் உப கோயிலான இக்கோயில், சிவபெருமான் திருநடனமாடிய ஐந்து திருச்சபைகளில், முதற்சபையான ரத்தின சபையை கொண்டது. இந்த வடாரண்யேஸ்வரர் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 11 -ம் தேதி வரை நடைபெற உள்ள இத்திருவிழாவில், நாள் தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில், வடாரண்யேஸ்வரர், வண்டார்குழலி அம்மனுடன் அன்ன வாகனம், பூத வாகனம், நாக வாகனம், புலி மற்றும் யானை உள்ளிட்ட வாகனங்களில் உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில், பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய திருவிழாவான…

Read More

விஜய்யுடன் இணைந்து பணிபுரிய முடியாமல் போனதற்கான காரணத்தைக் கூறியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். தனது அடுத்த படத்துக்காக விஜய் கதைகள் கேட்டுக் கொண்டிருக்கும்போது, பல்வேறு இயக்குநர்கள் கதைகள் கூறிவந்தார்கள். அதில் பலமுறை பேசப்பட்ட பெயர் கார்த்திக் சுப்பராஜ். ஆனால், விஜய் – கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி இணைந்து பணிபுரியவே இல்லை. தற்போது ‘ரெட்ரோ’ படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் விஜய்யுடன் பணிபுரிய முடியாமல் போனதற்கான காரணத்தை கூறியிருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். அதில், “விஜய் சாரை பலமுறை சந்தித்து கதை கூறியிருக்கிறேன். ‘ஜிகிர்தண்டா’ பார்த்துவிட்டு, ரொம்ப நல்லா பண்ணியிருக்கீங்க என்று பேசினார் விஜய் சார். அப்போதில் இருந்தே பலமுறை அவருக்கு கதைகள் கூறியிருக்கிறேன். முதலில் எனக்கு ஒரு கதையை நன்றாகச் சொல்ல தெரியாது. ரஜினி சாரையும் சந்தித்து நிறைய கதைகள் கூறியிருக்கிறேன். அவரிடம் மட்டும் ஏதோ ஒன்று உள்ளே இறங்கி நன்றாக சொல்லிவிடுவேன். விஜய் சாரிடம் கூறிய கதைகள் ஏதோ அவருக்குப் பிடிக்கவில்லை.…

Read More

சென்னை: ஆட்சேபனையற்ற நிலத்தில் வசிக்கும் 86 ஆயிரம் பேருக்கு மனைப்பட்டா வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பெல்ட் ஏரியா எனப்படும் புறநகர் பகுதிகள், தமிழகத்தில் புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்குவதில் வருமான வரம்பு உள்ளிட்ட விதிகளும் திருத்தப்பட்டுள்ளன. சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்டங்கள், மதுரை, நெல்லை மாநகராட்சிகள், பல்வேறு நகராட்சிகள், மாவட்ட தலைநகரங்களில் ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 86,000 பேருக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் பட்டா வழங்க முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த பிப்.10-ம் தேதி நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களிடம் வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறும்போது, சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் ‘பெல்ட் ஏரியா’ என்று கூறப்படும் 32 கி.மீ. பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட காலமாக குடியிருப்பவர்கள் பட்டா பெற முடியாமல் சிரமப்படுகின்றனர். இவ்வாறு ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு பகுதிகளில் 29,187…

Read More

‘‘கடைகளில் பொருட்களை வாங்கும் முன் கடைக்காரரிடம் அவரது மதம் என்ன என்று கேட்டு அனுமன் சலிசாவை கூறச் சொல்லுங்கள்’’ என மகாராஷ்டிரா அமைச்சர் நிதேஷ் ரானே கூறியுள்ளார். காஷ்மீரின் பஹல்மாமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், சுற்றுலா பயணிகளிடம் மதம் என்ன? என்று கேட்டு இஸ்லாமிக் நம்பிக்கையை வெளிப்படுத்தும் ‘கல்மா’ வை கூறும்படி கூறியுள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள தபோலி நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மகாராஷ்டிரா அமைச்சர் நிதேஷ் ரானே பேசியதாவது: காஷ்மீரில் இந்துக்களை சுட்டுக் கொல்வதற்கு முன் மதம் என்ன? என தீவிரவாதிகள் கேட்டுள்ளனர். அதேபோல் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு முன் கடைக்காரரிடம் அவரது மதம் என்ன? என இந்துக்கள் கேட்க வேண்டும். அவர்கள் இந்து என பொய் சொல்லலாம். அவரிடம் அனுமன் சலிசாவை கூறும்படி சொல்லுங்கள். அவருக்கு அனுமன் சலிசா தெரியவில்லை என்றால் அவரிடம் பொருட்கள் வாங்காதீர். முகலாய மன்னர் அவுரங்கசீப் தனது தந்தை மற்றும்…

Read More

சென்னை: புதிய சஸ்​பென்​சன், எல்​இடி லைட் உள்​ளிட்ட நவீன வசதி​களு​டன் ராயல் என்​பீல்ட் நிறு​வனம் புதிய புல்​லட் ‘ஹண்​டர் 350’ மாடலை அறி​முகம் செய்​துள்​ளது. ராயல் என்​பீல்ட் நிறு​வனத்​தின் கிளாசிக் 350, மீட்​டியர் 350, ஹிமாலயன் போன்ற மாடல்​கள் வாகன ஓட்​டிகளிடம் கவனம் பெற்ற நிலை​யில், அதன் தொடர்ச்​சி​யாக ‘ஹண்​டர் 350’ மாடல் 2022 ஆகஸ்ட் மாதம் அறி​முகம் செய்​யப்​பட்​டது. இதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்​து, அதன் மேம்​படுத்​தப்​பட்ட மாடல் வகை நேற்று முன்​தினம் டெல்லி மற்​றும் மும்​பை​யில் அறி​முகம் செய்​யப்​பட்​டது. டேப்​பர் கிரே, ரிபல் ப்ளூ வகைகளு​டன் புதி​தாக டோக்​கியோ பிளாக், லண்​டன் ரெட், ரியோ வைட் ஆகிய நிறங்​களில் 2025-ம் ஆண்​டின் ‘ஹண்​டர் 350’ அறி​முக​மாகி​யுள்​ளது. புதிய சஸ்​பென்​சன், எல்​இடி லைட், ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச், வழி​காட்​டும் டிரிப்​பர் என பல்​வேறு நவீன வசதி​கள் இதில் இடம்​பெற்​றுள்​ளன. இதுகுறித்து அந்​நிறு​வனத்​தின் தலைமை வணிக அதி​காரி யத்​விந்​தர் சிங் குலேரியா…

Read More

சென்னை: பிளஸ் 2 விடைத்தாள் திருத்துதல் பணிக்கு ஏப்ரல் 19-ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பொ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துதல் பணிகள் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே கிறிஸ்துவ பண்டிகையான புனித வெள்ளி ஏப்ரல் 18-ம் தேதியும், ஈஸ்டர் ஏப்ரல் 20-ம் தேதியும் கொண்டாடப்படவுள்ளன. இதற்கு இடைபட்ட ஏப்ரல் 19-ம் தேதி விடைத்தாள் திருத்துதல் பணி நடைபெறவிருக்கிறது. இதனால் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றும் ஆசிரியர்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாட முடியாத சூழல் நிலவுகிறது. இந்நிலையை உணர்ந்து ஏப்ரல் 19-ம் தேதி விடைத்தாள் திருத்துதல் பணிக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இது ஆசிரியர்கள் தங்களின் குடும்பத்தினருடன் பண்டிகையை சிறந்த முறையில் கொண்டாட உதவும். மேலும்,…

Read More

லக்னோ: ஐபிஎல் கிரிக்கெட்டில் 5,000+ ரன்களை விரைவாக எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இந்தியாவின் கே.எல்.ராகுல். செவ்வாய்க்கிழமை அன்று லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்த சாதனையை அவர் படைத்தார். நடப்பு சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ராகுல் விளையாடி வருகிறார். தனது 130-வது ஐபிஎல் இன்னிங்ஸில் 5,000+ ரன்களை அவர் எட்டினார். இதற்கு முன்பு 135 ஐபிஎல் இன்னிங்ஸில் 5,000+ ரன்களை எட்டியிருந்தார் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர். தற்போது வார்னர் சாதனையை ராகுல் முந்தியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் 5,000+ ரன்களை கடந்த 8-வது பேட்ஸ்மேனாக ராகுல் அறியப்படுகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் 8,326 ரன்களுடன் கோலி முதலிடத்தில் உள்ளார். லக்னோ உடனான ஆட்டத்தில் 42 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார் ராகுல். இதுவரை ஹைதராபாத், பெங்களூரு, பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகளில் ராகுல் விளையாடி உள்ளார். தற்போது டெல்லி அணிக்காக…

Read More

நேபிடா: பர்மிய புத்தாண்டை முன்னிட்டு சிறையில் உள்ள அரசியல் கைதிகள் 22 பேர் உட்பட 4,900 பேருக்கு மியான்மர் ராணுவ அரசின் தலைவர் மின் ஆங் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார். மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டிலிருந்து ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூ கி சிறையில் அடைக்கப்பட்டார். மியான்மர் தற்போது உள்நாட்டு போரை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இங்கு கடந்த மாதம் 28-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 3,725 பேர் உயிரிழந்தனர். பாரம்பரிய கட்டிடங்கள் எல்லாம் இடிந்தன. நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் விரைவில் மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என ராணுவத் தலைவர் உறுதியளித்துள்ளர். இந்நிலையில் மியான்மரில் பர்மிய புத்தாண்டு திங்யான் கடந்த 13-ம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. மியான்மரில் புத்தாண்டு விடுமுறையில் சிறைக் கைதிகள் விடுவிக்கப்படுவது வழக்கம். இதை முன்னிட்டு, அரசியல் கைதிகள் 22 பேர் உட்பட 4,900 பேருக்கு…

Read More

தென்காசி: தென்காசியில் உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசியில் உள்ள உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் கடந்த ஓராண்டாக நடைபெற்ற திருப்பணி வேலைகள் நிறைவடைந்து, நேற்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. இக்கோயிலை கட்டிய பராக்கிரம பாண்டிய மன்னர் வழிபாட்டுடன் கடந்த 3-ம் தேதி குடமுழுக்கு விழா பூஜைகள் தொடங்கின. 4-ம் தேதி மாலையில் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. 5-ம் தேதி காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலையில் மூன்றாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் காலையில் விக்னேஸ்வர பூஜை, நான்காம் கால யாகசாலை பூஜை, மாலையில் ஐந்தாம் கால யாகசாலை பூஜை, பரிவார யாகசாலை, கடம் எழுந்தருளல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று அதிகாலை 3 மணிக்கு…

Read More