சென்னை: இந்தியாவில் ஏற்கெனவே தடை செய்யப்பட்ட சீன தேசத்தின் 36 செயலிகள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2020-ல் தேச பாதுகாப்பு கருதி சீன தேசத்தின் சுமார் 267 மொபைல் செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. டிக்-டாக் துவங்கி பல்வேறு செயலிகள் இதில் அடங்கும். அதோடு இல்லமால் சீன தேசத்துடன் தொடர்பு கொண்ட மற்ற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் மொபைல் செயலிகளும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் ஏற்கெனவே தடை செய்யப்பட்ட சீன தேச செயலிகளில் சுமார் 36 செயலிகள் இந்தியாவில் மீண்டும் பயன்பாட்டுக்கு கிடைத்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இந்த செயலிகளை டவுன்லோட் செய்யலாம் எனவும் தகவல். கேமிங், ஷாப்பிங், எண்டர்டெயின்மெண்ட், ஃபைல் ஷேரிங், கன்டென்ட் கிரியேஷன், ஸ்ட்ரீமிங் தளங்கள் என இந்த மொபைல் அப்ளிகேஷன்களின் கேட்டகிரி நீள்கிறது. தடை செய்யப்பட்ட செயலிகள்…
Author: admin
சென்னை: ‘பொறியியல், மருத்துவப் படிப்புகளை தமிழில் கொண்டுவர வேண்டும். தமிழ் வழியில் படிப்போருக்கு கட்டணச் சலுகை மற்றும் வேலைவாய்ப்பு உறுதியை தமிழக அரசு வழங்க வேண்டும்’ என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வலியுறுத்தி 34 தமிழறிஞர்கள், ஊடகவியலாளர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். இது தொடர்பாக தமிழ் எழுச்சிப் பேரவை செயலர், முனைவர் பா.இறையரசன் உள்ளிட்ட தமிழறிஞர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், ‘தமிழுக்காக தங்களின் ஆக்கப்பூர்வமான பணிகளுக்குப் பாராட்டு. பள்ளி, கல்லூரிகளில் தமிழ் ஒரு பாடமாக இருப்பது கட்டாயம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு ஆகியவற்றைப் பாராட்டுகிறோம். பொறியியல் மருத்துவம் ஆகிய பட்டப்படிப்புகளைத் தமிழில் பயிற்றுவிக்க வேண்டும் என பிரதமரும், மத்திய அமைச்சர் அமித் ஷாவும் கூறியுள்ளனர். தமிழத்தில் முன்பே பொறியியல், மருத்துவம் தமிழ் வழிக்கல்வி முயற்சிகள் நடந்து பொறியியல் ஓரளவு நூல்கள் உள்ளன. மூதறிஞர் ராஜாஜி கூறியது போல ஆங்கில நூல்கள் வைத்துப் பாடம் நடத்தினால், உடனே துணை…
புதுடெல்லி: ஐபிஎல் டி20 தொடரில் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்த ஆட்டம் முடிவடைந்ததும் ஆர்சிபி நட்சத்திரமான விராட் கோலி, கே.எல்.ராகுலை கலாய்த்தார். கடந்த 10-ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சிபி அணியை டெல்லி கேப்பிடல்ஸ் வீழ்த்தியிருந்தது. இந்த ஆட்டத்தில் டெல்லி அணியின் நட்சத்திரம் கே.எல்.ராகுல் 93 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தார். அந்த ஆட்டத்தில் கே.எல்.ராகுல் வெற்றியை ‘காந்தாரா’ பட ஸ்டைலில் பேட்டை தரையில் ஓங்கி நிறுத்தி கொண்டாடினார். இது என்னுடைய மைதானம் எனவும் அவர், கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற ஆட்டம் முடிவடைந்ததும் தேவ்தத் படிக்கல் மற்றும் கருண் நாயருடன் கே.எல்.ராகுல் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது கே.எல்.ராகுல் அருகே சென்ற விராட் கோலி கையில் பேட் இல்லாமல் இது என்னுடைய இடம்…
வாஷிங்டன்: சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. பரஸ்பர வரி விதிப்புக்கு எதிராக சீனா அடுத்தடுத்து எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக இந்த புதிய வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வாகனம், விண்வெளி, செமிகண்டெக்டர் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளுக்கு இன்றியமையாததாக விளங்கும் மிகவும் அரிதான உலோகங்கள் மற்றும் காந்தங்கள் உள்ளிட்ட முக்கிய உயர் தொழில்நுட்பப் பொருட்களின் ஏற்றுமதியை நிறுத்த சீனா முடிவெடுத்துள்ளது. இதையடுத்து, முக்கியமான இறக்குமதிகள் குறித்த தேசிய பாதுகாப்பு மதிப்பாய்வின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சீன பொருட்களின் இறக்குமதிக்கு தற்போது 245 சதவீதம் வரையிலான வரிவிதிப்பை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு அடிப்படையில் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காலியம், ஜெர்மானியம், ஆன்டிமனி மற்றும் ராணுவ பயன்பாடுகளுடன் கூடிய பிற…
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித் தேரோட்டம் இன்று (ஏப்.7) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவாரூக்கு வந்துள்ளனர். பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா மார்ச் 15-ம் தேதி தொடங்கியது. திணும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. ஏறத்தாழ 96 அடி உயரமும், 350 டன் எடையும் கொண்ட ஆழித்தேர் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நேற்று இரவு 8 மணியளவில் தியாகராஜ சுவாமி, அஜபா நடனத்துடன் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, இன்று காலை 5.30 மணி அளவில் விநாயகர், சுப்பிரமணியர், தேர் வடம் பிடிக்கப்படும். காலை 7:30 மணிக்கு ஆழித் தேரோட்டம் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் வடம் பிடித்து தேர் இழுக்கின்றனர். ஆழித் தேரோட்டத்தையொட்டி, திருவாரூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…
‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றி தொடர்பாக கங்கை அமரன் கருத்துக்கு பிரேம்ஜி பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் தனது பாடல்கள் உபயோகப்படுத்தி இருப்பது தொடர்பாக தயாரிப்பாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் இளையராஜா. இது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இது தொடர்பாக பேசும் போது கங்கை அமரன், “7 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து இசையமைப்பாளர் உருவாக்கிய பாடல்களை விட, எங்களுடைய பாடல்களுக்கு தான் கைதட்டல்கள் அதிகமாக விழுகிறது. அது தான் வெற்றிக்கு காரணம்” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக அவரது மகன் பிரேம்ஜி, “அண்ணனுக்கு ஒரு பிரச்சினை என்பதால் அப்பா பேசியிருக்கிறார். எனது அண்ணனுக்கு ஒரு பிரச்சினை என்றால் நானும் பேசுவேன் அல்லவா. ‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றிக்கு யார் காரணம் என்று அனைவருக்கும் தெரியும். ‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றிக்கு முழுக் காரணமும் அஜித் சார்…
அமைச்சரவையி்ல் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள மனோ தங்கராஜுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதல்வரின் பரிந்துரைப்படி அவருக்கு பால்வளத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு ஆளான செந்தில் பாலாஜி மற்றும் சைவம், வைணவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பொன்முடி ஆகிய இருவரும் அமைச்சர் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தனர். இதையடுத்து, செந்தில் பாலாஜி கவனித்து வந்த மின்துறையை அமைச்சர் சிவசங்கருக்கும், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறையை முத்துசாமிக்கும், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பால்வளத் துறைக்கு பதிலாக, பொன்முடி கவனித்து வந்த வனம். காதி துறையை வழங்கவும் ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்தார். அமைச்சரவையில் மனோ தங்கராஜை மீண்டும் சேர்க்குமாறும் பரிந்துரை செய்திருந்தார். தமிழக அமைச்சரவையை 6-வது முறையாக மாற்றம் செய்வது தொடர்பாக முதல்வரின் பரிந்துரைகளை ஆளுநர் அன்றைய தினமே ஏற்றுக்கொண்டார். பதவியேற்பு நிகழ்வு 28-ம் தேதி மாலை நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை…
புதுடெல்லி: ‘‘பாகிஸ்தானை சேர்ந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள், திருமணத்தின் மூலம் இந்தியாவுக்குள் வந்துள்ளனர். இதுபோன்ற தீவிரவாதத்தின் புதுமுகத்தை எதிர்த்து எப்படி போராட போகிறோம்?’’ என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே விமர்சித்துள்ளார். காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தானியர்களின் அனைத்து விதமான விசாக்களையும் மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிட்டது. இந்நிலையில், தீவிரவாதத்தின் புதுமுகமாக திருமணம் இருக்கிறது என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் நிஷிகாந்த் கூறுகையில், ‘‘திருமணத்தின் மூலம் மட்டும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பெண்கள் இந்தியாவுக்குள் வந்துள்ளனர். அவர்களுக்கு இன்னும் இந்திய குடியுரிமை வழங்கப்படவில்லை. இதுபோல் திருமணம் மூலம் இந்தியாவுக்குள் வரும் பாகிஸ்தான் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, தீவிரவாதத்தின் புதுமுகமாக தெரிகிறது. இதை எதிர்த்து நாம் எப்படி…
உலக அளவில் 1920கள் ‘வானொலியின் பொற்காலம்’ என்று அழைக்கப்படுகின்றன. ஏனென்றால், அந்தக் காலக்கட்டத்தில் இசை, நகைச்சுவை, நாடக நிகழ்ச்சிகள் வானொலியில் ஒலிபரப்பாகத் தொடங்கின.1921ஆம் ஆண்டு அமெரிக்காவில் 5 வானொலி நிலையங்கள் இருந்தன. 1930இல் 600க்கும் மேற்பட்ட வானொலி நிலையங்கள் இயங்கத் தொடங்கியிருந்தன. வானொலியின் இந்த அசுர வளர்ச்சி அமெரிக்கா மட்டுமன்றி இந்தியாவிலும், பிற உலக நாடுகளிலும் கண்கூடாகத் தெரிந்தது. இந்த வளர்ச்சிக்குப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு செய்யப்பட்டதும் அவற்றுக்குக் கிடைத்த வரவேற்பும் ஒரு முக்கியக் காரணம். வானொலியில் செய்திகளுக்கும் இசை நிகழ்ச்சிகளுக்கும் இந்தியாவில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. அந்தக் காலக்கட்டத்தில் திரையிசையை மட்டுமே வைத்து ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்திருந்தது இலங்கை வானொலி. அதனால், சுதாரித்துக்கொண்ட அகில இந்திய வானொலி திரையிசைக்கும் முக்கியத் துவம் தரத் தொடங்கி நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தியது. அப்போதுதான், 1957இல் திரை இசையை மையப்படுத்தி விளம்பரதாரர்களைக் கவர்வதற்காக ‘விவித்பாரதி’ தொடங்கப்பட்டது. இதில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் விளம்பரங் களும் ஒலிபரப்பாகின. திரைப்படங்களை…
சென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 28-ம் தேதி தொடங்கியது. இதையொட்டி, அறிவியல் பாடத் தேர்வு நேற்று நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 4,113 மையங்களில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதினர். இதற்கிடையே, அறிவியல் பாடத் தேர்வு வினாத்தாள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். 2 மற்றும் 4 மதிப்பெண் பிரிவு கட்டாய கேள்விகள் மட்டும் சற்று கடினமாக கேட்கப்பட்டன. மற்றப் பகுதி வினாக்கள் அனைத்தும் எளிமையாக இருந்தன. மாணவர் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட உயரும் என்று ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடைசித் தேர்வான சமூக அறிவியல் தேர்வு வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது. அத்துடன் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவடைகிறது.