டாம் க்ரூஸ் நடித்துள்ள ‘மிஷன் இம்பாசிபிள் 8’ திரைப்படம் இந்தியாவில் ஒருவாரம் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த படங்களின் பட்டியலில் ‘மிஷன்: இம்பாசிபிள்’ சீரிஸ் படங்கள் எப்போதும் உண்டு. ஆக்ஷன் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் இந்தப் படத்தின் முந்தைய பாகங்கள் ஹாலிவுட்டில் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளன. அந்த வகையில் இந்தப் படத்தில் 7-ம் பாகமாக ‘மிஷன்: இம்பாசிபிள்- டெட் ரெகனிங் (பாகம் 1)’ கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி வெளியாகி வசூலை குவித்தது. முந்தைய பாகத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்யூரி இந்தப் பாகத்தையும் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் முந்தைய பாகங்களின் வரவேற்பை கணக்கில் கொண்டு இப்படத்தை முன்கூட்டியே இங்கு வெளியிடுகிறது பாரமவுன்ட் நிறுவனம். உலகம் முழுவதும் இப்படம் மே 23-ஆம் தேதி வெளியாகும் நிலையில், இந்தியாவில் மே 17-ஆம் தேதியே இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ‘மிஷன் இம்பாசிபிள்’ பட…
Author: admin
சென்னை: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் பலியான 7 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி , அருகில் திருநெல்வேலி – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (ஏப்.27) மாலை சுமார் 5 மணியளவில் நாகர்கோவிலிருந்து திருநெல்வேலிக்கு சென்றுகொண்டிருந்த கார் ஒன்றின் மீது, திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்துகொண்டிருந்த கார் ஒன்று தடம் மாறி எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிய விபத்தில் மேற்படி வாகனங்களில் பயணம் செய்த 16 நபர்களில் திருநெல்வேலி மாவட்டம், பாளைங்கோட்டை வட்டம், டக்கரம்மாள்புரம், விவேகானந்தர் காலனியைச் சேர்ந்த தனிஸ்லாஸ் (68) ,மார்கரெட் மேரி (60) , ஜோபர்ட் (40) , அமுதா (35), குழந்தைகள் ஜோபினா (8), ஜோகன் (2) மற்றும் ராதாபுரம் வட்டம், கன்னங்குளத்தைச் சேர்ந்த மேல்கேஸ் (60)…
ஸ்ரீநகர்: “பயங்கரவாதத்துக்கு எதிரான மக்களின் போராட்டத்தை எனது அரசு வலுப்படுத்தும். ஏனெனில் பொதுமக்களின் ஒத்துழைப்பால் மட்டுமே அதை தோற்கடிக்க முடியும். துப்பாக்கியால் பயங்கரவாதியை கட்டுப்படுத்த முடியாது, ஆனால் மக்கள் நம்முடன் இருந்தால் பயங்கரவாத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியும். அதற்கான நேரம் வந்துவிட்டதாக நான் நினைக்கிறேன்” என்று ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா, “பயங்கரவாதத்துக்கு எதிரான மக்களின் போராட்டத்தை எனது அரசு வலுப்படுத்தும். ஏனெனில் பொதுமக்களின் ஒத்துழைப்பால் மட்டுமே அதை தோற்கடிக்க முடியும். மக்கள் நம்முடன் இருக்கும்போது தீவிரவாதமோ அல்லது பயங்கரவாதமோ நிச்சயம் முடிவுக்கு வரும். பயங்கரவாதத்துக்கு எதிரான மக்களின் கோபத்தைக் கருத்தில் கொண்டு, நாம் சரியான நடவடிக்கைகளை எடுத்தால், அதுவே அதன் முடிவின் தொடக்கமாகும். மக்களை அந்நியப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் நாம் எடுக்கக்…
Last Updated : 28 Feb, 2025 11:12 AM Published : 28 Feb 2025 11:12 AM Last Updated : 28 Feb 2025 11:12 AM இந்திய அறிவியலாளர்கள் என்று சொன்னாலே, நம் நினைவுக்கு முதலில் வருபவர் சர் சி.வி.ராமன்தான். அவர் கண்டறிந்த ‘ராமன் விளைவு’ கோட்பாடு அறிவியல் உலகின் பல்வேறு ஆய்வுகளுக்கும் கண்டறிதல்களுக்கும் இன்று வரை முன்னத்தி ஏராக உள்ளது. இந்த விளைவை ராமன் எப்படிக் கண்டறிந்தார், தெரியுமா? ஒருமுறை கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக ஐரோப்பாவில் நடைபெற்ற விஞ்ஞானிகள் மாநாட்டுக்கு ராமன் கப்பல் பயணம் மேற்கொண்டார். இயற்கை மீதிருந்த ஆர்வத்தால் வானத்தை உற்றுநோக்கிக் கொண்டிருந்தார் ராமன். அவர் பார்த்த மத்திய தரைக் கடல் பகுதியில் வானம் ஏன் அவ்வளவு நீல நிறமாகக் காட்சியளிக்கிறது என்று சிந்திக்கத் தொடங்கினார். இந்தக் கேள்வி அவருடைய மனதில் ஊடுருவியது. இதற்காகப் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார். அப்படி ராமன்…
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் இடம்பெற்ற தவறான கேள்விக்கு மாணவர்கள் விடையளிக்க முயற்சி செய்திருந்தாலே, ஒரு மதிப்பெண் வழங்க அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவடைந்து, விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. அதில், சமூக அறிவியல் விடைத்தாள் மதிப்பீட்டு பணி நேற்று தொடங்கியது. இதற்கிடையே, அந்த பாடத்தில் ஒரு மதிப்பெண் வினா பகுதியில் 4-வது கேள்வியில் ‘கூற்று: ஜோதிபா பூலே ஆதரவற்றவர்களுக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான காப்பகங்களையும் திறந்தார். காரணம்: ஜோதிபா பூலே குழந்தை திருமணத்தை எதிர்த்தார். விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கேள்வியில் 2 வாக்கியங்களுமே முரணாக இருப்பதாகவும், அதற்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், அந்த கேள்விக்கு மாணவர்கள் விடையளிக்க முயற்சி செய்திருந்தாலே, முழு மதிப்பெண் (ஒரு மார்க்) வழங்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் ந.லதா…
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்சிபி தங்களது முதல் வெற்றியை ருசித்ததற்கு முக்கிய காரணம், ஜாஷ் ஹேசில்வுட்டின் இரண்டு ஓவர்கள். அதிலும் குறிப்பாக, அந்த 19-வது ஓவர் நிச்சயம் டி20 கிரிக்கெட்டில் அனைத்துப் பவுலர்களும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களைக் கொண்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துருவ் ஜுரெல், ஷுபம் துபே புவனேஷ்வர் குமார் ஓவரை துவைத்து எடுத்து 22 ரன்களை விளாசிய தருணம், ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் பக்கம் சென்றுவிட்டது. ஆர்சிபி ரசிகர்கள், ‘அடப் போடா மறுபடியும் தோல்வியா?’ என்று சோர்வடைந்து போயினர். ஏனெனில் 12 பந்துகளில் ராஜஸ்தான் வெற்றிக்குத் தேவை வெறும் 18 ரன்களே. அப்போதுதான் ஆர்சிபி ரசிகர்களால் செல்லமாக ‘Hazlegod’ என்று அழைக்கப்படும் ஹாசில்வுட் 19-வது ஓவரை வீச வந்தார். சாதாரணமாக அத்தகைய தருணங்களில் ஒரு கண்டிப்பான களவியூகம் அமைத்து யார்க்கர், ஸ்லோ பந்துகளையே வீசுவார்கள், இதற்குப் பேட்டர்களும் தயாராக இருப்பார்கள். ஆனால், ஹேசில்வுட் வீசிய விதமே அலாதிதான்.…
புதுடெல்லி: போப் பிரான்சிஸை சந்தித்த கடைசி உலகத் தலைவராக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அறியப்படுகிறார். அந்தச் சந்திப்பு குறித்து ஜே.டி.வான்ஸ் விவரித்துள்ளார். கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் இன்று காலமானார். அவரின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.20) வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கார்டினல் ஏஞ்சலோ கோமாஸ்ட்ரி தலைமையில் நடைபெற்ற ஈஸ்டர் விழாவின் முடிவில், போப் பிரான்சிஸை குடும்பத்துடன் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் நிர்வாகத்தின் பல கொள்கைகளை போப் மற்றும் வாடிகன் அதிகாரிகள் விமர்சித்துள்ளனர். குறிப்பாக, அமெரிக்காவிலிருந்து லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோரை நாடு கடத்தும் அவரது திட்டங்களும் அடங்கும். இதனிடையே, இந்தியா வந்துள்ள ஜே.டி. வான்ஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “போப் பிரான்சிஸ் காலமான செய்தியை இப்போதுதான் அறிந்தேன். உலகம் முழுவதும் அவரை நேசித்த கோடிக்கணக்கான…
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேர்த் திருவிழா ஏப்.3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 9-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் ரங்கநாச்சியாருடன் சேர்த்தி சேவை கண்டருளினார். தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம்(கோரதம்) நேற்று நடைபெற்றது. இதையொட்டி, நம்பெருமாள் காலை 8 மணிக்கு தாயார் சந்நிதியில் இருந்து கோ ரதம் என்னும் பங்குனி தேர் மண்டபத்துக்கு புறப்பட்டார். அங்கு காலை 8.30 மணிக்கு தேரில் எழுந்தருளினார். பின்னர், காலை 9.40 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். 4 சித்திரை வீதிகளிலும் வலம் வந்த தேர், மதியம் 12.30 மணிக்கு நிலையை அடைந்தது. பின்னர், தேரின் முன்பு பக்தர்கள் சூடம், நெய் விளக்கேற்றி, தேங்காய் உடைத்து வழிபட்டனர். தேர்த் திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாவில், இன்று(ஏப்.13) ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு சேவை…
சீதா கதாபாத்திர விவகாரம் தொடர்பாக எழுந்த விவாதத்துக்கு நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார். நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்ட பலர் நடிக்க ‘ராமாயணம்’ தயாராகி வருகிறது. இதில் சீதாவாக சாய் பல்லவி நடித்து வருகிறார். முதலில் இந்தக் கதாபாத்திரத்துக்கு ஸ்ரீநிதி ஷெட்டியும் ஆடிஷனுக்கு சென்று வந்துள்ளார். ஆனால், ‘கே.ஜி.எஃப்’ படங்களின் பிரம்மாண்ட வெற்றியினால் தன்னை சீதாவாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நினைத்து, மீண்டும் படக்குழுவினரை அணுகவில்லை என்று பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் ஸ்ரீநிதி ஷெட்டி. இதனை முன்வைத்து பலரும் கருத்து தெரிவிக்கத் தொடங்கினார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஸ்ரீநிதி ஷெட்டி, “சீதா கதாபாத்திரத்துக்கு மட்டுமே நான் ஆடிஷனுக்கு சென்றேன். அது முடிந்தவுடன் வேறு எந்தவொரு தகவலுமே எனக்கு படக்குழுவினரிடம் இருந்து வரவில்லை. சாய் பல்லவில் நடித்து வருவதாக ஊடகங்கள் மூலம் தெரிந்துகொண்டேன். ஆனால், எனக்கு பதிலாக சாய் பல்லவி நடிக்க வைப்பட்டது…
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மனைவி, மகன்களை விடுவித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், 6 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006 முதல் 2010-ஆம் ஆண்டு வரை வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த போது இரண்டு கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஐ.பெரியசாமி, அவரது மனைவி பி.சுசீலா, தற்போதைய பழனி திமுக சட்டமன்ற உறுப்பினரும் மகனுமான பி.செந்தில்குமார், மற்றொரு மகன் பி.பிரபு ஆகியோர் மீது திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறை கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு வழக்குப் பதிவு செய்தது. திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கில் இருந்து குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கில் இருந்து…