புதுடெல்லி: நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்வையொட்டி, சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து வருகிறனர். புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஏப்.28) நடைபெற்றது. இவ்விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருதினை குடியரசுத் தலைவர் திரவுபதி வழங்கி கவுரவித்தார். இவ்விழாவில் நடிகர் அஜித் குமாரின் மனைவி ஷாலினி மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த ஆண்டு 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள், 19 பத்ம பூஷண் விருதுகள், 113 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர் நல்லி குப்புசாமி, நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா சந்திரகுமார், ஆந்திராவை சேர்ந்த நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, பிஹார் முன்னாள் துணை முதல்வர் மறைந்த சுஷில் குமார் மோடி…
Author: admin
புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றத்தின் எதிரொலியாக, பாகிஸ்தானில் இருந்து வெளியேறி 1,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் வந்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து கடந்த 6 நாட்களில் 1,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வாகா எல்லை வழியாக தாயகம் திரும்பியுள்ளனர். இது தொடர்பாக பேசிய ஓர் அதிகாரி, “கடந்த ஆறு நாட்களில் 1,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாகிஸ்தானிலிருந்து வாகா எல்லை வழியாக தாயகம் திரும்பியுள்ளனர். இதேபோல், திங்கட்கிழமைக்குள் 800-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் அவர்களின் நாட்டுக்கு திரும்பியுள்ளனர்,” என்று கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் கடந்த 22-ம் தேதி 26 பேரை சுட்டுக் கொன்றனர். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி தலைமையில் கடந்த 23-ம் தேதி நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில், சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய…
புதுடெல்லி: அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, வழக்கில் வேறு புதிய நிபந்தனைகளை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், அவரது ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கை முடித்து வைத்தது. சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கடந்த 2023 ஜூன் மாதம் கைது செய்தது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, 2024 செப்டம்பர் 26-ம் தேதி அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஒருநாள் இடைவெளியில் அவர் மீண்டும் அவர் அமைச்சரானார். இந்த நிலையில், அவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யாகுமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ‘தற்போது அமைச்சராக இல்லை என்று கூறி ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜி, ஜாமீன் கிடைத்த ஒருநாள் இடைவெளியில் மீண்டும் அமைச்சராகி உள்ளார். இதனால், அவருக்கு…
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாசங் கேலக்சி எம்16 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது கேலக்சி ‘எம்’ வரிசையில் கேலக்சி எம்16 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. வரும் மார்ச் 5-ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும். சிறப்பு அம்சங்கள் 6.7 இன்ச் டிஸ்பிளே ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் மீடியாடெக் டிமான்சிட்டி 6300 சிப்செட் பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 50 மெகாபிக்சல்…
சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகளை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. நம்நாட்டில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மைத் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வை 12.58 லட்சம் பேர் வரை எழுதினர். இதன் முடிவுகள் பிப்ரவரி 11-ம் தேதி வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து ஜேஇஇ 2-ம்கட்ட தேர்வு ஏப்ரல் 2 முதல் 9-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 531 மையங்களில் 9 லட்சத்து92,350 மாணவர்கள் எழுதினர்.…
புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் காம்பீருக்கு மின்னஞ்சலில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும், பாஜக முன்னாள் எம்.பி.யுமான கவுதம் காம்பீருக்கு, 2 முறை மின்னஞ்சலில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ள மின்னஞ்சலில் நான் உன்னை கொல்லப்போகிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் 26 பேரை சுட்டுக் கொன்ற அதே நாளில், சந்தேகத்திற்கிடமான கணக்கிலிருந்து கவுதம் காம்பீருக்கு அச்சுறுத்தல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காம்பீர் ரஜிந்தர் நகர் காவல் நிலையத்தில்புகார் அளித்துள்ளார். அதில், தனக்கும் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக டெல்லி மத்திய காவல்துறை துணை ஆணையர் எம்.ஹர்ஷா வர்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கவுதம் காம்பீருக்கு மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அவருக்கு ஏற்கெனவே காவல்துறை தரப்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது” என…
மாட்ரிட்: ஸ்பெயின், போர்ச்சுக்கலின் பல நகரங்களில் இன்று பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டது என்றும், மின்சாரமின்றி பல லட்சம் மக்கள் தவித்த நிலையில் உள்கட்டமைப்பு வசதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மின்வெட்டால் பாதிக்கப்பட்ட நகரங்களில் மாட்ரிட், பார்சிலோனா, லிஸ்போன், செவில்லே மற்றும் போர்டோ போன்ற முக்கியமான தொழில் நகரங்களும் அடங்கும். மின்வெட்டு காரணமாக ரயில் சேவைகள், மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்பெயின் போக்குவரத்து ஆணையமான டிஜிடி, மின்வெட்டு காரணமாக மக்கள் தங்களின் கார்களை அவசியமின்றி பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது. சாலைகளில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் வேலை செய்யாததால், மாட்ரிட் நகரின் மையப் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று உள்ளூர் வானொலி தெரிவித்தது. இந்த நிலையில், அரசும், மின் இணைப்பு நிறுவனமான ரெட் எலக்ட்ரிகா மின் தடைக்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாகவும், மாற்றுத்…
Last Updated : 11 Apr, 2025 12:24 PM Published : 11 Apr 2025 12:24 PM Last Updated : 11 Apr 2025 12:24 PM சென்னிமலை முருகன் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் இன்று விமர்சையாக நடந்தது ஈரோடு: சென்னிமலை முருகன் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் இன்று (ஏப்.11) விமர்சையாக நடந்தது. அரோகரா கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள முருகன் கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட திருத்தலம் ஆகும். இக்கோயிலின் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று கைலாசநாதர் கோயிலில் வள்ளி – தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. பங்குனி உத்திரத்தை ஒட்டி, வள்ளி, தெய்வானை சமேதரராக மலர் அலங்காரத்தில் அருள் பாலித்த சென்னிமலை முத்துக்குமாரசுவாமி. விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி…
‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் இடம்பெற்ற ‘வீரா ராஜ வீரா’ பாடல் காப்புரிமை தொடர்பான வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய கிளாசிகல் பாடகர் ஃபயாஸ் வாசிஃபுதீன் தாகர் கடந்த 2023ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ‘வீரா ராஜ வீரா’ பாடல் தனது தந்தை நசீர் ஃபயாசுதீன் தாகர் மற்றும் மாமா ஜஹீருதீன் தாகர் இருவரும் சேர்ந்து இயற்றிய ‘சிவ ஸ்துதி’ பாடலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டிருப்பதாக அந்த மனுவில் வாசிஃபுதீன் தாகர் கூறியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் அந்த பாடலை பயன்படுத்துவதை தடுக்கவும், தனக்கு இழப்பீடு வழங்கவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கை…
சென்னை: சர்.பிட்டி. தியாகராயரின் 174-வது பிறந்தநாளையொட்டி, சென்னை ரிப்பன் மாளிகையில் அவரது படத்துக்கு தமிழக அரசு சார்பில் மலர் தூவி மரியாதை செலுப்பட்டது. திராவிட இயக்கத்தின் முன்னோடியும், நீதிக்கட்சி நிறுவனர்களில் ஒருவருமான ‘வெள்ளுடை வேந்தர்’ சர்.பிட்டி தியாகராயர் கடந்த 1852-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி பிறந்தார். சமூகநீதி காக்கவும், தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்காகவும் இவர் பாடுபட்டார். இவரது 174-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை மாநகராட்சி அலுவலக வளாகமான ரிப்பன் மாளிகையில் அவரது சிலைக்கு அருகே அலங்கரித்து வைக்கப்பட்ட உருவப் படத்துக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஏஎம்வி. பிரபாகரராஜா எம்எல்ஏ, சென்னை மாநகராட்சி ஆணைர் ஜெ.குமரகுருபரன், தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை செயலர் வே.ராஜாராமன், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு தியாகராயர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். முதல்வர் ஸ்டாலின்…