Author: admin

சீதா கதாபாத்திர விவகாரம் தொடர்பாக எழுந்த விவாதத்துக்கு நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார். நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்ட பலர் நடிக்க ‘ராமாயணம்’ தயாராகி வருகிறது. இதில் சீதாவாக சாய் பல்லவி நடித்து வருகிறார். முதலில் இந்தக் கதாபாத்திரத்துக்கு ஸ்ரீநிதி ஷெட்டியும் ஆடிஷனுக்கு சென்று வந்துள்ளார். ஆனால், ‘கே.ஜி.எஃப்’ படங்களின் பிரம்மாண்ட வெற்றியினால் தன்னை சீதாவாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நினைத்து, மீண்டும் படக்குழுவினரை அணுகவில்லை என்று பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் ஸ்ரீநிதி ஷெட்டி. இதனை முன்வைத்து பலரும் கருத்து தெரிவிக்கத் தொடங்கினார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஸ்ரீநிதி ஷெட்டி, “சீதா கதாபாத்திரத்துக்கு மட்டுமே நான் ஆடிஷனுக்கு சென்றேன். அது முடிந்தவுடன் வேறு எந்தவொரு தகவலுமே எனக்கு படக்குழுவினரிடம் இருந்து வரவில்லை. சாய் பல்லவில் நடித்து வருவதாக ஊடகங்கள் மூலம் தெரிந்துகொண்டேன். ஆனால், எனக்கு பதிலாக சாய் பல்லவி நடிக்க வைப்பட்டது…

Read More

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மனைவி, மகன்களை விடுவித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், 6 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006 முதல் 2010-ஆம் ஆண்டு வரை வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த போது இரண்டு கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஐ.பெரியசாமி, அவரது மனைவி பி.சுசீலா, தற்போதைய பழனி திமுக சட்டமன்ற உறுப்பினரும் மகனுமான பி.செந்தில்குமார், மற்றொரு மகன் பி.பிரபு ஆகியோர் மீது திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறை கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு வழக்குப் பதிவு செய்தது. திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கில் இருந்து குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கில் இருந்து…

Read More

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனின் அதிகாரபூர்வ இல்லமான கிளிஃப் ஹவுஸுக்கும், முதல்வர் அலுவலகத்துக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை கமிஷனர் அலுவலகம், தலைமைச் செயலகம் உள்ளிட்ட இடங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், கொச்சி சர்வதேச விமான நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. கேரள முதல்வர் இல்லம் மற்றும் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள நிலையில், மாநில போலீஸார் சம்பந்தப்பட்ட இடங்களில் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். மோப்ப நாய்களுடன் சிறப்பு குழுக்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். எனினும், இதுவரை எந்த வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதேபோல், கொச்சி விமான நிலையத்துக்கு காலை 7.53 மணிக்கு மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில் “விமான நிலையத்துக்குள் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் மதியத்துக்குள் விமான நிலையத்தை காலி செய்துவிடுங்கள்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.…

Read More

வாஷிங்டன்: வரும் மே மாதம் 5-ம் தேதி உடன் ஸ்கைப் தளத்துக்கு விடை கொடுப்பதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கு மாற்றாக டீம்ஸை பயனர்கள் மத்தியில் பிரபலப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த 2003-ல் ஸ்கைப் அறிமுகம் செய்யப்பட்டது. வீடியோ வழி உரையாடல், வீடியோ கான்ஃபரன்சிங் மற்றும் வாய்ஸ் கால்ஸ் போன்றவற்றை மேற்கொள்ளலாம். இன்ஸ்டன்ட் மெசேஜிங், ஃபைல் டிரான்ஸ்பர் உள்ளிட்ட அம்சங்கள் இதில் அடங்கும். டெஸ்க்டாப் உள்ளிட்ட கணினி மற்றும் மொபைல் போனில் இதை பயன்படுத்த முடியும். 2005-ல் 50 மில்லியன் பயனர்களை ஸ்கைப் தளம் எட்டியது. ஸ்கைப் பயனர்கள் தங்களது பயனர் விவரங்களை கொண்டு டீம்ஸில் லாக்-இன் செய்யலாம் என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. அதன் மூலம் பழைய சாட்கள் மற்றும் கான்டக்ட்ஸ் போன்றவை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் கட்டண சந்தா பயன்பாட்டை ஸ்கைப் தளத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுத்தி உள்ளது. நவீன கம்யூனிகேஷன்ஸ் சார்ந்து டீம்ஸ் தளத்தை ப்ரோமோட்…

Read More

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளில் சேர நாளை ( புதன்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.ஏழுமலை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் முதுகலை, முதுகலை டிப்ளமா, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்படிப்புகளில் வரும் கல்வி ஆண்டில் (2025-2026) சேர விரும்பும் மாணவர்கள் ஏப்ரல் 23-ம் தேதி (புதன்கிழமை) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.unom.ac.in) அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Read More

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன் படி முதலில் களத்துக்கு வந்த சிஎஸ்கே அணியின் ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே இருவரும் இன்னிங்ஸை தொடங்கினர். கடந்த போட்டிகளில் நன்றாக ஆடி கவனம் ஈர்த்த ஷேக் ரஷீத் இந்த ஆட்டத்தில் முதல் பந்திலேயே அவுட் ஆகி அதிர்ச்சி தந்தார். எதிர்முனையில் இருந்த ஆயுஷ் மாத்ரே 30 ரன்கள் எடுத்தார். சாம் கரண் 9 ரன்களுடன் வெளியேறவே, ஜடேஜா 21 ரன்கள் எடுத்தார். அதிகபட்சமாக டெவால்ட் ப்ரெவிஸ் 25 பந்துகளுகு 42 ரன்கள் எடுத்து அசத்தினார். துபே 12, தீபக் ஹூடா 22, தோனி 6 அன்ஷுல் கம்போஜ் 2 என சிஎஸ்கே 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 154 அடித்திருந்தது. 155 எடுத்தால்…

Read More

வாடிகன்: கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் மறைந்தார். அவருக்கு வயது 88. ஜார்ஜ் பெர்கோகிலோ என்ற இயற்பெயர் கொண்ட போப் பிரான்சிஸ், அப்பதவியில் அமர்ந்த முதல் லத்தீன் அமெரிக்கர் என்ற பெருமையைக் கொண்டவர். 2013-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி 266-வது போப் ஆக அவர் தேர்வு செய்யப்பட்டார். அவரது செயல்பாடுகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின் தொகுப்பு இது… பல நூற்றாண்டுகள் பழமையான கோட்பாட்டை மாற்றியமைக்காமல், மிகவும் இரக்கமுள்ள கத்தோலிக்க திருச்சபையை உருவாக்கிய சீர்திருத்த தலைவராக போப் பிரான்சிஸ் வரலாற்றில் இடம் பிடிப்பார். மக்களின் போப் ஆண்டவராக விளங்கியவர் பிரான்சிஸ். இவர் இந்த பெயரை தேர்ந்தெடுத்ததிலேயே அவர் தனது தனித்துவத்தை வெளிப்படுத்தினார். தனது செல்வத்தைத் துறந்து ஏழைகளுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த 13-ஆம் நூற்றாண்டின் மறைபொருள் அசிசியின் புனித பிரான்சிஸ் நினைவாக பிரான்சிஸ் என்ற பெயரைப் பெற்ற முதல் போப் இவராவார். திருச்சபைக்குள் பாரம்பரியவாதிகளிடம் இருந்து…

Read More

மூலவர்: பூமிநாதர் அம்பாள்: ஆரணவல்லி தல வரலாறு: முதல் யுகமான கிருதயுகத்தில், பூமிபாரத்தை தாங்க முடியாமல் பூமாதேவி, எதிர்வரும் யுகங்களில் பூமிபாரத்தை தாங்கும்சக்தியை தனக்கு அதிகரித்துதர வேண்டும் என்று சிவபெருமானை வேண்டி கடும் தவமிருந்தாள், அவள் முன் தோன்றிய சிவபெருமான், “திரேதாயுகம், துவாபரயுகத்தில் பூமியை தாங்குவதற்குரிய சக்தியைத் தருகிறேன். ஆனால், கலியுகத்தில் இப்பூமியைத் தாங்கும் சக்தியைப் பெற இந்த தவம் போதாது. உன்னை பூஜிக்கும் நல்ல பக்தனால் இந்த வலிமை உனக்கு கிட்டும். இதற்கு நாராயணனின் கிருபையும் தேவை” என சொல்லி மறைந்தார். நல்ல பக்தர்களைத் தேடும் சமயத்தில் செல்லும் இடங்களில் உள்ள சுயம்பு மூர்த்திகளை பிரார்த்தித்தாள். பூமாதேவி பிரார்த்தித்த மூர்த்திகள் பூமிநாதர், பூலோகநாதர் என்று அழைக்கப்பட்டனர். அதில் ஒன்றே செவலூர் பூமிநாதர் கோயிலாகும். கோயில் சிறப்பு: கர்ப்பகிரகத்தில் பூமிநாதர் 16 பட்டைகளுடன் ஷோடச லிங்கமாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள பிருத்வி தீர்த்தத்தின் மகிமை அளவிட முடியாதது. பித்ரு தர்ப்பணத்துக்கு ஏற்ற தீர்த்தம்…

Read More

“தயவு செய்து சிகரெட் அடிக்காதீர்கள்” என்று ரசிகர்களுக்கு சூர்யா அட்வைஸ் செய்துள்ளார். மே 1-ம் தேதி சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘ரெட்ரோ’. இதன் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சி கேரளாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சூர்யா பேசும்போது, “‘ரெட்ரோ’ பார்த்துவிட்டேன். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். கண்டிப்பாக முந்தைய 45 படங்களை விட வேறு மாதிரி இருக்கும். உங்களிடம் இருந்து கிடைக்கும் இந்த அன்புக்காக கண்டிப்பாக உங்களை மகிழ்விக்க கூடிய வித்தியாசமான படங்கள் செய்வேன். இரண்டரை மணி நேரம் நீங்கள் திரையரங்கு வந்தால் உங்களை மகிழ்விக்க என்ன செய்ய வேண்டுமோ செய்வேன்” என்று தெரிவித்தார் சூர்யா. அதனைத் தொடர்ந்து பேச்சை முடிக்கும் முன்பு, “இப்படத்தின் காட்சிக்காக மட்டுமே சிகரெட் அடித்தேன். நிஜ வாழ்க்கையில் யாரும் தயவு செய்து சிகரெட் அடிக்காதீர்கள். ஒரு இழுப்பு தானே என்று ஆரம்பித்தால், விடவே முடியாது. அந்தச் செயலை எப்போதுமே ஆதரிக்க மாட்டேன்” என்று பேசினார்…

Read More

சென்னை: பூந்தமல்லி – போரூர் வரை 9.1 கி.மீ. தொலைவிலான வழித்தடத்தில் ஒருவழி பாதையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் இன்று (ஏப்.28) நடைபெற உள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த வழித்தடங்களில் ஒட்டுமொத்தமாக 128 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இவற்றில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடம் (26.1 கி.மீ.) ஒன்றாகும். கலங்கரை விளக்கம் – கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் – பூந்தமல்லி பைபாஸ் வரை உயர்மட்டப்பாதையாகவும் அமைகிறது. தற்போது, பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப்பாதை பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. அதிலும், போரூர் – பூந்தமல்லி பைபாஸ் இடையே பல இடங்களில் பொறியியல் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இப்பாதையில் தற்போது உயர்மட்டப்பாதை அமைக்கப்பட்டுவிட்டது. அடுத்த கட்டமாக, தண்டவாளம் அமைக்கும் பணி,…

Read More