பல தசாப்தங்களாக, பெர்முடா முக்கோணம், மியாமி, பெர்முடா மற்றும் புவேர்ட்டோ ரிக்கோ ஆகியோரால் கட்டுப்படுத்தப்பட்ட கடலின் நீளம், மர்மம், பயம் மற்றும் ஊகங்களுக்கு உட்பட்டது. ஒரு தடயமின்றி கப்பல்கள் மறைந்துபோகும் கதைகள் முதல் விமானத்தின் நடுப்பகுதியில் விமானம் மறைந்து போகும், இப்பகுதி இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள், அன்னிய கடத்தல்கள் மற்றும் நேரப் போர்கள் பற்றியும் கோட்பாடுகளை ஊக்கப்படுத்தியுள்ளது. ஆனால் அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) மற்றும் லண்டனின் லாயிட்ஸ் ஆகியவற்றின் ஆராய்ச்சியால் ஆதரிக்கப்பட்ட ஆஸ்திரேலிய விஞ்ஞானி கார்ல் க்ருஸ்ஸெல்னிகியின் கூற்றுப்படி, இந்த கட்டுக்கதைகள் இல்லை. சபிக்கப்பட்ட மண்டலமாக இருந்து, பெர்முடா முக்கோணத்தின் மர்மங்கள் என்று அழைக்கப்படுவதை இயற்கை சுற்றுச்சூழல் நிலைமைகள், மனித பிழை மற்றும் புள்ளிவிவர நிகழ்தகவு ஆகியவற்றால் விளக்க முடியும். உண்மை, க்ருஸ்ஸெல்னிகி வலியுறுத்துகிறது, இது மிகக் குறைவானது மற்றும் இயற்கையின் மற்றும் வழிசெலுத்தலின் யதார்த்தங்களில் வேரூன்றியுள்ளது.பெர்முடா முக்கோணம் மற்ற பெருங்கடல்களை விட பெரிய ஆபத்தை…
Author: admin
ஜபல்பூர்: மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகில் உள்ள ஒரு வங்கியில் பட்டப்பகலில் ஆயுதமேந்திய கொள்ளையர்கள் ரூ.14.8 கோடிக்கும் அதிக மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.5.7 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ள கிடோலா பகுதியில் இசாஃப் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி கிளை இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் 6 கொள்ளையர்கள் 3 மோட்டார் சைக்கிள்களில் இந்த வங்கிக்கு வந்தனர். இவர்களில் 4 பேர் முகத்தை மறைப்பதற்காக ஹெல்மெட் அணிந்து கொண்டு வங்கிக்குள் நுழைந்துள்ளனர். பிறகு துப்பாக்கி முனையில் வங்கி ஊழியர்களை மிரட்டி ரூ.14.8 கோடிக்கும் அதிக மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.5.7 லட்சம் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு சில நிமிடங்களில் தப்பிச் சென்று விட்டனர். கொள்ளை நடந்த நேரத்தில் மேலாளர் உட்பட வங்கியில் 6 ஊழியர்கள் இருந்தனர். பண்டிகை காலத்துக்காக வேலை நேரத்தில் சமீபத்திய…
மதுரை: சொத்துவரி முறைகேடு வழக்கில் கைதான மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி கணவர் பொன் வசந்த் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டில் 2 உதவி ஆணையாளர்கள், வரிவிதிப்புக் குழு தலைவர் உள்பட இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த்தையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இன்று அதிகாலை அவரை 6.30 மணிக்கு மதுரை அழைத்து வந்த போலீஸார், நேரடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவப் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் தனக்கு நெஞ்சுவலி, படபடப்பு இருப்பதாகவும், மேலும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தமும் இருப்பதாக கூறியுள்ளார். உடனடியாக மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்துள்ளனர். அவருக்கு இசிஜி-யில் மாற்றம் இருந்ததால் எக்கோ பரிசோதனையும் செய்தனர். மேலும், அவர் தனக்கு தலைசுற்றலும், மயக்கமும் ஏற்படுவதாக கூறியதால் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க…
அரிப்பு கைகளும் கால்களும் பொதுவாக வறண்ட சருமம், ஒவ்வாமை அல்லது சிறிய எரிச்சலுக்காக தவறாக கருதப்படுகின்றன. இருப்பினும், அரிப்பு தொடர்ந்து, விவரிக்கப்படாத, மற்றும் புலப்படும் சொறி இல்லாமல் நிகழும்போது, அது ஒரு அடிப்படை கல்லீரல் பிரச்சினையை குறிக்கக்கூடும். இதுபோன்ற அரிப்பு, குறிப்பாக உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில் குவிந்து கொள்ளும்போது, கல்லீரல் செயல்பாடு பலவீனமானதால் இரத்த ஓட்டத்தில் பித்த அமிலங்களை உருவாக்குவதன் விளைவாக ஏற்படக்கூடும் என்பதை மருத்துவ வல்லுநர்கள் எடுத்துக்காட்டுகின்றனர். இந்த நிலை பெரும்பாலும் கொலஸ்டாஸிஸ் அல்லது கல்லீரல் சிரோசிஸ் போன்ற கோளாறுகளுடன் தொடர்புடையது. இரவில் அரிப்பு மோசமடைந்தால், மாய்ஸ்சரைசர்களுக்கு பதிலளிக்கவில்லை, அல்லது சோர்வு அல்லது மஞ்சள் காமாலை ஆகியவற்றுடன் இருந்தால், உடனடியாக ஒரு மருத்துவரை அணுகுவது அவசியம்.கல்லீரல் சேதம் ஏன் ஏற்படலாம் கைகளிலும் கால்களிலும் அரிப்புகல்லீரல் சரியாக செயல்படாதபோது, பித்த அமிலங்கள் மற்றும் நச்சுகள் இரத்த ஓட்டத்தில் உருவாகலாம். இந்த பொருட்கள் பின்னர் தோலின் கீழ் நரம்பு முடிவுகளை எரிச்சலடையச் செய்யலாம்,…
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக் கைக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் 2-வது முறையாக அமெரிக்கா சென்றுள்ளார். புளோரிடா மாகாணம் டம்பா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய முனீர், இந்தியாவுக்கு அணு ஆயுத மிரட்டல் விடும் வகையில் பேசியிருந்தார். மேலும் அந்த நிகழ்ச்சியில், சமீபத்தில் இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலின்போது வெளியிடப்பட்ட, குர்ஆன் வசனத்துடன் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் புகைப்படம் இடம்பெற்றிருந்த ஒரு சமூக வலைதள பதிவைப் பற்றி முனீர் குறிப்பிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவுடன் அடுத்த முறை போர் மூண்டால், என்ன செய்யப் போகிறோம் என்பதைக் காட்டவே அதைச் செய்தோம் என்று அவர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான, குஜராத்தின் ஜாம் நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய ரிலையன்ஸ் குழுமத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பாலையை குறிவைத்து தாக்குவோம் என மிரட்டல் விடுத்துள்ளார்.
டார்வின்: ஆஸ்திரேலியாவின் டார்வினில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா 53 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பெற்றது. தென் ஆப்பிரிக்காவின் எழுச்சியுறும் நட்சத்திரம், சிஎஸ்கே அணிக்கு ஆடும் டேவால்ட் பிரேவிஸ் 8 சிக்சர்க்ள் 12 பவுண்டரிகளுடன் 56 பந்துகளில் 125 ரன்களை விளாசி வெற்றி நாயகனாகத் திகழ்ந்தார். இந்தப் போட்டியின் சில சாதனைத் துளிகள்: தென் ஆப்பிரிக்கா இந்தப் போட்டியில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. இது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தென் ஆப்பிரிக்காவின் அதிகபட்ச டி20 ஸ்கோராகும். 2016 – ஜொஹான்னஸ்பர்கில் 204/7 ஸ்கோர்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்சமாக இருந்தது. டேவால்ட் பிரேவிஸின் 125 ரன்கள் என்பது தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவர் டி20 சர்வதேசப் போட்டியில் எடுக்கும் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன்னர் ஜொஹான்னஸ்பர்கில் 2015-ம் ஆண்டு ஃபாப் டு பிளெசிஸ் எடுத்த 119 ரன்களே சிறந்த தனிப்பட்ட டி20 சர்வதேச அதிக…
இஸ்லாமாபாத்: முக்கிய பயங்கரவாத குழுக்களை எதிர்கொள்வது உள்ளிட்ட தீவிர நடவடிக்கைகளில் பாகிஸ்தான் – அமெரிக்கா இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. பயங்கரவாத அமைப்புகளை எதிர்கொள்வது தொடர்பாக அமெரிக்கா – பாகிஸ்தான் இடையே நேற்று (ஆக.12) பேச்சுவார்த்தை நடைபெற்றது. இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா சார்பில் பங்கேற்ற குழுவுக்கு அதன் வெளியுறவுத் துறையின் பயங்கரவாத எதிர்ப்புக்கான செயல் ஒருங்கிணைப்பாளர் கிரிகோரி டி லோஜெர்ஃபோ தலைமை தாங்கினார். பாகிஸ்தான் குழுவுக்கு, அந்நாட்டின் ஐநா சிறப்பு செயலாளர் நபீல் முனீர் தலைமை தாங்கினார். இரு குழுவினருக்கும் இடையே நடைபெற்ற நீண்ட நேர பேச்சுவார்த்தையை அடுத்து, கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், “பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்த்துப் போராடுவதில் பாகிஸ்தானும் அமெரிக்காவும் உறுதியாக உள்ளன. பலுசிஸ்தான் விடுதலை ராணுவம்(பிஎல்ஏ), ஐஎஸ்ஐஎஸ் – கோராசன், தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தேவையான அணுகுமுறைகளை வளர்ப்பது முக்கியம் என்பதை இரு…
திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இதில் மாணவி ஒருவர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியிடம் இருந்து பட்டத்தை பெறாமல் தவிர்த்து, பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பட்டத்தை பெற்றுக் கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சி. கலையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என். ரவி தலைமையேற்று மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். இதில் மாணவி ஒருவர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியிடம் இருந்து பட்டத்தை பெறாமல் தவிர்த்து, பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பட்டத்தை பெற்றுக் கொண்ட நிகழ்வு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் எதிராக ஆளுநர் செயல்படுவதால் அவரிடம் பட்டத்தை பெறாமல் மாணவி தவிர்த்ததாக கூறப்படுகிறது. மைக்ரோ பைனான்ஸ் பாடப்பிரிவில் முனைவர் பட்டம் பெற்ற ஜின் ஜோசப் என்ற மாணவி இவ்வாறு செய்ததாக தகவல் கூறப்படுகிறது.…
ஹார்வர்ட் ஹெல்த் பப்ளிஷிங் அறிக்கை சில தொழில்களுக்கு இடையிலான ஆச்சரியமான தொடர்பையும் அல்சைமர் நோயிலிருந்து (கி.பி.) இறக்கும் ஆபத்து குறைவாகவும் உள்ளது. டாக்டர் மதிப்பாய்வு செய்த ஆராய்ச்சியின் படி ராபர்ட் எச். இந்த வேலைகளில் நிகழ்நேர வழிசெலுத்தலின் மனக் கோரிக்கைகள் ஹிப்போகாம்பஸ், நினைவகம் மற்றும் இடஞ்சார்ந்த விழிப்புணர்வுக்கு முக்கியமான ஒரு மூளைப் பகுதி மற்றும் அல்சைமர்ஸால் பாதிக்கப்பட்ட முதல் பகுதிகளில் ஒன்றாகும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். உறுதிப்படுத்தப்பட்டால், இந்த கண்டுபிடிப்புகள் நோயைப் புரிந்துகொள்வதிலும் தடுப்பதிலும் புதிய கதவுகளைத் திறக்கக்கூடும்.ஆம்புலன்ஸ் மற்றும் டாக்ஸி ஓட்டுநர் வேலைகள் அல்சைமர் நிறுவனத்திலிருந்து பாதுகாக்கக்கூடும்லண்டன் டாக்ஸி ஓட்டுநர்கள் பற்றிய முந்தைய ஆய்வுகள், இடஞ்சார்ந்த நினைவகத்திற்கு காரணமான மூளையின் ஒரு பகுதியான ஹிப்போகாம்பஸின் குறிப்பிட்ட பகுதிகளில் விரிவாக்கத்தை வெளிப்படுத்தின. இந்த பகுதி அல்சைமர் காரணமாக ஏற்படும் சேதத்திற்கு குறிப்பாக பாதிக்கப்படக்கூடியது. டாக்ஸி மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களில் தொடர்ச்சியான மன மேப்பிங், பாதை திட்டமிடல் மற்றும் முடிவெடுப்பது ஹிப்போகாம்பல் ஆரோக்கியத்தை…
பாட்னா: ‘எனது படம் இடம்பெற்ற டி-ஷர்ட்களை அணிய அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தார்கள்?’ என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை நோக்கி வாக்காளர் பட்டியல் முறைகேடு சர்ச்சையில் பிரபலமான மின்டா தேவி கேள்வி எழுப்பியுள்ளார். பிஹார் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக போராடி வருகின்றன. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது பிரியங்கா காந்தி, ஆர்.சுதா உள்ளிட்ட சில எம்.பி.க்கள் மின்டா தேவி மற்றும் அவரது படம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட் அணிந்திருந்தனர். டி-ஷர்ட் பின்புறத்தில் ‘124 நாட் அவுட்’ என்று எழுதப்பட்டிருந்தது. பிஹார் வாக்காளர் பட்டியலில் 124 வயது மின்டா தேவியின் பெயர் முதல்முறை வாக்காளராக இடம்பெற்றுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இது குறித்து ராகுல் காந்தி கூறுகையில், “இதுபோல் எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன. இவை தொடர்ந்து வெளிவரும்” என்றார். பிரியங்கா காந்தி கூறுகையில், “பிஹார் வாக்காளர் பட்டியலில் போலியாக இடம்பெற்றுள்ள பெயர்கள், முகவரிகள்…