பீஜிங்: ‘பஹல்காம் தாக்குதல் பிரச்சினையில் இந்தியா, பாகிஸ்தான் நிதானத்தை கடைபிடிக்கும் என நாங்கள் நம்புகிறோம்’ என சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறும்போது, “பஹல்காம் பிரச்சினையில் இந்தியா, பாகிஸ்தான் நிதானத்தை கடைபிடிக்கும் என நாங்கள் நம்புகிறோம். இருநாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றத்தை தணிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் சீனா வரவேற்கிறது” என்று தெரிவித்துள்ளார். கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தீவிரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகளை இந்திய அரசு எடுத்தது. இதற்கு பதில் நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசும் மேற்கொண்டது. இந்தியாவுடன் வர்த்தக ரீதியான உறவை பாகிஸ்தான் முறித்துக் கொண்டுள்ளது. இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூளுமா என்ற வாதவிவாதங்கள் எழுந்துள்ளன. இந்தச்…
Author: admin
பழநி: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநியில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழா தொடங்குவதற்கு முன்கூட்டியே ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்த காவடியுடன் வரத் தொடங்கினர். விழாவின் 6-ம் நாளான நேற்று (ஏப்.10) மாலை திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. இன்று வெள்ளிக்கிழமை (ஏப்.11) பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்ரூப தரிசனம்,காலை 4.30 மணிக்கு விளா பூஜை நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பழநி மலைக்கோயில் மற்றும் பாராவேல் மண்டபம் முழுவதும் 2 டன்னுக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலை…
அரசன் கோட்டை என்ற ஊரில்உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவி காணாமல் போகிறார். இவ்வழக்கைக் காவல்துறை கண்டு கொள்ளாத நிலையில், அதே பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரியும் சுஜிதா (கேத்ரின் தெரசா), மாணவி மாயமானது குறித்தும், பள்ளி வளாகத்தில் நடைபெறும் சட்டவிரோதச் செயல்கள் பற்றியும், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்குப் புகார்அனுப்புகிறார். அதைத் தொடர்ந்து அந்தப் பள்ளிக்கு புதியஉடற்கல்வி ஆசிரியராகப் பணியில் இணைகிறார் சரவணன் (சுந்தர்.சி). இவருடன் சுஜிதாவும் மற்றொரு உடற்கல்வி ஆசிரியரான சிங்காரமும் (வடிவேலும்) நட்புக் கூட்டணி அமைக்கின்றனர். இவர்களால், காணாமல் போன மாணவியின் நிலையைக் கண்டறியமுடிந்ததா? உண்மையில் சரவணன் யார்? பள்ளியைச் சட்ட விரோதமாகப் பயன்படுத்தும் உள்ளூர் அரசியல்வாதிகள் எப்படிப்பட்டவர்கள் எனப் பல கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது கதை. வில்லன்கள், உள்ளூர் அரசியல்வாதியாக இருந்தாலும் அவர்களின் நிழலுலகச் சாம்ராஜ்ஜியத்துக்குள் துணிந்து கேள்வி கேட்கும் கதாநாயகிக்கு ஆபத்து ஏற்படும்போது, உள்ளே நுழைகிறார் கதாநாயகன். தன் முக அடையாளத்தை மறைத்துக்கொண்டு நாயகியை ஒவ்வொரு முறையும்…
சென்னை: “செந்தில் பாலாஜி, பொன்முடியின் பதவி விலகல் பற்றியெல்லாம் பேச பழனிசாமிக்கு அருகதையே இல்லை. தன்னுடைய ஆட்சியில் அமைச்சரவை மாற்றம் செய்யாமல் ஆட்சி செய்தாரா? தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனின் பதவியை எதற்காகப் பறித்தீர்கள்? பொதுச் சொத்துக்குச் சேதம் ஏற்படுத்திய வழக்கில் தண்டனை பெற்றதற்காக பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சர் பதவியை இழக்கவில்லையா? இதையெல்லாம் பழனிசாமி மறந்துவிட்டாரா?” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செந்தில் பாலாஜி, பொன்முடியின் பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சியின் பாதாள வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது. ஆட்சி மாற்றத்துக்கான விதைகள் துளிர்விடத் துவங்கிவிட்டன” எனச் சொல்லியிருக்கிறார். ‘தேர்தலில் தோற்றால் கூட பரவாயில்லை. அடுத்த தேர்தலில் வெல்ல முடியும். ஆனால், கட்சி வீழ்ந்தால் தேர்தலில் வெற்றி சாத்தியமே இல்லை’ என்ற அடிப்படைக் கோட்பாடு எல்லாக் கட்சித் தலைவர்களிடம் உண்டு. 2026-ம் ஆண்டு…
ஜெய்ப்பூர்: “நாட்டின் பெருமை பாதிப்புக்குள்ளானபோது நீங்கள் பிஹாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது மிகவும் துரதிருஷ்டமானது” என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் கார்கே சாடியுள்ளார். காஷ்மீரில் 26 பேர் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விவதிக்க நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் மோடி தவிர்த்தாக கார்கே இவ்வாறு விமர்சித்துள்ளார். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்த ‘அரசியலமைப்பைக் காப்பாற்றுங்கள்’ என்ற பேரணியில் கலந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், “நாட்டின் பெருமை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நீங்கள் (பிரதமர் மோடி) பிஹாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது நாட்டிக்கு மிகவும் துரதிருஷ்டமானது. அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால், பிரதமர் மோடி அதில் கலந்து கொள்ளாதது மிகவும் வருத்தமளிக்கும் விஷயம். பிரதமர் அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்து நாட்டின் திட்டம் என்ன என்பதை விளக்கியிருக்க வேண்டும்.…
எந்த ஓர் இயற்கை நிகழ்வையும் இது ஏன் ஏற்படுகிறது என்று கேள்வி கேட்டு, ஆராய்ந்து, பரிசோதனை செய்து, பல முறை சரிபார்த்து, துல்லியமாக இதனால்தான் ஏற்படுகிறது என்கிற முடிவை எட்டுவதுதான் அறிவியல் வழிமுறை. ஒருகாலத்தில் பூமியைத்தான் சூரியன் சுற்றுகிறது என்று கருதிவந்தனர். ஆனால், அது சரியல்ல என்று நினைத்த சில விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து, சூரியனைத்தான் பூமியும் மற்ற கோள்களும் சுற்றிவருகின்றன என்கிற முடிவுக்கு வந்தனர். இந்தக் கருதுகோள் இப்போது நிரூபிக்கப்பட்ட ஒன்று. இன்று இது சரியா, தவறா என்று ஆராயத் தேவையில்லை. அதேநேரம் யாரோ ஒருவர் சொல்லிவிட்டார் என்பதற்காகவே எதையும் கண்மூடித்தனமாகப் பின்பற்ற வேண்டிய அவசியமும் இல்லை. சரி, உதாரணத்துக்கு ஒன்றைப் பார்ப்போம். உங்களுக்குச் சிறுவர்களைவிட, சிறுமியர் அதிகமாகச் சாப்பிடுகிறார்கள் என்று தோன்றுவதாக வைத்துக்கொள்வோம். அதை நீங்கள் ஆராய்ந்து, பரிசோதனை செய்து, நிரூபித்து உங்கள் கருத்து சரிதான் என்பதை வெளிப்படுத்த வேண்டும். எப்படி? முதலில் ஒரே வயதுடைய சிறுவர்கள்…
சென்னை: 10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்துதல் பணிகள் மாநிலம் முழுவதும் இன்று (ஏப்ரல் 21) முதல் தொடங்கவுள்ளதாக தேர்வுத் துறை அறிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த பொதுத் தேர்வை சுமார் 26 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இதில் 12-ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பிளஸ் 1 வகுப்புக்கு ஏப்ரல் 19-ம் தேதியும், 10-ம் வகுப்புக்கு ஏப்ரல் 21-ம் தேதி விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே கிறிஸ்துவ பண்டிகையான புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் டே-வை முன்னிட்டு விடைத்தாள் திருத்துதல் பணிக்கு ஏப்ரல் 19-ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து 10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்…
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது. நடப்பு சீசனில் இரு அணிகளும் தலா 8 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 6 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளன. எனினும் நிகர ரன் ரேட் அடிப்படையில் ஹைதராபாத் அணி (-1.361) 9-வது இடத்திலும், சிஎஸ்கே (-1.392) 10-வது இடத்திலும் உள்ளன. இதனால் எஞ்சியுள்ள அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெற முடியும் என்ற நெருக்கடி இரு அணிக்கும் உள்ளது. இரு அணிகளுமே தங்களது கடைசி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸிடம் தோல்வி கண்டிருந்தன. சிஎஸ்கே அணி நடப்பு சீசனில் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் வெற்றிகளை பெற முடியாமல் தவித்து வருகிறது. மந்தமான ஆடுகளத்துக்கு தகுந்தபடி சிஎஸ்கே அணி தகவமைத்துக் கொண்டு…
வாடிகன்: புதிய போப்பை தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு மே 7-ஆம் தேதி தொடங்கும் என்று வாடினின் பத்திரிகை அலுவலகமான ஹோலி சீ தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், “புதிய போப்பை தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு மே 7-ஆம் தேதி தொடங்கும். தற்போது ரோமில் உள்ள கார்டினல்கள் இன்று (திங்கள்கிழமை) கூடி தங்கள் ஐந்தாவது பொது சபையில் இந்த முடிவை எடுத்தனர். இந்த மாநாடு வாடிகனின் சிஸ்டைன் சேப்பலில் நடைபெறும். மாநாடு நடைபெறும் நாட்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. போப் பிரான்சிஸ் மறைவு: கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த 21-ம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்திருந்தனர். போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு கடந்த 26-ம் தேதி நடைபெற்றது. இதில், இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் நேரில் கலந்து…
சென்னை: தமிழகத்தில் உள்ள 21 கோயில்களின் மூலம் கிடைக்கபெற்ற 1,074 கிலோ 123 கிராம் 488 மில்லிகிராம் சுத்தத் தங்கக் கட்டிகளை தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ததற்கான முதலீட்டுப் பத்திரங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதன்மூலம் ஆண்டொன்றிற்கு கோயில்களுக்கு 17 கோடியே 81 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் வட்டித் தொகையாக கிடைக்கப் பெறுகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.11) தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் 21 திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்றுப் பொன் இனங்களில் கோயிலுக்கு பயன்பாடற்ற பொன் இனங்களை உருக்கி கிடைக்கபெற்ற 1,074 கிலோ 123 கிராம் 488 மில்லிகிராம் சுத்தத் தங்கக் கட்டிகள் பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டது. இதன், அடையாளமாக சமயபுரம் மாரியம்மன் கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், ஆனைமலை மாசாணியம்மன்…