புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டது கவலை அளிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பஹல்காமில் உள்ள பைசரன் அழகிய புல்வெளியின் பின்னணியில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உயிரிழந்தது குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம். தங்களின் உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறோம்.” என்று தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹம்காம் அருகே உள்ள பைசரான் புல்வெளியில் செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானவர்கள் சுற்றுலா பயணிகள். கடந்த பல வருடங்களாக ஜம்மு காஷ்மீரில் குடிமக்கள் மீது நடத்தப்பட்ட மிகவும் மோசமான தாக்குதலில் இதுவும் ஒன்றாகும். லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்…
Author: admin
திருச்சி: சமயபுரத்தில் நேற்று மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேர் திருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘ஓம்சக்தி பராசக்தி’ முழக்கத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேரோடும் வீதிகளில் வலம் வந்த தேர் பிற்பகல் 3 மணிக்கு நிலையை அடைந்தது. நேற்று வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் வடம் பிடித்த பக்தர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. மேலும், நீர்மோர், பானகம், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. திருச்சி மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் தலைமையில் 1,263 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 80 சிசிடிவி…
‘96 பார்ட் 2’ படத்தின் ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மெய்யழகன்’ படத்துக்குப் பிறகு பிரேம்குமார் இயக்கத்தில் ‘96’ படத்தின் 2-ம் பாகம் உருவாகவுள்ளது. இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதல் பாகத்தில் நடித்த அனைவருமே இதிலும் நடிக்கவுள்ளார்கள். தற்போது இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மெய்யழகன்’ படத்துக்கு முதலில் பி.சி.ஸ்ரீராம் தான் ஒப்பந்தமாகி இருந்தார். பின்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் விலகினார். தற்போது ‘96’ 2-ம் பாகத்துக்கு ஒளிப்பதிவு செய்யவிருப்பதை சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் உறுதிப்படுத்தி இருக்கிறார் பி.சி.ஸ்ரீராம். பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, தேவதர்ஷினி, பக்ஸ் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. முதல் பாகத்தின் முடிவில் இருந்தே, 2-ம் பாகத்துக்கான கதையினை எழுதியிருக்கிறார் பிரேம்குமார்.
சென்னை: சென்னை காசிமேட்டில் வெளி மாநில மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா என மீன்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் கடந்த 15-ம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது. இதனால், காசிமேட்டில் இருந்து விசைப் படகுகள் ஆழ்கடலுக்குச் செல்லவில்லை. சிறிய மற்றும் மீன்பிடி படகுகள் மூலம் மீனவர்கள் அண்மைக் கடல் பகுதியில் இருந்து மீன்பிடித்து வருகின்றனர். இதனால், குறைந்த அளவு மீன்களே வருகின்றன. இதனால், மீனவர்கள் வெளி மாநிலத்தில் இருந்து மீன்களை வாங்கி வந்து விற்பனை செய்கிறார்களா என மீன்வளத் துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை செய்தனர். ஆனால், இந்த சோதனையில் வெளிமாநில மீன்கள் ஏதும் சிக்கவில்லை. மேலும், காசிமேட்டில் நேற்று பெரிய மீன்களின் வரத்து குறைவாக இருந்தது. இதனால், மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. வஞ்சிரம் மீன் ஒரு கிலோ ரூ.1,400-க்கும், ஷீலா, சங்கரா, கொடுவா ஆகிய மீன்கள் கிலோ ரூ.800-க்கும், பால் சுறா…
புதுடெல்லி: “மனைவிகள் எப்போதுமே புத்திசாலிகள்” என தனது மனைவியின் அனுபவங்களை பகிர்ந்து ஆர்பிஜி குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது. சமூக வலைதளத்தில் பயனுள்ள வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வருவதால் ஹர்ஷ் கோயங்காவுக்கு பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்த முறை அவர் தனது மனைவியின் தனிப்பட்ட கதைகளை பகிர்ந்து மனைவிகள் எப்போதுமே புத்திசாலிகள் என்று தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தங்கத்தின் நீண்ட கால ஈர்க்கக்கூடிய மதிப்பு என்ற தலைப்பில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கார், இன்ப சுற்றுலா, ஸ்மார்ட்போன் போன்றவற்றை வாங்குவதற்கும் தங்கம் வாங்குவதற்கும் உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டியுள்ளார். நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.8 லட்சத்தில் கார் ஒன்றை வாங்கினேன். ஆனால், எனது மனைவி அதே மதிப்புக்கு தங்கத்தை வாங்கினார். இப்போது காரின் மதிப்பு ரூ.1.5 லட்சம். எனது மனைவி வாங்கிய தங்கத்தின் மதிப்பு ரூ.32 லட்சம்…
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ F29 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இதோடு F29 ஸ்மார்ட்போனும் வெளிவந்துள்ளது. செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது ஒப்போ நிறுவனத்தின் சார்பில் ‘F’ சீரிஸ் போன்களின் வரிசையில் F29 புரோ வெளிவந்துள்ளது. இதில் சர்க்கிள் டு சேர்ச், ரீ-ரைட், ஏஐ சம்மரி உள்ளிட்ட ஏஐ அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. F29 புரோ சிறப்பு அம்சங்கள் 6.7 இன்ச் AMOLED டிஸ்பிளே ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் மீடியாடெக் டிமான்சிட்டி 7300 எனர்ஜி (4 என்எம்)…
சென்னை: பள்ளி மாணவர்களின் உயர் கல்விக்கு ஆலோசனைகள் வழங்குவதற்காக மாவட்டம்தோறும் வழிகாட்டி மையங்களை அமைக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி பயிற்சி முகாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஒரு உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த விவரங்கள், விழிப்புணர்வு தகவல்கள் விளக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் பிரத்யேக வழிகாட்டி மையங்களை தொடங்க தற்போது பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி மாவட்டங்களின் எல்லை அளவை பொறுத்து முதல்கட்டமாக 2 அல்லது 3 வழிகாட்டி மையங்கள் அமைக்கப்பட உள்ளன இவற்றில் நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க உதவுதல், அதற்கான பயிற்சிகளுக்கு வழிகாட்டுதல், பிளஸ்…
மும்பை: இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் இந்திய வீரர்கள் முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் முக்கிய பங்கு வகிப்பர் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்தார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிவடைந்ததும், இந்திய கிரிக்கெட் அணியினர், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளனர். இந்த தொடர் வரும் ஜூன் 20-ம் தேதி தொடங்க உள்ளது. மேலும், 2025 – 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஓர் அங்கமாக நடைபெறும் இந்த டெஸ்ட் தொடரில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதில் சந்தேகமில்லை. இந்திய அணிக்கு இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த சில டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தொடர் தோல்விகளைச் சந்தித்துள்ளது. அதிலிருந்து இந்திய அணி மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களுக்கு…
வான்கூவர்: கனடாவில் நடந்த திருவிழாவில் பங்கேற்றவர்கள் மீது எஸ்யுவி கார் தாறுமாறாக ஓடியதில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். கனடாவின் வான்கூவர் நகரில் நேற்று முன்தினம் லாபு லாபு தினம் கொண்டாடப்பட்டது. 16-ம் நூற்றாண்டில் ஸ்பெயின் காலனித்துவத்தை எதிர்த்து போரிட்ட பிலிப்பைன்ஸ் தலைவரை நினைவுகூரும் வகையில் பிலிப்பைன்ஸ் மக்களால் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி, உள்ளூர் நேரப்படி இரவு 8 மணி அளவில் கிழக்கு 41-வது அவின்யூ மற்றும் பிராசர் தெருவில் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த கூட்டத்துக்குள் ஒரு எஸ்யுவி கார் வேகமாக நுழைந்து தாறுமாறாக ஓடியது. இதனால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். தீவிரவாதம் இல்லை: இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர், சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டனர். இதில் 9 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே அந்த கார் ஓட்டுநரை கைது…
ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே பாம்பனில் 300 ஆண்டு பழமையான சிதம்பர தீர்த்தத்தை விவேகானந்தா கேந்திரம் சார்பாக புனரமைக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு தொடர்புடைய 108 புனித தீர்த்தக்குளங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளன. இவற்றில் ராமநாதசுவாமி கோயிலின் உள்ளே அமைந்துள்ள 22 தீர்த்தங்களும் அடக்கம். முன்பு ராமேசுவரத்துக்கு தீர்த்தமாட வருபவர்கள் ஒரு மாத காலம் தங்கி 108 தீர்த்தங்களிலும் தங்களின் பாவங்கள், தோஷங்களைப் போக்கி விட்டுச் செல்வார்கள். இந்த 108 தீர்த்தங்களில் சில திர்த்தங்கள் தனியார் ஆக்கிரமிப்பு, இயற்கை சீற்றங்களினால் அழிவுக்குள்ளாகியும் இருந்தன. இந்த தீர்த்தங்களை கண்டுபிடித்து, முட்புதர்களை அகற்றி, சுற்றுச்சுவர் எழுப்பி, பக்தர்கள் செல்ல ஏதுவாக விவேகானந்த கேந்திரத்தின் பசுமை ராமேசுவரம் திட்டத்தின் கீழ் கடந்த 12 காலமாக ஈடுபட்டு வருகிறது. இதுவரையிலும் 50 தீர்த்தங்களில் பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ளன. தர்மர், சர்வரோக நிவாரண, பரசுராம், ஞானவாதி, குமுதம், ஹர, நீலகண்ட, பனச்ச, கிருஷ்ண ஆகிய தீர்த்தங்களில் முழுமையாக மணலில் இருந்து…