பெங்களூரு: கர்நாடகாவில் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நாளை தொடங்கி அக்டோபர் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பை ஏற்க கூடாது என பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கை எழுந்தது. அமைச்சரவையிலும் எதிர்ப்பு எழுந்ததால் அதனை ரத்து செய்திருக்கிறோம். மக்களின் கல்வி, பொருளாதார மற்றும் சமூக நிலையை கண்டறிய மீண்டும் புதிதாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த கணக்கெடுப்பு பணிகள் செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கி அக்டோபர் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக 60 கேள்விகள் தயாரிக்கப்பட்டு, அரசு ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று தகவல்களை சேகரிப்பார்கள். சுமார் 1.25 லட்சம் ஆசிரியர்கள் இப் பணியில் ஈடுபட உள்ளனர். இதற்காக ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் இறுதிக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை தாக்கல் செய்ய…
Author: admin
சென்னை: மாணவர்களிடம் சாதிய உணர்வு , பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனங்கள் தலையெடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பள்ளிக்கல்வித் துறை சார்பில் முப்பெரும் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில்புதிதாக தேர்வுசெய்யப்பட்ட 2,715 ஆசிரியர்களுக்கான நுழைவுநிலை பயிற்சியை முதல்வர் தொடங்கிவைத்தார். தொடர்ந்து ரூ.122 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 76 அரசு பள்ளிக்கட்டிடங்களை திறந்துவைத்த அவர், ரூ.310 கோடியில் 262 அரசு பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கும், பாரத சாரண-சாரணியர் தலைமை அலுவலக கட்டிடத்துக்கும் அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது: ஆசிரியர் என்பவர் பாடப்புத்தகத்தில் இருந்து மட்டுமல்லாமல் தன்னுடைய கல்வியையும், அனுபவத்தையும் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து, எதிர்காலத்தில் நல்லொழுக்கம்மிக்க சமுதாயத்தை உருவாக்குகிறவர்கள். இன்றைய தினம் அறிவியல், வரலாறு, கணிதம் என எந்தப் பாடமாக இருந்தாலும், அதன் ஆழத்தை, மிகவும் எளிதாக கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகிவிட்டன. இத்தகவல்களை மாணவர்களின்…
திருப்பதி: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது திருப்பதி உண்டியல் பணத்தில் ரூ.100 கோடி திருடப்பட்டது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வழக்கை உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து சிஐடியிடம் ஒப்படைத்துள்ளது. திருமலையில் ஏழுமலையான் கோயிலில் உண்டியல் பணம் எண்ணும் இடமான ‘பரகாமணி’யில் தேவஸ்தான ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், தன்னார்வலர்கள் (ஆண்கள் மட்டும்) உண்டியல் பணத்தை எண்ணுவது வழக்கம். முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது, தேவஸ்தான ஊழியர் ரவிக்குமார் என்பவர், உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் வெளிநாட்டு கரன்சிகளை திருடி வந்துள்ளார். உண்டியல் பணத்தை எண்ணும்போது அடிக்கடி கழிப்பறைக்கு சென்ற அவர், வெளிநாட்டு கரன்சியை பிளாஸ்டிக் கவரில் வைத்து ஆசன வாயில் திணித்து திருடி வந்துள்ளார். ஒருநாள் கண்காணிப்பு கேமரா உதவியுடன் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, சுமார் ரூ.100…
சென்னை: நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் ஆங்கிலேயர்களின் கல்விமுறையை பின்பற்றுவது வேதனை அளிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். சென்னை ஐஐடி, ‘திங்க் இந்தியா’ அமைப்பு சார்பில்‘தேசிய மறுமலர்ச்சிக்கான தொழில்முனைவு மற்றும் செயற்கை நுண்ணறிவு’ என்ற தலைப்பிலான 2 நாள் மாநாடு (தக்ஷினபதா 2025) நேற்று தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: சுதந்திரம் அடைந்தபோது உலகப் பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் இருந்தோம். பிறகு படிப்படியாக பின்தங்கி 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டோம். கடந்த 2014-ம் ஆண்டு மோடி பிரதமர் ஆனதும் புதிய இந்தியா பிறந்தது. தற்போது உலகப் பொருளாதாரத்தில் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளோம். வறுமை, வன்முறை குறைந்துள்ளது. கடந்த 2014-ல் 400 ஸ்டார்ட்-அப்நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 2 லட்சத்தைதாண்டியுள்ளது. வேகமாக வளரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். முன்பு வெளிநாட்டு ஆதாரங்களையே நமது ராணுவம் சார்ந்திருந்தது. பாகிஸ்தானின்…
பாவ்நகர்: ‘‘பிற நாடுகளைச் சார்ந்திருப்பதுதான் இந்தியாவின் முக்கிய எதிரி. நாம் சந்திக்கும் நூற்றுக்கணக்கான பிரச்சினைகளுக்கு ஒரே மருந்து தற்சார்பு இந்தியாதான்’’ என பிரதமர் மோடி கூறியுள்ளார். குஜராத்தின் பாவ்நகரில் ‘சமுத்ர சே சம்ரிதி’ (கடலில் இருந்து வளம்) நிகழ்ச்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது ரூ.34,200 கோடி மதிப்பிலான கடல்சார் மற்றும் பிராந்திய வளர்ச்சி திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: விஸ்வபந்து (உலகின் நண்பன்) என்ற உணர்வுடன் நாடு தற்போது முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த உலகில் நமக்கு முக்கிய எதிரிகள் யாரும் இல்லை. பிற நாடுகளைச் சார்ந்திருப்பதுதான் நமது மிகப் பெரிய எதிரி. இதை நாம் தோற்கடிக்க வேண்டும். வெளிநாடுகளைச் அதிகம் சார்ந்திருப்பது, நமது தோல்வியைத்தான் காட்டுகிறது. உலகளாவிய அமைதி, நிலைத்தன்மை, செழிப்பு ஆகியவற்றுக்கு உலகின் அதிக மக்கள் தொகையை கொண்ட இந்தியா தற்சார்பு நாடாக மாற வேண்டும். நாம் பிறநாடுகளைச் சார்ந்திருந்தால்,…
சென்னை: தமிழகத்தில் மோசமான ஆட்சி நடந்து கொண்டிருப்பதால் விஜய்யின் தாக்குதல் திமுக மீது மட்டுமே இருக்க வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: காசாவில் நடக்கும் பிரச்சினைக்கு பிரதமர் மோடிதான் காரணம் எனச் சொல்லி மிகவும் கீழ்த்தரமான அரசியலை சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது அவர்கள் எங்கு சென்றார்கள். கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து இறந்தார்களே அப்போது எங்கே போனார்கள்?இதை பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை. ஆணவப்படுகொலை நடக்கும் போது அதைப்பற்றி பேச ஆள்இல்லை. முன்பு அடுத்த மாநிலத்தை பற்றி பேசி கொண்டிருந்தார்கள். இப்போது அடுத்த நாட்டை பற்றி பேச போய்விட்டார்கள். முதலில் தமிழகத்தில் நடக்கும் அவலங்களையும், மக்கள் விரோத பிரச்சினைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். காங்கிரஸை திமுகதான் அடிமைப்படுத்தி வைத்துள்ளது. நாங்கள் கேட்கும் தொகுதிகளை கொடுக்கவில்லையென்றால், கூட்டணியில் இருந்து வெளியேவருவோம் என சொல்லும் அளவுக்கு…
பால்வீதி, எங்கள் வீட்டு விண்மீன், நட்சத்திரங்கள், கிரகங்கள், தூசி மற்றும் அண்ட அதிசயங்களுடன் கூடிய ஒரு பரந்த மற்றும் மர்மமான அமைப்பாகும். பல நூற்றாண்டுகளாக, மனிதர்கள் இரவு வானம் முழுவதும் அதன் மங்கலான இசைக்குழுவை மட்டுமே பாராட்ட முடியும், ஆனால் நவீன விண்வெளி தொழில்நுட்பம் எங்கள் பார்வையை மாற்றியுள்ளது. நாசாவின் மேம்பட்ட ஆய்வகங்களான ஹப்பிள், ஸ்பிட்சர், சந்திரா மற்றும் புதிய பணிகள் ஆகியவற்றிற்கு நன்றி, வானியலாளர்கள் அதன் மறைக்கப்பட்ட அழகை வெளியிடும் படங்களை எடுக்கும் மூச்சை கைப்பற்றியுள்ளனர். அடர்த்தியான, தூசி நிறைந்த மையத்திலிருந்து பளபளக்கும் நட்சத்திரக் கொத்துகள் மற்றும் சுழல் ஆயுதங்கள் வரை, ஒவ்வொரு கண்டுபிடிப்பும் நாம் வீட்டிற்கு அழைக்கும் விண்மீன் பற்றிய நமது புரிதலை ஆழமாக்குகிறது, அதே நேரத்தில் நம்மைச் சுற்றியுள்ள பிரபஞ்சத்தின் சிக்கலான தன்மையையும் சிறப்பையும் வெளிப்படுத்துகிறது.பால்வீதியை ஆராயுங்கள்: நாசாவின் 8 படங்கள் கேலடிக் கோர்நட்சத்திரக் கொத்துகள் மற்றும் தூசி1. கேலடிக் மையத்தை வெளிப்படுத்துதல் (அகச்சிவப்பு)ஆதாரம்: நாசாஇந்த படம்…
புதுடெல்லி: டெல்லியில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவ அறிவியல் மையம் மற்றும் டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையின் 11-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் தேசிய மருத்துவ ஆணைய தலைவர் டாக்டர் அபிஜத் ஷேத் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி நாடு முழுவதும் மருத்துவர்களின் எண்ணிக்கையை சீராக உயர்த்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்களின் விகிதத்தையும் 1:1 என்பதை அடைவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதன் மூலம் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியாவின் சுகாதார அமைப்பின் தரம் உயரும். திறன் அடிப்படையிலான மருத்துவ கல்வியின் தேவைகளை நிறைவேற்ற புதிய நடவடிக்கைகளை மருத்துவ அறிவியல் தேர்வு வாரியமும், தேசிய மருத்துவ ஆணையமும் அறிமுகம் செய்து வருகிறது. மாணவர்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்தி, வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்ளும்…
சென்னை: தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் 17 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடந்திருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் 17 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடந்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தியைப் படித்ததும் மனதில் எழுந்த முதல் கேள்வியே கடந்த 5 நாட்களில் வெளியே தெரிய வந்த வன்கொடுமைகள் 17 எனில், வெளியே சொல்ல பயந்து மறைக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எத்தனை? இந்த 17 குற்றங்களில் 12 குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் ஆகும். இந்த செயல்களை உற்றுநோக்கும் போது, கடந்த நான்காண்டுகளில் எத்தனை குழந்தைகளின் வாழ்வு சிதைக்கப்பட்டுள்ளது என்கிற கேள்வி எழுகிறது. ‘தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன்’ என்று போலியாக சூளுரைக்கும் தமிழக முதல்வரே, நம் வீட்டுப்பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லை என்பது தலைகுனிவு இல்லையா? ஆட்சி முடியும் தருவாயிலாவது வெற்று விளம்பரத்தை விடுத்து…
புதுடெல்லி: டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மீது வானலை ஒரு மர்மமான ஒளியைக் கண்டது, குடியிருப்பாளர்களை பிரமிப்புடன் விட்டுவிட்டு, சமூக ஊடகங்களில் உற்சாகத்தின் அலையைத் தூண்டியது. சில ஸ்டார்கேஸர்கள் இதை ஒரு விண்கல் மழையாக எடுத்துக் கொண்டனர், மற்றவர்கள் இது பூமியில் விழும் பழைய செயற்கைக்கோளின் குப்பைகளின் ஒரு பகுதியாக இருக்கும் என்று ஊகித்தனர். இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.டெல்லி, நொய்டா, காசியாபாத், குர்கான் மற்றும் அலிகாரில் கூட பல நகரங்களில் ஒளியின் திகைப்பூட்டும் ஸ்ட்ரீக் தெரிந்தது. எரியும் வானலைகளின் வீடியோக்கள் சமூக ஊடக தளங்களில் வெளிவந்தன, சிறிய துண்டுகளாக துண்டிக்கப்படுவதற்கு முன்பு இரவு வானம் முழுவதும் ஒரு உமிழும் பாதை படப்பிடிப்பைக் காட்டுகிறது. சனிக்கிழமை அதிகாலை 1.20 மணியளவில் டெல்லி மற்றும் நொய்டா மீது பிரகாசமான பொருளை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர். TOI ஐ தொடர்பு கொண்டபோது, சனிக்கிழமை மர்மமான வானலை நிகழ்வில்…