மதுரை: தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்குமே போட்டியென விஜய் அறியாமல் பேசுகிறார் என, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். மகாளய அமாவாசையையொட்டி, மதுரை தெப்பக்குளத்திலுள்ள முத்தீஸ்வரர் கோயிலில் ஏற்பாடு செய்து இருந்த அன்னதான நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் குடும்பத்தினருடன் பங்கேற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் உண்மை நிலவரத்தை திமுக அரசு மறைக்கிறது. பங்காளி சண்டை, பகையாளியை தடுப்பதற்காகத்தான் திமுக உள்ளதா?, தமிழக மக்களின் முதுகெலும்பை உடைத்துவிட்டு தலை குனியவிடமாட்டேன் என்று என்ன சொல்வது. மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்திற்கு ஒரு சல்லி காசையும் திமுக பெற்றுத் தரவில்லை. திமுகவுக்கு தேவை என்றால் பிரதமருக்கு வெண்குடை பிடிப்பதும், தேவையில்லை என்றால் கருப்பு பலூன் பறக்க விடுவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்துக்கு திமுக எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். மக்களிடம் ஆதரவை…
Author: admin
தொத்திறைச்சிகள், பன்றி இறைச்சி மற்றும் சலாமி ஆகியவை அவற்றின் நீண்ட அடுக்கு வாழ்க்கைக்கு நைட்ரேட்டுகள் மற்றும் நைட்ரைட்டுகளுக்கு கடன்பட்டுள்ளன. இந்த கலவைகள், அதிக வெப்பத்தின் கீழ், நைட்ரோசமைன்கள், அங்கீகரிக்கப்பட்ட புற்றுநோய்களை உருவாக்கலாம். பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை குழு 1 புற்றுநோய்களாக வகைப்படுத்தும் வரை, புகையிலை மற்றும் அஸ்பெஸ்டாஸுடன் உலக சுகாதார அமைப்பு சென்றுள்ளது.
புதுடெல்லி: ஜிஎஸ்டி சீர்திருத்ததால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது போல் சரியாக மாலை 5 மணியளவில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பிரதமர் கூறியதாவது: நாளை முதல் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வருகின்றன. நாளை முதல் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும். அவர்கள் விரும்பியதை வாங்கலாம். ஜிஎஸ்டி குறைப்பால் கோடிக்கணக்கான குடும்பங்கள் மகிழ்ச்சி அடையும். ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், மகளிர், விவசாயிகள், இளைஞர்கள் அவர்களுக்குப் பிடித்தமான பொருட்களை குறைக்கப்பட்ட விலையில் வாங்கலாம். இதனால், அனைத்து மாநிலங்களும் வளர்ச்சி நோக்கி முன்னேறும். சரக்கு போக்குவரத்தில் இருந்த தடைகளை தகர்க்கவே ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது. ஜிஎஸ்டிக்கு முன்பு வரி விதிப்பு விகிதம் சிக்கலானதாகவே இருந்தது. ஜிஎஸ்டி அமலாக்கம் இந்தியாவின் மிகப்பெரிய வரி சீர்திருத்தம். ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டதன் மூலம் ஒரே நாடு ஒரே வரி என்ற கோடிக்கணக்கானோரின் கனவு நினைவானது. நாளை…
புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்ராம் விமான தள கட்டுப்பாட்டை திருப்பித் தர வேண்டும் என ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து, பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும் என்றும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். ஆனால், அந்த அறிவிப்புக்கு மாறாகவே பல்வேறு சட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர். இதனிடையே அமெரிக்காவுக்கும், தாலிபானுக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறின. இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், “பாக்ராம் விமான தளத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் ஆப்கானிஸ்தான் கூடிய விரைவில் ஒப்படைக்க வேண்டும். அந்த விமானத் தளத்தை திருப்பித் தரவில்லை என்றால், மோசமான விஷயங்கள் நடக்கும்” என்று எச்சரித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமான…
டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டி அதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் பெரம்பலூரில் நேற்று மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியது: டிஎன்பிஎஸ்சி சார்பில் 3,937 காலி பணியிடங்கலுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கு 15.52 லட்சம் பேர் விண்ணப்பித்து தேர்வெழுதினர். இந்தத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. கேள்விகள் ஆங்கில வழியில் எளிமையாகவும், தமிழ் வழியில் கடினமாகவும் இருந்தன. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாட புத்தகங்களில் இருந்து கேள்வி கேட்கப்படும் என அறிவித்துவிட்டு, மற்ற பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டது ஏன்?. இந்த முறைகேட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அரசு என்ன பதில் கூறப்போகிறது?. அதே வேளையில், இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் எளிதில் வேலை கிடைக்கவில்லை. பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேரும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 ஆயிரம் பேரும்…
‘சார்பட்டா 2’ திரைப்படம் எப்போது தொடங்கும் என்பதற்கு பா.ரஞ்சித் பதிலளித்துள்ளார். ‘சார்பட்டா 2’ திரைப்படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் இருக்கிறது. இது தொடர்பாக பா.ரஞ்சித் பேட்டியொன்றில் பதிலளித்துள்ளார். அதில், “‘சார்பட்டா 2’ கதையினை எழுதிவிட்டோம். ‘வேட்டுவம்’ படம் ஜூலையில் படப்பிடிப்பு முடிக்க வேண்டியது. ஆனால், படப்பிடிப்புக்கு சென்றவுடன் பெரிதாகிக் கொண்டே போகிறது. இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. அதை முடித்துவிட்டு ‘சார்பட்டா 2’ தொடங்கவேண்டும். அது ஒரு அரசியல் கலந்த படம். ரொம்ப சுவாரசியமாக பாக்ஸிங் விஷயங்களும் கலந்திருக்கும். இது முதல் பாகத்தின் தொடர்ச்சியா அல்லது முன் கதையா என்பதை எல்லாம் சொல்ல முடியவில்லை. ஆனால், கதையாக அற்புதமாக வந்திருக்கிறது. முதல் பாகத்தில் மக்கள் எதெல்லாம் ரசித்தார்களோ, அதை எல்லாம் வைத்து தான் நானும் தமிழ் பிரபாவும் சேர்ந்து எழுதியிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார் பா.ரஞ்சித். பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர்…
தமிழக வாக்காளர்களில் 6-ல் ஒருவர் இளைஞர் என்கிறது ஒரு புள்ளி விவரம். இவர்களை, குறிப்பாக ஜென் ஸீ இளைஞர்களை தவெக தன் பக்கம் வளைக்க விஜய் முயற்சிக்கிறார் என்று நிலவும் கருத்துகளையொட்டிய பார்வை இது. கடந்த 13-ம் தேதி திருச்சி, அரியலூர், நேற்று (செப்.20) நாகப்பட்டினம், திருச்சி. இரண்டு வாரங்களில் 4 மாவட்டங்களில் பிரச்சாரம் செய்திருக்கிறார் தவெக தலைவர் விஜய். விஜய் அரசியலுக்கு வந்ததுமே அவர் கொள்கையைச் சொல்லட்டும் என்ற குரல் எழுந்தது. அதற்கு தமது தரப்பு பதிலாக ‘திமுக தான் எங்கள் அரசியல் எதிரி, பாஜக தான் எங்கள் கொள்கை எதிரி’ என இரண்டு மாநாட்டு மேடைகளில் சிம்பிளாக முழங்கினார் விஜய். பின்னர். களத்துக்கு வந்து மக்களை சந்திக்கட்டும் என்ற விமர்சனங்கள் எழுந்தது. இதோ இப்போது 4 மாவட்ட மக்கள் மத்தியில் உரையாற்றிய நிலையில், ‘எழுதிக் கொடுத்ததை படிப்பது, அதுவும் ஒரு நடிகருக்கு அதைச் செய்வது என்ன அத்தனை சிரமமா?,…
காலை அலாரங்கள் ஆயுட்காலம் எனக் காணப்படுகின்றன, எல்லாவற்றிற்கும் மேலாக, பள்ளி, வேலை அல்லது பயண அட்டவணைகள் தவறவிடாமல் இருப்பதை உறுதி செய்கிறது. ஆனால் நரம்பியல் நிபுணர்கள் இப்போது பாதிப்பில்லாத இந்த வழக்கம் மூளையையும் இதயத்தையும் கூட வலியுறுத்தக்கூடும் என்று எச்சரிக்கின்றனர். ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் குமார், அலாரம் கடிகாரத்துடன் எழுந்திருப்பது மன அழுத்த ஹார்மோன்கள், இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு ஆகியவற்றில் திடீர் கூர்முனைகளுடன் இணைக்கப்படலாம் என்று சமீபத்தில் விளக்கினார்.உடலின் இயற்கையான விழித்தெழு கடிகாரம்மனித உடல்கள் ஒரு உள் கடிகாரத்துடன் கம்பி செய்யப்படுகின்றன, இது சர்க்காடியன் ரிதம் என அழைக்கப்படுகிறது, இது தூக்கம் மற்றும் விழித்தெழு சுழற்சிகளை வழிநடத்துகிறது. தூக்கம் முடிந்ததும், மூளை இயற்கையாகவே உடலை எழுப்ப சமிக்ஞை செய்கிறது, பொதுவாக தூக்கத்தின் இலகுவான கட்டங்களில். இந்த மென்மையான உயர்வுதான் இதயத்தை சீராகவும், மனம் எச்சரிக்கையாகவும் வைத்திருக்கிறது. ஆனால் ஒரு அலாரம் கடிகாரம் இந்த…
மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவிக்கு டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் மிதுன் மன்ஹஸ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மும்பை – வான்கடே மைதானத்தில் உள்ள பிசிசிஐ-யின் தலைமை அலுவலகத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளதை பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா உறுதி செய்துள்ளார். ‘மிதுன் எனது முன்னிலையில் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளார்’ என்றார். தற்போது பிசிசிஐ-யின் இடைக்கால தலைவர்க ராஜீவ் ஷுக்லா செயல்பட்டு வருகிறார். பிசிசிஐ தலைவராக பதவி வகித்து வந்த ரோஜர் பின்னி 70 வயதை எட்டியதை தொடர்ந்து அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிசிசிஐ சட்டவிதிகளின்படி 70 வயதை கடந்தவர்கள் பதவியில் தொடர முடியாது என்பதால் இந்த முடிவை ரோஜர் பின்னி மேற்கொண்டிருந்தார். வரும் 28-ம் தேதி மும்பையில் பிசிசிஐ ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் புதிய தலைவர் தேர்வு…
புதுடெல்லி: அமெரிக்க நாட்டின் எச்1பி விசாவுக்கான ஓராண்டு கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளது அதிபர் டொனல்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம். இந்நிலையில், இந்த உயர்த்தப்பட்ட கட்டணம் யாருக்கு பொருந்தும், இதில் யாருக்கு விலக்கு என்பது குறித்து பார்ப்போம். எச்1பி விசாவுக்கான புதிய கட்டண விவரம் குறித்து அமெரிக்க அரசு நிர்வாகம் தெளிவுபடுத்தி உள்ளது. அதாவது எச்1பி விசா கேட்டு புதிதாக விண்ணப்பித்தவர்கள் ஒரு முறை மட்டுமே உயர்த்தப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும். மேலும், இந்த புதிய கட்டண முறை ஏற்கெனவே தங்கள் வசம் எச்1பி விசா உள்ளவர்களுக்கு பொருந்தாது என கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் இந்த விளக்கம் தற்போது எச்1பி விசா வைத்துள்ளவர்களின் தவிப்பை தணிய செய்துள்ளது. அரசு கொடுத்துள்ள விளக்கம் என்ன? – எச்1பி விசா கட்டணம் சார்ந்த அதிபர் ட்ரம்ப்பின் அறிவிப்பு புதிதாக அந்த விசா வேண்டி வினைப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும்.…