அமராவதி: ஆந்திர மாநில பிரிவினைக்கு பிறகு ஆட்சியை பிடித்த சந்திரபாபு நாயுடு அமராவதியை தலைநகராக அறிவித்தார். அவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெகன்மோகன் ரெட்டி 3 தலைநகரங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில் 2024-ல் மீண்டும் முதல்வரான சந்திரபாபு நாயுடு அமராவதி தான் ஆந்திராவின் தலைநகர் என்பதை திட்டவட்டமாக அறிவித்தார்.
இந்நிலையில் அமராவதி மறுகட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். இதில் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொள்ளும் விதமாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒருபுறம் பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இரு நாட்டு எல்லைகளிலும் போர்ப் பதற்றம் நிலவுகிறது.
இன்று அமராவதியில் நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பிரதமர் என்ன பேசுவார் என்பதையும் மக்கள் அறிய ஆவலாக உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ள நிலையில், இன்று மதியம் 3.20 மணிக்கு பிரதமர் மோடி அமராவதிக்கு வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.