Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, June 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தொழிலாளர்கள் உரிமைக்கு குரல் கொடுக்கும் நாளாக மே.1 அமைய வேண்டும்: செல்வப்பெருந்தகை
    மாநிலம்

    தொழிலாளர்கள் உரிமைக்கு குரல் கொடுக்கும் நாளாக மே.1 அமைய வேண்டும்: செல்வப்பெருந்தகை

    adminBy adminApril 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தொழிலாளர்கள் உரிமைக்கு குரல் கொடுக்கும் நாளாக மே.1 அமைய வேண்டும்: செல்வப்பெருந்தகை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ‘தொழிலாளர்கள் உரிமைகளை பாதுகாக்கின்ற வகையில் குரல் எழுப்பும் நாளாக மே 1 ஆம் தேதி அமைய வேண்டும்’ என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “கடந்த 139 ஆண்டுகளுக்கு முன்பு இதே மே 1 ஆம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஒன்று கூடிய தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பரித்தனர். அன்றைய ஆட்சியாளர்களின் அடக்குமுறையால் தொழிலாளர் தலைவர்கள் பலர் உயிர்த் தியாகம் செய்தனர்.

    நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வந்த தொழிலாளர் நலச் சட்டங்களை அகற்றிவிட்டு, தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை பறிக்கும் வகையில் புதிய தொழிலாளர் விரோத சட்டங்களை ஒன்றிய பாஜக. அரசு நிறைவேற்றியுள்ளது. பாஜகவின் தொழிலாளர் விரோத போக்கு இதன்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பொருளாதார தேக்க நிலையினால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, உற்பத்தி குறைந்து, வேலை வாய்ப்பு இழந்த தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மாதந்தோறும் நிவாரண தொகை வழங்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்கு உண்டு.

    ஆனால், நிவாரணத் தொகை வழங்காமல் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்கிற வகையில், நிவாரணத் தொகை வழங்க வேண்டுமென காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகிறது.

    எனவே பணமதிப்பிழப்பு, பொருத்தமற்ற சரக்கு மற்றும் சேவை வரி, பணவீக்கம் போன்ற காரணங்களால் தொழில் வளர்ச்சி இல்லாத நிலையில், பொருளாதார பேரழிவு காரணமாக தொழிலாளர்கள் வாழ்வில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறார்கள். அவர்கள் தங்களது உரிமைகளை பாதுகாக்கின்ற வகையில், குரல் எழுப்பும் நாளாக மே 1 ஆம் தேதி அமைய வேண்டும். உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “ராமதாஸ் மீது விசிக, காங். திடீர் பாசம் காட்டுவது திமுகவின் சூழ்ச்சி” – அன்புமணி ஆவேசம்

    June 28, 2025
    மாநிலம்

    ”தமிழகத்தில் ஆதிதிராவிடர் பள்ளிகளில் 20% ஆசிரியர்கள் இல்லை” – நயினார் நாகேந்திரன்

    June 28, 2025
    மாநிலம்

    உபரி நீர் திறப்பு அதிகரிப்பு: காவிரி கரையோர 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    June 28, 2025
    மாநிலம்

    புதுவை மாநில பாஜக தலைவர் பதவிக்கு நாளை வேட்புமனு தாக்கல்

    June 28, 2025
    மாநிலம்

    பாஜகவுக்கு மீனவர் நலனில் கடுகளவு கூட அக்கறை இல்லை – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

    June 28, 2025
    மாநிலம்

    புதுச்சேரி பாஜகவில் பிளவை தடுக்க 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா – சாய் சரவணக்குமார் ஆதரவாளர்கள் எதிர்ப்பு

    June 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “ராமதாஸ் மீது விசிக, காங். திடீர் பாசம் காட்டுவது திமுகவின் சூழ்ச்சி” – அன்புமணி ஆவேசம்
    • சிபில் ஸ்கோர் கேட்பது ஏன்? – மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரி விளக்கம்
    • பெருங்குடல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் எளிதில் புறக்கணிக்கப்படலாம்
    • ‘சட்டப்பிரிவு 370’ என்பது அம்பேத்கர் கொள்கைக்கு எதிரானது: தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்
    • ”தமிழகத்தில் ஆதிதிராவிடர் பள்ளிகளில் 20% ஆசிரியர்கள் இல்லை” – நயினார் நாகேந்திரன்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.