Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, February 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»தேசத்துரோக வழக்கில் சின்மயி கிருஷ்ண தாஸுக்கு வங்கதேச உயர் நீதிமன்றம் ஜாமீன்
    உலகம்

    தேசத்துரோக வழக்கில் சின்மயி கிருஷ்ண தாஸுக்கு வங்கதேச உயர் நீதிமன்றம் ஜாமீன்

    adminBy adminApril 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தேசத்துரோக வழக்கில் சின்மயி கிருஷ்ண தாஸுக்கு வங்கதேச உயர் நீதிமன்றம் ஜாமீன்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    டாக்கா: வங்கதேசத்தில் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட சின்மயி கிருஷ்ண தாஸுக்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

    வங்கதேசத்தில் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட இந்து அர்ச்சகரும் இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவருமான சின்மயி கிருஷ்ண தாஸுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

    வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் கலவரத்துக்குப் பின், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியா தப்பி வந்தார். அதன்பின் முகமது யூனஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது. அப்போது முதல் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது.

    வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதற்கான அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக சின்மயி கிருஷ்ணதாஸ் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், அக்டோபர் 25-ம் தேதி சட்டோகிராம் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் சின்மயி கிருஷ்ணதாஸ் உள்ளிட்ட 18 பேர் வங்கதேச கொடியை அவமதித்ததாக பெரோஸ் கான் என்பவர் புகார் அளித்தார். இதன் பேரில், சின்மயி கிருஷ்ணதாஸ் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதனால் வங்கதேசத்தை விட்டு வெளியேறுவதற்காக டாக்கா விமான நிலையம் வந்த சின்மயி கிருஷ்ணதாஸ் கடந்தாண்டு நவம்பர் மாதம் 25-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவானது. அவரது ஜாமீன் மனுவை மெட்ரோபொலிடன் மாஜிஸ்திரேட் கடந்தாண்டு நவம்பர் 26-ம் தேதி நிராகரித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த இந்து அமைப்பினர் நீதிமன்றத்துக்கு வெளியே சிறை வாகனத்தை சுற்றி வளைத்து போராட்டம் நடத்தினர். அப்போது நடந்த மோதலில் சைபுல் இஸ்லாம் ஆலிப் என்ற வழக்கறிஞர் உயிரிழந்தார்.

    சிறையில் இருந்தபடி சின்மயி கிருஷ்ண தாஸ், சத்தோகிராம் செசன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இதன் மீதான விசாரணை கடந்த ஜனவரி 2-ம் தேதி நடைபெற்றது. அப்போது காணொலி மூலம் நீதிமன்றத்தில் கிருஷ்ண தாஸ் ஆஜர்படுத்தப்பட்டார். தேசத்துரோக வழக்கு என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்க அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து கிருஷ்ண தாஸின் ஜாமீன் மனுவை நீதிபதி சைபுல் இஸ்லாம் நிராகரித்தார்.

    இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சின்மயியின் வழக்கறிஞர் அபுர்பா குமார் பட்டாச்சார்ஜி, தனது கட்சிக்காரரின் உடல்நிலையை கருத்தில் கொண்டும், விசாரணையின்றி நீண்டகாலமாக அவர் சிறையில் இருப்பதை சுட்டிக்காட்டியும் ஜாமீன் கோரிக்கையை பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றத்தை வலியுறுத்தினார். இந்த வழக்கில் இருதரப்பு வாதம் நிறைவடைந்ததை அடுத்து நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில், இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

    இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த சின்மயியின் வழக்கறிஞர் பிரஹ்லாத் தேப்நாத், “உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டுப் பிரிவு தடுத்து நிறுத்தாவிட்டால், உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என்று கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    McCaughey septuplets: ஒன்றாகப் பிறந்த உலகின் முதல் ஏழு குழந்தைகள்; அவர்கள் இப்போது எங்கே? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 1, 2026
    உலகம்

    ஹாலிவுட்டில் இருந்து சிலிக்கான் பள்ளத்தாக்கு வரை: எப்படி ஆஷ்டன் குட்சர் ஒரு பில்லியன் டாலர் தொழில்நுட்ப முதலீட்டு சாம்ராஜ்யத்தை ரகசியமாக உருவாக்கினார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 31, 2026
    உலகம்

    லின்வே டிங் யார்? சீனாவிற்கான அமெரிக்க AI வர்த்தக ரகசியங்களை திருடியதற்காக முன்னாள் கூகுள் பொறியாளர் தண்டனை | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 31, 2026
    உலகம்

    இன்சூரன்ஸ் பணத்திற்காக தனது சொந்த உணவகத்திற்கு தீ வைத்ததற்காக இந்திய வம்சாவளி நபர் கனடாவில் கைது செய்யப்பட்டார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 30, 2026
    உலகம்

    முதியவர்களைக் குறிவைத்து $55 மில்லியன் மோசடி: டெக்சாஸில் இரண்டு இந்திய நகைக் கடைகளில் சோதனை நடத்தப்பட்டது, பாதிக்கப்பட்டவர்கள் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க தங்கம் வாங்கச் சொன்னார்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 30, 2026
    உலகம்

    200,000 ரியல் எஸ்டேட் மோசடி செய்ததற்காக ஆஸ்திரேலியாவில் மாணவர் விசாவில் உள்ள இந்திய ஓட்டுநர் சிறையில் அடைக்கப்பட்டார், வீடு வாங்குபவரை ஏமாற்ற சட்ட நிறுவனமாக ஆள்மாறாட்டம் செய்தார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 2026 ஆம் ஆண்டில் ரியல் எஸ்டேட் முதலீட்டுக்கான இந்தியாவின் முதல் 5 நகரங்கள்
    • FAFO பெற்றோர்கள் என்றால் என்ன, பெற்றோர்கள் ஏன் அதைப் பற்றி பேசுகிறார்கள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • AI கண்ணாடிகள் பார்வையற்றவர்கள் தங்களை முதல் முறையாக பெரிய முன்னேற்றத்தில் பார்க்க உதவுகின்றன – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அக்ஷய் குமார் தனது குழந்தைகளுக்கான “சாதாரண குழந்தைப் பருவத்தில்” கவனம் செலுத்துகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “அன்றிரவு, நான் பயப்படவில்லை, ஏனென்றால் நான் ஊனமுற்றவன். நான் பயந்தேன், ஏனென்றால்…” 26 வயதானவரின் வலிமையின் கதை தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.