Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் ‘எக்ஸ்’ கணக்கை முடக்கியது இந்தியா
    தேசியம்

    பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் ‘எக்ஸ்’ கணக்கை முடக்கியது இந்தியா

    adminBy adminApril 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் ‘எக்ஸ்’ கணக்கை முடக்கியது இந்தியா
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்பின் ‘எக்ஸ்’ கணக்கை மத்திய அரசு நேற்று முடக்கியது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.

    இதையடுத்து தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை முடக்கி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

    இதற்கிடையில் ‘ஸ்கை நியூஸ்’ செய்தி சேனலுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கடந்த வாரம் அளித்த பேட்டியில், தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளித்தல், பயிற்சி அளித்தல், நிதியளித்தல் ஆகியவற்றை பாகிஸ்தான் நீண்ட காலமாக செய்து வருவதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், “அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்காக கடந்த சுமார் 30 ஆண்டுகளாக நாங்கள் இந்த மோசமான வேலையை செய்து வருகிறோம்” என்றார். இதையடுத்து இந்த விவகாரத்தை ஐ.நா.வில் இந்தியா எழுப்பியது.

    இதுகுறித்து ஐ.நா.வுக்கான துணை நிரந்தரப் பிரதிநிதி யோஜ்னா படேல் பேசுகையில், “இந்த வெளிப்படையான ஒப்புதல் வாக்குமூலம் யாரையும் ஆச்சரியப்படுத்தவில்லை. உலகளாவிய பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு பிராந்திய ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் ஒரு முரட்டு நாடாக பாகிஸ்தான் இருந்து வருவதை இது அம்பலப்படுத்தியுள்ளது.

    ஒரு சர்வதேச மன்றத்தை பாகிஸ்தான் பிரதிநிதி மீண்டும் தவறாகப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தையும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் பரப்பினார். ஆனால் உண்மை என்னவென்று இப்போது வெளிப்படையாக தெரிந்துவிட்டது” என்றார். இந்நிலையில் கவாஜா ஆசிப்பின் ‘எக்ஸ்’ சமூக வலைதள கணக்கை இந்தியாவில் மத்திய அரசு நேற்று முடக்கியுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ‘விண்வெளியில் இருந்து இந்தியாவை பார்க்கும்போது…’ – பிரதமர் மோடியுடன் சுக்லா பேசியது என்ன?

    June 29, 2025
    தேசியம்

    இந்தியாவுக்கு பணம் அனுப்புவதற்கான கட்டணத்தை 1% ஆக குறைக்க அமெரிக்கா முடிவு

    June 29, 2025
    தேசியம்

    ஐஎஸ் தீவிரவாதி சாகிப் நாச்சன் டெல்லி மருத்துவமனையில் உயிரிழப்பு

    June 29, 2025
    தேசியம்

    அயோத்தி ராமர் கோயிலில் விரைவில் டைட்டானியம் ஜன்னல் கிரில்கள்

    June 29, 2025
    தேசியம்

    செல்போன் மூலம் அவசரகால எச்சரிக்கை: தொலை தொடர்பு துறை பரிசோதனை

    June 29, 2025
    தேசியம்

    ரா தலைவராக பராக் ஜெயின் நியமனம்

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அனல் அரசு மூலம் என் மகன் அறிமுகமாவது பாக்கியம்: விஜய் சேதுபதி மகிழ்ச்சி
    • தாயின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய மகன்கள் – அடக்கம் செய்ய நிதி வசதி இல்லாததால் பரிதாபம்
    • ஸ்க்விட் கேம் சீசன் 3 முடிவடைந்ததால் நெட்ஃபிக்ஸ் அறைந்தது, கேட் பிளான்செட் டிடாக்ஜியை ஸ்க்விட் கேம் யுஎஸ்ஏ டீஸரில் விளையாடுகிறார்: ‘அமெரிக்காவில் கொரிய விளையாட்டு?’
    • 51-49 செனட் வாக்கு: ட்ரம்பின் ‘பெரிய அழகான’ மசோதாவுக்கு ‘இல்லை’ என்று கூறிய மூன்று குடியரசுக் கட்சியினர் | உலக செய்திகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘விண்வெளியில் இருந்து இந்தியாவை பார்க்கும்போது…’ – பிரதமர் மோடியுடன் சுக்லா பேசியது என்ன?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.