Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கான என்சிஇடி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் நிறைவு
    கல்வி

    ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கான என்சிஇடி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் நிறைவு

    adminBy adminApril 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஒருங்கிணைந்த ஆசிரியர் படிப்புக்கான என்சிஇடி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் நிறைவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் படிப்புக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (மார்ச் 31) நிறைவடைகிறது. நம்நாட்டில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் பட்டப் படிப்புகளில் சேர, தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வில் (என்சிஇடி) தேர்ச்சி பெற வேண்டும்.

    இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வு கணினி வாயிலாக ஏப்ரல் 29-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் 178 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

    இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்று (மார்ச் 31) இரவு 9 மணியுடன் நிறைவடைகிறது. விருப்பமுள்ளவர்கள் எனும் வலைதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது ncet@nta.ac.in மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

    பிஇடி தகுதித் தேர்வு: இதேபோல், மத்திய பயோ டெக்னலாஜி (உயிரி தொழில்நுட்பம்) துறையின் ஜேஆர்எப் எனும் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை கிடைப்பதற்கான பிஇடி தகுதித் தேர்வை ஆண்டுதோறும் என்டிஏ நடத்திவருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான பிஇடி தகுதித் தேர்வு கணினி வழியில் மே 13-ம் தேதி நடத்தப்படவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு முடிந்துவிட்டது. தொடர்ந்து விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய என்டிஏ தற்போது வாய்ப்பு வழங்கியுள்ளது.

    இதையடுத்து தேவைப்படுவோர் எனும் வலைதளம் வழியாக இன்றைக்குள் (மார்ச் 31) திருத்தங்கள் செய்துகொள்ளலாம். மேலும், கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறியலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    ஆர்டிஇ திட்டத்தில் கல்விக் கட்டணம் செலுத்த தனியார் பள்ளிகள் நெருக்கடி – பெற்றோர்கள் தவிப்பு

    July 5, 2025
    கல்வி

    க்யூட் நுழைவு தேர்வுக்கான முடிவுகள் வெளியானது: 2,679 மாணவர்கள் சாதனை

    July 5, 2025
    கல்வி

    மாதம் ரூ.8,000 உதவித் தொகையுடன் தொல்லியல், கல்வெட்டியல் முதுகலை டிப்ளமா படிப்பு

    July 4, 2025
    கல்வி

    க்யூட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 2,679 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்று சாதனை!

    July 4, 2025
    கல்வி

    ஆங்கிலத்தில் வெளியான வழிகாட்டு நெறிமுறைகள் – ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்ன ஆனது?

    July 4, 2025
    கல்வி

    வாசிப்பு இயக்க புத்தகங்களில் மாணவர் படைப்புகள்: விண்ணப்பிக்க ஜூலை 16-ம் தேதி கடைசி நாள்

    July 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நாயகனாக அறிமுகம் ஆகிறார் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர்!
    • அஜித்குமார் கொலை வழக்கு: 4-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை; டிஎஸ்பி நேரில் ஆஜர்
    • பிடிவாதமான குழந்தைகளைக் கையாள 5 பெற்றோருக்குரிய ஹேக்குகள் – இந்தியாவின் டைம்ஸ்
    • ‘விக்ரம் 63’ அப்டேட் எப்போது? – தயாரிப்பாளர் பதில்
    • அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ தொடங்குவது எப்போது? – விடை தெரியாத கேள்விகளும் சிக்கல்களும்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.