Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»ஏஐ ஆராய்ச்சிக்கான உயர்சிறப்பு மையம்: சென்னை ஐஐடி அறிவிப்பு
    கல்வி

    ஏஐ ஆராய்ச்சிக்கான உயர்சிறப்பு மையம்: சென்னை ஐஐடி அறிவிப்பு

    adminBy adminApril 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஏஐ ஆராய்ச்சிக்கான உயர்சிறப்பு மையம்: சென்னை ஐஐடி அறிவிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: இந்தியாவின் அடிமட்டப் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதற்காக ஜிரோ லேப்ஸ், பிரவர்த்தக் பவுண்டேஷன் ஆகியவற்றுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவுக்கான உயர் சிறப்பு மையத்தை (AI Centre of Excellence) சென்னை ஐஐடி நிறுவ உள்ளது.

    சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), இந்தியாவின் அடிமட்ட சவால்களைத் தீர்க்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு உயர்சிறப்பு மையத்தை நிறுவ முடிவு செய்துள்ளது. இதற்காக கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்ட டீப்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான ஜிரோ லேப்ஸ், ஐஐடிஎம் பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் ஆகியவற்றுடன் இக்கல்வி நிறுவனம் இணைந்து செயல்படவுள்ளது.

    CPU, எட்ஜ் டிவைஸ் இண்டர்பியரன்சிங் ஆகியவற்றில் நடைமுறைக்கு ஏற்ற, வலிமையான செயற்கை நுண்ணறிவு தீர்வுகளை உருவாக்குவதில் இந்த உயர்சிறப்பு மையம் கவனம் செலுத்தும். ஏஐ மாதிரிகள் மூலம் அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உதவும் முக்கிய நடவடிக்கையாக ஜிரோ லேப்ஸ் ‘Kompact AI’ன் முதல் பதிப்பை சென்னை ஐஐடி-ல் இன்று (ஏப்ரல் 9, 2025) வெளியிடப்பட்டது.

    ‘Kompact AI’ என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு தளமாகும். அதிக செலவு பிடிப்பதுடன், எளிதில் கிடைக்காத GPU (Graphics Processing Units)-க்கு பதிலாக CPU-க்கள் மூலம் அடிப்படை மாதிரிகளை உருவாக்கி சேவையளிக்க உதவுகிறது.

    Ziroh Labs ஏற்கனவே DeepSeek, Qwen, Llama உள்ளிட்ட 17 ஏஐ மாதிரிகளை CPU-களில் திறமையாக இயங்க மேம்படுத்தியுள்ளது. இந்த மாதிரிகளை சென்னை ஐஐடி ஏற்கனவே தரப்படுத்தியுள்ளது, செயல்திறன் அளவு, துல்லிய செயல்திறன் ஆகிய இரண்டையும் மதிப்பீடு செய்கின்றன. முதன்முறையாக, உயர் செயல்திறன் கொண்ட ஏஐ CPU-க்களில் திறமையாக உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது, இதனால் ஏஐ மிகவும் அணுகக்கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும், செலவு குறைந்ததாகவும் இருக்கும்.

    இது குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது. இதில், சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, ராயல் சொசைட்டியின் ஃபெலோஷிப் பெற்றவரும், டூரிங் விருதுபெற்றவருமான டாக்டர் விட்ஃபீல்ட் டிஃபி, சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனர் ஸ்காட் மெக்னீலி, ஏஓஎல் டைம் வார்னர் முன்னாள் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியும், சன் மைக்ரோசிஸ்டம்ஸ் தலைமை நிலைப்பாட்டு அதிகாரியுமான டாக்டர் வில்லியம் ஜே.ராடுசெல், ஐஐடி பெங்களூர் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் எஸ்.சடகோபன், APIGee Cerrent, Fiberlanem நிறுவனர் ராஜ்சிங், , மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி, “ஜிரோ ஆய்வகம், ஐஐடிஎம் பிரவர்தக் ஆகியவற்றின் இந்த முயற்சி இயற்கையால் ஈர்க்கப்பட்ட ஒன்றாகும், இதில் அவர்கள் குறைந்த செலவில் வழக்கமான கணினி இயந்திரங்களில் துல்லியமான அனுமானங்களை வழங்க தனிப்பயனாக்கப்பட்ட, பயிற்சி பெற்ற டொமைன்-குறிப்பிட்ட மாதிரிகளைப் பயன்படுத்தும் தளத்தை வழங்குகிறார்கள். நவீன ஹைப்பர் ஸ்கேலர் அமைப்புகளை வாங்கக்கூடியவருக்கும் முடியாதவருக்கும் இடையிலான சாத்தியமான ஏஐ பிளவைத் தடுப்பதில் இந்த முயற்சி நிச்சயமாக ஒரு முக்கிய படியாகும்.” என தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    தேசிய விளையாட்டு தின கொண்டாட்டம்: கல்லூரிகளில் போட்டிகளை நடத்த யுஜிசி உத்தரவு

    August 24, 2025
    கல்வி

    முதுகலை பொறியியல் படிப்பு – ‘கேட்’ நுழைவுத் தேர்வுக்கு ஆக.25 முதல் விண்ணப்பிக்கலாம்

    August 22, 2025
    கல்வி

    பொறியியல் சேர்க்கை துணை கலந்தாய்வு தொடக்கம்

    August 22, 2025
    கல்வி

    திறனறி தேர்வுகளை எதிர்கொள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம்தோறும் பயிற்சி: பள்ளிக்கல்வித் துறையின் புதிய முன்னெடுப்பு

    August 22, 2025
    கல்வி

    போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தல்

    August 21, 2025
    கல்வி

    மெய்நிகர் நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி?

    August 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மில்லியன் கணக்கானவர்களை பாதிக்கும் ‘அமைதியான கொலையாளி’ இதய நிலை குறித்து அமெரிக்க மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்; அறிகுறிகள் மற்றும் ஆபத்து காரணிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘தூய வாய்ப்பு’: சிங்கப்பூரில் பிகாமிக்காக சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மூல மனிதர்; இரண்டாவது மனைவியின் பிரசவத்திற்குப் பிறகு மருத்துவமனையில் அம்பலப்படுத்தப்பட்டது – இந்தியாவின் டைம்ஸ்
    • வரதட்சணை கொடுமை: நொய்டாவில் மனைவியை தீ வைத்து எரித்துக் கொன்ற கணவன் கைது
    • ஓய்வை அறிவித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா
    • அதிமுகவின் ஒன் மேன் ஆர்மியாக மாற நினைக்கிறாரா பழனிசாமி? – செல்லூர் கே.ராஜூ பளிச் நேர்காணல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.