Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: ரூ.500, ரூ.200 கட்டணச் சீட்டுகளுக்கு ஆன்லைன் முன்பதிவு வசதி
    ஆன்மீகம்

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: ரூ.500, ரூ.200 கட்டணச் சீட்டுகளுக்கு ஆன்லைன் முன்பதிவு வசதி

    adminBy adminApril 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: ரூ.500, ரூ.200 கட்டணச் சீட்டுகளுக்கு ஆன்லைன் முன்பதிவு வசதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தில் பங்கேற்க விரும்பும் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் ரூ.500, ரூ.200 கட்டணச் சீட்டுகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என கோயில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் இன்று (ஏப்.15) வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரை திருவிழா ஏப். 28-ம் தேதி வாஸ்து சாந்தியுடன் தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முக்கிய விழாவான திருக்கல்யாணம் மே 8-ம் தேதி கோயிலின் வடக்காடி வீதியிலுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8.35 மணிக்குமேல் 8.59 மணிக்குள் நடைபெறவுள்ளது. உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு பக்தர்கள் பக்தர்களின் வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான மற்றும் கோயிலின் இணையதளமான -ல் ஏப்.29 முதல் மே 2-ம் தேதி இரவு 9 மணிவரை ரூ.500, ரூ.200 கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    ஒருவர் இரண்டு ரூ.500 கட்டணச்சீட்டும் அல்லது மூன்று ரூ.200 கட்டணச்சீட்டு மட்டுமே பதிவு செய்யலாம். ஒரே நபர் ரூ.500, ரூ.200 கட்டணச்சீட்டுக்களை பதிவு செய்ய முடியாது. ஒரு பதிவுக்கு ஒரு கைபேசி எண் பயன்படுத்தலாம். பாதுகாப்பு காரணமாக குழந்தைகளை அழைத்து வருவதை தவிர்க்கவும். மேலும், கோயிலுக்கு சொந்தமான மேற்கு சித்திரை வீதியிலுள்ள பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் காலை 10 முதல் மாலை 6 மணி வரை கோயில் பணியாளர்கள் மூலம் முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அனுமதித்த கட்டணச் சீட்டுகளின் எண்ணிக்கையை விட கூடுதலாக விண்ணப்பங்கள் வரப்பெற்றால் குலுக்கல் முறையில் தேர்வு செய்து மே 3-ம் தேதி குறுந்தகவல் அனுப்பப்படும். அதனை மே 4 முதல் 6-ம் தேதி வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியிலுள்ள மையத்தில் காட்டி கட்டணச் சீட்டு பெற்றுக்கொள்ளலாம்.

    திருக்கல்யாணம் மே 8-ம் தேதி காலை 08.35 மணிக்குமேல் 08.59 மணிக்குள் நடப்பதால் கட்டணச்சீட்டு பெற்றவர்கள் அதிகாலை 5 மணி முதல் 7 மணிக்குள் கோயிலுக்கு வரவேண்டும். ரூ.500 கட்டணச்சீட்டு பெற்றவர்கள் வடக்கு ராஜகோபுரம் மொட்டை முனீஸ்வரர் சன்னதி வழியிலும், ரூ.200 கட்டணச்சீட்டு பெற்றவர்கள் வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி சந்திப்பு அருகே உள்ள பாதை வழியாக வடக்கு ராஜகோபுரம் வழியில் அனுமதிக்கப்படுவர். கட்டணமில்லா தரிசனத்தில் முதலில் வருபவர்களுக்கு அனுமதி என்ற முறைப்படி தெற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவர்..

    மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தின்போது ரூ.50, ரூ.100 மொய் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள் இந்துசமய அறநிலையத் துறை இணையதளம் மற்றும் கோயிலின் இணையதளம் என்ற முகவரியில் காணிக்கை செலுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு பக்தர்கள் மொய் காணிக்கை செலுத்தலாம்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    அறியாமல் செய்த பாவம் நீக்கும் பாபநாசம் ராமலிங்க சுவாமி | ஞாயிறு தரிசனம்

    June 29, 2025
    ஆன்மீகம்

    ஜூலை 18 முதல் ஆக.15 வரை ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா – முன்பதிவு தொடக்கம்

    June 28, 2025
    ஆன்மீகம்

    அருப்புக்கோட்டை கோயிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா!

    June 27, 2025
    ஆன்மீகம்

    தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி தொடக்கம்

    June 26, 2025
    ஆன்மீகம்

    ராமேசுவரம் கோயிலில் ரூ.1.16 கோடி உண்டியல் காணிக்கை வருவாய்

    June 25, 2025
    ஆன்மீகம்

    திருமலையில் ஜூலை மாத விசேஷங்கள்

    June 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது
    • ஜப்பானின் நீண்ட ஆயுள் என்று அழைக்கப்படும் ஓகிமியிடமிருந்து கற்றுக்கொள்ள வாழ்க்கை மாறும் பாடங்கள்
    • ‘பெரிய தவறு’: ‘பெரிய அழகான’ வரி மசோதாவை நிராகரித்ததற்காக டிரம்ப் செனட்டர் டில்லிஸைப் பின் தொடர்கிறார் | உலக செய்திகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அனல் அரசு மூலம் என் மகன் அறிமுகமாவது பாக்கியம்: விஜய் சேதுபதி மகிழ்ச்சி
    • தாயின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய மகன்கள் – அடக்கம் செய்ய நிதி வசதி இல்லாததால் பரிதாபம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.